ஒருவன் செய்யும் புண்ணிய பாவ கர்மங்களே, அவனது மறுபிறப்புக்கு
காரணமாகின்றன என்று முந்தய பதிவுகள் பலவற்றில் பார்த்த்தோம். புண்ணிய கர்மங்கள்
ஒருவருக்கு உயர்ந்த பிறப்பையும், பாவ கர்மங்கள் இழிவான பிறப்பையும் அளிக்கிறது. அதேநேரம், கர்மங்கள் ஆற்றாமல் இருக்கவும்
முடியாது. ஈ எறும்பு முதல் பிரம்மா வரை கர்மங்கள் ஆற்றிக்கொண்டு தான்
இருக்கிறார்கள். ஆனால், மனிதனே மதிகெட்டு பாவ கர்மங்களுக்கு ஆளாகிறான். ஒருவன் செய்யும் பாவங்களை
அவன் செய்யும் புண்ணிய கர்மங்கள் கரைத்து கொண்டு வரும். அது எவ்வாறு என்பதை, புராண குறிப்புகளிருந்து
பார்ப்போம்.
பாவங்கள் செய்யும் மனிதர்கள் சிலர், தங்கள் பாவங்களை போக்கிக்கொள்ள
கங்கையில் நீராடுகின்றனர். அப்படி போக்கிக்கொண்ட பாவங்கள் எங்கே செல்கிறது? சற்று விரிவாக பார்ப்போம்.
ஒருமுறை, பாவங்கள் எதுவும் செய்யாத புண்ணியாத்மாவான முனிவர் ஒருவர், கங்கையில் நீராட சென்றார்.
அப்போது, அங்கே குளித்துக்கொண்டு இருந்தவர்கள்,
"மாதா கங்கே,
என் பாவத்தினை போக்கி காத்தருள்க" என்று கூறி
நீராடினார்கள். இதை கேட்ட அந்த முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. "இப்படி
பாவங்களை ஒழுக்கிவிடப்படும் கங்கையில் நான் குளித்தால் இந்த பாவங்கள் என்னை வந்து
ஒட்டி கொள்ளுமல்லவா?", எனவே அதில் குளிக்காமல் இருப்பதே நலம் என்று புறப்படலானார்.
அந்நேரம் ஒரு பெண் அங்குவந்து, ஏன் முனிவரே நீங்கள்
குளிக்காமல் செல்கிறீர்கள் என்று கேட்க. முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார்.
அதை கேட்ட, அந்த பெண், முனிவரே, கங்கை நதியில் ஒழுக்கிவிடும் பாவங்கள், கங்கை நதியில் தங்குவதில்லை
என்பதை நீங்கள் அறிந்தாலும். கங்கை நீரானது,
சிவபெருமான் சிரஸிலிருந்து தோன்றி, பூமியில் பதித்து வருவத்தால்
பாவம் கலக்காத நீரே வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்தாலும். மேலும், இந்த நீரானது, ஒரு இடத்தில் நிற்பதில்லை.
இந்த நீர் ஓடி சென்று கடலில் கலக்கிறது, எனவே இந்த பாவங்கள் கடலை சென்று அடைகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள், எனவே நீங்கள் இந்த கங்கையில்
நீராடுங்கள் என்று கூற. முனிவர், அந்த பெண்ணை பார்த்து நீங்கள் சாதாரண பெண்ணாக தெரியவில்லை, நீங்கள் யார் என்று கேட்க, அதை நீங்கள் போக போக தெரிந்து
கொள்வீர்கள் என்று கூறி, அங்கிருந்து சென்று விட்டாள்.
