அதிகமாக செல்போன் பாவிப்பவரா நீங்கள்? இதை படியுங்க முதலில்! ! ! !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:54 PM | Best Blogger Tips

அதிகமாக செல்போன் பாவிப்பவரா நீங்கள்? இதை படியுங்க முதலில்! ! ! !

செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனம் அழிந்துவருகின்றன. செல்போன் டவர்களுக்கு மட்டும்தான் கதிர்வீச்சு உள்ளதா? செல்போனை சட்டைப்பையிலும் இடுப்புக்கு அருகிலும் வைத்துக் கொண்டு செல்பவர்களுக்கு எச்சரிக்கையை அளிக்கிறார்கள் வல்லுநர்கள்.

அது, செல்போனில் இருந்தும் வெளிப்படும் கதிர்வீச்சு, மனிதனையும் பாதிக்கும் என்பதுதான்.

இந்தக் கதிர்வீச்சை எப்படி அளக்கிறார்கள்? இதனை “எஸ்.ஏ.ஆர். வேல்யூ’ என்கிறார்கள். இப்படிச் சொன்னதும், ஏதோ இது செல்போனின் விலை மதிப்பு என்று நினைக்காதீர்கள். “ஸ்பெசிபிக் அப்சர்ப்ஷன் ரேட்’ என்பதன் சுருக்கமே “எஸ்.ஏ.ஆர்.’ என்பது. அதாவது ஒரு செல்போன் தொடர்பில் இருக்கும் போது, அதில் இருந்து வெளியாகும் “எலக்ட்ரோ மேக்னடிக்” அலைகள் அல்லது ரேடியோ கதிர்கள் உடலுக்குள் ஊடுருவும் அளவை நிர்ணயிப்பதே “எஸ்.ஏ.ஆர்”.

இது செல்போனில் இருந்து வெளியாகும் சக்தியை அல்லது கதிர்வீச்சை உடல் உட்கிரகிக்கும் அளவைக் குறிப்பது. இது நாம் பயன்படுத்தும் செல்பேசியின் “வாட்ஸ் பெர் கிலோ கிராம்” என்பதை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்படுகிறது. “எஸ்.ஏ.ஆர். வேல்யூ” குறைந்திருந்தால், உங்கள் செல்பேசி மிகவும் பாதுகாப்பானது. குறைந்த அளவு கதிர்களே செல்போனில் இருந்து வெளியேற்றப்பட்டு அது உடலுக்குள் ஊடுருவுகிறது என்பதைக் குறிக்கிறது.

ஒவ்வொரு செல்போனும் செல்பேசி டவர்களுடன் இணைக்கப்படும்போது, அதில் இருந்து ரேடியா கதிர்கள் வெளியாகின்றன. இந்தக் கதிர்கள் உடலில் உள்ள திசுக்களால் ஈர்க்கப்படுகின்றன. இது எந்த அளவில் இருக்கிறது என்பதைக் குறிக்கும் எஸ்.ஏ.ஆர். வேல்யூவை வெளிநாடுகளில் உள்ள பல முன்னணி செல்போன் நிறுவனங்கள், செல்பேசியின் விவரப் பக்கத்தில்உண்மையாகவே குறிப்பிடுகின்றன. செல்பேசி நிறுவன இணைய தளங்களில் அது பற்றிய விவரத்தில் ஒவ்வொரு செல்பேசிகளின் எஸ்.ஏ.ஆர். மதிப்பும் தவறாமல் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை வைத்து பாதுகாப்பான செல்பேசிகளைத் தேர்வுசெய்து நாம் வாங்கமுடியும்.

இந்த “எஸ்.ஏ.ஆர்” இன் அதிகபட்ச மதிப்பு 1.60 வாட்ஸ் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்பேசிகளில் எஸ்ஏஆர் மதிப்பு பற்றிய விவரம் இல்லாததாலும், அதுபற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததாலும், உடலுக்குத் தீமை பயக்காத, பாதுகாப்பான செல்பேசிகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இதுவரை கிடைக்காமலே இருந்தது.

செல்பேசி என்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் பிரபலமாகத் துவங்கியது. அதனால் இதன் மூலம் அடையும் பாதிப்புகளைக் கண்கூடாக இன்னும்காணவில்லை. ஆனால், ஓர் எச்சரிக்கையாக, செல்பேசிகளில் இருந்து வெளியாகும் அதிகப்படியான கதிர்வீச்சுக்களால், அதனைப் பயன்படுத்தும் மனிதர்களுக்கு சாதாரண சரும நோய் முதல், புற்றுநோய் வரை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செல்பேசிகளின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தும் அளவுக்கு இதன் பாதிப்புகள் குறித்து இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

அமெரிக்க அரசாங்கத்தை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள் – அதிர்ச்சி தகவல்! ! ! !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:44 PM | Best Blogger Tips
அமெரிக்க அரசாங்கத்தை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள் – அதிர்ச்சி தகவல்! ! ! !

