யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா .....

மணக்கால் அய்யம்பேட்டை | 3:53 PM | Best Blogger Tips

சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:

1. ஒருவரது வயது, 
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு,
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்,
5. கணவன்-மனைவி அனுபவங்கள்,
6. செய்த தானம்,
7. கிடைக்கும் புகழ்,
8. சந்தித்த அவமானம்,
9. பயன்படுத்திய மந்திரம்.

இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

" அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும் "

மணக்கால் அய்யம்பேட்டை | 3:52 PM | Best Blogger Tips


உங்கள் விரலின் நகம் உங்கள் உடலின் ஆரோக்கியம் பற்றி சொல்லும் சில அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அருமையான தகவல்கள் தெரிந்துகொள்ள


வீர சாவர்க்கர்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:47 PM | Best Blogger Tipsகொஞ்சம் நீளம் தான் ,, 
ஆனால் உண்மை இது தான் ,, 
யாரால் கிடைத்தது சுதந்திரம் ,
இந்திய சுதந்திர வரலாற்றின் இணையற்ற தலைவர் வீரசவர்க்கார் .அவர் ஆயுதப் போர் முறையே 
இந்திய விடுதலைக்கு சரியான வழி என்று கருதினார்., திலகரை தன் குருவாக கருதினார்,, .
ஆங்கிலேயரை எதிர்க்க இந்தியாவிலும்(அபினவ் பாரத்), லண்டனிலும் (இந்தியா ஹவுஸ்free india society ) இயக்கங்களை தலைமை ஏற்று இந்திய இளைஞர்களை கொரில்லா தாக்குதல், வெடிகுண்டு தயாரித்தல், ஆயுதப் பயிற்சி ,வெடிகுண்டு பயிற்சியில் ஈடுபடுத்தினர்.,
உலகம் முழுவதும் தங்கள் இயக்க கிளைகளை ஏற்படுத்தினர்.
வீரசாவர்க்கர்_தலைமையில்,பி.எம்.பபட், வீரேந்த்ர சட்டோபாத்தியாயா, லாலா ஹர்தயால், பாய் பரமானந்த், மதன்லால் திங்க்ரா, மேடம் காமா, எஸ்.ஆர்.ரானா ,
தமிழகத்தின் .வே.சு. ஐயர், டி.எஸ்.எஸ்.ராஜன் போன்றோர் அதன் முக்கிய உறுப்பினர்கள். 
மற்றும் 172 பேர் நிர்வாகத்திற்கு மட்டும் லண்டனில் இருந்தார்கள்
லண்டன் இந்தியா ஹவுஸ் மாளிகை ,,குஜராத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்கு சொந்தமானது. சிறந்த நாட்டுப் பற்றாளரான அவர், லண்டனில் தங்கிப் படித்து வந்த, இந்திய விடுதலையில் ஆர்வம் கொண்ட, இந்திய மாணவர்களின் விடுதியாக மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராளிகளின் வேடந்தாங்கலாகவும் அது விளங்கியது.
வீரசாவர்கரின் தலைமையில் ,, அவர்களது கொரில்லா இயக்கம் இந்தியாவில் இயங்கி வந்ததுவெள்ளையருக்கு எதிரான ஆயுதப் போராட்டம் இந்தியாவில் மட்டுமின்றி, இந்தியாவிற்கு வெளியேயும் பல இடங்களில் மையம் \கொண்டிருந்தது. அவற்றில் ஒன்று தான் இலண்டன் , 
கடைசியில் லண்டனை தாக்கி விடுவார்களோ என்று தான் வெள்ளையன் பயந்தான்
அதே காலகட்டத்தில், 1908 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவிலிருந்த, இங்கிலாந்து அரசாங்கம், இந்தியத் தலைவர்களைக் கடுந் தண்டனைகளுக்கு உள்ளாக்கியது.
திலகர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டு மாந்தலேயில் சிறைவைக்கப்பட்டார்.,, 
சுப்பிரமணிய சிவாவுக்கு பத்து ஆண்டு சிறை ... 
..சிதம்பரனார்க்கு நாற்பது ஆண்டு கால சிறைத் தண்டனை. 
லாலா லஜபதிராய், அஜித்சிங் (பகத் சிங்கின் சித்தப்பா) ஆகியோர் ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டனர். 
