சாந்தி பெறு மனமே, சாந்தி பெறு!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:24 PM | Best Blogger Tips
சாந்தி பெறு மனமே, சாந்தி பெறு! 
 
 Do Meditation Reduce Stress
 
 வாழ்க்கை என்பது என்ன... சவால்கள், சலனங்கள், சங்கடங்கள், சந்தர்ப்பவாதங்கள், ஏமாற்றங்கள், ஏற்றம், தாழ்வு, மோசடி, வருத்தம், சோகம், சந்தோஷம் இப்படி ஒவ்வொரு அம்சமும் ஒன்றாகக் கலந்த ஒரு கூட்டுக் கலவை. ஒவ்வொரு தருணத்திலும் ஒரு அம்சம் வெளிப்பட்டு வியாபித்து விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அந்தந்த அம்சத்திற்கேற்ப சாமர்த்தியமாக நடந்து அதை சமாளித்து வெல்வதில்தான் வாழ்க்கையை வெற்றிகரமாக வைத்துக் கொள்வது அடங்கியுள்ளது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை எத்தனை டென்ஷன், பதட்டம், படபடப்பு, அவதி, அவஸ்தை.. வேலைக்குப் போவோருக்கு ஒரு டென்ஷன் என்றால், வீட்டில் உள்ளோருக்கு ஒரு வகையான டென்ஷன். நினைவுகளின் அழுத்தம் தரும் பதட்டம், காதல் தரும் பதட்டம், கணவர்களால் ஏற்படும் பதட்டம், மனைவியரால் ஏற்படும் பதட்டம், ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் வரும் பதட்டம் என பதட்டங்கள் பலவிதம். ஆனால் இதில் அப்படியே மூழ்கிப் போய் விட்டால் என்னாகும்.. மனம் நொறுங்கும், வாழ்க்கை சிதறிப் போகும். அதிலிருந்து மீள என்ன செய்யலாம்...? இப்படிப்பட்ட மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றை ஓரம் கட்ட தியானம் சிறந்த வழி என்கிறர்கள் நிபுணர்கள். இது மனதையும், உடலையும் ஒரு சேர நார்மலாக்குகிறது, ரிலாக்ஸ் செய்கிறதாம். சிந்தனைகளை சீர்படுத்தி, தேவையற்ற சிந்தனைகளை அமுங்கிப் போகவும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தலை தூக்கவும் இவை உதவுகிறதாம். மனதைப் போட்டு அரிக்கும் சிந்தனைகளை தடுத்து நிறுத்தி, இங்கே பார், நீ இவனுக்குத் தேவையில்லை, இவனை நிம்மதியாக இருக்க விடு, இவனை விட்டுப் போய் விடு என்று தடுத்து நிறுத்தும் கவசமாக தியானம் இருக்கிறதாம். சிந்தனைகள் சீர்பட்டாலே மனசு அமைதியாகி விடும் அல்லவா... அதுதான் தியானத்தின் முக்கிய அம்சமாகும். சரி எப்படி தியானம் செய்யலாம்...? மூச்சுப் பயிற்சி - முதலில் நல்ல வசதியான, சவுகரியமான இடத்தைத் தேர்வு செய்து அமர வேண்டும். கண்களை மூடிக் கொள்ள வேண்டும். உடலை லேசாக வைத்துக் கொள்ள வேண்டும், இறுக்கம் கூடவே கூடாது, அப்படியே காற்று போல உடல் இருக்க வேண்டும். மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். ஆழமாக மூச்சு விடுங்கள், அதேபோல அமைதியாக அதை வெளியே விடுங்கள். கவனச் சிதறலைத் தடுக்க ஒவ்வொரு முறை மூச்சை இழுத்து விடும்போது அதை மனதுக்குள் எண்ணிக் கொண்டு வரலாம். இதை ஒரு பத்து அல்லது 20 நிமிடம் வரை செய்யுங்கள். இது ஒருவகை தியானம். இதேபோல மேலும் சில முறைகள் உள்ளன. அதையும் பார்க்கலாம் வாருங்கள். குறிப்பிட்ட பொருளின் மீது கவனம் செலுத்தலாம் - அதாவது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி தியானம் செய்யலாம். அதாவது ஒரு வடிவம், வண்ண வித்தியாசம், தட்பவெப்பம், அசைவு ஆகியவற்றைச் சொல்லலாம். பெரும்பாலும் இதுபோன்ற தியானத்திற்கு பூக்கள், மெழுகுவர்த்தியின் ஜூவாலை போன்றவற்றை பயன்படுத்தலாம். அலாரம் கிளாக், மேசை விளக்கு, காபி மக் ஆகியவற்றைக் கூட சிலர் இதற்காகப் பயன்படுத்துகிறார்கள். அதில் தப்பில்லை, நமக்குத் தேவை, கவனக்குவிப்புக்கு ஒரு பொருள். ஒலி மீது கவனம் செலுத்தலாம் - இதுவும் ஒரு வகை. அதாவது ஏதாவது ஒரு சத்தம் மீது நமது முழு மனதையும் செலுத்துவது. மனசு முழுமையாக அதில் ஈடுபட்டு ஒன்றிப் போய் விட வேண்டும். அதற்குத் தேவையான ஒரு ஒலியை நாம் தேர்வு செய்து கவனம் செலுத்தலாம். பெரும்பாலும் ஓம் என்ற ஓம்காரத்தை பலர் இதற்கு தேர்வு செய்வார்கள். இதுதான் என்றில்லை, வேறு ஏதாவது நல்ல ஒலியையும் கூட இதற்காக பயன்படுத்தலாம். ஒலியைத் தேர்வு செய்து தியானத்தில் அமரும்போது மனசு முழுவதையும் அந்த சத்தத்தின் மீது போட்டு விடுங்கள், மனசை முழுமையாக இலகுவாக்கிக் கொண்டு இதைச் செய்யுங்கள். கற்பனைப் பொருட்கள் - இதையும் செய்யலாம். இது இன்னும் அருமையான ரிசல்ட்டைக் கொடுக்குமாம். அதாவது உங்களது மனதுக்குப் பிடித்த ஒரு கற்பனை விஷயத்தை நீங்கள் மனதுக்குள் வரித்துக் கொண்டு அதன் மீது முழு கவனத்தையும் செலுத்துவது. இது மனதுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் உபயோகமாக இருக்குமாம். மனதை சந்தோஷமாக்கவும், லேசாக்கவும் இது உதவும். எதையும் நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.. உங்களது மனதை சந்தோஷப்படுத்தக் கூடிய எதையும் நீங்கள் கற்பனை செய்யலாம்...ஏன் அழகான தேவதைகளைக் கூட நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டு உங்களது மனதை லேசாக்க முயற்சிக்கலாம். மனசு நிம்மதியாக, சாந்தியாக, சாந்தமாக, சமர்த்தாக இருந்தால்தான் வாழ்க்கையில் தவறுகள் குறையும், செய்யும் செயல்களில் நிதானம் கூடும். செய்து பாருங்கள்!

