பிரதமா் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதமா் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

I Never Expected This is India - France

மணக்கால் அய்யம்பேட்டை | 3:40 PM | Best Blogger Tips

 May be an image of one or more people, phone and text that says "ロ INEVER EXPECTED THIS IN INDIA Coming from France, this honestly เรดยา Payim surprised me."

 

இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை கண்டு பிரான்ஸ் நாட்டு சுற்றுபயணி வியப்பு, விமான நிலையம் முதல் டீக்கடை வரை எல்லாமே டிஜிட்டல் மயம் என ஆச்சரியம் : 
 
செய்தி
உண்மையில் எல்லா முன்னேறிய நாடுகள் என சொல்லபடும் நாடுகளை விட இந்தியாவில்தான் இணைய வழி பயன்பாடுகளும் டிஜிட்டல் பண பரிவர்தனையும் அதிகம், 10 கோடி, 20 கோடி மக்கள் தொகை கூட இல்லா தேசங்களே இதில் தடுமாறும் போது மோடி அரசு நிச்சயம் பெரும் சாதனை செய்திருக்கின்றது
 
140 கோடி மக்கள் உள்ள மாபெரும் நாட்டில் எல்லா இடமும் டிஜிட்டல் பரிவர்த்னை என்பது இன்னொரு அரசுக்கு சாத்தியமே இல்லை, மோடியினை ஏன் உலக நாடுகள் கொண்டாடுகின்றன என்றால் இதற்காகத்தான்
 
இதனால் தேசம் காணும் நன்மைகள் சில உண்டு
முதலாவது மக்களின் எளிய பயன்பாடு, பணம் அதிகம் புழங்காது சில்லறை குழப்பம் வராது மிக முக்கியமாக பாகிஸ்தான் போன்ற நாடுகளும் உள்ளூர் துரோகிகளும் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முடியாது
 
இரண்டாவது இந்த முறை வருவதற்கு முன்பு சாலையோர கடைகள், நடமாடும் கடைகள் இன்னும் பல வகை வணிகங்களின் பணம் கணக்கில் வராது இதனால் வருமான வரிமுதல் கள்ளபதுக்கல் வரை பெரும் சிக்கல் இருந்தது இப்போது எல்லாமும் முறையாக வரிக்குள் வருகின்றன பண பதுக்கலுக்கு வழியில்லை
 
இதனால் அரசுக்கும் வரிவசூல் கணக்கு எளிதாகின்றது வியாபாரிகளும் பெரிய குழப்பம் செய்யமுடியாது என்பதால் வரியினை கட்டியே தீரவேண்டும், இதனால் அரசின் வருமானம் கொழிகின்றது
 
உலகின் மூன்றாம் பொருளாதார பலம் கொண்ட நாடாக எப்படி உருவானோம் என்றால் இப்படித்தான், மோடி அரசின் ஒவ்வொரு திட்டமும் இப்படி ஆழமானவை, பெரும் நோக்கம் கொண்டவை. மாபெரும் பொருளாதார யுகத்தை அவர் திறந்து வைத்திருக்கின்றார்
 
இப்போதைக்கு கருப்பு பணம் வியாபரத்தில் புழங்குவதில்லை இப்போது அது ரியல் எஸ்டேட் உள்ளிட்ட இன்னபிற தொழில்களில் முடங்கி கிடக்கின்றது, இக்கோஷ்டிகளுக்கு வருமான வரியுமில்லை அவர்களை கேள்வி கேட்க யாருமில்லை, இந்த சர்ச் பாதர்கள் பாஸ்டர்கள் போல் அவர்கள் தனி காட்டு ராஜாக்கள், 
 
முறையான கட்டுபாடுகள் ஏதுமில்லை
இந்த கோஷ்டிகளையும் இவர்களை போல் சில தொழில்களையும் முறைபடுத்தினால் போதும் எளிதாக உலகின் முதல் பொருளாதார நாடாக தேசம் உருவெடுக்கும் அக்காலம் விரைவில் வரும் என எதிர்பார்ப்போம்
 