வீர சாவர்க்கரின் தமையன் கணேஷ் தாமோதர் சாவர்க்கர் அந்தமான் சிறையில் 20 ஆண்டு காலம் 
அடைக்கப்பட்டார்.
இவ்வளவுக்கும் காரணம், இங்கிலாந்து நாட்டிலுள்ள, இந்தியாவுக்கான அமைச்சரின் ஆலோசகர் 
கர்சான்_வில்லிதான் என்று முடிவு செய்த சாவர்கரின் அமைப்பினர் அவனுக்கு நாள் குறித்தனர்.
1909 ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள் இலண்டன் நகரின் மையப் பகுதியில், ஜகாங்கீர் மாளிகையில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு வந்த கர்சான் வில்லியை, மாவீரன், மதன்லால் திங்கரா நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்றார். அவரைப் பின்னிருந்து இயக்கியவர்கள் வீரசாவர்க்கர் மற்றும் .வே.சு.ஐயர், ,,
ஆனால் மாவீரன் மதன்லால் யாரையும் காட்டிக் கொடுக்காமல் குற்றத்திற்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டு, தன்னந்தனியனாய் 
1909
ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் நாள் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்
அதன் பிறகு வீர சவர்க்கார் “free india society அமைப்பினர் தொடர்ந்து, தடங்கலின்றி செயல்படலாயினர்.
இந்தியாவிற்குள் விரவா சர்க்கார் பேராளிகள் ஆங்காங்கே இருக்கும் வெள்ளைக்கார படைகளை குண்டு வைத்து கொன்றனர் , ,, காட்டுக்குள் பதுங்கி இருந்து துப்பாக்கியால் சுட்டு கொன்றனர் ,, வெள்ளைக்கார படை திணறியது ,, யார் என்று தெரிய வில்லை ,, அப்போது பத்திரிகை கிடையாது ,, தன் படை யின் சாவை வெள்ளைக்காரன் மறைக்க வேண்டியதாயுற்று
அப்போது தான் வீரசாவர்க்கருக்கு சிக்கல் ஒன்று தாய்நாட்டில் இருந்து வேறு வடிவில் வந்தது
வீரசாவர்க்கரின் சகோதரர் தாமோதர் சாவர்க்கரை அந்தமானுக்கு நாடு கடத்திய நாசிக் நகர நீதிபதி ஜாக்சனை பதினெட்டே வயது நிரம்பிய மாவீரன் ஆனந்த் லட்சுமண் கான்கரே 1909 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியன்று நாசிக் நகர நாடக அரங்கில் வைத்துச் சுட்டுக் 
கொன்றார். இதற்காக ஆனந்த் கான்கரே 1910 ஏப்ரல் 19 அன்று தூக்கிலிடப்பட்டார். அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. ஆனால் அவரோடு கைது செய்யப்பட மற்றொருவன் ஆனந்த் கான்கரே பயன்படுத்திய துப்பாக்கியை அனுப்பித் தந்தது லண்டனில் உள்ள வீர சாவர்க்கர் என காட்டி கொடுத்ததோடு அரசுத் தரப்பு சாட்சியாகவும் மாறி விட்டான்.
உண்மையும் அது தான். லண்டன் இந்தியா ஹவுசில் தங்கிச் செயல்பட்டு வந்த வீர சாவர்க்கர் வெடிகுண்டு செய்யும் செயல் முறை விளக்கக் குறிப்பையும், இருபது ரிவால்வார்களையும், , மராட்டியத்தில் உள்ள தனது சகோதரர் தாமோதர சாவர்க்கருக்கு முன்னரே அனுப்பி இருந்தார்.அவர் அனுப்பிய ரிவால்வார்களில் ஒன்றைத்தான் மாவீரன் கான்கரே பயன்படுத்தி ஜாக்சனை சுட்டுக் கொன்றார்.
அரசுத் தரப்பு சாட்சியாக அரசுத் தரப்பு சாட்சியாக மாறிய துரோகி வீர சவர்க்கார் அவர்களை காட்டி கொடுத்து விட்டான் ,, உடனே இங்கிலாந்த் ராணுவம் வீரசவர்க்காரை கைது செய்து சிறையில் அடைத்தது
அவரை லண்டனில் வைத்து விசாரிக்காமல் உடனடியாக இந்தியாவிற்கு அனுப்பி அங்கே வைத்து விசாரிக்க இங்கிலாந்து அரசாங்கம் முடிவு செய்தது.
