கந்த சஷ்டி விழா ஆரம்பம்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:55 PM | Best Blogger Tips

 kandha sashti viratham 2024 date : கந்தசஷ்டி விழா 2024 எப்போது ஆரம்பம் ?  யாரெல்லாம் விரதம் இருக்கலாம் ?

இன்று குரோதி வருடம் ஐப்பசி மாதம் 16ம் தேதி,
02.11.2024 சனிக்கிழமை

 விசாகம் நட்சத்திரம்

இன்று முருகப்பெருமான் வழிபாடு சிறப்பு

இன்று  02.11.2024  கந்த சஷ்டி விழா ஆரம்பம்
(02.11.2024 முதல் 08.11.2024 வரை)
sashti vrat 2024 july date : வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் என்ன  கிடைக்கும் ?
🌹கந்தசஷ்டி விழா  கொண்டாடப்படுவதன் காரணம் என்ன?

🌹புராணங்கள் என்ன சொல்கின்றன?

ஐப்பசி அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, சஷ்டி வரையிலான 6 நாட் களும் கந்தசஷ்டி விழா அல்லது கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிப ட்டால் வேண்டியது கிடைக்கும். முருகப் பெருமான், சூரபத்மனுடன் போரிட்டு, வதம் செய்த 6 நாட்களை தான் நாம் கந்த சஷ்டி விழாவாக கொண்டாடுவதாக சொல்கிறோம்.

ஆனால் சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம் மற்றும் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி ஆரம்பம்... புகழ்பெற்ற மயிலம் முருகன் கோயிலின் சிறப்புகள் என்ன? | Kanda  Sashti: The glory of Sri Mailam Murugan Temple - Vikatan
இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழி பட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை நினைத்து விரதம் இருந்தால் அந்த கந்தனே குழந்தையாக பிறப்பான் என்பது நம்பிக்கை.

🌹மும்மூர்த்திகளின் அம்சம் :

🔹முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர்.

🔹ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர்.

🔹அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர்.
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நடக்கும் கந்த சஷ்டி விழா தேரோட்டம் | sikkal  singaravelan temple kantha sasti Therottam
🔹சூரனை சம்ஹாரம் செய்து, தேவர்களை காத்தபடியால் விஷ்ணுவின் காத்தல் தொழிலையும் செய்தார்.

இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில் முருகப் பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

🌹கந்தசஷ்டி கொண்டாடப்படுவது ஏன்?

முருகப் பெருமான், சூரபத்மனுடன் போரிட்டு, வதம் செய்த 6 நாட்களை தான்  கந்தசஷ்டி விழாவாக கொண்டாடுவதாக சொல்கிறோம். ஆனால் சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்தசஷ் டி விழா கொண்டாடப்படுவதற்கு வேறு இரண் டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம் மற்றும் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

🌹முதல் காரணம் :

ஒரு சமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மை க்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி ஆறு நாட்கள் நடத்தினர்.

யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக் களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட முருகப் பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

🌹இரண்டாவது காரணம் :

கந்தபுராணத்தின் படி, கச்சியப்ப சிவாச்சாரி யார், முருகனின் அருள் வேண்டி ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் கும்பத் தில் முருகனை எழுந்தருள செய்து நோன்பு இருந்தார்.
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை : அக்.25 -சு கந்தசஷ்டி ஆரம்பம்
தேவர்களும், அசுரங்களை வெல்லும் சக்தி யை பெற முருகப் பெருமானை நினைத்து 6 நாட்கள் வழிபட்டனர். முருகனும் அவர்களுக் கு அருள்செய்தார். இதனை நினை வுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவா சையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

🌹சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம்?

காசியப்ப முனிவர், மாயை என்ற தம்பதியரு க்கு பிறந்தவன் சூரபத்மன். இவர் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணா ல் பிறக்காத குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தையும் பெற்றான்.

இந்த வரத்தால் தேவர்களையும், நல்லுயிர்க ளையும் துன்புறுத்தினான் சூரபத்மன். இதை தடுக்க அவதாரம் எடுத்த முருகன், பார்வதியி டம் வேலை பெற்று, சூரபத்மனை போரில் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய கோவில்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள்.
Kandha Sashti Vizha,கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதன் காரணம் என்ன? புராணங்கள்  என்ன சொல்கின்றன? - real reason for celebrating kandha sashti viratham -  Samayam Tamil
🌹ஓம் சரவண பவ...


இனிய  வணக்கம்

🌷 🌷🌷 🌷  May be an image of 8 people, temple and text 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