மஞ்சளின் மருத்துவ குணம் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:55 AM | Best Blogger Tips
மஞ்சளின் மருத்துவ குணம் !!!

"மஞ்சள் ஆண்கள் அதிகமாக உணவில் சேர்க்க கூடாது என்று சொல்லுவார்கள் ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று என்னக்கு தெரியவில்லை . தெரிந்த நண்பர்கள் உண்மையான தகவல் இருந்தால் கமெண்ட்யில் தெரிவிர்க்கவும் அது தெரியாதவர்களுக்கும் தெரிய ஒரு வாய்ப்பாக அமையும் "

நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது 'ஆஸ்டியோபோரசிஸை' (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார். மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக 'ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.

இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது. வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.

உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் 'எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார். ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார். அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். 'மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்.

மஞ்சள் (மூலிகை) மகிமை

மஞ்சள் (Curcuma Longa) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் ‘குர்மின்ங்’ என்ற நிறமி இருக்கிறது.மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.

மஞ்சளின் வகைகள்:
1. முட்டா மஞ்சள்
2. கஸ்தூரி மஞ்சள்
3. விரலி மஞ்சள்
4. கரிமஞ்சள்
5. காஞ்சிரத்தின மஞ்சள்
6. குரங்கு மஞ்சள்
7. காட்டு மஞ்சள்
8. பலா மஞ்சள்
9. மர மஞ்சள்
10. ஆலப்புழை மஞ்சள்

மஞ்சளின் இயல்புகள்:

முட்டா மஞ்சள்

இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.

கஸ்தூரி மஞ்சள்:

இது வெள்ளையாக , தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.

விரலி மஞ்சள்:

இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.