இதற்கு காரணம் இருந்தது. சாவர்க்கர் இங்கிலாந்தில் மட்டும் அல்லாமல், அடிக்கடி ஜெர்மன், பிரான்ஸ் சென்று அங்குள்ள இந்திய புரட்சியாளர்களுடனும் தொடர்பு ஏற்படுத்தி இருந்தார். மேலும் இங்கிலாந்து நாட்டு
ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அயர்லாந்து விடுதலை வீரர்களுடனும் அவர் அதிக நெருக்கம் கொண்டிருந்தார். அந்த அயர்லாந்து வீரர்கள் எப்படியேனும் சாவர்க்கரை லண்டன் போலீசாரிடமிருந்து விடுவிக்க பல வகைகளிலும் முயன்று வந்தனர். அதற்க்கு பயந்து இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க முடிவு செய்தனர்
நம் நாட்டு நிலையை பார்த்திர்களா ? ஒரு இந்திய வீரனை அவர்கள் நாட்டில் வைத்து விசாரிக்க தைரியம் இல்லை ,அந்த வீரனின் சொந்த நாட்டில் வைத்து விசாரித்தால் தப்பு வராதாம் , அப்போம் எவ்வளவு தைரியம் வெள்ளைக் காரனுக்கு இந்திய நாட்டில் எத்தனை தலைவர்கள் ஆதரவு இருந்தால் அவனுக்கு இந்த தைரியம் வரும் ,,
எனவே 01-07-1910 அன்று எஸ்.எஸ்.மோரியா என்ற கப்பலில் சாவர்க்கரை ஏற்றி இந்தியாவிற்கு 
இங்கிலாந்து அரசாங்கம் அனுப்பி வைத்தது. அந்தக் கப்பலை எங்கும் நிறுத்தாமல் இந்தியா சென்று விட வேண்டும் என்பதே இங்கிலாந்து அரசின் திட்டம். 
ஆனால் இந்தியா சென்று விசாரனைக்குள் சிக்கி வீணாக உயிரை விட சாவர்க்கருக்கு விருப்பமில்லை.
அதனால் சிறையில் இருந்தபடியே .வே.சு.ஐயருடன் ஒரு திட்டம் தீட்டியிருந்தார். அதன்படி எப்படியும் எஸ்.எஸ். மோரியா என்ற அந்தக் கப்பல் பிரான்ஸ் நாட்டின் மர்சேல்ஸ் துறைமுகத்துக்கு வெளியே நின்று தான் தீரவேண்டும். ஏனென்றால் எண்ணெய் நிரப்பிதான் ஆகணும் ,,
அப்போது கப்பலில் இருந்து கடலில் குதித்து நீந்தி சாவர்க்கர் பிரான்ஸ் நாட்டுக் கரையை 
அடைந்து விட வேண்டும். மர்சேல்ஸ் கடற்கரை சாலையில் காருடன் .வே.சு.ஐயர்
(
மேடம் காமா அம்மையாருடன்) காத்திருந்து சாவர்க்கரை அழைத்துச் சென்று விட வேண்டும். 
திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தது. ஒன்றைத் தவிர.
1-7-1910 இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்ட எஸ்.எஸ்.மோரியா கப்பல் சாவர்க்கர் எதிர்பார்த்தபடியே 
7-7-1910
அன்று இரவு வேளையில் பிரான்ஸ் நாட்டின் மர்சேல்ஸ் துறைமுகத்துக்குச் சற்று தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. கப்பலில் ஏற்பட்ட சிறு பழுதைச் சரி செய்யவும் எண்ணெய் நிரப்பவுமே கப்பல் நிறுத்தப்பட்டது.
அதிகாலையில் ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரி அனுமதி பெற்று கப்பலின் கழிவறைக்குள் சென்ற சாவர்க்கர், கழிவறையில்இருந்த குறுகிய வட்டமான சாளரத்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கடலில் குதித்து விட்டார். கண்ணாடித் துண்டுகள் கிழித்து அவரது உடலெங்கும் குருதி வடிய கரையை நோக்கி நீந்தத் தொடங்கினார். அவர் கடலில் குதித்து நீந்துவதைக் கண்டு கொண்ட லண்டன் போலீசார், அவரைச் சுடத் தொடங்கினர்.
