❣️..நட்பு உடைந்து.......!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:05 PM | Best Blogger Tips

 மூழ்காத ஷிப்தான் பிரண்ட்ஷிப்... நாளை உலக நண்பேண்டா தினம்! | honour your  friends and celebrate friendship day 2017 on august 6 sunday - Tamil  Oneindia

 

❣️..நட்பு உடைந்து முகநூலானது.,



சுற்றம் உடைந்து
வாட்சப் ஆனது.,



வாழ்த்துகள் உடைந்து
ஸ்டேட்டஸ் ஆனது.,



குளக்கரை உடைந்து
குளியலறை ஆனது.,

How to Clean Your Shower Head - Best Way to Clean Clogged Showerhead

நெற்களம் உடைந்து
கட்டடமானது.,

PERSONAL TAX: No TDS to be deducted when purchasing agricultural land

காலநிலை உடைந்து
வெப்ப மயமானது.,

 

வளநிலம் உடைந்து
தரிசாய் ஆனது.,



துணிப்பை உடைந்து
நெகிழியானது.,



அங்காடி உடைந்து
அமேசான் ஆனது.,



விளைநிலம் உடைந்து
மனைநிலம் ஆனது.,



ஒத்தையடி உடைந்து
எட்டு வழியானது.,



கடிதம் உடைந்து
இமெயிலானது.,

How to Write a Letter: Step-By-Step Guide With Tips | Grammarly Blog

விளையாட்டு உடைந்து
வீடியோ கேம் ஆனது.,



புத்தகம் உடைந்து 
இ-புக் ஆனது.,



சோறு உடைந்து '
ஓட்ஸ்'சாய்ப் போனது.,



இட்லி உடைந்து 
பர்கர் ஆனது.,

Annapurna: Vegetable Bread Pizza Recipe

தோசை உடைந்து
பிட்சாவானது.,



பசும்பால் உடைந்து
பாக்கெட் ஆனது.,



வெற்றிலை உடைந்து
பீடாவானது.,



தொலைபேசி உடைந்து
கைபேசியானது.,



நூலகம் உடைந்து
கூகுள் ஆனது.,



வங்கி உடைந்து 
பேட்டிஎம் ஆனது.,



பொது நலம் உடைந்து
சுயநலமானது.,

சுயநல உலகம் • ShareChat Photos and Videos

பொறுமை உடைந்து
அவசரமானது.,



*ஊடல் உடைந்து
விவாகரத்தானது.



நிரந்தரம் உடைந்து
நிதர்சனம் ஆனது.,



ஆகையால் உடைவது உலகினில்
நிரந்தரமானது.,



மாற்றங்கள் மாறாதது உணர்வதே கடினம்....🙏🌹       
✨✨✨✨✨✨✨✨✨

நன்றி இணையம்

மனம் விட்டு சிரியுங்க வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:38 PM | Best Blogger Tips

 மனம் விட்டு சிரியுங்கள்…. – chinnuadhithya

மனம் விட்டு சிரியுங்க
வியாதிகள் தீரும், ஆயுள் கூடும் 


ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா'பேசறேன்...
நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்?                  அட யாருன்னு சொல்லுமா.


-----😂------------------------------
நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ
ஸ்வீட்டா இருக்கு..SISTER
நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,
இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."


---😂--------------------------------
டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!

மனம் விட்டு சிரியுங்கள்…. – chinnuadhithya
--😂---------------------------------
மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.
கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?


--😂---------------------------------
ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது
மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க


😂-----------------------------------
முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?
ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு


---😂--------------------------------
மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”


---😂-------------------------------
டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??
கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...
டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...


---😂--------------------------------
நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்

டாக்டர் :- அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க


--😂---------------------------------
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?


---😂--------------------------------
வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?
கிராமத்தான் : கயிற்றாலே தான்


---😂--------------------------------
"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"


😂-----------------------------------
நோயாளி : டாக்டர்! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவங்க என்ன சாப்பிட்டாங்கன்னு கேட்டு சொல்லுங்க.என்
மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.


---😂--------------------------------
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!


--😂---------------------------------
"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப்
பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து
குடுங்களேன்."
"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."


-😂---------------------------------
 Sardar1) என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் சாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக்
கலர் சாக்சும் அணிந்திருக்கிறாய்.
Sardar 2) சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.

😀😀😀😀😀😀

Have a fun filled day.
Laughter is d medicine
.

 

 

நன்றி இணையம்



இந்தியா மட்டும் தான் ஒரே நம்பிக்கை !! குறிப்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி

மணக்கால் அய்யம்பேட்டை | 11:34 AM | Best Blogger Tips

 

 

** இந்தியா மட்டும் தான் ஒரே நம்பிக்கை !!  எதிர்பார்ப்பில் அமெரிக்கா !! **

 

இன்றைய தேதியில் உலகில் பெரிய சக்தி வாய்ந்த நாடுகளின் தலைவர்களும், எந்த ஒரு விஷயத்திலும் இந்தியாவில் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்து தான் அவர்களின் திட்டங்களையே வகுக்கிறார்கள் !!