மஞ்சளின் பயன்பாடுகள்:

சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.

*பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.

*சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.

*உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.

*பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.

*வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.

*இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.

*நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ குணங்கள்:

1. மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
*
2. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.
*
3. மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.
*
4. மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.
*
5. மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.
*
6. "மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணுயிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்".
*
"மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுத்தால், தொற்றி நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழியும்".
*
7. மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்". தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.
*
8. "மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்"
*
9. " மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்"

10. "மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்"

11. மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.

12. மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும்.அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும்.அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும்.

13. பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும்.

14. பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கல் போன்றவை மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நீங்கும்.


15. மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர் வெளியேறி விடும்.


மேலும் சில தகவல்கள்:


1. மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

2. மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.


3. மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது.


4. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன...

இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:15 AM | Best Blogger Tips

1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)

2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

3. விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது.

4. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.

5. லட்சுமிக்குத் தும்பை கூடாது.

6. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

7. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.

8. சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

9. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

10. வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.

11. அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

12. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

13. தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதி இல்லை.

14. வாசனை இல்லாதது: முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது. வாடியது: தகாதவர்களால் தொடப்பட்டது; நுகரப்பட்டது: ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.

15. சம்பக மொக்குத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

16. மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.

17. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.

18. துளசி, முகிழ் (மகிழம்) செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுரவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.

19. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புலியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.

20. திருவிழாக் காலத்திலும், வீதிவலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும், மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

21. அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

22. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

23. பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.

24. கோயில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.

25. பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும்; தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா

26. ஒன்று, மூன்று, ஐந்து, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்துக்கு மஹாதீபம் அல்லது மஹாநீராஜனம் என்ற பெயர்.

நன்றி : தினமணி

வாழ்க்கைப் படிகள் பதினாறு...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:05 AM | Best Blogger Tips
வாழ்க்கைப் படிகள் பதினாறு...

1) மிகமிக நல்ல‍ தொரு நாள் - இன்று

2) மிகப் பெரிய வெகுமதி – மன்னிப்பு

3) நம்மிடம் இருக்க‍ வேண்டியது – பணிவு

4) நம்மிடம் இருக்க‍க் கூடாதது – வெறுப்பு

5) நமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது – ச‌மயோஜித புத்தி

6) ந‌மக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் – பேராசை

7)ந‌மக்கு எளிதாக வரக்கூடியது – குற்ற‍ம் காணல்

8) நம்மிடம் இருக்க‍ கூடாத கீழ்த்த‍ரமான செயல் - போறாமை

9) நாம் எதை நம்பக்கூடாது – வ‌தந்தி

10) ந‌மக்கு அதீத ஆபத்தை உண்டாக்குவது – அதீத பேச்சு

11) நாம் செய்யவேண்டியது – உதவி

12) நம்மிடம் இருந்து விட்டொழிக்க‍ வேண்டியது – விவாதம்

13) ந‌மது உயர்வுக்கு வழி – உழைப்பு

14) நாம் எதை நழுவ விடக்கூடாது – வாய்ப்பு

15) பிரி(ய)க்கக் கூடாதது எது – நட்பு

16) நாம் எதை ம‌றக்க கூடாதது – நன்றி.

மூல நோய்.. விரட்ட வழிகள்!!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:58 AM | Best Blogger Tips
மூல நோய்.. விரட்ட வழிகள்!!

மூல நோய் பாதித்தவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காதது. உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் மருத்துவர் சசிக்குமார். கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் கேன்சராக மாறலாம் என்றும் எச்சரிக்கிறார். அவர் கூறியதாவது: ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் தடிமன் ஆவதுதான் மூலமாக உருவெடுக்கிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி ஏற்படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் கூறுகிறோம்.

மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலப் பிரச்னையை உருவாக்குகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும். ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளியேற்றம் ஆகிய சுழற்சியில் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும். முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். இல்லையென்றால் மீண்டும் வளர்ந்து மிரட்டும்.

முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது. இதில் ஏற்படும் கொப்பளங்கள் புரையோடி குடல் பகுதியில் துளையை உருவாக்கும். எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம்.

