உண்மையான சந்தோஷம் - 🌷நாமே புரிந்து கொள்வது....!🌷

மணக்கால் அய்யம்பேட்டை | 3:34 PM | Best Blogger Tips

 ரயில் ஸ்டேஷனை விட்டு மெதுவாக கிளம்பிக் கொண்டிருந்தது.

ஜன்னல் வழியாக குளிர்ந்த காற்று வீசியதுநல்ல மன ஆரோக்கியத்திற்காக, விட்டுக்கொடுக்க வேண்டிய 7 நம்பிக்கைகள் (7  Beliefs to Let Go for Good Mental Health in Tamil) - வாழும் கலை. எதிரே இருந்த பர்த்தில் என் பார்வை சென்றது. ஒரு சிரித்த முகம். அம்மையாருக்கு வயது 65 இருக்கும். ஹிமாச்சல் பிரதேசம் மணாலிக்கு தனியாக பயணம் செய்து கொண்டிருந்தார். முதுகில் ஒரு சிறிய பை.

நான் சாதாரணமாக கேட்டேன், "ஆன்ட்டி, தனியாகவா ? பயமாக இல்லையா ?"

அவர் கலகலவென சிரித்தார். பல வருட சுமைகள் எல்லாம் ஒரு நொடியில் அந்த சிரிப்பில் கரைந்தது போல அப்படி ஒரு சிரிப்பு.

அவர் சொன்னார்: "குழந்தே, பயம் வந்ததெல்லாம் எல்லோரும் கூட இருந்த போதுதான். இப்போது நான் தனியாக இருக்கிறேன். அதனால்தான் உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கிறேன்."
90,151 Woman Enjoying Freedom Nature Stock Photos - Free & Royalty-Free  Stock Photos from Dreamstime
பேச்சின் போக்கில் அவர் எனக்கு ஒரு அழகான வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுத்தார்.

அவர் சொன்னார்: "நான் அறுபதுக்கு அப்புறம்தான் வாழக் கத்துக்கிட்டேன். அப்போதுதான் சில விஷயங்களை கை கழுவினேன்".

 கட்டுப்படுத்த வேண்டும் என்கிற பிடிவாதத்தை விட்டு விட்டேன்:  

நல்ல மன ஆரோக்கியத்திற்காக, விட்டுக்கொடுக்க வேண்டிய 7 நம்பிக்கைகள் (7  Beliefs to Let Go for Good Mental Health in Tamil) - வாழும் கலை
"முன்னாடி கணவர், பிள்ளைகள், பணம்  எல்லாத்தையும் என் கைக்குள் வச்சுக்க முயற்சி பண்ணினேன். இப்போது மணல் மாதிரி விட்டு விடுகிறேன். மனசு ரொம்ப லேசா இருக்கு."

மத்தவங்க கிட்ட எதிர்பார்க்கிறதை விட்டு விட்டேன்:  


"பையன் போன் பண்ணினால் சந்தோஷம். பண்ணவில்லை என்றாலும் பரவாயில்லை. நான் அவனுக்கு பிறப்பு கொடுத்தேன். அதற்காக அவன் மேல் நான் உரிமை கொண்டாட முடியாது."

மற்றவர்களை மாத்தணும் என்கிற முயற்சியை விட்டு விட்டேன்:  


"ஐம்பது வருஷம் கணவரை மாத்த முயற்சி பண்ணிணேன். அவர் அப்படியே இருந்தார். அப்புறம் நான் என்னையே மாத்திக்கிட்டேன். வாழ்க்கையில் அமைதி வந்து விட்டது."
No photo description available.
எல்லோரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற துடிப்பை விட்டு விட்டேன்:  


"மருமகள், உறவினர்கள், சமூகம் என எல்லோரையும் சந்தோஷப்படுத்தியதில், என்னையே நான்  மறந்து போனேன். 

இப்போதுதான் நான் எனக்கு உண்மையாக இருக்கிறேன்."