 

குறிப்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு நிலைப்பாடு எடுத்து விட்டால், அதை மாற்றுவது மிக கடினம் என்பதை நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் !!

 Artificial Intelligence Takes Centre Stage With PM Modi And World Leaders  At Vibrant Gujarat 2019

அதனால் எந்த வகையிலும் இந்தியாவையும் இந்தியர்களையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று கவனமாக பேசுவதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது !!

 

அதுவும் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் வரவிருக்கும் நிலையில்.... பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் மிகவும் நெருக்கமானவன் என்று இரு கட்சி வேட்பாளர்களும் மார் தட்டிக் கொள்கிறார்கள் !!

 Hugs Vs Shakes : Decoding PM Modi's Bonhomie With World Leaders - YouTube

குறிப்பாக அங்கே இருக்கும் இந்தியர்களின் வாக்குகளைக் கவர, இந்தியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் மோடி அவர்களின் நண்பனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்கள் !!

 

இந்நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், சீனாவின் சவாலை எதிர்கொள்ள இந்தியா மட்டுமே உதவ முடியும் என்று கூறி இருக்கிறார் !!

 

இது வெறும் ஓட்டுக்காக பைடன் பேசியதாக நினைக்க முடியாது.... ஒரு பொருளாதார வல்லரசாக இருக்கும் நாட்டில், மிக உயர்ந்த பதவியை வகிக்கும் ஒருவர் கூறிய இந்த கருத்தை, ஒட்டுமொத்த அமெரிக்க அரசின் நிலைப்பாடாகத் தான் எடுத்துக் கொள்ள முடியும் !!

 

அந்த வகையில் உலகையே வழி நடத்தும் சக்தியாக இந்தியா உயர்ந்து இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம் !!

 

காலச் சக்கரத்தை ஒரு 10 ஆண்டுகள் பின்னோக்கி சுழற்றுவோம் !!

 PM Modi tops the list of world leaders, bags highest approval rating of 77%

இந்தியா அமெரிக்காவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் !!

 

அமெரிக்கா திமிரான பதிலை அளித்துக் கொண்டிருக்கும் !!

 

ஒரு உலகத் தலைவர் மாநாட்டிற்கு இந்திய பிரதமர் சென்றாலும், அவர் கேட்பாரற்று தனியாக நின்று கொண்டிருந்த வீடியோக்களை நாம் பார்த்திருப்போம் !!

 Continuing his term to lead India, world leaders laud PM Modi on his  historic victory - NewsBharati

ஆனால் நரேந்திர மோடி அவர்கள் பாரதப் பிரதமராக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து, இந்தியர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காத மாற்றங்கள் நிகழத் தொடங்கின !!

 

மிகப்பெரிய சர்வ வல்லமை பொருந்திய நபராக கருதப்படும் அமெரிக்க அதிபர், மோடியை தேடி வந்து கை கொடுக்கிறார் !!

 Huge fan”: USISPF Chairman John Chambers calls PM Narendra Modi the world's  best leader - YouTube

அமெரிக்க அதிபருக்கு நேர் எதிர் துருவத்தில் இருக்கும் ரஷ்ய அதிபர், உக்ரைன் ரஷ்யா போரில் இந்தியாவின் பேச்சை மட்டும் தான் கேட்கிறார் என்று பல நாட்டுத் தலைவர்களும் கூறிவிட்டார்கள் !!

 

இந்தியா உலகின் விஸ்வ குரு என்ற ஸ்தானத்திற்கு உயர்ந்துவிட்டது என்று கூறுவது வெறும் வாய் பேச்சு அல்ல !!

 

அது நம் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான உண்மை !!

 Modi@8: Eight world leaders who PM Modi left impressed – Firstpost

மோடி உலகத் தலைவராக ஏற்கனவே உயர்ந்து விட்டார் !!

 

அந்த உலகத் தலைமைக்கு மீண்டும் ஒரு அங்கீகாரம் வழங்குவதற்காக தான் இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது !!

 On sidelines of UN General Assembly., PM Modi meets with leaders of Pacific  Island countries

வல்லரசுகளின் அதிபர்களே தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்றால் தன்னை மோடியின் நண்பனாக காட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில்.....

 

அந்த மோடிக்கே அங்கீகாரம் கொடுக்கப் போகும் தேர்தல் நடக்கவிருக்கிறது !!!

 

மோடிக்கு இந்த தேர்தலில் நாம் அளிக்கப் போகும் ஆதரவு..... இந்தியாவில் இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காத ஒரு மாபெரும் ஆதரவாக அமைய வேண்டும் !!

 

மீண்டும் மோடி

வேண்டும் மோடி

 

ஜெய் ஹிந்த்..!!


நன்றி இணையம்