முருங்கைகாய் பெப்பர் சிக்கன்..

மணக்கால் அய்யம்பேட்டை | 9:45 PM | Best Blogger Tips
நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு...

முருங்கைகாய் பெப்பர் சிக்கன்..

என்னென்ன தேவை?

சிக்கன்-1/4கிலோ 
முருங்கைகாய்-2 நறுக்கிகொள்ளவும்
வெங்காயம்-200 கிராம்
பச்சைமிளகாய்-2 
இஞ்சி, பூண்டு விழுது-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
மிளகுத்தூள்-4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-6
கொத்தமல்லி இலை-1கப்
எண்ணெய்-1/2 குழிக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன்

எப்படி செய்வது?

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சிறிது கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய், முருங்கைகாய் சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி வதக்கவும். இஞ்சி, பூண்டு, விழுதைச்சேர்க்வும். சிக்கனையும் இதனுடன் சேர்த்து போதுமான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். மிளகுத்தூளை காரத்திற்கு தகுந்தாற் போல் சேர்க்கவும். சிக்கன், முருங்கைகாய், நன்கு வெந்து மசாலா கலவையுடன் சேர்ந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

Visit our Page -► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]

Via FB  தமிழால் இணைவோம்

சித்தர்களை தெரிந்துகொள்வோம்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:36 PM | Best Blogger Tips
சித்தர்களை தெரிந்துகொள்வோம்

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..”

என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம்.

சித்தர்கள் என்றால், ஏதோ மருத்துவத்தையும் ஆன்மீகத்தையும் மட்டுமே ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள் என்ற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது. முற்றிலும் தவறான பதிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மொழி இல்லாமல் எது நிலைக்கும்? தமிழின் முதல் இலக்கண நூலைத் தந்தவரே அகத்தியர்தான் என்பதை ஆன்றோரும் சான்றோரும் ஆணித் தரமாக சொல்லுகிறார்கள். ஞானமும் தமிழும் இணைந்த போதுதான் சித்தர்களின் தத்துவம் செழுமை பெற்றது.

மொழியை இழந்த சமூகம் வரலாற்றையும் இழந்துவிடும். மொழி என்ற வேர்கள் இல்லாமல் சமூகவிருட்சம் தழைக்கவோ, செழிக்கவோ முடியாது. முக்காலத்தையும் அறிந்த சித்தர்களுக்கு முத்தமிழின் பெருமை தெரியாமலா போய்விடும்!

தமிழைப் பாடுவதற்காகவே என்னை இறைவன் படைத்திருக்கிறான் என்று புளங்காகிதம் அடைந்திருக்கும் திருமூலர் தமிழின் பெருமையும் இறைவனின் அருமையும் இரண்டறக் கலந்திருப்பது குறித்து மனம் குழைந்து கூறி இருப்பதைக் கவனியுங்கள்...

“முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்தவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே”
(திருமந்திரம்)அதனால்தான்
“அருமலர் மொழியுஞான அமுதர்த
செந்தமிழைச் சொல்வாம்”

என்கின்றார் ஞானவெட்டியான்.

ஆம்... தமிழை அவர் வெறும் மொழியாக மட்டும் பார்க்கவில்லை. ஞானாமிர்தமாகப் பார்க்கிறார்.
அதுமட்டுமல்ல.. சித்தர்களின் சிறப்பை பற்றி சொல்ல வரும்போது,

“பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து
தென்தரை மீதிற் றெளிந்தவர் சித்தரே”

என்றும் பாராட்டுகின்றார். தங்களின் தொன்மமான பெருமைகளில் தோய்ந்தது மட்டுமல்லாமல், தமிழையும் உணர்ந்ததாலேயே சித்தர்கள் சிறப்புப் பெற்றார்கள் என்கிறார்.

“பொதிகை மேவு மகத்தீர ராலெனது
போதத் தமிழ் வாக்கியம்”

என கேட்பவரை கிறுகிறுக்க வைக்கும் தன்தமிழ் ஆற்றல், பொதிகையில் வாழும் அகத்தியன் தந்த கொடை என்று போற்றுகிறார்.

அகத்தியர் தமிழைப் பற்றி என்ன சொல்லுகிறார்?
“சிந்தையுறு ஞானத் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே - செந்தமிழ்
நூல் காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும்
தேவியென்னும் பூரணியே சீர்”
(அகத்தியர் ஞானம் 100)

என்று தமிழை பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகவே சித்தரிக்கின்றார்.

பட்டினத்தாரே, மனித வாழ்வின் முழுமையான தத்துவத்தையும், தமிழின் முச்சங்கங்களின் பெயராலேயே விளக்குகிறார்.

“முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார்
இசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் -கடைச்
சங்கம் இம்போதது ஊதும் அம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்”

இப்படி மூலிகையைச் சொன்னாலும், முக்தி பற்றிச் சொன்னாலும், முத்தமிழில் குழைத்தே சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

சித்தர்கள் சித்தத் தெளிவு மட்டுமல்ல, செந்தமிழ்த் தெளிவும் கொண்டவர்கள் என்பதை இனியேனும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி : தமிழ் தந்த சித்தர்கள்“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

நன்றி : தமிழ் தந்த சித்தர்கள்

வாழ்க்கைத் தத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:24 PM | Best Blogger Tips

ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, 
தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒன்றை
 புரியவைக்க நினைத்தார். எல்லாரையும் அழைத்து 
உக்கார வைத்து, அவங்களுக்கு தன்னோட பொக்கை 
வாயை திறந்து காண்பித்தார்.

அவ்வளவுதான், 'வாழ்க்கைத் தத்துவம் இதுதான்'னு
 சொல்லி போகச் சொல்லிட்டார்.

சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே ஒரு சீடன் 
மட்டும் வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் 
இருந்துதிட போகுதுன்னு குழம்பினவன், மெதுவாக
குருவையே எழுப்பி கேட்டான்.

அவர் கேட்டார்.. 'என் வாய்குள்ள என்ன இருந்தது?'

'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!'

'பல் இருந்ததா?'

'இல்லை.'

'அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.'

Ilayaraja Dentist

Visit our Page -► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி,
தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒன்றை
புரியவைக்க நினைத்தார். எல்லாரையும் அழைத்து
உக்கார வைத்து, அவங்களுக்கு தன்னோட பொக்கை
வாயை திறந்து காண்பித்தார்.

அவ்வளவுதான், 'வாழ்க்கைத் தத்துவம் இதுதான்'னு
சொல்லி போகச் சொல்லிட்டார்.

சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே ஒரு சீடன்
மட்டும் வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம்
இருந்துதிட போகுதுன்னு குழம்பினவன், மெதுவாக
குருவையே எழுப்பி கேட்டான்.

அவர் கேட்டார்.. 'என் வாய்குள்ள என்ன இருந்தது?'

'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!'

'பல் இருந்ததா?'

'இல்லை.'

'அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.'

Via Ilayaraja Dentist &தமிழால் இணைவோம்

கழிப்பறைகள் சுகாதார வசதியா? சுகாதார சீர்கேடா..?