பாரதத்தை மோடி பல வழிகளில் எப்படியெல்லாம் மேம்படுத்தியிருகின்றார் என்பதற்கு அந்நிய நாட்டு பயணியே சாட்சி, உலகில் இந்நாட்டை அந்த அளவு உயர்த்தியிருக்கின்றார், அந்த மாமனிதனைத்தான் உலகம் அறியாத தமிழகத்தை தாண்டாத சில பதர்கள் குற்றம் சொல்லி கொண்டிருக்கின்றன, அவைகளும் விரைவில் உண்மையினை அறிந்து மோடியின் அருமையினை உணர்ந்து கொள்ளட்டும் என பிரார்த்திப்போம்
 
 

பாரத ரத்னா #அடல்_பிஹாரி_வாஜ்பாய் அவர்களுக்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 8:41 PM | Best Blogger Tips


முன்னாள் பாரதப் பிரதமர் திரு.அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி


 நீங்கள் பிரதமராக பதவியேற்ற பின்தான்...


இந்தியா முழுவதும் நாங்கள் விபத்தில்லா நான்கு வழி சாலை கண்டோம்..


சர்வசிக்ச அபியான் மூலம் நாங்கள் இந்தியாவின் கடைசி கிராமம் வரை கல்வி கற்றோம்.


பிரதான்மந்திரி கிராம்சடக் யோஜனா மூலம் நாங்கள் கடைக்கோடி கிராமம் வரை சாலைகள் கண்டோம் ..


உங்கள் ஆட்சியில்தான்  வங்கிவீட்டு கடன் வட்டி குறைந்து வீடு நாங்கள்  கட்டினோம்..


வாகன உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்ப்பட்டு  வாகன கடனும் தாராளமாக கிடைத்ததன் பலனாக மிதிவண்டியை மட்டுமே பார்த்த வாகனங்கள் வாங்கினோம்..


விறகுஅடுப்பு மண்ணெண்ணெய் அடுப்புமே பயன்படுத்திய நாங்கள் உங்கள் ஆட்சியில்தான் பெரும் செல்வாந்தர்கள் மட்டுமே பயன்படுத்திய கேஸ் (சமையல் எரிவாயு ) தாராளமாக வாங்கினோம்..


உங்கள் ஆட்சியில் தான் அதிகப்படியாக  இருளில் இருந்த எங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்தது ..


உங்கள் ஆட்சியில்தான் போக்குவரத்திற்கு இந்தியா முழுவதும் தரமான

தேசிய
நெடுஞ்சாலைகள் கிடைத்தது .
அதில் தமிழகத்தில்
NH.66 கிருஷ்ணகிரி to பாண்டிச்சேரி
NH,68 சேலம் to உளுந்தூர்பேட்டை 
NH 208 மதுரை to கொல்லம்
 NH 45A விழுப்புரம் to நாகப்பட்டனம்
NH 206 ...NH 67 திருச்சி to  ராமேஸ்வரம் 
NH 207 NH 209 சாம்ராஜ்நகர் to தின்டுக்கல்  மற்றும்
NH 45B ஆகியவை  கன்டோம்.

உங்கள் ஆட்சியில்தான் தங்கம் விலை பவுன் 4470/-இல் இருந்து 3300/- ஆக குறைய கண்டோம் ..


உங்கள் ஆட்சியில்தான்4.5 ஆண்டுகள் உயராத விலைவாசி கண்டோம்


உங்கள் ஆட்சியில்தான் உயராத பெட்ரோலிய பொருட்கள் கண்டோம் ...

petrol 36/- rs per litre rate.

உங்கள் ஆட்சியில்தான் செல்வந்தர்கள் மட்டுமே 3000O/- 0YT 3மாதம் 15000/- 6மாதம் கழித்து கிடைத்த  தொலைபேசி இனைப்பை 1000ரூபாய் செலுத்தி உடனடியாக சாமானிய மக்கள் நாங்கள் பெற்றோம்...

வனிகத்தை அதன் மூலம் பெருக்கினோம்..

உங்கள் ஆட்சியில்தான் 250/- ரூபாயும் 2ரூபாயும் செலுத்தி செல்லுலார் தொலைபேசி சாமானிய மக்கள் நாங்கள் பெற்றோம்..