சாவர்க்கர் தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் 
கடலுக்குள்ளேயே நீந்தி கரையை நெருங்கி விட்டார். 
லண்டன் போலீசார், ஒரு படகை கப்பலிலிருந்து கடலுக்குள் இறக்கி அதில் ஏறி அவரைத் துரத்தினர். 
அதற்குள் சாவர்க்கர், கரையேறி சாலையில் ஓடத் தொடங்கினார். அவரைப் படகில் துரத்தி வந்த 
லண்டன் போலீசாரும், கரையேறி, திருடன் திருடன் என்று கத்திக் கொண்டே அவரைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள். குருதியும் கடல் நீரும் சொட்டச் சொட்ட ஓடிய சாவர்க்கரை அவருக்கு எதிரே வந்த ஒரு பிரெஞ்சு போலீஸ்காரன், அவரை திருடன் என்று கருதி தடுத்து நிறுத்தி விட்டான். ,
நான் பிரெஞ்சு எல்லைக்குட்பட்ட கடல் நீரில் குதித்தேன் என்றார்... நான் திருடன் அல்ல. , நான் ஒரு அகதி.. இந்திய விடுதலைக்குப் போராடும் இந்திய அரசியல்வாதி. தஞ்சம் கேட்டு பிரான்ஸ் நாடு வந்திருக்கிறேன் என்னை உனது பிரான்ஸ் நாட்டு அரசின் அனுமதி இன்றி லண்டன் போலீசாரிடம் ஒப்படைப்பது சட்டப்படி தவறுஎன்னை கைது செய்யுங்கள், உங்கள் மாஜிஸ்ட்ரேட் முன் கொண்டு நிறுத்துங்கள். என்று தனக்குத் தெரிந்த அரை குறை 
பிரஞ்சு மொழியில் அவனிடம் வாதாடினார். அதை விளங்கிக் கொள்ளாத அந்தப் பிரெஞ்சு போலீஸ்காரன் சாவர்க்கரை லண்டன் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டான்.
திட்டமிட்டபடி காருடன் வந்து காத்திருந்த .வே..சு.ஐயரும், காமா அம்மையாரும் சாவர்க்கரை 
லண்டன் போலீசார் மீண்டும் கப்பலுக்கு அழைத்துச் சென்ற காட்சியை அவர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. வேதனை மீறி இருவரும் விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள். அம்மையார் ஒரு படி மேலே போய் அலறி துடித்து விட்டார்,, அவரை சமாதான படுத்திய அய்யர் விரைவிலேயே வேதனையையும், விம்மலையும் அடக்கிக் கொண்டு அடுத்த கட்ட செயலில் இறங்கினார்கள்.
பிரெஞ்சு மண்ணில் கால் வைத்து விட்ட சாவர்க்கரை லண்டன் போலீசார் கைது செய்தது " சர்வதேச நியதிக்குப் புறம்பான அநீதி " என்று ஒவ்வொரு பத்திரிகையாக ஏறி ,இறங்கி பத்திரிகைகள் வாயிலாக உலகறிய அம்பலப்படுத்தினார்கள். அடுத்த நாள் பிரெஞ்சு 
பத்திரிகையில் இந்த செய்தி முழுக்க பரவியது
பாரிசிலிருந்து வெளிவரும்எல்ஹியூமனிட்டேஎன்ற இதழின் ஆசிரியர் ஜீன் லாங்கெட் என்பவர்பிரெஞ்சு நாட்டின் மர்சேல்ஸ் நகரில் வைத்து சாவர்க்கரை ஆங்கிலேயர் கைது செய்தது, பிரெஞ்சு நாட்டுக்கு இழைக்கப்பட்ட அவமானம்என எழுதினார். இவர் காரல்மார்க்சின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல பிரான்சின் வேறுபல ஏடுகள் மட்டுமின்றி ஜெர்மனி முதலான பல ஐரோப்பிய நாடுகளின் ஏடுகளும் பிரிட்டனைக் கண்டித்து எழுதின. அனைத்து பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து சாவர்க்கரை பிரிட்டன் அரசாங்கம் பிரான்சிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தீர்மானமே நிறைவேற்றின. சர்வதேச நீதிமன்றத்திற்கு இவ்வழக்குப் போனது.