மணக்கால் அய்யம்பேட்டை | 9:20 PM | Best Blogger Tips
கழிப்பறைகள் சுகாதார வசதியா? சுகாதார சீர்கேடா..?
----------------------------------------------------------------------
இயற்கை மூலமாக கிடைத்த உணவும், உடலும் அதன் பணி முடிந்ததும் மீண்டும் இயற்கையோடு கலந்துவிட வேண்டும். அதை தடுப்பதும் தாமதப்படுத்துவதும் இயற்கையை-உயிரியல் சுழற்சியை மீறிய செயலாகும். 

நம் முன்னோர்கள் தினசரி காலை கடனை கழிக்கையில் சிறு குழி தோண்டி பின் மூடி செல்வர். இதனால் இயற்கைக்கும் மண்ணுக்கும் மனிதருக்கும் பாதிப்பின்றி இருந்தது.  

தற்போது கழிவறை என்று ஒன்றை செலவழித்து கட்ட வேண்டும். அதுவும் வீட்டுக்குள்ளேயே கட்டினால் பெருமை. அந்த கழிவுகளை வெளியேற்ற தனியே சாக்கடை, அதை கட்ட பல ஆயிரம் கோடி டெண்டர், அந்த சாக்கடை வழியாக கொசு மற்றும் கிருமிகள் உற்பத்தியாகி நாடெல்லாம் பல நோய்கள அதை தீர்க்க லட்சகணக்கான கோடிகளில்  மருந்து-மருத்துவ வணிகம்!. இவை போதாது என்று செப்டிக் டேங்கில் தேங்கும் கழிவால் மீத்தேன் உற்பத்தியாகி அதுவும் சுற்றுசூழலை பாதிக்கும்.

யோசித்து பாருங்கள் நம் நாட்டின் 120 கோடி மக்கள் தொகையில் 50% கிராமங்களில் உள்ளனர். (தற்போதைக்கு கிராமத்தை மட்டும் கணக்கில் எடுத்து கொள்வோம்) குறைந்தபட்சமேனும் கணக்கிட்டு பார்த்தாலும் ஒரு நாளைக்கு மனித திடக்கழிவு மட்டும் 2.4 லட்சம் டன் உரம் மண்ணுக்கு சேரும். இதே அளவு உரத்தை இறக்குமதி செய்ய எத்தனை ஆயிரம் கோடிகள் நாம் செலவு செய்ய வேண்டும்?? இன்று மாநகராட்சி-நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். ஆனால் மண்ணுக்குள் நடக்க வேண்டிய சுழற்சிகள் செப்டிக் டேங்கில் நடப்பதால் பல தீங்குகள் நடக்கிறது. தனியார் செய்ததை தற்போது அரசு செய்கிறது அவ்வளவே, ஓதனால் இயற்க்கைக்கோ மக்களுக்கோ புதிதாக பெரிய நன்மை என்று எதுவும் இல்லை.  

கழிவறை என்பது ‘சுகாதார’ வசதி என்று நம்ப வைத்து அது இல்லையேல் அவமானம் என்றும் நம்ப வைத்துள்ளனர். இதெல்லாம் அரசாங்கத்துக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் அரசாங்கம் செய்கிறது. மக்களாகிய நாம் தான் இதை புரிந்து செயல்பட வேண்டும்!

வசதி என்பது அனைத்தும் சரி என்பதோ, சுகாதாரம் என்பதோ கிடையாது. இதை மனிதன் புரிந்துகொள்ளும்போதுதான் இயற்கை கை கொடுக்கும்! 

பின்குறிப்பு: நம் முன்னோர்கள் கழனியையே கழிவறையாக பயன்படுத்தினர். மனித மலத்தை மனிதன் அள்ளும் அவலம் என்று சமூகத்தை குறை கூறி திட்டமிட்ட சதி போல, கூப்பாடு போடும் புரட்சியாளர்களுக்கு நம் முன்னோர் உலகில் வேலை இல்லை!

Via FB விஜய பாரதம்
 
அன்பே சிவம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 9:18 PM | Best Blogger Tips
அன்பே சிவம்.

ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான்.அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்து கொண்டான்.

காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான்.அங்கு வயதான பெண்மனி ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை பார்த்து கொண்டே இருந்தார்.

நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான்.அந்த பாட்டி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.ஒரு வேளை பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்றென்னி தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கி குடித்தாள்.

அந்த சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையை பார்த்ததில்லை அதனால் திரும்பவும் அவர்கள் புன்னகையை பார்க்க தான் கொண்டு வந்து உணவு பொட்டலத்தை பிரித்து கொடுத்தான்.

அந்த பாட்டியும் மீண்டும் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் அடிக்கடி ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர்.

நேரம் ஆக ஆக அம்மா நியாபகம் வந்தது சிறுவனுக்கு அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான்.சிறிது தூரம் நடந்தவன் சட்டென திரும்பி குடுகுடுவென்று ஓடி சென்று பாட்டியை கட்டி அணைத்தான்.பாட்டி அவன் செயலை பார்த்ததும் மிகவும் பிரகாசமாக சிரித்தாள்.

சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதை பார்த்த அவன் அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள்.’நான் மதியம் கடவுளுடன் சாப்பிடேன்’ என்றான் கடவுளின் புன்னகை மாதிரி நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்றான்.

அதே நேரம் அந்த பாட்டி அவர்கள் வீட்டில் நுழையும்போது என்ன அம்மா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று அவள் மகன் கேட்டான்.’இன்று மதியம் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றாள் அது மட்டும் இல்லை நான் நினைத்ததை விட கடவுள் மிக சிறிய வயது கொண்டவராக இருந்தார் என்றாள்.

அறிமுகம் இல்லாதவர்களிடம் ஒரு சின்ன புன்னகை,ஆறுதலான வார்த்தை,சின்ன உதவி செய்து பாருங்கள் நீங்களும் கடவுள்தான்.கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான் இருக்கிறார்

@[100002951139174:2048:Ilayaraja Dentist]ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான்.அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்து கொண்டான்.

காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான்.அங்கு வயதான பெண்மனி ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை பார்த்து கொண்டே இருந்தார்.

நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான்.அந்த பாட்டி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.ஒரு வேளை பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்றென்னி தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கி குடித்தாள்.

அந்த சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையை பார்த்ததில்லை அதனால் திரும்பவும் அவர்கள் புன்னகையை பார்க்க தான் கொண்டு வந்து உணவு பொட்டலத்தை பிரித்து கொடுத்தான்.

அந்த பாட்டியும் மீண்டும் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் அடிக்கடி ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர்.

நேரம் ஆக ஆக அம்மா நியாபகம் வந்தது சிறுவனுக்கு அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான்.சிறிது தூரம் நடந்தவன் சட்டென திரும்பி குடுகுடுவென்று ஓடி சென்று பாட்டியை கட்டி அணைத்தான்.பாட்டி அவன் செயலை பார்த்ததும் மிகவும் பிரகாசமாக சிரித்தாள்.

சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதை பார்த்த அவன் அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள்.’நான் மதியம் கடவுளுடன் சாப்பிடேன்’ என்றான் கடவுளின் புன்னகை மாதிரி நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்றான்.

அதே நேரம் அந்த பாட்டி அவர்கள் வீட்டில் நுழையும்போது என்ன அம்மா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று அவள் மகன் கேட்டான்.’இன்று மதியம் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றாள் அது மட்டும் இல்லை நான் நினைத்ததை விட கடவுள் மிக சிறிய வயது கொண்டவராக இருந்தார் என்றாள்.