அய்யா உங்கள் ஆட்சியில்தான் மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஊக்குவித்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மகளிர் வாழ்வு மேம்பாடு அடைந்தது..


அய்யா உங்கள் ஆட்சியில் தான் அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி  பொக்ரான் அனுகுண்டு வெடித்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்தீர்கள்,..


அய்யா உங்கள் ஆட்சியில் நீங்கள்தான் மேதை விஞ்ஞானி திரு.அப்துல்கலாமை ஜானதிபதியாக்கினீர்கள்,.


அய்யா உங்கள் ஆட்சியில் தான் பணிமலை கார்கிலில் ஆக்கிரமிக்க நினைத்த அந்நிய நாட்டினரை துரத்தியடித்து வெற்றிவாகை சூடினீர்கள்..


ஐயா உங்கள் ஆட்சியில் தான் சுற்றுலா கூட போகமுடியாத ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில்(ஸ்ரீநகரில்) தீவிரவாதிகளை  அடக்கி சுற்றுலா சுலபமாக்கினீர்கள்..


அய்யா உங்கள் ஆட்சியில் தான் வெளிநாடுகளில் திட்டங்களுக்கு கையேந்திய இந்தியாவை அந்நிய செலாவணி கையிருப்பு 1.5லட்சம் கோடியாக உயர்த்தி நாம் அவர்களுக்கு கடான் கொடுக்கும் நிலை உருவாக்கினீர்கள்..


அய்யா உங்கள் ஆட்சியில்தான் எதிர்கட்சியாக இருந்தாலும் S.M.கிருஷ்ணா கர்நாடக மாநிலதலைநகர் பெங்களூரை சிலிகான்vally யாக்க 1500 கோடி உடன் ஒதுக்கி  மென்பொருள் உற்பத்தியை தன்னிரைவாக்கி இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறையை போக்கினீர்கள்..


அய்யா உங்கள் ஆட்சியில் தான் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் பிடித்தது ..


அய்யா உங்கள் ஆட்சியில்தான் டெல்லியில் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.


அய்யா உங்கள் ஆட்சியில்தான் இமாச்சல் மாநிலத்தில் (மண்டி) முதல் பெரிய சுரங்கப்பாதை

9KM அமைக்கப்பட்டு போக்குவரத்து சுலமாக்கப்பட்டது.

அய்யா உங்கள் ஆட்சியில்தான் மிகச்சிறப்பான நிறைய சுரங்கபாதைகள்..

கடல் பாலங்கள் கொண்ட  கொங்கன் ரயில்வே மங்களூர்to மும்பை பாதை அமைக்கப்பட்டது ..

அய்யா உங்கள் ஆட்சியில்தான் ஏழைகளுக்கு அந்தியோதையா அன்னபூர்னா திட்டத்தில் ஏழைகள் பசியைபோக்க மாதம் 25கிலோ அரிசி இலவசமாக தரப்பட்டது,..


அய்யா உங்கள் ஆட்சியில்தான்  வால்மீகி அம்பேத்கார் ஆவாஸ்யோஜனாஅய்யா திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது,.


அய்யா உங்கள் ஆட்சியில் தான் அம்பேத்கார் பிறந்தநாள் அரசு விடுமுறை நாள் ஆக்கப்பட்டது..


அய்யா உங்கள் ஆட்சியில்தான் மிலாடிநபி விடுமுறை நாளாக ஆக்கப்பட்டது...


நாட்டுமக்களுக்காக திருமணமே செய்து கொள்ளாத உங்களின் இன்னும் பல சாதனைகள் சொல்லி கொண்டேபோகலாம்.


.சுதந்திர இந்தியாவின் சிற்பியான உங்களுக்கு ..

உங்களுக்கு ஒரு பாரதரத்னா போதாது ..
இருக்கும் அனைத்து விருதுகள் கொடுத்தால் கூட எங்கள்ஆசை அடங்காது...

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.









