சனி பகவான் தரும் யோகங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:20 PM | Best Blogger Tips

சனி பகவான் லக்கினத்திற்கு யோகக்கரராக இருந்து 3,6,9,11 இருந்தாலு மிகப்பெரிய ராஜ யோகத்தை கொடுப்பார் என பண்டைய ஜோதிட நூல்கள் கூறுகிறது.உதாரணமாக ரிசப லக்கினத்திற்கு சனிபகவான் முழு யோகாதிபதி அவன் 6ல் உச்சம் பெற்று,அந்த திசா ஜாதகருக்கு வந்தால் மிகப்பெரிய ராஜ யோகத்தை கொடுப்பார்.சனி பகவான் 3,6,9,11 அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு ஆய்ள் தீர்க்கமாகவும் மேலும் பணம்,புகழ் கிடைக்கும்.ஆனால் 9-ல் இடத்தில் இருக்கும் சனி பகவான் பிதூர் தோசத்தையும் கொடுப்பார் இருந்தாலும் பூமியில் அவன் புகழ் விளங்கும்.
9 க்குடைய சனிபகவான் 10- ல் நிற்க அந்த ஜாதகன் நன்மையான பலன்களையே அடைவான்.வாகன யோகம் உடைவராகவும்,புகழ்,கீர்த்தி கொண்டவராகவும் இருப்பார் என புலிப்பாணி சித்தர் தன் வெண்பாவில் தெளிவாக கூறியிருக்கிறார்.

நன்றி - பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

அது என்ன 27 நட்சத்திரங்கள் ?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:19 PM | Best Blogger Tipsநம்முடைய வான மண்டலத்தில் பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன.ஜோதிட சாஸ்திரத்தில் அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் கணக்கிடபடுகிறது.
27 நட்சத்திரங்களின் செயல்பாடு மட்டும்தான் மனிதனுக்கு பலன் தருமா?மற்ற நட்சத்திரங்கள் பலன் தராதா என பெரும்பான்மையோரின் சந்தேகமாக உள்ளது.
அதாவது 27 நட்சத்திரங்கள் என்பது 27 நட்சத்திர கூட்டங்கள் ஆகும்.பண்டைய காலத்தில் ரிஷிகள் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திர கூட்டங்களை 27 பிரிவுகளாக பிரிவுகளாகவும்.வான மண்டலத்தை மேசம் முதல் மீனம் வரை 12 ராசி மண்டலங்களாக பிரித்திரிக்கிறார்கள்.
27 நட்சத்திரங்கள் கூட்டங்களை 12 ராசி மண்டலங்களாக பிரித்து,ஒரு ராசி மண்டலத்திற்கு 2.25 நட்சத்திர கூட்டங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டது.சந்திரன் ஒவ்வொரு நாளும் எந்த நட்சத்திர கூட்டத்தில் பயணம் செய்கிறாரோ அந்த நட்சத்திரம் எந்த ராசி மண்டலத்தில் வருகிறதோ அதுவே அன்று பிறந்தவரின் ஜென்ம ராசியாகும்.
நட்சத்திர கூட்டங்கள் எந்த வடிவில் உள்ளதோ அதன் அடிப்படையிலே பெயரும் வைக்கப்பட்டது.உதரணமாக உத்திரம் என்றால் ஒரு பொருளை தாங்கும் நீள மரமாகும்.பெரும்பாலன வீடுகள் உத்திரமில்லாமல் இருப்பதில்லை அதுதான் அந்த வீட்டை தாங்குவதற்கு ஆதாரம்.உத்திரம் வடிவில் இருக்கும் நட்சத்திர கூட்டத்திற்கு உத்திரம் ஆகும்.இது மாதிரியேதான் 27 நட்சத்திரத்திற்கும் பெயர் அமைந்தது.

நன்றி !

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

கணவனும், மனைவியும் .....