அறிமுகம் இல்லாதவர்களிடம் ஒரு சின்ன புன்னகை,ஆறுதலான வார்த்தை,சின்ன உதவி செய்து பாருங்கள் நீங்களும் கடவுள்தான்.கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான் இருக்கிறார்

Via FB Ilayaraja Dentist

எக்ஸ்ட்ரா டிப்ஸ்....

மணக்கால் அய்யம்பேட்டை | 9:17 PM | Best Blogger Tips

எக்ஸ்ட்ரா டிப்ஸ்....

* காற்றோட்டமில்லாத அறைகளில் அதிக நேரம் இருந்தாலோ அப்படிப்பட்ட வீடுகளில் குடியிருந்தாலோ சிறுநீரகக் கோளாறு வரலாம்.

* ஊறுகாய், கருவாடு, வடாம் ஆகியவற்றை அடிக்கடியோ அதிகமாகவோ சேர்த்துக்கொள்வது சிறுநீரகத்துக்கு நல்லதல்ல.

* சிறுநீரகச் செயலிழப்பு இருப்பவர்கள் தண்ணீரை அதிகமாகக் குடிக்கக் கூடாது. மீறினால் நீர்ச்சத்து அதிகமாகி, மூச்சு வாங்குதல், உடல் வீக்கம் போன்றவை நிகழலாம். அதே நேரம் நன்னாரி வேரை இடித்து நீரில் போட்டு அந்த நீரைக் குடிக்கலாம்.

* தேவையில்லாத பயம், மனத்தளர்ச்சி போன்றவையும் சிறுநீரக சக்தி குறைவதன் அடையாளமே!

Via FB Aatika Ashreen

30 வகை சட்னி - துவையல் !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:31 PM | Best Blogger Tips

''சூடான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ளம் செய்து... அதில் பூண்டு ரசத்தை விட்டு சாப்பிட்டால்... ஆஹா, தேவாமிர்தம்!'' என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்கள், இந்த எலெக்ட்ரானிக் யுகத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை எல்லாம் திருப்தி செய்ய உதவுவதோடு... டிபனுக்கு தொட்டுக்கொள்ள வித்தியாசமான சட்னிகளை வழங்கவும் '30 வகை சட்னி - துவையல் ரெசிபி’களுடன் களம் இறங்கும் சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்.

''சுவையில் அசத்தும் இந்த ரெசிபிகளை... ஜீரண சக்தியை அதிகரிக்கும், நினைவாற்றலை வளர்க்கும், சத்துக்கள்மிக்க பொருட்களையும் சேர்த்து தயாரித்துள்ளேன்'' என்கிறார் உற்சாகம் பொங்க!

குறிப்பு: காரம் குறைவாக இருப்பதை விரும்புபவர்கள், மிளகாயின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப குறைத்துக் கொள்ளலாம்.

பச்சைப்பயறு துவையல்

தேவையானவை:

பச்சைப்பயறு - அரை கப், பூண்டு - ஒரு பல், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, புளி - கோலி அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வெறும் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துக் கொள்ளவும். ஆறியபின், பயறு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

எள் துவையல்

தேவையானவை:

கறுப்பு எள் - அரை கப், பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, புளி - கோலி அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வெறும் வாணலியை சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவும். உப்பு தவிர மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
எள், இரும்புச்சத்து மிக்கது.

வல்லாரை சட்னி

தேவையானவை:

வல்லாரைக்கீரை - அரை கட்டு, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல், - கால் கப், பச்சை மிளகாய் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.

குறிப்பு:
வல்லாரைக் கீரை மூளையை சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை வளர்க்கும். வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.

சீரக துவையல்

தேவையானவை: 

சீரகம் - கால் கப், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), சின்ன வெங்காயம் - 5, புளி - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 5, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை வதக்கவும். ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். விருப்பப்பட்டால், எண்ணெயில் சிறிதளவு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம்.
இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.

பீர்க்கங்காய் தோல் துவையல்

தேவையானவை: 

பீர்க்கங்காய் தோல் - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - கோலி அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வாணலியில் எண்ணெயை சூடாக்கி உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

விருப்பப்பட்டால் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து துவையலுடன் சேர்க்கலாம்.

வல்லாரை துவையல்

தேவையானவை: 

வல்லாரைக்கீரை - ஒரு கப், பூண்டு - 2 பல், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 5, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வாணலியில் எண்ணெயை சூடாக்கி... வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி... உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு:
ஞாபக சக்தி, உடல் வலிமை, மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும். புளி சேர்க்காமல் இதை சமைக்க வேண்டும். அப்போதுதான் இதன் முழு பலனும் கிட்டும்.

பிரண்டை துவையல்

தேவையானவை: 

நார் நீக்கி, துண்டுகளாக்கிய பிரண்டை - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, புளி - கோலி அளவு, பூண்டு - 2 பல், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வாணலியில் எண்ணெய் விட்டு, கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்து (உப்பு நீங்கலாக) வதக்கவும். ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

பிரண்டை எலும்புக்கு பலம் தரும். பசியின்மை, வாய்க்கசப்பு போக்கும்.

புளி துவையல்

தேவையானவை: 

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), கறிவேப்பிலை - கால் கப், தனியா - 2 டேபிள்ஸ்பூன், கருப்பட்டி - சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தனியா மூன்றையும் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு புளி, கருப்பட்டி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். மீதமுள்ள நல்லெண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கினால்... புளிப்பு, காரம், இனிப்புச் சுவையுடன் வித்தியாசமான துவையல் தயார்!

கத்திரி துவையல்

தேவையானவை: 

பெரிய கத்தரிக்காய் - ஒன்று, புளி - கோலி அளவு, காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பூண்டு - 2 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
கத்திரிக்காயின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி, தணலில் சுட்டு தோல் உரித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, புளி ஆகியவற்றை வதக்கி, ஆறியதும் கத்திரிக்காயை சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும் (மையாக அரைக்க வேண்டாம்). நல்லெண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

பருப்பு துவையல்

தேவையானவை: 

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, தேங்காய் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பூண்டு - 2 பல், புளி - கோலி அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெறும் வாணலியை சூடாக்கி... கடலைப்பருப்பு, துவரம்பருப்பை சிவக்க வறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு ஆகியவற்றை வறுத்து... பருப்புகள், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
ரசம் சாதத்துக்கு இந்த பருப்பு துவையல் சரியான ஜோடி.

வேப்பம்பூ துவையல்

தேவையானவை: 

வேப்பம்பூ - 2 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், புளி - கோலி அளவு, காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), வெல்லம் - சிறிய துண்டு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் நெய் விட்டு, வேப்பம்பூவை சிவக்க வறுக்கவும் இதனுடன் உளுத்தம்பருப்பு, புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். இதில் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். கடைசியாக வெல்லம் சேர்த்து அரைக்கவும்.

வேப்பம்பூ, வயிற்றில் பூச்சித் தொல்லை ஏற்படுவதை தடுக்கும்.

