நம்முடைய வான மண்டலத்தில் பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன.ஜோதிட சாஸ்திரத்தில் அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் கணக்கிடபடுகிறது.
27 நட்சத்திரங்களின்
செயல்பாடு மட்டும்தான் மனிதனுக்கு பலன் தருமா?மற்ற நட்சத்திரங்கள் பலன் தராதா என
பெரும்பான்மையோரின் சந்தேகமாக உள்ளது.
அதாவது 27 நட்சத்திரங்கள்
என்பது 27
நட்சத்திர
கூட்டங்கள் ஆகும்.பண்டைய காலத்தில் ரிஷிகள் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திர கூட்டங்களை
27 பிரிவுகளாக
பிரிவுகளாகவும்.வான மண்டலத்தை மேசம் முதல் மீனம் வரை 12 ராசி
மண்டலங்களாக பிரித்திரிக்கிறார்கள்.
27 நட்சத்திரங்கள்
கூட்டங்களை 12
ராசி
மண்டலங்களாக பிரித்து,ஒரு ராசி மண்டலத்திற்கு 2.25 நட்சத்திர
கூட்டங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டது.சந்திரன் ஒவ்வொரு நாளும் எந்த நட்சத்திர
கூட்டத்தில் பயணம் செய்கிறாரோ அந்த நட்சத்திரம் எந்த ராசி மண்டலத்தில் வருகிறதோ
அதுவே அன்று பிறந்தவரின் ஜென்ம ராசியாகும்.
நட்சத்திர
கூட்டங்கள் எந்த வடிவில் உள்ளதோ அதன் அடிப்படையிலே பெயரும் வைக்கப்பட்டது.உதரணமாக
உத்திரம் என்றால் ஒரு பொருளை தாங்கும் நீள மரமாகும்.பெரும்பாலன வீடுகள்
உத்திரமில்லாமல் இருப்பதில்லை அதுதான் அந்த வீட்டை தாங்குவதற்கு ஆதாரம்.உத்திரம்
வடிவில் இருக்கும் நட்சத்திர கூட்டத்திற்கு உத்திரம் ஆகும்.இது மாதிரியேதான் 27 நட்சத்திரத்திற்கும்
பெயர் அமைந்தது.
நன்றி !
அன்புடன் பட்டுக்கோட்டை
ஜோதிடர் சுப்பிரமணியன்.