🙏🏻🌸


#இயற்க்கை அன்னையை நோக்கி,😍


 எங்கள் #பீஷ்மரை பார்த்து கொள்ளுங்கள் #பாரத_தாயே....🙏


#உழைத்தது_போதும்

#இளமாறும்_தலைவா 🙏



ஆடு நனையுதுன்னு ஓநாய் …………

மணக்கால் அய்யம்பேட்டை | 3:15 PM | | Best Blogger Tips

மோடியை விமர்ச்சிப்பவர்களுக்காக :
ஆட்சிக்கு வந்த உடன் அவர் செய்தது 30 லட்சம் போலி கேஸ் சிலிண்டர்களை கண்டுபிடித்து ஒழித்தது...
"ஜன்தன்" திட்டம் மூலம் அனைவருக்கும் வங்கிக்கணக்கு...
வங்கிக்கணக்கு மூலம் அரசு மானியம் உதவி போன்ற பரிவர்த்தனை...
கறுப்பு பண முதலைகளுக்கு எச்சரிக்கை...
அவர்களுக்கு வரியை செலுத்த அவகாசம்....
வரியை செலுத்தாதவர்களை தண்டிக்க 500,1000 ரூபாய் செல்லாது என அறிவிப்பு...
நகையில் முதலீடு செய்து பதுக்குபவர்களை பிடிக்க நகைகடை கண்காணிப்பு கேமிரா பதிவு...
எல்லாம் படிப்படியாக நடக்கிறது...
அம்பானிக்கு உதவுகிறார் என குற்றச்சாட்டு... 
அம்பானிக்கு உதவினால் அவர் ஏன் மற்ற நாட்டு முதலாளிகளை இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்க வேண்டும். அம்பானியையே முதலீடு செய்ய சொல்லிருக்கலாமே...
ஊர் சுற்றுகிறார் என்று கிண்டல் செய்பவர்களுக்கு மெடிக்கல் ரெப் வேலை கொடுத்தால் தெரியும். சுற்றுவதில் உள்ள கஷ்டம் என்னவென்று.
முதல்நாள் பாங்காங் சென்று மறைந்த மன்னருக்கு மரியாதை செய்துவிட்டு.... 
அங்கிருந்து ஜப்பான் சென்று மறுநாள் அணு ஒப்பந்தம் செய்து விட்டு...
மறுநாளே கோவா வந்து திறப்பு விழாவில் பங்கேற்பதென்பது சாதாரண விஷயமா?
அப்புறம் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பாக உள்ளார் என கூறுகிறார்கள்...
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்... இந்து கட்சி என்று சொல்லப்படுகிற பிஜேபியில் இஸ்லாமிய அமைச்சர்களும் இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு இஸ்லாமிய கட்சியில் வார்டு உறுப்பினராக கூட ஒரு இந்து இருக்கிறாரா என்று?
இலவசம் என்றால் ஓடிசென்று வரிசையில் நிற்கும் போது தெரியாத கஷ்டம்....
நாட்டிற்காக என்றால் மட்டும் கஷ்டமாகிவிடுகிறதா?
நன்றாக புரிந்துகொள்ளுங்கள் நம்முடைய இந்த சோம்பேறித்தனத்தில் தான் கறுப்புபண ஆசாமிகள் தப்பிக்கிறார்கள்...
மூனு நாளா பால் வாங்கல...
மூனுநாளா நெட் ரீசார்ஜ் பண்ணல...
மூனுநாளா சோறு திண்ணல...
கஷ்டம் தான்...
இல்லணு சொல்லல...
ஆனா...வஉசி 30 வருசமா ஜெயில்ல இருந்தாரு...
பகத்சிங் 19 வயசுல உயிரையே விட்டான்.
மருது பாண்டியரோட மகன் பிள்ளை பேரன்ணு வம்சமே அழிஞ்சது...
எல்லாம் எதுக்காக? 
நாட்டுக்காக.. 
அத விடவா நம்ம கஷ்டம் பெரிசு?
உலகத்துக்கே கார் சப்ளை பண்ற ஜப்பான்காரன் அவன் நாட்டு சுற்றுச்சூழல பாதுகாக்க சைக்கிள்ல போறான்...
ஆனா நாம...

 நன்றி இணையம்