கொள்ளு துவையல்

தேவையானவை: 

கொள்ளு - அரை கப், பூண்டு - 2 பல், புளி - கோலி அளவு, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
சுத்தம் செய்த கொள்ளு, மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் (உப்பு தவிர) வெறும் வாணலியில் வறுத்து பின்னர் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து எடுத்தால்... கொள்ளு துவையல் தயார்.
கொள்ளு, கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.

வதக்கிய தேங்காய் துவையல்தேவையானவை: 

தேங்காய் துருவல் - அரை கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - ஒரு பல், புளி - கோலி அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை.

செய்முறை: 
தேங்காய் துருவலை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுத்து வைக்கவும். சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புளி, பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளித்து, அதில் அரைத்த விழுதை சேர்த்து சுருள வதக்கவும்.

இந்த துவையலை சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம். தேங்காயை வதக்கி இருப்பதால், பயணத்தின்போது எடுத்துச் செல்லவும் ஏற்றது.

கதம்பத் துவையல்

தேவையானவை: 

தேங்காய் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 3, பூண்டு - 2 பல், சின்ன வெங்காயம் - 5, புளி - சிறிதளவு, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, விழுதாக அரைக்கவும்.
கஞ்சி, மோர் சாதத்துக்கு ஏற்ற துவையல் இது.

எள் சட்னி

தேவையானவை: 

வெள்ளை எள் - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - ஒரு பல், புளி - கோலி அளவு, காய்ந்த மிளகாய் - 6, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் நன்கு வறுக்கவும். சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, தேங்காய் துருவல், பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து, எள்ளுடன் சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.

இஞ்சி சட்னி

தேவையானவை: 

சுத்தம் செய்து, நறுக்கிய இஞ்சித் துண்டுகள் - ஒரு கப், பூண்டு - 20 பல், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், வெல்லம் - சிறிய துண்டு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு, வெல்லம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவும்.

இதை பல நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஜீரண சக்தியைத் தூண்டும். பசியின்மை, மந்தம், வயிற்றுப் பொருமல் தீரும்.

பாம்பே சட்னிதேவையானவை: 

பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 5, பொட்டுக்கடலை மாவு - மூன்று டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, சோம்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பொட்டுக்கடலை மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து இதனுடன் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்து வரும்போது, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சௌசௌ சட்னி

தேவையானவை: 

சிறிய சௌசௌ, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பச்சை மிளகாய் - 5, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, சௌசௌ சேர்த்து வதக்கவும். ஆறியதும், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

முள்ளங்கி சட்னி

தேவையானவை: 

முள்ளங்கி - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 8, இஞ்சி - விரல் நீளத் துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கறிவேப்பிலை - கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம் முள்ளங்கி, இஞ்சி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். ஆறிய பின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்க்கவும்.

முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்களைக் கூட இந்த சட்னி கவரும்.

கேரட் சட்னி

தேவையானவை: 

கேரட் - 2, வெங்காயம் - ஒன்று, புளி - கோலி அளவு, பச்சை மிளகாய் - 5, பூண்டு - 2 பல், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், புளி, பூண்டு சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றை உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.

ஆப்பிள் சட்னி

தேவையானவை:

காய் வெட்டாக உள்ள புளிப்பு ஆப்பிள், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய ஆப்பிள், வெங்காயம், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், கறிவேப்பிலையை வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்க்கவும்.

முட்டைகோஸ் சட்னி

தேவையானவை: 

துருவிய கோஸ் - அரை கப், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கொத்தமல்லி - கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... துருவிய கோஸ், நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த சட்னியுடன் சேர்க்கவும்.

தக்காளி புதினா சட்னி

தேவையானவை: 

தக்காளி - 2, புதினா - கால் கப், இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பெரிய வெங்காயம் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
தக்காளி, வெங்காயத்தை நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... புதினா, இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, வெங்காயத்தை வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். விருப்பப்பட்டால், நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கலாம்.

கத்திரி உருளை சட்னி

தேவையானவை: 

கத்திரிக்காய் - 3, உருளைக்கிழங்கு - (சிறியது), வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), கொத்தமல்லி - கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியதும் சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்த்தால்... இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஏற்ற கத்திரி - உருளை சட்னி ரெடி.

தூதுவளை துவையல்

தேவையானவை: 

தூதுவளை இலை - ஒரு கப், பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 6, புளி - சிறிதளவு, தேங்காய் துருவல் - அரை கப், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
தூதுவளை இலையை முள் நீக்கி சுத்தம் செய்யவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, தூதுவளை இலையை வதக்கவும். சிறிது வதங்கியதும் பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

இது, சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட ஏற்றது. சளி, இருமலைக் கட்டுப்படுத்தும். தொண்டைக் கட்டு குணமாகும்.

தனியா சட்னி

தேவையானவை: 

தனியா - கால் கப், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பூண்டு - 2 பல், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியை சூடாக்கி தனியாவை வறுத்து எடுக்கவும். பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும், ஆறியபின் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.
வாய்க்கசப்பு, பித்தம் குறைய உதவும் இந்த சட்னி

பெரிய நெல்லி சட்னி

தேவையானவை: 

பெரிய நெல்லிக்காய் - 10, உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: 
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கொட்டை நீக்கிய நெல்லிக்காய்களை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

கோவைக்காய் சட்னி

தேவையானவை: 

கோவைக்காய் - 12, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:  
கோவைக்காய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

சுரைக்காய் சட்னி

தேவையானவை: 

சுரைக்காய் (நறுக்கியது) - கால் கப், வெங்காயம் - ஒன்று, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித் தழை - கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 4, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
 
செய்முறை:
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சுரைக்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல், புளி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதில் சேர்க்கவும்.
நீர்ச்சத்து மிகுந்த சட்னி இது.

புடலங்காய் சட்னி

தேவையானவை: 

புடலங்காய் துண்டுகள் - அரை கப், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, வெங்காயம் - ஒன்று, புளி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, புடலங்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதுடன் சேர்த்தால்... புடலங்காய் சட்னி ரெடி!

Via FB  ஆரோக்கியமான வாழ்வு

எதனால் மாரடைப்பு வருது?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:30 PM | Best Blogger Tips

உலகிலேயே அதிகமாக மனிதர்கள் இறப்பதற்கு முதல் காரணம் மாரடைப்பு, ஏழை, பணக்காரன், ஆண், பெண் என்ற வித்தியாசம் ஏதுமின்றி எல்லோரையும் தாக்குகிறது இந்த “ஆட்கொல்லி” இருதய நோய். மாரடைப்பு வருவதற்கு காரணங்கள்.

* அதிக ‘கொலஸ்ட்ரால்’ ரத்த தமனிகளில் கொழுப்புகள், ட்ரைகிளிசரைடுகள் அதிகமாக இருப்பது பரம்பரை, புகைபிடித்தல், அதிக இரத்த அழுத்தம் இன்றைய அவசர வாழ்க்கையில் ஏற்படும் மன இறுக்கம், நீரிழிவு நோய் போன்றவை.

* இருதய நோய்களை வருமுன் காப்பது நல்லது. இதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. இருதய நோயை சமாளிக்க பல வழிகளில் முனைய வேண்டும்.

