இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை,... இரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.
இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.
இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?
எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.
இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.
இரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
இரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
இரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “வலை’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?
இரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
இரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
இரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.
இரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.
உடலில் இரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?
ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராசரி வேகத்தைவிட அதிகம்.
மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?
எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
இரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.
24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா?
24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.
தலசீமியா என்பது தொற்று நோயா?
இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந் நோய் வர வாய்ப்பில்லை.
மூளையின் செல்களுக்கு இரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?
மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
இரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.
இரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?
இரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. “‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.
இரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?
இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.
ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?
செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.
ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.
கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?
கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.
ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன?
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவைத் தடுப்பது எப்படி?
நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.
இரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?
வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.
யார் இரத்த தானம் செய்யக்கூடாது?
உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.
மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு இரத்தம் கிடைக்கிறதா?
இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.
தானம் கொடுத்த பிறகு இரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?
புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.
இரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?
நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.
இரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?
இரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.
- Karthikeyan MathanSee More

![ஏராளமான சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி..!
Like & Share >>> @[293309174033072:274:World Wide Tamil People]
முள்ளங்கி என்பது ஒரு நீர்க்காயாகும். இது ஆண்டு முழுவதும் எந்த தங்கு தடையும் இன்றி கிடைக்கும். மேலும், குளிர் காலத்தில் அதிகமாக விளையும் காய்கறி வகையாகும். முள்ளங்கி காய் மட்டுமல்லாமல், அதன் கீரையும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் முள்ளங்கி மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.
சத்து மாத்திரைகளுக்கும், டானிக்குகளுக்கும் செலவிடுவதை விட்டுவிட்டு இதுபோன்ற சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகளவில் வாங்கி உண்டு வந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம்.
100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்களைப் பார்ப்போம்.
17 கலோரி, 2 கிராம் நார்ச்சத்து, 15 மில்லி கிராம் விட்டமின் சி, 35 மில்லி கிராம் கால்சியம், 22 மில்லி கிராம் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதில், காய்கறிளிலேயே விட்டமின் சி அதிகளவில் இருப்பது முள்ளங்கியில்தான். அதேப்போல, கால்சியமும், பாஸ்பரசும் முள்ளங்கியில் அதிகளவில் இருப்பது அதன் சிறப்பாகும்.
முள்ளங்கியை விட அதன் கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.100 கிராம் கீரையில்...
41கே கலோரியும், 3.8 கிராம் புரதமும், 1 கிராம் நார்ச்சத்தும், 81 மில்லி கிராம் விட்டமின் சி ((ஒரு மனிதனுக்குத் தேவைப்படும் அடிப்படையான விட்டமின் சி இதில் இரண்டு மடங்கு உள்ளது), 5295 மைக்கோ கிராம் பீடா கரோடின் (இதுவும் இரு மடங்கு உள்ளது), 400 மில்லி கிராம் கால்சியம் (ஒரு மனிதனுக்கு 100 கிராம் தேவை), 59 மில்லி கிராம் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச சத்துக்கள் பெருமளவு இந்த முள்ளங்கியில் அதிகமாகவே நிறைந்துள்ளது. எனவே, வெறும் நீர்க்காய் என்றோ, சளிப்பிடிக்கும் என்றோ, சுவையற்றது என்று கூறியோ முள்ளங்கியையோ, அதன் கீரையையோ வெறுக்காமல், அவ்வப்போது உணவில் முள்ளங்கி மற்றும் முள்ளங்கிக் கீரையை சேர்த்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்வதைத் தடுக்கலாம்.](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/s480x480/625544_553370134693640_993309987_n.jpg)
![மலர்கள் மணம் பரப்புவது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள் !!
LIKE & SHARE ===> @[239983426107165:274:இன்று ஒரு தகவல்(பக்கம்)] ===>
எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளின் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்களாக இருக்காது. சில செடிகளில் வெண்ணிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்பவை மலர்களே அல்ல. மலர் போலத் தோற்றமளிக்கும் போலிகள்! சில செடிகளின் வண்ண இலைகளே மலர்கள் போல் காட்சியளிக்கும்.
மலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று எண்ணுகிறோம். சில செடிகளில் மலர்களை நம்மால் அடையாளம் தெரிந்துகொள்ள முடிவதில்லை. புற்களின் நுனியில் உள்ள சிறுதுணுக்குகள் புற்களின் மலர்கள்தான்! சில தானியங்களின் இளங்கதிர்களே அவற்றின் மலர்கள்.
பூந்தாதையோ, விதைகளையோ அல்லது இரண்டையுமே உருவாக்கும் தொகுதியே மலர்களாகும். விதைகளை உடைய தாவரத்துக்கே மலர்கள் உள்ளன. விதைகள் உருவாக்குவதற்குக் காரணமாக உள்ள தாவரத்தின் பாகங்களே மலர்கள் என்று சொல்லலாம்.
மகரந்தச் சேர்க்கை புரிய உதவும் பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்க, பூக்கள் நறுமண வலையை வீசுகின்றன. பூவிதழ்களிலேயே வாசனை தரும் மிகச் சிறிய துகள்கள் உள்ளன. அவையே நறுமணத்தை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளை மகரந்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியே நறுமணம் என்கிறார்கள், தாவரவியல் நிபுணர்கள்.
சில மலர்களின் இதழ்களில் உள்ள ஒருவித எண்ணை, நறுமணத்தை உண்டு பண்ணுகிறது. அந்த எண்ணைகளைத் தாவரங்கள் தங்கள் வளர்ச்சியின்போது உற்பத்தி செய்திருக்க வேண்டும். மிகச் சிக்கலான அப்பொருள், நடைமுறையில் உருக்குலைந்தோ, சிதைந்தோ எண்ணையாக மாறி காற்றிலோ, வெயிலிலோ ஆவியாகி நறுமணத்தை வெளியிடுகிறது.
எல்லா மலர்களின் நறுமணமும் ஒரேவிதமாக இருப்பதில்லை. சிலவற்றை நாம் விரும்புவோம். சில நமக்குப் பிடிக்காது. ஆனால் பூச்சியினங்களுக்கு ஒவ்வொரு நறுமணமும் நன்றாக நினைவில் இருக்கும். தங்களுக்கு விருப்பமான நறுமணத்தை அவை அறிந்திருக்கும் .](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-snc6/s480x480/10046_361613297277510_1971403420_n.jpg)
![முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்..
Like & Share >>> @[293309174033072:274:World Wide Tamil People]
* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.
* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.
* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.
* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.
* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.
ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.
நன்றி: தமிழ்க்கதிர்](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/s480x480/525355_553191971378123_2136347481_n.jpg)