மணக்கால் அய்யம்பேட்டை | 11:18 AM | Best Blogger Tips

மக்களை ஏமாற்றுவது, பொது சொத்தை தனது சொத்தாக மாற்றிக் கொள்வது, இலஞ்சம், ஊழல், எளியோரை ஏச்சிப் பிழைப்பது, பிறரை அடிமையாகவே வைக்கத் துடிப்பது என ஆங்கிலேயர்களின் அனைத்து கொள்கைகளையும் ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பதுதான் இன்றைய திராவிட அரசியல்.
இவர்கள் பின்பற்றுவதும் ஆங்கிலேயர்கள் வழிதான். ஆங்கிலேயன் எவ்வாறு நாட்டை பிரித்து ஆள ஆரிய திராவிட கோட்பாட்டை கொண்டு வந்தானோ? உள் மாநிலமக்களை பிரிக்க சாதிய வேற்றுமைகளை கொண்டு வந்தானோ?, இந்திய கல்வியை சிதைக்க நம் நாட்டு குருக்கள் மீது மக்களிடையே விஷமத்தை பரப்பினானோ? அதே பாணியைத்தான் இப்போது இந்த திராவிட கழிசடைகள் செய்து வருகின்றனர்.
இவர்களின் அறுவருக்கத்தக்க கூச்சலுக்கு சிதந்திர போராட்ட தியாகிகளும் தப்பவில்லை. சுதந்திர போராட்ட தியாகிகளான கட்டபொம்மனாகட்டும், குமரனாகட்டும், இரட்டை மலை சீனிவாசனாகட்டும், பாரதியாகட்டும், வ.வெ.சுவாகட்டும், வாஞ்சிநாதனாகட்டும், சுப்பிரமணிய சிவாவாகட்டும், கக்கனாகட்டும், காமராசாகட்டும், வைத்தியநாத ஐயராகட்டும் எல்லாரும் ஒன்று சேர்ந்து தேசத்திற்காகவே ஒருமித்த குறல் கொடுத்தார்கள். இவர்களுக்குள் எந்த வேற்றுமையும் இல்லை.
நாம் அடிமை பட்டிருந்த காலத்தில் இன்றைக்கு திராவிட அரசாங்கத்தால் சொல்லப்படும் அனைத்து சமூகத்தினரும் சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தோம். அதே சமயம் பலர் ஆங்கிலேயனுக்கு ஆதரவாகவும் செயல் பட்டிருந்தோம். ஆனால் இந்த திராவிட விஷமிகள் பிராமணர்கள் அனைவரும் ஆங்கிலேயனுக்கு துணையாக நின்றார்கள் என்ற விஷம பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் தூவி. மக்களிடையே பிளவை வழுப்படுத்தினர்.
--------------------------------------------------------------------------------
இத்தகைய இழிவான பிரச்சாரத்தை வைத்தே இன்றைக்கும் மக்களிடையே பிரச்சாரத்தை மேற்க் கொள்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருமே தியாகிகள்தான் இதில் சாதி எங்கிருந்து வந்தது?

   நன்றி இணையம் 

கணவனும், மனைவியும் நேஷனல் ஜியோ சானலில், ஒரு சிறுத்தை, மானை துரத்துவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மனைவி சொன்னாள், எப்படியும் சிறுத்தை, மானை பிடித்து விடும் என்றாள். கணவன் சொன்னான், சொல்ல முடியாது, சிறுத்தை உணவுக்காக ஓடுகிறது,மான் உயிரை காப்பாற்றி கொள்ள. ஓடுகிறது. உயிரை காப்பாற்ற ஒடும் ஒட்டத்தில்தான் வேகம் இருக்கும் என்றான். நான் சொல்கிறேன், கண்டிப்பாக பிடிக்கும் என்றாள், மனைவி. இல்லை, பிடிக்காது என்றான், கணவன். அப்படி பிடித்தால், தினமும் நீங்கள், என்னை ஹோட்டலுக்கு கூட்டி போய், டிபன் வாங்கிதர வேண்டும், என் அம்மா இங்கு வந்து தங்குவாள்,பந்தயம் சரியா எனக் கேட்டாள் , மனைவி. அதன் பின் இந்தக் கதையில் என்ன நடந்தது என்பதை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மணக்கால் அய்யம்பேட்டை | 11:17 AM | Best Blogger Tips

மக்களை ஏமாற்றுவது, பொது சொத்தை தனது சொத்தாக மாற்றிக் கொள்வது, இலஞ்சம், ஊழல், எளியோரை ஏச்சிப் பிழைப்பது, பிறரை அடிமையாகவே வைக்கத் துடிப்பது என ஆங்கிலேயர்களின் அனைத்து கொள்கைகளையும் ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பதுதான் இன்றைய திராவிட அரசியல்.
இவர்கள் பின்பற்றுவதும் ஆங்கிலேயர்கள் வழிதான். ஆங்கிலேயன் எவ்வாறு நாட்டை பிரித்து ஆள ஆரிய திராவிட கோட்பாட்டை கொண்டு வந்தானோ? உள் மாநிலமக்களை பிரிக்க சாதிய வேற்றுமைகளை கொண்டு வந்தானோ?, இந்திய கல்வியை சிதைக்க நம் நாட்டு குருக்கள் மீது மக்களிடையே விஷமத்தை பரப்பினானோ? அதே பாணியைத்தான் இப்போது இந்த திராவிட கழிசடைகள் செய்து வருகின்றனர்.
இவர்களின் அறுவருக்கத்தக்க கூச்சலுக்கு சிதந்திர போராட்ட தியாகிகளும் தப்பவில்லை. சுதந்திர போராட்ட தியாகிகளான கட்டபொம்மனாகட்டும், குமரனாகட்டும், இரட்டை மலை சீனிவாசனாகட்டும், பாரதியாகட்டும், வ.வெ.சுவாகட்டும், வாஞ்சிநாதனாகட்டும், சுப்பிரமணிய சிவாவாகட்டும், கக்கனாகட்டும், காமராசாகட்டும், வைத்தியநாத ஐயராகட்டும் எல்லாரும் ஒன்று சேர்ந்து தேசத்திற்காகவே ஒருமித்த குறல் கொடுத்தார்கள். இவர்களுக்குள் எந்த வேற்றுமையும் இல்லை.
நாம் அடிமை பட்டிருந்த காலத்தில் இன்றைக்கு திராவிட அரசாங்கத்தால் சொல்லப்படும் அனைத்து சமூகத்தினரும் சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தோம். அதே சமயம் பலர் ஆங்கிலேயனுக்கு ஆதரவாகவும் செயல் பட்டிருந்தோம். ஆனால் இந்த திராவிட விஷமிகள் பிராமணர்கள் அனைவரும் ஆங்கிலேயனுக்கு துணையாக நின்றார்கள் என்ற விஷம பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் தூவி. மக்களிடையே பிளவை வழுப்படுத்தினர்.
--------------------------------------------------------------------------------
இத்தகைய இழிவான பிரச்சாரத்தை வைத்தே இன்றைக்கும் மக்களிடையே பிரச்சாரத்தை மேற்க் கொள்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருமே தியாகிகள்தான் இதில் சாதி எங்கிருந்து வந்தது?