ஆனால், அந்த பெண் கூறியதை கேட்டு முனிவரின் சந்தேகம் வேறு திசைக்கு சென்றது. சரி, இந்த பாவங்கள் கடலில்
கலப்பதால், கடல் பாவங்களின் கேந்திரம் ஆகிறது,
ஆனால், மனிதர்கள் அங்கேயும் புண்ணிய நீராடல் செய்கிறார்கள். பாவம் கலந்த கடலில்
குளித்தால் பாவமல்லவா சேரும், எப்படி அது புண்ணியமாகும்? இதை அறிய நாம் சமுத்திர தீரத்திற்கு செல்வோம் சென்று சமுத்திரத்தை நோக்கி
செல்லலானார். அங்கே சென்ற முனிவர், சமுத்திர தேவனான. வருணனை தபம் செய்தார். வருண தேவனும், அவர் முன் தோன்ற, முனிவர் தன் சந்தேகத்தை
அவரிடம் கூறினார். "வருண தேவனே, கங்கையில் ஒழுக்கிவிடும் பாவங்கள் அனைத்தும், சமுத்திரத்தில் வந்து
அடைகின்றன, அப்படி இருக்க, எப்படி சமுத்திரத்தில் நீராடினால் புண்ணியம் ஆகும்?". இதற்கு வருண பகவான்
கூறியது என்ன?
தன் முன் தோன்றிய வருண தேவனிடம், முனிவர் கேட்டார்....
"வருண தேவனே, கங்கையில் ஒழுக்கிவிடும்
பாவங்கள் அனைத்தும், சமுத்திரத்தில் வந்து அடைகின்றன, அப்படி இருக்க, எப்படி சமுத்திரத்தில் நீராடினால் புண்ணியம் ஆகும்?".
இதற்கு, வருண தேவன்... "முனிவரே, கடலில் பாவங்கள் தங்குவதில்லை என்பதை தாங்கள் அறிந்து கொள்ளுங்கள். கடலில்
கலக்கும் பாவங்கள் அனைத்தும் சூரிய பகவானின் ஒளிக்கதிர்களால் ஆவியாக மாற்றி
இழுத்து கொள்வதால், கடல் ஒருபோதும் பாவங்களை தன்னுள் வைத்துக்கொள்ளவில்லை. எனவே, கடல் புண்ணிய நீராடலுக்கு
உகந்தது தான்". என்று கூறி வருண பகவான் மறைந்தார்.
இத்துடன் தன் சந்தேகம் தீராத முனிவர், தன் சந்தேகத்தை
தீர்த்துக்கொள்ள சூரிய தேவனை நோக்கி பிரார்த்தனை செய்தார். அவர் பிரார்த்தனையில், மனமகிழ்ந்த சூரிய தேவன் அவர்
முன் தோன்றினார். அப்போது, தன் முன் தோன்றிய சூரிய தேவனிடம்,
முனிவர் தன் சந்தேகத்தை எழுப்பினார். "சூரிய
பகவானே! கடலில் சேரும் பாவங்களை தன் ஒளிக்கதிர்களால் ஈர்த்துக்கொள்ளும் தங்களை அது
பாதிப்பதில்லையா?" என்று. அதற்கு சூரிய பகவான், முனிவரே தங்கள் சந்தேகம் யதார்த்தமானது தான். சொல்கிறேன் கேள் என்று சூரிய
பகவான் விளக்கலானார்..."முனிவரே, என் ஒளிக்கதிர்களால் ஆவியாக்கப்படும் பாவங்கள், என் உஷ்ணத்தால் என்னை
நெருங்குவதில்லை. இவை மேகங்களாக வானிலே தங்கிவிடுகிறது". உடனே, முனிவர்..."அப்படியென்றால், இந்த பாவங்களின் தாக்கம் என்ன
ஆகிறது?" என்று கேட்க", அதை நீங்கள் மேகத்திடமே கேட்டு அறிந்துகொள்ளலாம்", என்று கூறி மறைந்தார் சூரிய
தேவன்.
