என்ன ஒரு மாற்றம்!! பாதுகாப்பற்ற பயணம் !!!!அதற்கு நேர்மாறாக..

மணக்கால் அய்யம்பேட்டை | 4:03 PM | Best Blogger Tips

 May be an image of 2 people

 

பகிர்வு பதிவு ஒரு ரயில் பயணம்............

 

1990 கோடை காலம்

 

நானும் எனது தோழியும் #லக்னோவில் இருந்து #டெல்லிக்கு ரயில்வே துறை பயிற்சிக்காக சென்றுகொண்டிருந்தோம். பயிற்சிக்கு பின் அப்படியே #குஜராத்தின்_அகமதாபாத செல்வதாக திட்டம். அந்த பெட்டியில் இரண்டு எம்பிக்களும் அதே பெட்டியில் அவர்களுடன் 12 அடியாட்களும்.

May be an image of 1 person and smiling

 

#ரிசர்வ்_செய்யப்பட்ட எங்கள் இருக்கைகளில் இருந்து எங்களை விரட்டி விட்டு அதில் அவர்கள் அமர்ந்தது மட்டுமல்லாமல் எங்களை ஆபாசமாக பேசி சைகை செய்தது தான் கொடுமை. டிக்கெட் பரிசோதகரும் மற்ற பயணிகளும் ஓடிவிட்டனர். எப்படியோ இரவு தப்பித்தோம்.

 

மறுநாள் டெல்லி வந்து சேர்ந்தோம். என்னுடன் வந்த தோழி பயந்து போய் அகமதாபாத் செல்வதை தவிர்த்து டெல்லியிலேயே தங்கி விட்டாள் . மற்றொரு தோழியுடன் குஜராத்தின் தலைநகருக்கு பயணத்தை தொடர்ந்தேன்(அவர் பெயர் #உத்பால்_ஹசாரிக்கா தற்போதைய நிர்வாக இயக்குனர் ரயில்வே போர்டு)

 

எங்கள் இருவருக்கும் வெயிட்டிங் லிஸ்ட் முதல் வகுப்பு பரிசோதகரிடம் சொன்னதும் எங்களை ஒரு கூப்பே ( முதல்வகுப்பில் தனியறை)க்கு எங்களை அழைத்து சென்றார்.

 indianhistorypics on X: "1995 :: BJP Leader Shankar Singh Vaghela With Narendra  Modi and CM Keshubhai Patel . Vaghela Rebelled Against BJP CM Keshubhai and  Flew to Khajurajo (M.P) With Rebel MLAs

உள்ளே வெள்ளை பைஜாமாவில் இரு அரசியல்வாதிகள். நாங்கள் பயப்படுவதை பார்த்து அந்த TTE எங்களிடம் இவர்கள் நல்லவர்கள் பயம் வேண்டாம் என உறுதி அளித்தார்...

 

ஒருவருக்கு 40 வயது இருக்கும். மற்றவருக்கு 30 இருக்கலாம். எங்களுக்கு இடம் கொடுத்து அவர்கள் ஓரமாக ஒதுங்கி கொண்டனர் சிநேகமானமுகபாவம் அறிமுகமானோம் அவர்கள் #குஜராத்_பாஜக நிர்வாகிகளாம். பெரும்பாலும் அந்த வயதானவர் பேசினார் "இளையவர் அதிகம் பேசவில்லை"...

 

நான் சமூகவியல் முதுநிலை பட்டதாரி ஆகையால் பொதுவிஷயங்களை பேசும்போது ஷியாம் பிரசாத் முகர்ஜியின் மரணம் பற்றி கேட்டவுடன், அந்த இளையவர்#ஷியாம்_பிரசாத்_முகர்ஜி தெரியுமா? என கேட்க என் தந்தை அடிக்கடி சொல்வார் என்றேன். பரவாயில்லை இவர்களும் முகர்ஜி பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள் என மெல்லிய குரலில் பேசியது என் காதில் விழுந்தது. சாப்பாடு வந்தது வெஜிடேரியன் உணவு எங்களுக்கும் சேர்த்து அந்த இளையவரே பணம் கொடுத்தார்..Narendra Damodardas Modi gets his due

அப்போது வந்த TTE எங்களிடம் பெர்த் இல்லை வேறிடத்தில் உட்கார வசதி செய்து தர முயற்சிக்கிறேன் என்ற போது அந்த இருவரும் தங்கள் படுக்கைகளை உதறி எங்களுக்கு தங்கள் பெர்த்தை கொடுத்து விட்டு அவர்கள் கீழே படுத்து கொண்டனர்...

 

என்ன ஒரு மாற்றம்!! முதல் நாள் இரவு ஒரு பாதுகாப்பற்ற பயணம், இப்போது அதற்கு நேர்மாறாக..

மறுநாள் விடைபெறும் போது அந்த மூத்தவர் தங்குமிடம் ஏற்பாடு இல்லை என்றால் நீங்கள் இருவரும் என் குடும்பத்துடன் தங்கலாம் என்றார்....

Narendra Damodardas Modi - Mera Vote

அந்த இளையவர் "#நான்_ஒரு_நாடோடி_எனக்கு_வீடு_இல்லை" நீங்கள் இவருடைய வீட்டில் பாதுகாப்பாக தங்கலாம் என்றார். தங்க முன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நன்றி தெரிவித்து அவர்களுடைய பெயர்களை கேட்டு டயரியில் பதிவு செய்து கொண்டேன்...

गुजरात में BJP को चित करने वाघेला ने बना ली नई पार्टी, कभी मोदी से थी 'दांत  कटी रोटी' वाली दोस्ती - shankar singh vaghela formed a new party to defeat  bjp

மூத்தவர் பெயர் #ஷங்கர்_சிங்_வகேலா.

இளையவர் பெயர் #நரேந்திர_தாமோதர்_தாஸ்_மோடி.

மூத்தவர் 1996 ல் குஜராத் முதல்வர், இளையவர் 2001 ல் குஜராத் முதல்வர், 2014ல் இருந்து பாரத பிரதமர்....

இந்த நாட்களிலும் மோடியை டீவியில் பார்க்கும் போதும் அன்று அவரால் எங்களுக்கு கிடைத்த உணவு உபசரிப்பு, சிநேகமான முகம், அளவான அன்பான வார்த்தைகள், எல்லாவற்றிற்கும் மேலாக அந்த பாதுகாப்பு உணர்வு என்னுள் நிழலாடுகிறது என்னையறியாமல் என் சிரம் தாழ்கிறது....

 

இரண்டு #அஸ்ஸாமிய சகோதரிகளுக்காக தங்கள் செளகரியங்களை விட்டு கொடுத்த அவர்கள் பின்னாளில் பிரபலமாக போகிறார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது. இந்த இரு மனிதர்களை பாராட்டி 1995 ல் பத்திரிகையில் எழுதினேன்... அப்போது வெளியான கடிதம் பின்னால் சமீபத்தில் மிகவும் பிரபலமானது.....

(தற்போது டெல்லியில் ரயில்வே துறையில் ஜெனரல் மேனேஜராக இருக்கும் #லீனா_ஷர்மா எனும் அதிகாரி எழுதியதை முடிந்த அளவு தமிழ்படுத்தி இருக்கிறேன்)

என்றும்

அன்புடன் அன்புவேல்

மீண்டும் மோடிஜி

வேண்டும் மோடிஜி

இந்த முறை 400+

ஸ்ரீராமஜெயம்

பாரத் மாதா கீ ஜே

 

நன்றி இணையம்