அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:34 AM | Best Blogger Tips

 May be a doodle

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள். அது உண்மைதான் ஒருவருக்கு அளவுக்கு மீறிய புகழ் வந்துவிட்டது என்றால் அது கூட ஆபத்தாக போய்விடுவதுண்டு.
 
பழங்காலத்தில் எல்லாம் கிரேக்க தேசத்தில் ஒரு பழக்கம் காணப்பட்டது. அதாவது யாரையாவது நாடு கடத்த வேண்டும் என்று அந்த மக்கள் விரும்பினால் அவருடைய பெயரை ஒரு மட்பாண்டத்தில் எழுதி அதை ஒரு குறிப்பிட்ட பொது இடத்தில் போட்டுவிடுவார்கள். 
 
அவ்வளவுதான் இது மாதிரி பல பேர் போட்டுக்கொண்டே இருப்பார்கள் எல்லாம் குவிந்த உடன் அந்த சில்லுகளில் யாருடைய பெயர் அதிகமாக இருக்கிறதோ அந்த நபரை ஒரு பத்து ஆண்டுகள் நாடு கடத்தி விடுவார்கள். 
 
அது அங்கே உள்ள வழக்கம்.
 
ஒரு நாள் அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு ஆள் நின்றுக்கொண்டிருந்தான். அவன் கையிலே ஒரு சில்லு வைத்துக் கொண்டிருந்தான். 
 
யாருடைய பெயரையாவது எழுதி அந்த இடத்தில் போட வேண்டும் என்று ஆசை. ஆனால் அவன் படிக்காதவன். அதனால் எழுத தெரியவில்லை. 
 
யாராவது அந்த வழியாக வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.
ஒரு பெரியவர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் ஓடினான் கையிலிருந்த மட்பாண்ட சில்லை கொடுத்தான். 
 
ஐயா இதிலே ஒரு பெயர் எழுதி கொடுங்கள் என்றார். அந்தப் பெரியவர் அதை கையில் வாங்கிக் கொண்டார்.
 
யாருடைய பெயரை எழுத வேண்டும் என்றார்.
 
இவன் அரிஸ்டோட்டில் என்று எழுதுங்கள் என்றான். அதைக் கேட்டதும் அந்தப் பெரியவருக்கு அதிர்ச்சி.? ஏன் தெரியுமா அவர்தான் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். 
 
இருந்தாலும் தான் தான் அது என்பதை காட்டிக் கொள்ளாமல் அந்த நபரிடம் கேட்டார்.
 
அதுசரி அரிஸ்டோட்டில் உனக்கு என்ன கெடுதல் செய்தார்? அவர் பெயரை எழுதச் சொல்கிறாய்? என்று கேட்டார் .
 
அவர் எனக்கு எந்தக் கெடுதலும் செய்ய வில்லை. 
 
அவரை நான் பார்த்ததுகூட இல்லை என்றான்.
எதற்காக அவரை நாடு கடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டார்.
 
அரிஸ்டோட்டில் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அவர் ரொம்ப நல்லவர். அவர் ஒரு பெரிய அறிவாளி. அவர் ஒரு பெரிய வள்ளல். பேரறிஞர். இப்படி எல்லோரும் சொல்வதை கேட்டு எனக்கு அலுத்துப் போய்விட்டது என்றான்.
 
 அதனால் அவரை வெறுக்கிறேன் என்று கூறினான்.
 
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் நல்லவனாக இருப்பதில் தவறு ஏதும் இல்லை. 
 
எந்த தொல்லையும் இல்லை. ஆனால் நம்மை நல்லவன் நல்லவன் என்று அடுத்தவர்கள் எப்போது சொல்ல ஆரம்பிக்கிறார்களோ அன்றிலிருந்து தான் நமக்கு இடைஞ்சல் ஆரம்பமாகிறது. 
 
எனவே எதுவுமே அளவுக்கு மீறிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. படித்ததில் பிடித்தது
 

 

மணக்கால் அய்யம்பேட்டை | 10:32 AM | Best Blogger Tips

 

#பனங்கிழங்கு காலம் இது... பொங்கலுக்கு எப்போதுமே அதிகமான அளவில் பனங்கிழங்கு அறுவடை நடைபெறும்...#தென்மாவட்ட ங்களில் அதிக மழையால் வரத்து குறைந்து விற்பனையாகிறது... 
 
நல்ல உருண்டு திரண்ட நீளமான பனங்கிழங்கு விளைச்சல் காலம் மூன்று மாதமாகும்... பனங்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயி பனைமர உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றார்... அவர்களிடம் இருந்து பனைசார்ந்த அறிவை நாம் நிறைய வளர்த்து கொள்ள வேண்டும்.. 
 
