ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது எப்படி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:48 PM | Best Blogger Tips
மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்கான 5 வாழ்க்கை முறை மாற்றங்கள்
ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது எப்படி?
நிகழ்காலத்திலேயே இருந்தால் மகிழ்ச்சி நிலைக்கும்! If you stay in the  present, you will be happy!
இந்த உலகில் இருக்கும் அனைவருமே ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், சமயத்தில் அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமல் குழம்புகிறோம். இத்தகைய குழப்பங்களால் உடல் மற்றும் மனதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சொல்லப்போனால், வாழ்க்கையே சிலருக்கு வெறுமையாகிவிடும். இத்தகைய வெறுமை ஏற்பட்டால், எப்படி உலகில் வாழ வேண்டுமென்ற ஆசை ஏற்படும். எனவே மனதை லேசாகவும், சந்தோஷமாகவும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சிலர் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறேன் என்ற பெயரில் தவறான வழியில் சென்றுவிடுகின்றனர். அவ்வாறு சென்ற பின்னர் அதிலிருந்து மீள்வதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆகவே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர், நாம் செய்வது நல்லது தானா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு, பின்னர் செயல்பட்டால் வாழ்க்கையே சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Creative ways to restore mental health | மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க  ஆக்கப்பூர்வமான வழிகள்
இப்போது அந்த வாழ்க்கையை சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள எப்படி இருக்க வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வாழ்வை சந்தோஷமாக வாழுங்கள்.

போதுமான உறக்கம் :

உறக்கம் ஓா் அருமருந்து!
இது உங்களை ஆரோக்கியமாக மட்டுமல்ல மகிச்சியாகவும் வைத்திருக்கும். ஒவ்வொரு இரவும் 8-10 மணிநேரம் உறங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். படுக்கைக்கு போவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே மனதை லேசாக்கிக் கொள்வது நல்லது. அதிலும் பாட்டு கேட்பது மனதை லேசாக்கும். இதனால் படுத்தவுடன் நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.

சத்தான உணவு :
நீங்கள் உணவு உண்பதில் எந்த வகை? ஆரோக்கிய வாழ்விற்கு இந்த 5 உணவை  சாப்பிடுங்கள்!
எல்லா நொறுக்குத் தீனிகளையும் குறைத்து விட்டு, தினமும் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களின் அளவைக் அதிகரிக்கவும். இதனால் உடலில் புத்துணர்ச்சியும், மனதில் உற்சாகமும் அதிகமாகும்.

அதிகமான நீர் :
How to drink more water | Why should you drink more water?
தண்ணீரை அதிகம் குடிக்கும் போது, சருமம் பளபளப்பாக இருப்பதால் தோற்றம் பற்றி நம்பிக்கை பெருகுகிறது. மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் தண்ணீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. எனவே சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, ஒரு நாளில் 8 டம்ளர் தண்ணீரைக் குடிப்பது அவசியமாகிறது.

உடற்பயிற்சி :
தினமும் 10 நிமிடம் இந்த உடற்பயிற்சிகளை செய்தால் போதும் | Doing these  exercises for 10 minutes daily
வேகமான நடை, மிதமான ஓட்டம், அறையில் நடனம் இப்படி ஏதாவது ஒன்றை உடற்பயிற்சிக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உடலை உறுதியாகவும், மனதை லேசாவும் உணர வைக்கும் ஒரு மாயமே உடற்பயிற்சியாகும்.

நண்பர்கள்:
சர்வதேச நண்பர்கள் தினம்: 'நண்பேன்டா'
உண்மையான நண்பர்களை அருகில் கொண்டிருப்பதுடன், அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தும் வழக்கத்தை கடைபிடியுங்கள். மேலும்நாம் எந்த மாதிரியான அன்பையும், மரியாதையையும் மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறீர்களோ, அவை அனைத்தையும் அவர்களுக்கு வாரி வழங்குங்கள்.

