நமது உடலமைப்பு பல ஆரோக்கியமான விஷயங்களின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. நமது அன்றாட வாழ்க்கையில் வேலைப்பளு அதிகமான காரணத்தினால் நாம், நமக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குக்கூட கவனம் செலுத்த முடிவதில்லை. அதனாலேயே நாம் பல நோய்களுக்கு ஆளாக நேர்கிறது. இவற்றில் பக்கவாதம் என்னும் நோயைப் பற்றிப் பார்ப்போம்.
பக்கவாதம்:
மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடையாகிறது. இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ஏற்படும் பக்க வாதத்திற்கு "ஐசெமிக் ஸ்ட்ரோக்" (Ischemic stroke) என்று பெயர்.
மூளைக்குச் செல்லும ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாகும் சமயங்களிலும் பக்கவாதம் உண்டாகும். இதற்கு "ஹெமராஜிக் ஸ்ட்ரோக்" என்று பெயர்.
எனவே, பக்கவாதம் என்னும் இந்நோய் முழுக்க முழுக்க மூளையின் பாதிப்பால் ஏற்படும் நோய்தான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய கால கட்டத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவீதத்தினர் "ஐசெமிக் ஸ்டோரோக்"-னால்தான் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வகை ஸ்ட்ரோக்கிலும் "திரம்போடிக்"(Thrombolytic
மினி ஸ்ட்ரோக் தற்காலிகமாககக உண்டாகும் பக்கவாத நோயாகும். இந்தப் பிரச்சனைக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட்டால் பக்கவாதத்திலிருந்து உடனடியாக விடுபடலாம். சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் "ஐசெமிக் ஸ்டோரோக்" நிலை உண்டாகிவிடும்.
மீதமுள்ள 20 சதவீதத்தினர், "ஹெமராஜிக் ஸ்ட்ரோக்"கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூளை பாதிப்பு:
மூளையின் வலது பகுதி பாதிக்கப்பட்டால் உடலின் இடது பக்க உறுப்புகளும், மூளையின் இடது பகுதி பாதிக்கப்பட்டால் உடலின் வலதுபக்க உறுப்புகளும் செயலிழந்து விடுகின்றன.
பக்கவாதத்தின் அறிகுறிகள்:
உடலின் ஒரு பகுதியில் எடை குறைவு ஏற்படுதல், சரியாகப் பேச முடியாமல் போகுதல், ஒரு பக்க கண்ணில் பார்வைக் கோளாறு, திடீரென உண்டாகும் தலைவலி, தலைசுற்றல் போன்றவை பக்கவாத நோயின் அறிகுறிகளாகும்.
இந்நோயால் வருடத்திற்கு சுமாராக 50,000 பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய் எல்லா வயதினரையும் தாக்கும் நிலை இருந்தாலும், வயதான முதியவர்களையே மிக அதிகமாக தாக்கும்.
ரத்த அழுத்தம் அதிகமாகும் போதும், அதிக அளவு கொழுப்பு சேர்ந்துவிடும் நிலையும், இதயத்துடிப்பு சீராக இல்லாத போதும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பக்கவாத நோய் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்ட உடனேயே காலம் தாழ்த்தாமல் டாக்டரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நோயினை மாத்திரைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றின் மூலம் குணப்படுத்தலாம். ரத்த அழுத்த பரிசோதனை போன்றவற்றின் அடிப்படையில் நோயின் தீவிரம் கண்டறியப்பட்டு, அதைப் பொறுத்தே சிகிச்சைகள் அமையும். தற்காலிக பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் அது நிரந்தர பக்கவாத நோயாக மாறிவிடும்.
முன்னேறி வரும் மருத்துவத்துறையில் எல்லா நோய்களுக்கும் புதிய சிகிச்சை முறைகள் இருப்பது போல் பக்கவாத நோயைக் குணப்படுத்தவும் அநேக புதிய முறைகள் உள்ளன. எனவே, இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நோயும் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் தீர்வு நிச்சயம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இது பக்கவாத நோய்க்கும் பொருந்தும்.
பக்கவாதம் அறிகுறிகள் நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய தகவல்
1. உடலின் வலது அல்லது இடது பக்கத்தில் முகம், கை அல்லது காலில் திடீர் உணர்வின்மை, பலவீனம் அல்லது தளர்வு, முழுமையாகவோ அல்லது அவ்வப்போதோ தன் செயல் இயக்கத்தில் மாறுபாடு, பாதிக்கப்பட்ட இடத்தில் கூச்ச உணர்வு போன்றவை ஏற்படலாம்.
2. திடீரெனப் பேசுவது அல்லது மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் குழப்பம்.
3. கண்ணின் பார்வையில் தடுமாற்றம். சில சமயங்களில் பொருட்கள் இரண்டு இரண்டாகத் தெரிதல் அல்லது பார்வை தெரியாமலே போய்விடுதல்.
4. நடப்பதில் பிரச்னை, மயக்கம், நிலைத் தடுமாற்றம், விழுங்குவதில் பிரச்னை.
5. திடீரெனத் தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி.
மேற்கண்ட அறிகுறிகள் ஒருவருக்குத் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுவதுதான் அவசியம்.இந்த உபயோகமான தகவலை இன்று ஒரு தகவல் பக்கத்திற்கு அனுப்பிய பரமக்குடி சுமதி அவர்களுக்கு நமது நன்றியே தெரிவித்து கொள்கிறோம்
தகவலுக்கு நன்றி
பரமக்குடி சுமதி