பாதுகாப்பு முறை: நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும், குண்டானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது. குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. கேரட் ஜூஸ் தினமும் குடிப்பது நல்ல பலனைத் தரும். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாறு குடித்தால் ஓரளவு தீர்வு காணலாம். அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீர் நிரப்பி அதில் உட்காரும் போது வலி குறையும்.

ரெசிபி

கருணைக்கிழங்கு குழம்பு: கருணைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம் ஒரு கப் அளவு உரித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும். வேக வைத்த கருணைக்கிழங்கை உதிர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கவும். மூலத்தால் உண்டாகும் புண்களை கருணைக் கிழங்கு குணப்படுத்தும்.

வெந்தயக் கீரை கட்லட்: கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து நெய்யில் வதக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ரொட்டித்தூள், வதக்கிய வெந்தயக் கீரை, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உலர்வாக பிசைந்து கொள்ளவும். இதை வடை போல தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் வார்த்து வேக வைத்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது.

பூண்டு சாதம்: பூண்டு 100 கிராம் அளவுக்கு எடுத்து உரித்து பொடியாக நறுக்கவும். இதை நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை தனியாக உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இத்துடன் வதக்கிய பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த பாசுமதி அரிசி சாதத்தையும் சேர்த்துக் கிளறவும். பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

டயட்

உணவுதான் மூலத்துக்கு தீர்வு. தினமும் இரண்டு வேளை உணவில் கீரை சேர்க்க வேண்டும். முளை கட்டிய பயறு வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் பூண்டை உரித்து பொடியாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். தினமும் பூண்டு பால் சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம். வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், தேங்காய், கருவாடு மசாலா உணவுகள் தவிர்க்கவும். சில்லி சிக்கன், சில்லி மீன் என எண்ணெயில் பொரித்த, பொரிக்காத அசைவ வகைகள், முட்டை வேண்டாம். சுத்த சைவமாக மாறிவிடுவது நல்லது. கீரைகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது செருகி வைத்துக் கொண்டால் மூல வேதனை, வலி குறையும்.

அகத்திக் கீரை சாற்றில் ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும்.

அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்கட்டு உடையும்.

அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.

ஆகாயத் தாமரை இலையை அரைத்து கட்டினால் வெளிமூலம், மூலக்கட்டி போன்றவை குணமாகும்.

ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் மற்றும் மூலப்புண் குணமாகும்.

ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்கட்டு தீரும்.

அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி வைத்து கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் குணமடையும்.

மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம்.

ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.

இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விடுதலை பெறலாம்.

இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும்.

இலந்தை இலையை அரைத்து புளித்த மோரில் நெல்லிக்காய் அளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு குணமாகும்.


நன்றி.

இந்துக்களின் தினசரிக் கடமைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:55 AM | Best Blogger Tips
இந்துக்களின் தினசரிக் கடமைகள்:

1. தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழ வேண்டும்.

2. காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும், உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்தனை செய்ய வேண்டும்.

3. நெற்றியில் இந்து சமயச் சின்னம் (திருநீறு, குங்குமம், சந்தனம், திருநாமம் - ஏதேனும்) அணிய வேண்டும். நீறில்லா நெற்றி பாழ் என்பதற்கேற்ப எதையும் அணிந்து கொள்ளாமல் வெறும் நெற்றியுடன் இருக்கக் கூடாது.

4. இறைவழிபாட்டுக்கு என, தனியே இடம் ஒதுக்கித் தவறாது வழிபாடு செய்யவேண்டும். காலை - மாலையில் விளக்கேற்றி நறுமணப் புகை பரவச் செய்யும்.

5. சமய நூல்களைப் படித்தல் வேண்டும்.

6. படுக்கும்போது தெய்வத்தின் நினைவோடு படுக்க வேண்டும்.

நன்றி : தினமணி

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:52 AM | Best Blogger Tips
உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்!!!

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். மேலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா. ஆகவே அத்தகைய இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்...

பீட்ரூட்: இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். ஆகவே இதனை டயர் இருப்பவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் இரத்த அணுக்களும் அதிகரிக்கும். அதிலும் பீட்ரூட்டின் இலைகளில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் இருக்கின்றன.

கீரைகள்: காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.


இரும்புச்சத்து: இது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.

பாதாம்: இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.

பழங்கள்: அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்வார்கள். இவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பதால் உடலில் இரத்த அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம்.

DONT FORGET TO SHARE