உதவி :
Keen to Get Your Family to Help Around the House? A Step by Step Plan with  Tips to Get Everyone on Board
அம்மாவுக்கோ அல்லது மனைவிக்கோ வீட்டு வேலைகளில் உதவுங்கள். வீட்டை ஒழுங்குபடுத்துங்கள். இவையெல்லாம் அவர்கள் உங்களை மேலும் நேசிக்கத் தூண்டும். இதனால் ஒருவித மனநிறைவு கிட்டும்.

பொழுதுபோக்கு :
உற்சாகமும் பயனும் தரும் பொழுதுபோக்குகள் எவை தெரியுமா? Do you know what  hobbies are exciting and beneficial?
ஏதாவது ஒன்றில் ஆர்வத்தை செலுத்துங்கள். அது இசையோ, ஓவியமோ அல்லது விளையாட்டாகவோ இருக்கலாம். இதில் கவனத்தை செலுத்தினால், சாதனை புரிய முடியும். மேலும் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வளரும்.

புன்னகையும் சிரிப்பும் :
A small smile can accomplish great things!
எதற்கும் சோகபாவம் கொள்ளாமல், நகைச்சுவைக்கு முகம் கோணாமல் இருக்க முயலுங்கள். புன்னகையும் சிரிப்பும் எப்போதுமே மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். சில நேரங்களில் உங்கள் புன்னகை, யாரோ ஒருவரின் சோக தினத்தையே வேறுவிதமாக மாற்றக்கூடும்.

மன அழுத்தத்தை குறைப்பது :
மன அழுத்தத்தை குறைக்க 9 எளிய வழிகள் - இதோ உங்களுக்காக - 9 simple ways to  reduce stress in your life - Samayam Tamil
ஒருவரின் ஆரோக்கியத்தை கெடுப்பது மனஅழுத்தம். ஆகவே யோகா போன்ற மனப்பயிற்சிகளில் ஈடுபட்டு, மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். மேலும் எழுதுவது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது, இயற்கையை ரசிப்பது போன்ற செயல்களாலும் மனதை லேசாக்கலாம்.

வெளியே செல்வது :
Travel Tamil Nadu – classyindia
நண்பர்களோடு வெளியில் செல்வது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, உறவினர்களை சந்திப்பது அல்லது சந்தோஷத்திற்காக பைக்கில் வெளியே செல்வது அல்லது செல்லப்பிராணியுடன் வெளியில் செல்வது போன்ற ஏதாவது ஒரு செயலை சாதாரண நேரங்களில் செய்தால், மனதில் கஷ்டம் இல்லாமல், மனமும் லேசாகும். ஏனெனில் இதுப் போன்ற சுற்றுச்சூழல் தான் எப்போதுமே மனதை லேசாக்கும் சக்தி கொண்டது.

நாம் நாமாக இருப்பது:
We will be ourselves!
இந்த உலகில் பலர் தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக காண்பிப்பது, சுமையே. நம்மிடம் இல்லாததற்காக நாம் மற்றவர்களால் நேசிக்கப்படுவதைவிட, இருப்பதற்காக வெறுக்கப்படுவது எவ்வளவோ மேல். இதனால் எப்போதும் நாம் நாமாகவே பிரகாசிக்க முடியும்.
🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of 2 people and people smiling  🌷 🌷🌷 🌷

மருத்துவக்குணம் வாய்ந்த 11 உணவுகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:47 PM | Best Blogger Tips
மருத்துவக்குணம் வாய்ந்த 11 உணவுகள்...

உணவானது வயிற்றை நிறைப்பதற்கு மட்டும் தான் என்பதில்லை. இந்த உணவு தான் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறது. இந்த சக்தியைக் கொடுக்கும் உணவுகள், உடலுக்கு பலத்தை கொடுப்பதோடு, உடலை பல நோய்களை தாக்காமலும் பாதுக்காக்கிறது. உணவுகள் என்றால் அனைவரும் பிடித்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவார்கள்.