   நன்றி இணையம் 

ஏக்கங்களைத் தீர்க்கும் "20" வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:25 AM | Best Blogger Tips

1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.

2.
ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் எதுவுமே முடியாமல் போய்விடும்.

3.
பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.

4.
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே!

5.
ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.

6.
ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள். நீங்கள் எப்படிபட்டவர் என்பதை நீங்கள் அணியும் ஆடையும் தீர்மானிக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களோடு தூய்மையான-நேர்த்தியான ஆடையை தினமும் அணிவது, உங்கள் மீதான அடுத்தவர்களின் மரியாதையை அதிகபடுத்தும்...

7.
சிலர் தோல்வியைக் கண்டால் அப்படியே துவண்டுபோய் விடுகிறார்கள். தோல்வியும், வெற்றிம் நிரந்தரமல்ல. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமும் அல்ல. சோர்ந்தாலும் எதிர்த்து போராடினால் நிச்சயம் வெற்றிக்கனி பறிக்கலாம்.

8.
வாழ்க்கை என்பது பூக்களின் இதழ்கள் பரப்பபட்ட மென்மையான பாதை அல்ல. அங்கே ரோஜாவும் இருக்கலாம், ரோஜாவின் முட்களும் இருக்கலாம். ரோஜா கிடைத்தால் சந்தோஷப்படலாம். அதன் முள் குத்தினால், அங்கேயே இருந்து விடக்கூடாது. அதை எறிந்துவிட்டு லட்சியபாதையில் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

9.
காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்ங்கள். அது, உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும்.

10.
சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றிள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளையாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். அன்று, பார்க், பீச், என்று வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை கொண்டு வரும்.

11.
பிரச்சினை இல்லாத கணவன்-மனைவியே கிடையாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களே ஆற அமர்ந்து பேச ஆரம்பித்தால் அதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும். முன்றாவது நபரிடம் உங்கள் பிரச்சினை பற்றி எக்காரணம் கொண்டு சொல்லிவிடாதீர்கள். மீறி சொன்னால், குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆகிவிடும் உங்கள் மண வாழ்க்கை.

12.
பிரிந்திருந்தால்தான் காதல் பலப்படும் என்று சொல்வார்கள். இதே பிரிவு கணவன் மனைவியருக்குள் எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் ஏற்படக்கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால், வேறு வாழ்க்கைக்கு மனம் பழகிவிடும். அதனால் உஷார்...

13.
வேலைக்கு செல்பவர்கள் வேலையே கதியென்று இருந்துவிடக்கூடாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப்பும் இருக்க வேண்டும்.

14.
குழந்தைகளை லட்சியத்தோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். 
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உண்டு. அதை கண்டறிந்து ஊக்கபடுத்தினால், அவர்களும் பிற்காலத்தில் ஸ்டார்களாக ஜொலிப்பார்கள்.

15.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். பாக்கெட்டுகளில் தயாரித்து விற்கபடும் உணவு வகைகளையும், பாஸ்ட் புட் அயிட்டங்களையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்துவிடும். இல்லாத நோய்களும் வந்து ஒட்டிக்கொள்ளும்.

16.
வருடத்திற்கு ஒருமுறையாவது குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதுவும் உங்கள் உள்ளத்தை உற்சாகபடுத்தும்.

17.
வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மாதம்தோறும் பட்ஜெட் போடுவது சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிபுக்கு என்றும், மருத்துவச் செலவுக்கு என்றும் தேவைபடும்போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆனந்த வாழ்வுக்கு வித்திடும்.

18.
உங்கள் நட்பு வட்டாரம் பயனுள்ளதாக இருக்கட்டும். உங்களை உற்சாகபடுத்தும் நட்புக்கே முதலிடம் கொடுங்கள்.

19.
அட்ஜஸ்ட் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். வாழ்க்கையே அட்ஜஸ்ட் ஆகிவிட்டால், நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

20.
தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்தமாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும்.
           
  நன்றி இணையம்