சர்வதேச அரங்கில் அன்று பிரிட்டனுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக தீர்ப்பு பிரிட்டனுக்குச் 
சாதகமாக அமைந்தது. சாவர்க்கர் லண்டன் போலீசாரால் இந்தியா கொண்டு செல்லப் பட்டார்.
ஆனால் பிரான்ஸ் நாட்டு இறையாண்மைக்கு இழைக்கப்பட்ட அவமானமாக இதனைக் கருதிய 
பிரான்ஸ் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த விஷயத்தை விட்டு விடுவதாக இல்லை. 
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி பிரான்ஸ் நாட்டுப் பிரதமரையும் அவரது அமைச்சரவையையும் கடுமையாகச் சாடினார்கள். பல உறுப்பினர்கள் பிரிட்டனுடன் போர் தொடுத்தே ஆக வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
பிரான்ஸ் பிரதமர் பிரியான்ட் திணறிப் போனார். மூன்று நாட்கள் குழம்பித் தவித்த அவர், இறுதியில் தெளிந்த மனதுடன் சாவர்க்கர் கைது தொடர்பாக பிரிட்டனால் பிரான்ஸ் நாட்டு இறையாண்மைக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைத் தடுக்கத் தவறியதற்காகத் தார்மீகப் பொறுப் பேற்று தானும் தன் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் பதவி விலகுவதாக அறிவித்தார்.,அன்று உலகமே அவர் செயலைப் போற்றியது...
இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இந்திய நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு இரட்டை ஆயுள் தண்டணை, அதாவது 50 ஆண்டுகால சிறைவாசம் பெறுகிறார். இவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை அடைந்த ஒரே இந்திய தலைவர்.
அந்தமான் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும்போதே ஒரு துயர வரலாறு துவங்கிவிடுகிறது.
கப்பலின் அடித்தளத்தில் வெளிச்சமோ காற்றோ போதிய உணவோ இல்லாமல் ஆடு,மாடுகளை விட கேவலமாக அடைத்து அந்தமானுக்கு அழைத்துச் செல்லும் அந்தக் கூட்டத்தில் பெரும்பான்மை கடும் குற்றங்கள் புரிந்த கிரிமினல்கள். இவரைப்போல அரசியல் கைதிகளை அந்தமானுக்கு அனுப்பும் வழக்கம் அப்போது ஆரம்பித்திருக்கவில்லை.
.
இவர் அனுபவித்த துன்பங்கள் சொல்லி மாளாது .அந்தமான் சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகள் பல. பெயர் தெரியாத பூச்சிகளும் ,பாத்திராத புழுக்களும் நிறைந்த சிறை சாலை , இரண்டு நாள் ,முன்று நாள் தண்ணீர் வராமை, குளிக்க விடாதது , காலை கடன் முடிக்க விடாமை , சாப்பாடு கிடைக்காமல் செய்தது , எழுதுவதற்கு தாள்கள் கூட கிடைக்காத 
சிறைச் சாலையில் இருந்து கொண்டு கல்லினால் சுவர்ற்றில் அவர் ஒரு காவியத்தை எழுதி முடித்தார். இப்படியாக 20 ஆண்டுகள் ஓடி விட்டது , மிகவும் சோர்ந்து விட்டார் , நோயினால் அவதிபட ஆரம்பித்து விட்டார் ,
சர்வர்கார் உடல் நலம் மிகவும் பாதிக்கபட்டது ,அவர் அந்தமான் சிறையில் இறந்தால் இந்தியாவில் 
கலவரம் வந்து விடும் என்று நினைத்த வெள்ளைக்காரன் அவர் மன்னிப்பு கடிதம் எழுதியது போல் 
காட்டி அவரை விடுதலை செய்தான்
20 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு உடல்நிலை காரணமாக விடுதலை செய்யப் பட்டார்... 
சிறையிலிருந்து விடு பட்ட பின்பும் பல புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார் .
கடைசியில் தனது 82 வது வயதில் நீதிமன்ற அனுமதி பெற்று தன்னை கருணைக்கொலைக்கு 
ஆளாக்கிக்கொண்டார்.சாவர்க்கர்
நன்றி இணையம்