சில உணவுகளில் ருசி இல்லாவிட்டாலும், அவற்றில் தான் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. சிலர் சாதாரணமாக சிறிதாக உடல் நிலை சரியில்லையென்றாலும், மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் மருந்துகளை பெற்று, அதனை வாங்கி சாப்பிடுவார்கள்.

ஆனால் அவ்வாறு கடைகளில் சென்று பணத்தை செலவழித்து வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, நம் முன்னோர்கள் பின்பற்றி சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிட்டாலே ஒரு சில சிறிய நோயை கூட சரிசெய்யலாம். சரி இப்போது எந்த உணவுகளை சாப்பிட்டால், என்ன நோய் அல்லது பிரச்சனை சரியாகும் என்பதைப் பார்ப்போமா...

சளி மற்றும் ஜலதோஷத்திற்கு:

இஞ்சி இது ஒரு பழங்கால மருத்துவம். இதனை சளி மற்றும் ஜலதோஷம் இருந்தால், அப்போது ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இல்லையெனில் அதனை டீ போட்டும் செய்து குடிக்கலாம்.

காயங்களுக்கு தேன்:

தேனில் நிறைய ஆன்டிசெப்டிக் பொருள் நிறைந்துள்ளது. எனவே இந்த தேனை அரிப்பு, காயம் அல்லது வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் வைத்தால், அவை சரியாகிவிடும்.

வலிக்கு மிளகாய் :

மிளகாயில் உள்ள காப்சைசின் என்றும் பொருள், உடலில் வலி ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் மிளகு சாப்பிட்டால், மூட்டு வலி குணமாகும்.

நீரிழிவிற்கு பாகற்காய்:

பாகற்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அவை இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைக்கும்.

பேனை போக்கும் ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயிலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் மட்டும், அவை பிரபலமானது இல்லை. இந்த எண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்தால், தலையில் உள்ள பேனை முற்றிலும் போக்கலாம். அதுமட்டுமின்றி, ஸ்பால்ப்பில் ஏற்படும் பிரச்சனையும் போக்கலாம்.

மருக்களுக்கு வாழைப்பழம்:

சருமத்தில் மருக்கள் அதிகம் இருந்தால், அவை உடல் அழகையே கெடுத்துவிடும். ஆனால் அந்த மருக்களை வாழைப்பழம் நீக்கிவிடும். ஏனெனில் அந்த பழத்தில் பொட்டாசியம் இருப்பதால், அவை மருக்களை நீக்கிவிடும்.

துர்நாற்றமுள்ள பாதத்திற்கு ப்ளாக் டீ:

பாதங்களில் துர்நாற்றம் வருவதற்கு காரணம், ஹார்மோன்கள் தான். ஆகவே அதனை போக்க வெதுவெதுப்பான ப்ளாக் டீயில் பாதத்தை ஊற வைத்து, கழுவினால், அந்த நாற்றத்தை தடுக்கலாம்.

குமட்டலுக்கு எலுமிச்சை :

எப்போது பயணத்தின் போது வாந்தி வருவது போல் அல்லது குமட்டல் ஏற்படுகிறதோ, அப்போது எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், அதனை சரிசெய்யலாம்.

பழுப்பு நிற சருமத்திற்கு பால் :

ஓசோனில் ஓட்டை ஏற்பட்டதால், சூரிய வெப்பமானது நேரடியாக சருமத்தை தாக்குகிறது. இதனால் சருமத்தின் நிறமானது பழுப்பு நிறத்தை அடைகிறது. எனவே அடிக்கடி பாலை வைத்து, கழுவி வந்தால், இந்த பிரச்சனையை தடுக்கலாம்.

உடல் வறட்சிக்கு தர்பூசணி:

உடலுக்கு போதுமான நீர்ச்சத்தானது இல்லையெனில் அவை வறட்சியடைந்துவிடும். அதிலும் தர்பூசணியில் 60 சதவீதம் தண்ணீரானது உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடல் வறட்சியைத் போக்கலாம்.

சர்க்கரை நோய்க்கு வெண்டைக்காய் :

வெண்டைக்காயை நறுக்கி, இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.