பொங்கலில் பனைசார்ந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.. இடையிலே வந்த கரும்பாலும்,கள்தடையாலும் பனையேறிகளும், பனைசார்ந்த பொருட்களும் ஓரம் கட்டப்பட்டுள்ளன... பனங்கிழங்கின் பயன்கள் ஏராளம்... இது எங்கு கிடைத்தாலும்,எவ்வளவு கிடைத்தாலும் வாங்கி கொள்ளுங்கள்.. உப்பு மஞ்சள் சேர்த்து அவித்து உண்ணலாம்.. 
 
இதற்கு இணையான ஊட்டசத்து உணவு உலகில் வேறு எங்குமே இல்லை... பனங்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக்கி காய வைத்து(#ஒடியல்) மாவாக திரித்து விதவிதமாக ஆண்டு முழுவதும் உண்டு மகிழலாம்... 
 
நொங்கை தவிர்த்து பனம்பழமாக காத்திருந்து பனங்கிழங்கை உண்டு மகிழலாம்... பனை நமக்கு தந்த கொடை அது .. 
 
எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் பனையை பயன்படுத்துகின்றீர்களோ அந்த அளவு பனை உங்களுக்கு ரெட்டிப்பான நன்மைகளை தரவல்லது... பனையை பயன்படுத்துவோம் வாழ்வில் வளம்பெறுவோம்..
 
அனைத்து #பனைஉணவு பொருட்களும்
மிகவும் சத்து நிறைந்தவை . . .#பனங்கிழங்கு
#நுங்கு #பதநீர் விற்பனை செய்யும் நபரிடம் பேரம் பேசி வாங்காதீர்கள் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே இதை விற்பனை செய்கிறார்கள்.
 
💥 #பனைவிவசாயம் 🌴💯 #பனை மரத்தை பாதுகாப்போம் 🔥💪  
 
 
🙏🌹 நன்றி இணையம்            🌹🙏 


கோவில் பிரசாத சுவையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:27 AM | Best Blogger Tips

 May be an image of text


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதமான காஞ்சிபுரம் இட்லி.
 
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தோசை வடை மற்றும் காஞ்சிபுரம் இட்லியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கிட்டதட்ட பல ஆண்டுகளாக இட்லியை மூங்கில் குடலையில் மந்தாரை இலையை வைத்து வேக வைக்கிறார்கள். 
 
மந்தாரை இலை கிடைக்காத காலத்தில் வாழை இலையும் பயன்படுத்தப்படுகிறது. 
 
காஞ்சிபுரத்தில் இருக்கும் எல்லா ஹோட்டல்களிலும் காஞ்சிபுரம் இட்லி கிடைக்கும்.
 
📝தேவையான பொருட்கள்
✍️பச்சரிசி – 1 கப்
✍️உளுந்து – 3/4கப்
✍️வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
✍️சீரகம் - 1/4டீஸ்பூன்
✍️மிளகு - 1 /4டீஸ்பூன்
✍️சுக்கு பொடி – 1 /4டீஸ்பூன்
✍️முந்திரி – 10
✍️பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
✍️கறிவேப்பிலை – தேவையான அளவு
✍️கடுகு- 1 டீஸ்பூன்
 
📝செய்முறை விளக்கம் : 
 
✍️பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அதை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டுக் கொறகொறப்பாக அரைக்கவும். நார்மல் இட்லிக்கு அரைப்பது போல் நைஸாக அரைக்கக் கூடாது. காஞ்சிபுரம் இட்லிக்கு மாவை எப்போதுமே கொற கொறப்பாகத் தான் அரைக்க வேண்டும். பின்பு மாவை சில மணி நேரம் வைத்து புளிக்க விடவும்.
 
✍️முதலில் ஒரு கடாயில் நெய் அல்லது கடலையெண்ணைய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, முந்திரி சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதிலல், சுக்கு பொடி, சீரகம், மிளகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.
இப்போது தாளித்த பொருட்களை அரைத்து புளிக்க வைத்துள்ள மாவில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு போட்டு மாவை நன்கு கலந்து கொள்ளவும். இதை வழக்கம் போல் இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கலாம்.
 
✍️ஒரிஜினல் காஞ்சிபுரம் இட்லி போலவே சாப்பிட, மந்தாரை இலையை வட்டமாக வெட்டி அதை ஓரு பவுலில் வைத்து மாவை ஊற்றி 10 இருந்து 16 நிமிடம் வேகவைக்கவும்🫰🏻