* சரியான உணவு, உடற்பயிற்சி, நோய் வந்தால் சரியான சிகிச்சை, வாழ்வுமுறைகளில் மாற்றம், மன நிலையில் அமைதி என்ற பல வழிகளில் இந்த நோயை சமாளிக்க வேண்டும்.

* ஆயுர்வேதத்தில் இருதய நோய்களுக்கு உன்னதமான மருந்துகள் உள்ளன. இம் மருந்துகளுடன், உணவுக்கட்டுப்பாடும் சேர்ந்தால் சிகிச்சை பலனளிக்கும். முதலில் உணவுமுறைகளைப் பார்ப்போம்.

* சாப்பிடும் உணவு எவ்வளவு கலோரிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வயதாக வயதாக, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு, 1500 கலோரிகள் போதுமானது. எல்லோரும் அறிந்தது உணவில் கொழுப்பை குறைப்பது நல்லது.

* வனஸ்பதி, வெண்ணெய் இவற்றை அறவே தவிர்க்கவும். சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

* நார்ச்சத்தும், மாவுச்சத்தும் மிகுந்த கோதுமை, அரிசி, பீன்ஸ், ஒட்ஸ் மாவு, காய்கறி, பழங்கள் போன்ற உணவுகள் நல்லவை. சமையலில் ஆலிவ் எண்ணெய், தானிய எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கவும்.

* 4 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் 2 கிலோ எண்ணெய்க்கு மேல் உபயோகிக்க கூடாது. இல்லை, ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் போதுமானது.

* உணவில் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவும். 2400 மி.கி. உப்பு (சோடியம்) ஒரு நாளுக்கு போதுமானது. முடிந்தால் இந்த அளவையும் குறைக்கவும்.

உடல் எடையை அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஓர் ‘வளையம்’ போல் வயிற்றை சுற்றி கொழுப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். சுறுசுறுப்பாக இருங்கள்.
Via FB  ஆரோக்கியமான வாழ்வு

இரத்தக் கொதிப்பு நோய்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:26 PM | Best Blogger Tips
 
 ராமசுப்பு சைக்கிளை கடன் வாங்கி, குரங்குப் பெடல் போட்டு வேகமாய் அழுத்தி,கிணற்றாங்கரை வரை போய் அந்த மத்தியான வெயிலில் லேசான மழைத் தூறல்களுக்கு இடையே தெரியும் வானவில்லைப் பார்த்த போதும், வரிசையாய் பரிட்சை பேப்பர் கொடுத்துவரும் போது, ”பழனிச்சாமி- நீ தான்டா முதல் மார்க் 92” என்று ஆசிரியர் சொன்ன போதும், காலையில் கண் விழித்தவுடன் இரவில் லேட்டாக வந்து உறங்கிக் கொண்டிருக்கும் அப்பா வாங்கி வைத்திருந்த பொட்டலத்தை, அவருக்கு கேட்காதபடி, மெதுவாக அவிழ்த்துப் பார்க்க, அதனுள் இருந்த புது ’டீஷர்ட்-ஐ’ பார்த்த உடனேயும் உள்ளத்தில் குதூகலமாய், வயிற்றில் விவரிக்க முடியாத உணர்வுடன் சந்தோஷ பீறிட்டுக் கொண்டு கிளம்ப, முகம் அப்படி ஒரு பளீர் மகிழ்வுடன் இருப்பதை மறந்திருக்க மாட்டோம். அந்த சின்ன சின்ன சந்தோஷங்கள் தாம் கடந்தகால நினைவை எப்போது அசைபோட்டாலும் ஆனந்தம் கொள்ள வைக்கிறது.. எங்கே போயிற்று இந்த சின்ன சின்ன சந்தோஷங்கள்? அனந்தப்படவும் கூட அவசரமாய்த்தான் முடியும் எனும் இந்த வேகமான வாழ்வில் எங்கே தொலைந்து போயின அந்த சின்ன சின்ன சந்தோஷங்கள்.? கூடவே தொலைந்து போனது ஆரோக்கியமும் தான். சந்தோஷம் தொலைத்து நாம் வாங்கும் பல நோய்களுள் ரொம்ப முக்கியமானது இரத்தக் கொதிப்பு.

இயல்பாய் 120/80 என இருக்க வேண்டிய இரத்தக் கொதிப்பிற்கு-வயதாகும் போது கொடுக்கப்படும் அதிகபட்ச சலுகை 140/90. இதில் மேலே சொல்லப்படும் 140 இதயம் சுருங்கும் போது உள்ள இரத்த அழுத்தம். 90 என்பது இதயம் விரிவடையும் போது வரும் இரத்த அழுத்தம். அந்த இதயம் விரியும் போது வரும் ’கீழ் கணக்கு’-செம்மொழியின் கீழ்கணக்கு நூலைப்போல ரொம்ப முக்கியமானது. இதயம் விரியும் போதும் இரத்த அழுத்தம் உயர்ந்தால், அதாவது 90-ஐ தாண்டி 100-110 என அறிவித்தால், ஆபத்து என்பதை உணர வேண்டும். மேல் கணக்கு 140-ஐ தாண்டும் போது அதற்கான உணவும் மருந்தும் மிக அவசியம். சரி எப்படி எனக்கு இரத்தக் கொதிப்பு கூடுகிறது என்பதை அறிந்து கொள்வது?. சிலருக்கு காலைவேளைத் தலைவலி, தலைசுற்றல், உடகார்ந்து எழும் போது லேசான தள்ளாட்டம், ஒருவிதமாய் உடல், கை, கால்களில் ஏற்படும் மதமதப்பு என குறி குணங்களைக் காட்டலாம். பல நேரங்களில் அது மணிரத்னம் திரைப்படம் போல அதிகம் பேசாமல் அமைதியாக ஆட்டிப்படைத்துவிடும்

”பரபரப்பு” நவீனகால அகராதியில் முதல் சொல். பாராட்டுதலுக்காக ஏங்கும் மனிதமனத்திற்கு பெரும்பாலும் குழந்தைப்பருவத்தை தாண்டியதும் அது கிடைப்பதில்லை. மாய்ந்து மாய்ந்து உழைக்கும் ஒருவருக்கு, ’இந்தா பிடிங்க பத்மபூஷன்’ என கொடுக்க வேண்டாம். ”அட! பரவாயில்லையே-அசத்திட்டீயேப
்பா!”-என்ற குறைந்தபட்ச அங்கீகாரம் கூட கிடைக்காத போது பெருகும் சோர்வு, மன அழுத்தமாய் மாறி அது இரத்தக் கொதிப்பாய்க் குத்தவைக்கும். காதலிக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் இளவட்டம், மனைவி தன்னை கொஞ்சம் அலங்கரித்து வர நிகழும் தாமதத்தால், ’தாம் தூம்’ என குதிக்கத் துவங்க, நிகழும் வார்த்தைப் பரிமாற்றத்தில், முகம் ’மூஞ்சு’ ஆக மாறி, அகம் அல்லோல்பட்டு, தலைவலியாகி..இன்னும் ஒவ்வொன்றுமாகி..”மேடம் உங்களுக்கு பி.பி இருக்கு!” என்ற பிடிக்காத வசனத்தில் வந்து நிற்கும்.