உடனே, முனிவர் மேகத்தை வேண்டி தன் கேள்வியை எழுப்பினார். முனிவரின் சந்தேகத்தினை
அறிந்த மேகம், "முனிவரே, சூரியனின் ஒளிக்கதிகளால் ஈர்த்தெடுக்கப்பட்ட பாவங்கள், காரிருள் மேகங்களாக வானில்
வலம் வருகின்றது. ஆனால், அதன் தாக்கம் அதிகரிக்கும்போது, மழை பெய்விக்கப்படுகின்றது, அங்ஙனம் மழையுடன் அந்த பாவங்கள் பூமிக்கே திரும்பவும் அனுப்பப்படுகின்றது.
அதை பொறுமையின் தேவதையான பூமியும் ஏற்றுக்கொள்கிறாள்". ஆகவே, தங்கள் சந்தேகத்தை
பூமாதேவியிடமே கேட்டறிந்து கொள்ளுங்கள்" என்றது மேகம்.
எனவே, தன் பிரார்த்தனையை பூமாதேவியிடம் திருப்பினார் முனிவர். முனிவரின்
பிரார்த்தனையில் மெச்சிய பூமாதேவி முனிவருக்கு அருளலானார். பூமாதேவி கூறியது என்ன?
முனிவரின் பிரார்த்தனையில் மெச்சிய பூமாதேவி முனிவருக்கு
அருளலானார். "முனிவரே, பொறுமைக்கு இலக்கணமாகிய எனக்கு, மழை மூலம் என்னை நோக்கி வரும் பாவங்களை ஏற்றுக்கொள்வது என் கடமை. என்றாலும், நான் உட்கொண்ட பாவங்கள், என்னில் தங்குவதில்லை என்பதை
நீங்கள் அறிந்தாலும். அத்தகைய பாவங்கள், மரம் செடிகள் வேர்கள் மூலம் உறிஞ்சி எடுத்து, அதன் காய் கனிகளில் அடைத்து
விடுகின்றது. அக்காய் கனிகளை சம்பந்தப்பட்ட மனிதர்கள் உண்ணும் போது மீண்டும்
அப்பாவங்கள் அவர்களையே சென்றடைகிறது. மனிதர்கள் மீண்டும் கங்கைக்கு சென்று பாவத்தை
போக்கி கொள்கின்றனர். இங்கனம், மேற்கொண்ட பாவங்கள் அவர்களை மீண்டும் மீண்டும் வந்தடையும். முனிவரே இப்போது
உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?".....
"இல்லை பூமி மாதா...", என்றார் முனிவர். என்றால், "நீங்கள் கங்கை கரைக்கே
செல்லுங்கள், அங்கு நீங்கள் முதலில் கண்ட பெண்மணியை சந்தித்தால், முழு விளக்கவும் உங்களுக்கு
கிடைக்கும்", என்றார் பூமி மாதா.
இதை கேட்ட முனிவர் மீண்டும் கங்கை கரைக்கே சென்றார். அங்கே, அவர் முதலில் கண்ட பெண்மணியை
காணலானார். இதை பார்த்த அப்பெண்மணி,
"முனிவரே, நான் கூறியதில் சந்தேகம் தெளியாத நீங்கள் வருண தேவனையும், சூரிய தேவனையும், மேகத்தையும், பூமி மாதவினையும்
சந்தித்துவிட்டு வருகிறீர்கள். இப்போது உங்களுக்கு என்ன சந்தேகம்?" என்று வினவ..... "நீங்கள்
வெறும் சாதாரண பெண்மணி இல்லை என்று நான் அறிகிறேன், தாங்கள் யார் என்பதை எனக்கு
உணர்த்தியருளுங்கள்", என்று முனிவர் கேட்க, தன் சுயரூபத்தை காண்பித்து, நான் தான் கங்காதேவி என்று முனிவருக்கு அருளினார். இதனால் மகிழியுற்ற
முனிவர், "மாதா, மனிதர்கள் செய்யும் பாவங்கள், சுழன்று சுழன்று மீண்டும் மனிதர்களையே சென்றடைகிறது. மனிதர்கள் மேலும்
மேலும் பாவங்களை செய்து கங்கையில் கரைப்பதால், கங்காநதியில் பாவத்தின் பாரம்
அதிகமாகி கொண்டே செல்லுமல்லவா? இப்படியிருக்க, எப்படி கங்கையில் நீராடுவதால் பாவங்கள் களையப்படும் என்று சொல்கிறார்கள்?" என்று கேட்க. "முனிவரே, இந்த சந்தேகம் ஒருமுறை
எனக்கும் வந்தது, அந்நேரம் நான் சிவபெருமானை வேண்டி என் சந்தேகத்தை முன் வைத்தேன், அப்போது நடந்தது என்ன என்பதை
கூறுகிறேன் கேளுங்கள்" என்றார் கங்காதேவி.