ஒவ்வொரு தவறுக்கும் என்னையே குறை சொல்வதை விட்டு விட்டேன்:  
"குழம்பில் உப்பு கம்மி-ஜாஸ்தி ஆனால் கூட மணிக்கணக்காக மனதில் போட்டு அழுதிருக்கிறேன். இப்போது நான் எனக்கு  சொல்லிக் கொள்கிறேன்.  நான் மனுஷிதான், கடவுள் இல்லை."

ஒவ்வொரு விளைவைப் பத்தியும் கவலைப் படுவதை விட்டு விட்டேன்:  
"ரயில் நேரத்துக்கு வருவதோ அல்லது தாமதமாக வருவதோ என் கையில் இல்லை. அப்புறம் எதற்கு கவலை ? நான் டீ குடிக்கிறேன். இயற்கையை ரசிக்கிறேன்."
No photo description available.
எதிர்காலம் பற்றிய பயத்தில் இன்றைய வாழ்வை தவற விடுவதை தவிர்த்தேன்:  
"நாளைக்கு முழங்கால் வலிக்கும் என இன்றைக்கு மலை ஏறாமல் இருக்கணுமா ? இப்போது உடம்பில் தெம்பு இருக்கிறது. அதனால் இன்றைக்கு வாழ்கிறேன்."

என் கையில் இல்லாத விஷயங்களுக்கு என் சக்தியை செலவு பண்ணுவதை விட்டு விட்டேன்:  
"யார் என்ன சொல்லுவார்கள், அரசியலில் என்ன ஆகும், பக்கத்து வீட்டில் என்ன சொல்லுவார்கள் என்று நினைப்பதை எல்லாம் விட்டு விட்டேன். இப்போது இரத்த அழுத்தம் கூட நார்மலாக இருக்கிறது."

இப்போது நான் என்ன பண்ணுகிறேன் ?

"என்னை நான் கவனித்துக் கொள்கிறேன். என்னிடம் நானே பேசுகிறேன். பிறர் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்களோ, அதை ஒரு காதில் வாங்கி, இன்னொரு காது வழியாக விட்டு விடுகிறேன்."

ஜன்னலுக்கு வெளியே ஒரு முறை பார்த்து விட்டு அவர் சொன்னார்:

"தண்ணீர் எந்தப் பக்கம் ஓடும் எனத் தீர்மானிப்பது என் கையில் இல்லை. ஆனால் புயல் அடித்தாலும் என் படகு ஆடாமல் இருக்க துடுப்பை எப்படி போடணும்  என்பது என் கையில்தான் இருக்கிறது." சந்தோஷமும் திருப்தியும் கடைகளில் கிடைக்காது. எந்தக் கவலையும் இல்லாமல் அமைதியாக தூங்குகிற தலையணையில்தான் திருப்தியும் நிம்மதியும் இருக்கிறது.

திருப்தி இருக்கிறது, எவ்வித பயமும் இல்லாமல் தனியாக நடக்க கத்துக்கிட்ட கால்களில்.

மணாலி ஸ்டேஷன் வந்து விட்டது. இறங்கும் போது அவர் சொன்னார்:

"இளமையில் நான் உலகத்தின் உறவை கூட்டிக் கொண்டே இருந்தேன்.  இப்போது இந்த வயதில் நான் என்னுடன் மட்டும் உறவு வைத்துக் கொள்கிறேன்."

"அதனால்தான் நான் சிரிக்கிறேன். ஏனெனில் இப்போது என் மீது எந்த சுமையும் இல்லை. இப்போது நான் மட்டும்தான். என்னோட அமைதியான, திருப்தியான மனசு மட்டும்தான்." 
Understanding yourself helps you manage others well
வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம் மற்றவர்களை மாற்றுவதில்  இல்லை. நம்மை நாமே புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதில்தான் இருக்கிறது. 

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.🌷 🌷🌷 🌷