அப்பா அம்மாவிற்கு பிரஷர் இருந்தால், இரத்த சர்க்கரை நோய் இருந்தால், மன அழுத்தம் நிறைந்த வாழ்விருந்தால், சரியான தூக்கம் இல்லாது இருந்தால், சிறுநீரக இயக்கம் சரியாக இருந்தால் இரத்தக் கொதிப்பு ஏற்படலாம். 40 வயதைக் கடந்த எவரும் ’குடும்ப டாக்டர் அங்கிளிடம்’ ஆறு மாதத்திற்கு ஒருமுறை இரத்தக் கொதிப்பை பார்த்துத் தெரிவது மிக மிக அவசியம். அதிக கட்டுப்படாத சரியாக மருத்துவம் செய்யப்படாத கவனிக்கப்படாத இரத்தக் கொதிப்பு தான் மாரடைப்பிற்கு முதல் காரணம்.

அதிக உப்பு ரொம்ப தப்பு. உப்பிலா பண்டம் குப்பையிலே முடியும். உப்புள்ள பண்டம் ’குட்பை’யிலே முடியும். கவனம். இயலப்பாகவே பல காய்கறிகளில் நமக்கு தேவையான உப்பு சத்து அதிகம் உள்ளது. அதை தாண்டிய தேவைக்கு மிகச் சிறிய அளவு உப்பு போதுமானது. அதுவும் இரத்தக் கொதிப்பு உள்ளதென்றால், உப்பை மறப்பது நல்லது. ஊறுகாய் இல்லாம் எப்படிங்க மோருஞ்சா சாப்பிடரது? மொளகாப்பொடி எண்ணெயில் ஃபினிஷ் பண்ணாத்தான் நிறைவு-எனு சொல்லும் உணவுப்பிரியர்களா?- சீக்கிரம் எகிறிவிடும் உங்கள் இரத்தக்கொதிப்பு.

சரி..பாரம்பரியச் சொத்தாக பாட்டி தந்த பாம்படம் கிடைக்கவில்லை பாட்டன் வச்சிருந்த பி.பி. மட்டும் வந்திடுச்சு-என்ன சாப்பிடலாம்? தினசரி காலை வேளையில் முருங்கைகீரையும் சிறிய வெங்காயமும் சேர்த்து சூப்பாக்கிச் சாப்பிடுங்கள். மதிய உணவில் 5-10 பூண்டுப்பற்கள், தினசரி 50-கிராமிற்கு குறையாமல் சிறிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரை அதிகரிக்கும் அத்தனை உணவுகளும் இரத்தக் கொதிப்பைக் குறைக்கும். வாழைத் தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், பார்லி ஆகியன அடிக்கடி உணவில் இருப்பது அவசியம். எண்ணெய் உணவில் குறைவாக இருப்பதும் புலால் உணவை கூடிய மட்டும் தவிர்ப்பதும் நல்லது. ரொம்ப விருப்பப்பட்டால், பொரிக்காத வேகவைத்த மீன் வாரம் ஒரிரு முறை சேர்க்கலாம்.

சீரகம் இரத்தக் கொதிப்பைக் குறைக்க கூடியது. நல்ல மணமுள்ள சீரகத்தை எடுத்துவந்து, லேசாய் வறுத்த், அதனை மூன்று நாள் இஞ்சிச் சாறிலும், மூன்று நாள் எலுமிச்சை சாறிலும், இன்னும் மூன்று நாள் கரும்புச்சாறிலும் ஊற வைத்து உலர்த்தி எடுங்கள். நன்கு உலர்ந்ததும் மிக்ஸியில் பொடி செய்த் வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வாருங்கள். உங்கள் மருத்துவத்திற்கு இந்த சிறப்பு உணவு பெரிதும் துணை நிற்கும். சார் சார்..கன்னித்தீவு கடைசி காட்சி மாதிரி இந்த பிரிப்பரேஷன் இருக்கு. நாங்க இன்ஸ்டெண்ட் விரும்பிங்க என்கிறிர்களா? அருகாமை சித்தமருத்துவரை அணுகுங்கள். சீரகச் சூரணாமாய் இது தயார் நிலையில் கிடைக்கும். அதே போல் வெந்தயம் தினசரி பொடி செய்து சாப்பிட இரத்தக் கொதிப்பிற்கு கொழுப்போ அல்லது கொழுப்பின் வகையான ட்ரைகிளைசரைடு இருப்பின் அதனைக் குறைக்க உதவிடும்.

வெள்ளைத்தாமரை தமிழரின் தமிழ் மருத்தவத்தின் ஒரு ஒப்பற்ற கண்டுபிடிப்பு. அதன் பூவிதழை உலர்த்தி பொடி செய்து தேநீராகவோ அல்லது நேரடி பொடியாகவோ சாப்பிடுவது இரத்தக் கொதிப்பு நோய்க்கு சிறப்பான உணவு. அதே போல் மருதமரம் இன்றைக்கு இந்தியாவின் மருத்துவப் பெருமையை உலகெங்கும் உயர்த்திச் சொல்லிவரும் உயர்ந்த மூலிகை. மருதமரப் பட்டை இரத்தக் கொதிப்பைக் குறைக்க உதவுவதுடன், மாரடைப்பைத் தடுக்கும் என்று உலகளாவிய ஆய்வுகள் உறுதிப்படுத்திவருகின்ரன.

இரத்தக் கொதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டால், சரியான இடைவெளியில் அதன் அளவை தெரிந்து கட்டுக்குள் உள்ளதா என்பதை குடும்ப மருத்துவரிடம் தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம், மருத்துவர் பரிந்துரைக்காமல் மருந்தை நிறுத்துவது, மாற்றுவது கூடாது.

உணவின் மீதும் மருந்தும் மீதும் உள்ள அக்கறை உள்ளம் மீதும் இருக்க வேண்டும் அப்போது மட்டுமே இரத்தக் கொதிப்பை ஒதுக்கித் தள்ள முடியும். சவால்களும் சங்கடங்களும் இல்லாத வாழ்வும் கிடையாது. வயதும் கிடையாது. வாழ்வை நகர்த்தும் சின்ன சின்ன சந்தோஷங்கள் ரொம்ப ரொம்ப முக்கியமானவை. மனம் விட்டு சிரிப்பதும் குதூகலப்படுவதும் அடிக்கடி நிகழ வேண்டும். நிகழ்த்த வேண்டும். சின்னதாய் நடனமோ, சிலிர்ப்பூட்டும் அரவணைப்போ, நினைத்து நினைத்து மகிழ வைக்கும் நகைச்சுவையோ ஏதோ ஒன்றிற்காகக் கொஞ்சம் தினசரி மெனக்கிடுங்கள். அவைதரும் மகிழ்ச்சி இதயம் வரை எட்டிப்பார்த்து, கட்டிப்பிடித்து இரத்தக்கொதிப்பைக் கட்டாயம் குறைக்கும்.

Dr. G.சிவராமன்

உயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:25 PM | Best Blogger Tips
உயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்:

வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்ப எப்படி சாப்பிடுகிறோம்ப என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர். இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பிட்ஸா, பர்கர், எண்ணையில் வறுக்கப்பட்ட தானிய வகைகள், கார்பண்டை ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்தும் நாட்களை கழிக்கிறார்கள்.