கங்காதேவி கூறியது என்ன?
"மாதா, மனிதர்கள் செய்யும் பாவங்கள், சுழன்று சுழன்று மீண்டும்
மனிதர்களையே சென்றடைகிறது. மனிதர்கள் மேலும் மேலும் பாவங்களை செய்து கங்கையில்
கரைப்பதால், கங்காநதியில் பாவத்தின் பாரம் அதிகமாகி கொண்டே செல்லுமல்லவா? இப்படியிருக்க, எப்படி கங்கையில் நீராடுவதால்
பாவங்கள் களையப்படும் என்று சொல்கிறார்கள்?"
என்று முனிவர் கேட்க. "முனிவரே, இந்த சந்தேகம் ஒருமுறை
எனக்கும் வந்தது, அந்நேரம் நான் சிவபெருமானை வேண்டி என் சந்தேகத்தை முன் வைத்தேன், அப்போது அங்கு எங்களுக்குள்
நடந்த உரையாடலை கேளுங்கள்", என்று தொடர்ந்தார் கங்காதேவி.
கங்காதேவி: சர்வேஸ்வரா! நாள் தோறும் மனிதர்கள் மேலும் மேலும்
பாவங்கள் செய்து, கங்கையில் நீராடி அவர்கள் பாவங்களை களைய வருகின்றனர். நானும், அவர்களின் பாவங்களை கழுகி
அவர்களுக்கு விமோசனம் கொடுக்கிறேன். இவ்வாறு,
என்னால் கழுகும் பாவங்களின் சுமைகளும்
அதிகரித்துக்கொண்டே போகின்றதே, இறைவா. இதற்கு எப்போது விமோசனம் கிடைக்கும்? அருள்கூர்ந்து விளக்குங்கள்
பெருமாளே!
சிவபெருமான்: தேவி, கங்கையில் பாவம் செய்தவர்கள் மட்டுமே நீராடுவதில்லை. பூமியில்
புண்ணியாத்மாக்களும் உண்டு என்பதை அறிந்து கொள்ளவும். அங்ஙனம் புண்ணியம்
செய்தவர்கள் கங்கையில் நீராடும் போது கங்கையில் ஒழுகிவரும் பாவங்களின் ஒரு பாகம், அந்த புண்ணியாத்மாவின்
புண்ணியத்திற்கேற்ப, எரிந்து நாசமாகிறது. இங்கனம் பாவத்தின் பாரம் குறைந்து கொண்டு வரும். எனவே, தேவிக்கு விதிக்கப்பட்ட
பாவத்தினை கழுகும் கர்மத்தினை தொடர்ந்து செய்யவும்.
கங்காதேவி: நன்றி சர்வேஸ்வரா! விடை கொள்ள அனுமதித்தாலும்.
சிவபெருமான்: மங்களம் உண்டாகட்டும்....
"முனிவரே, இப்போது உங்கள் சந்தேகம்
தீர்ந்ததா?" என்று கங்காதேவி கேட்க,
"ஆம்" என்றார் முனிவர். "அதனால் தான் தங்களை
நீராடுமாறு கேட்டுக்கொண்டேன்" என்று தேவி கூற. "நிச்சயமாக செய்கிறேன்", என்று கூறி முனிவர் நீராட
சென்றார்.
நன்றி இணையம்