`இவர்களெல்லாம் தங்களுக்குத் தெரியாமலேயே நோயை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதே அதிர்ச்சிகரமான உண்மை என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள சென்னை கொலரக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-

`பிட்ஸா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், உருளை, எண்ணையில் தயாரித்த ஆயில் பிரைட் சிக்கன், சிப்ஸ், ஐஸ் கிரீம் இதெல்லாம் நொறுக்குதீனி (ஜங்க்புட்) அயிட்டம் தான். இளைய தலைமுறைக்கு பாதிநேர சாப்பாடே இது தான். ஒவ்வொரு உணவும் இப்படித் தான் சாப்பிடணும்னு விதிமுறை இருக்கு. முழு கோதுமையை அரைத்து சாப்பிடுவது தான் நல்லது. மைதா நல்லதல்ல. இது நம்ம உடலுக்கு சக்தியைத் தராமல் ஜீரணம் ஆவதற்காக நம் உடம்பிலிருந்து சக்தியை எடுத்துக் கொள்ளும். சர்க்கரையும் அப்படித்தான்.

அமோனியா கலந்த பாக்கெட் உணவுகள்:

`ஜங்க் புட் அயிட்டங்கள் கெட்டுப் போகாமலும், ருசியாகவும் இருக்க கலக்குற பொருட்களில் அமோனியாவும் கலந்து இருக்கும். இது புற்று நோயை வரவழைக்கக் கூடியது. இந்த மாதிரியான உணவுப் பொருட்களை ஒரு குறிப்பிட்ட குளிர்ப்பதன வசதியில் மைனஸ் 18 டிகிரி முதல் 22 டிகிரி வரை வைக்கணும். ஆனால், இதை எப்பவும் மெயின்டெயின் பண்ண முடியாது. இது போன்ற நேரங்களில் ஜங்க் புட்டில் நீர்க்குமிழிகள் உண்டாகும். இது உணவுப் பொருள் மீது படிந்து கெட்டித் தன்மையை ஏற்படுத்திவிடும்.

பட்டாணி பாக்கெட் வாங்கி ஆட்டிப் பார்த்தோம் என்றால் அது தனித்தனியாக ஆடும். ஆனால் நீர்க்குமிழி உண்டான பாக்கெட் அப்படி ஆடாமல் மொத்தமாக ஆடும். இது கெட்டுப் போன நிலையில் உள்ள பாக்கெட்.

அதே போல் புரூட் ஜெல்லியில் சேர்க்கிற கலரிங் பொடிகள் இந்த வண்ணங்களை ஏற்று செரிமானம் செய்கிற சக்தி நம் ரத்தத் திற்குக் கிடையாது. சிறு நீரகமும் இதை சுத்திகரிக்காது.

ஒரு பாக்கெட்டில் எவ்வளவு கெமிக்கல் கலந்து தயாரிக்கணுமோ அவ்வளவு குறைவான (100 கிராம்) அளவு தான் கலப்பார்கள். ஆனால், இதைச் சாப்பிடும் ஒரு குழந்தை டேஸ்ட்டுக்காக அடிக்கடியோ, அதிகமாகவோ சாப்பிட்டால் என்ன ஆகும் என்று யாரும் யோசிப்பது இல்லை. குழந்தைகள் மட்டுமில்லை பெரியவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பிட்ட நோய் உள்ளவர்கள் சோடியம் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிடக் கூடாது.

ஆனால் இது பற்றி ஜங்க் புட் சாப்பிடுகிற யாருக்கும் தெரிவதே இல்லை.
`வட இந்திய உணவு விற்கிற சாட் ஷாப்களில் சேர்க்கிற மசாலாப் பொடிகள், கலர் பொடிகள் எல்லாம் எப்போது தயாரித்தது. அவை சுத்தமானவையா என்பதற்கு எந்த விளக்கமும் கிடையாது. அங்கு வேக வைத்த உருளைக்கிழங்குகளையும் நறுக்கிய வெங் காயத்தையும் அப்படியே தட்டுகளில் வைத்திருப்பார்கள். இந்த இரண்டிற்கும் காற்றில் உள்ள நுண் கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமா இருக்கும். பக்கத்துல ஒருத்தர் தும்மினால் கூட கிருமிகளை அப்படியே இது ஈர்க்கும் எவ்வளவு ஆபத்தான விஷயம் இது.

வெப்பநிலையில் மாறுதல்:

சாட், பிஸ்கட், பர்கர், பிட்ஸா இவையெல்லாமே மேற்கத்திய நாகரிகத்தில் இருந்து வந்தவை தான். ஆனால் அங்கே உள்ள வெப்பநிலைக்கும் கலக்குற பொருட்களுக்கும் இங்கே உள்ள நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு பொருளின் தன்மைக்கு அதிகமாக அதைச் சூடுபத்தவே கூடாது. ஒன்றரை நிமிடத்தில் 150 டிகிரியில் சூடுபடுத்தும் போது ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றம் உடலுக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தை `பாலி அக்ரலைமைட் பார்மேன்சன்' என்று சொல்லி உலக விஞ்ஞானிகளே ஏற்றுக் கொள்கிறார்கள்.

வயிற்று கோளாறை தடுக்க எளிய வழி:

காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற் கொள்ளுங்கள். பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. காபி மற்றும் டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பிறகு மதிய உணவு சமசீர் உணவாக சாப்பிட வேண்டும். மதிய உணவில் பச்சை காற்கறிகள், பழங்கள், பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும் உங்கள் பசி உணர்வை குறைக்கும்.

ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேர சாப்பாட்டுக்கு கோதுமை உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு எளிமையானது. சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு காலோரிகள் நம் உடலில் தங்கி விடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி தவிர்ப்பது நல்லது.

இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய் விடும். நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும்.

அசைவம்:

அசைவ பிரியர்கள் மீன், கோழி தாராளமாக சாப்பிடலாம். அதிக எண்ணையில் போட்டு வறுக்க கூடாது லேசாக எண்ணை தடவி வறுத்து சாப்பிடலாம்.
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்றவை குடலை பதம் பார்க்கும். அவற்றை தவிர்ப்பது நல்லது. நொறுக்கு தீனி, பாஸ்ட் புட் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு செரிமான கோளாறு ஏற்படுவது சர்வ நிச்சயம். இவர்களுக்கு காலையில் எழுந்ததும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் உடனடியாக குடல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது.
இல்லையென்றால் இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதய நோய் ஆபத்து
ஒவ்வொருவருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை இதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவா ஜீரணம் செய்ய பித்த நீர், கணையநீர் தேவை. இது குறைந்தால் ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம் சாப்பிடுகிற உணவைப் பொறுத்து தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் அஜீரணம், வாய்வு, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல், பெருங்குடல் புற்று நோய், மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதயநோய், மாரடைப்பு, நெஞ்சுவலி, மஞ்சள் காமாலை அதிகபட்சமாக கேன்சர் கூட வர வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நேரடியாக தீயில் சுட்டு சாப்பிடுவதே இதற்குக் காரணம் என்கிறார் டாக்டர் வெங்கடேஷ்.
வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்ப எப்படி சாப்பிடுகிறோம்ப என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர். இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பிட்ஸா, பர்கர், எண்ணையில் வறுக்கப்பட்ட தானிய வகைகள், கார்பண்டை ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்தும் நாட்களை கழிக்கிறார்கள்.

`இவர்களெல்லாம் தங்களுக்குத் தெரியாமலேயே நோயை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதே அதிர்ச்சிகரமான உண்மை என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள சென்னை கொலரக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-

`பிட்ஸா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், உருளை, எண்ணையில் தயாரித்த ஆயில் பிரைட் சிக்கன், சிப்ஸ், ஐஸ் கிரீம் இதெல்லாம் நொறுக்குதீனி (ஜங்க்புட்) அயிட்டம் தான். இளைய தலைமுறைக்கு பாதிநேர சாப்பாடே இது தான். ஒவ்வொரு உணவும் இப்படித் தான் சாப்பிடணும்னு விதிமுறை இருக்கு. முழு கோதுமையை அரைத்து சாப்பிடுவது தான் நல்லது. மைதா நல்லதல்ல. இது நம்ம உடலுக்கு சக்தியைத் தராமல் ஜீரணம் ஆவதற்காக நம் உடம்பிலிருந்து சக்தியை எடுத்துக் கொள்ளும். சர்க்கரையும் அப்படித்தான்.

அமோனியா கலந்த பாக்கெட் உணவுகள்:

`ஜங்க் புட் அயிட்டங்கள் கெட்டுப் போகாமலும், ருசியாகவும் இருக்க கலக்குற பொருட்களில் அமோனியாவும் கலந்து இருக்கும். இது புற்று நோயை வரவழைக்கக் கூடியது. இந்த மாதிரியான உணவுப் பொருட்களை ஒரு குறிப்பிட்ட குளிர்ப்பதன வசதியில் மைனஸ் 18 டிகிரி முதல் 22 டிகிரி வரை வைக்கணும். ஆனால், இதை எப்பவும் மெயின்டெயின் பண்ண முடியாது. இது போன்ற நேரங்களில் ஜங்க் புட்டில் நீர்க்குமிழிகள் உண்டாகும். இது உணவுப் பொருள் மீது படிந்து கெட்டித் தன்மையை ஏற்படுத்திவிடும்.

பட்டாணி பாக்கெட் வாங்கி ஆட்டிப் பார்த்தோம் என்றால் அது தனித்தனியாக ஆடும். ஆனால் நீர்க்குமிழி உண்டான பாக்கெட் அப்படி ஆடாமல் மொத்தமாக ஆடும். இது கெட்டுப் போன நிலையில் உள்ள பாக்கெட்.

அதே போல் புரூட் ஜெல்லியில் சேர்க்கிற கலரிங் பொடிகள் இந்த வண்ணங்களை ஏற்று செரிமானம் செய்கிற சக்தி நம் ரத்தத் திற்குக் கிடையாது. சிறு நீரகமும் இதை சுத்திகரிக்காது.

ஒரு பாக்கெட்டில் எவ்வளவு கெமிக்கல் கலந்து தயாரிக்கணுமோ அவ்வளவு குறைவான (100 கிராம்) அளவு தான் கலப்பார்கள். ஆனால், இதைச் சாப்பிடும் ஒரு குழந்தை டேஸ்ட்டுக்காக அடிக்கடியோ, அதிகமாகவோ சாப்பிட்டால் என்ன ஆகும் என்று யாரும் யோசிப்பது இல்லை. குழந்தைகள் மட்டுமில்லை பெரியவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பிட்ட நோய் உள்ளவர்கள் சோடியம் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிடக் கூடாது.

ஆனால் இது பற்றி ஜங்க் புட் சாப்பிடுகிற யாருக்கும் தெரிவதே இல்லை.
`வட இந்திய உணவு விற்கிற சாட் ஷாப்களில் சேர்க்கிற மசாலாப் பொடிகள், கலர் பொடிகள் எல்லாம் எப்போது தயாரித்தது. அவை சுத்தமானவையா என்பதற்கு எந்த விளக்கமும் கிடையாது. அங்கு வேக வைத்த உருளைக்கிழங்குகளையும் நறுக்கிய வெங் காயத்தையும் அப்படியே தட்டுகளில் வைத்திருப்பார்கள். இந்த இரண்டிற்கும் காற்றில் உள்ள நுண் கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமா இருக்கும். பக்கத்துல ஒருத்தர் தும்மினால் கூட கிருமிகளை அப்படியே இது ஈர்க்கும் எவ்வளவு ஆபத்தான விஷயம் இது.

வெப்பநிலையில் மாறுதல்:

சாட், பிஸ்கட், பர்கர், பிட்ஸா இவையெல்லாமே மேற்கத்திய நாகரிகத்தில் இருந்து வந்தவை தான். ஆனால் அங்கே உள்ள வெப்பநிலைக்கும் கலக்குற பொருட்களுக்கும் இங்கே உள்ள நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு பொருளின் தன்மைக்கு அதிகமாக அதைச் சூடுபத்தவே கூடாது. ஒன்றரை நிமிடத்தில் 150 டிகிரியில் சூடுபடுத்தும் போது ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றம் உடலுக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தை `பாலி அக்ரலைமைட் பார்மேன்சன்' என்று சொல்லி உலக விஞ்ஞானிகளே ஏற்றுக் கொள்கிறார்கள்.

வயிற்று கோளாறை தடுக்க எளிய வழி:

காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற் கொள்ளுங்கள். பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. காபி மற்றும் டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பிறகு மதிய உணவு சமசீர் உணவாக சாப்பிட வேண்டும். மதிய உணவில் பச்சை காற்கறிகள், பழங்கள், பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும் உங்கள் பசி உணர்வை குறைக்கும்.

ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேர சாப்பாட்டுக்கு கோதுமை உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு எளிமையானது. சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு காலோரிகள் நம் உடலில் தங்கி விடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி தவிர்ப்பது நல்லது.

இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய் விடும். நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும்.

அசைவம்:

அசைவ பிரியர்கள் மீன், கோழி தாராளமாக சாப்பிடலாம். அதிக எண்ணையில் போட்டு வறுக்க கூடாது லேசாக எண்ணை தடவி வறுத்து சாப்பிடலாம்.
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்றவை குடலை பதம் பார்க்கும். அவற்றை தவிர்ப்பது நல்லது. நொறுக்கு தீனி, பாஸ்ட் புட் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு செரிமான கோளாறு ஏற்படுவது சர்வ நிச்சயம். இவர்களுக்கு காலையில் எழுந்ததும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் உடனடியாக குடல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது.
இல்லையென்றால் இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதய நோய் ஆபத்து
ஒவ்வொருவருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை இதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவா ஜீரணம் செய்ய பித்த நீர், கணையநீர் தேவை. இது குறைந்தால் ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம் சாப்பிடுகிற உணவைப் பொறுத்து தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் அஜீரணம், வாய்வு, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல், பெருங்குடல் புற்று நோய், மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதயநோய், மாரடைப்பு, நெஞ்சுவலி, மஞ்சள் காமாலை அதிகபட்சமாக கேன்சர் கூட வர வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நேரடியாக தீயில் சுட்டு சாப்பிடுவதே இதற்குக் காரணம் என்கிறார் 
டாக்டர் வெங்கடேஷ்.
 
Via FB Aatika Ashreen