அமெரிக் கஅரசாங்கத்தை  விட ஆப்பிள் நிறுவனத்திடம் அதிக பணம் உள்ளதாம். உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க அரசின் கஜானாவில் 73.76 பில்லியன் டாலர் உள்ளது. ஆனால் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகள் தேசத்தின் கடன் வரம்பை உயர்த்துவது குறித்து சண்டைப் போட்டுக்கொண்டுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில். இரண்டாவது இடத்தில் ஆப்பிள் உள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டில் ஆப்பிள் ஐபோனை அறிமுகப்படுத்தியதில் இருந்தே அதற்கு ஏறுமுகம் தான். அடுத்த 3 ஆண்டுகளில் ஆப்பிள் கிடுகிடுவென்று வளர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு ஐபேடை அறிமுகப்படுத்தியது. அது கோடிக்கணக்கில் விற்று ஏகப்பட்டலாபம்.

ஐபோன் மற்றும் ஐபேட் தான் தற்போது சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 400 டாலரைத் தொட்டுள்ளது. ஆப்பிளுக்கு அடுத்தபடியான பணக்கார நிறுவனம் பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட். அந்த நிறுவனத்திடம் 40 பில்லியன் டாலர் உள்ளது.

கண் கொடை - யார் கண் தானம் செய்யலாம்?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:20 PM | Best Blogger Tips

கண் கொடை
 யார் கண் தானம் செய்யலாம்?

 ஆண், பெண் இரு பாலரும், அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாம்.
 கண் கண்ணாடி அணிந்தவர்களும் செய்யலாம்.
 இரத்த அழுத்த நோயாளிகளும், நீரிழிவு நோயாளிகளும் கூட தானம் செய்யலாம்.
 ஆஸ்துமா போன்ற நோயினால் தாக்கப்பட்டவர்களும் கூட தானம் செய்யலாம்.
 உடலில் பிற உறுப்புகளில் புற்று நோய் வந்து இறந்தவர்களும் கூட தானம் செய்யலாம்.
 யார் கண் தானம் செய்யக் கூடாது?
 கொடிய தொற்று நோய்களான எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, காலரா, விசக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் மற்றும் வெறிநாய்க்கடி ஆகியவற்றால் இறந்தவர்களின் கண்களைத் தானம் செய்யக் கூடாது.
 பயன்கள்
 கண் தானம் செய்பவர்களினால் கருவிழி நோயினால் பார்வையிழந்த இரண்டு நபர்களுக்கு கருவிழி மாற்று சிகிச்சை அளிப்பதன் மூலம் பார்வை கிடைக்கிறது.
 சில பொதுவான தகவல்கள்

 ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்களைத் தானமாக அளிக்க முடியும்.
 ஒருவர் இறந்து 4 முதல் 6 மணி நேரத்திற்குள் அவரது கண்கள் அகற்றப்பட வேண்டும்.
 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே கண்களை அகற்ற வேண்டும்.
 கண் வங்கிக் குழுவினர் கண் தானம் செய்தவரின் வீட்டிற்கே வந்து கண்களைப் பெற்றுக் கொள்வார்கள்.
 இந்த கண்களைத் தானமாக பெறும் நிகழ்வு 20 முதல் 30 நிமிடங்களில் முடிந்து விடும்.
 திசு ஒற்றுமை மற்றும் தொற்று நோய் பரிசோதனைக்காக சிறிது இரத்தம் இறந்தவரின் உடலிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
 இறந்த பின் கண்களை எடுப்பதால் முக மாறுதல்கள் ஏதும் ஏற்படாது.
 கண் தானம் செய்வதை மத சம்பிரதாயங்கள் எதுவும் எதிர்க்கவில்லை.
 கண் தானம் அளிப்பவரின் பெயரும், பெறுபவரின் பெயரும் ரகசியமாக வைக்கப்படும்.

 கண் தானம் செய்தவரது உறவினர்கள் செய்ய வேண்டியது

 கண் தானம் செய்த ஒருவர் இறந்த பின்பு அவரது உறவினர்கள் செய்ய வேண்டியவை

 மிக அருகிலுள்ள கண் வங்கிக்கு உடனடியாக தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தகவல் அளிக்க வேண்டும்.
 இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் சரியான முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றைத் தெளிவாக அளிக்க வேண்டும். இத்தகவல் கண் வங்கிக் குழுவினர் மிக விரைவாக வந்து சேர உதவுகிறது.
 கண்களைத் தானமாகப் பெறுவதற்கு இறந்தவரின் கணவன், மனைவி, உடன் பிறந்தவர் அல்லது நெருங்கிய உறவினர் ஒருவரும் மற்ற சாட்சிகள் இருவரும் எழுத்து மூலம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
 கண் தானம் செயதவர் இறந்த உடனே கண் இமைகளை மூடி வைக்க வேண்டும்.
 இறந்தவர் உடல் இருக்குமிடத்தில் மின் விசிறியை நிறுத்தி வைக்க வேண்டும்.
 குளிர் சாதனப் பெட்டியில் உடல் வைக்கப்பட்டிருந்தால் அதனை இயக்கத்தில் வைக்கலாம்.
 தலையணையை வைத்து இறந்தவரது தலையைச் சற்று உயர்த்தி வைக்க வேண்டும். —...

கண்தானம் செய்ய விரும்பும் சென்னைவாசிகள் கீழ்க்கண்ட முகவரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
 1. The address of the Govt. EyeHospital at Chennai is given below:
 Regional Institute of Ophthalmology and Government Ophthalmic Hospital, Montieth Road,
 Egmore, Chennai - 600 008.
 Director & Superintendent Phone No. 2855 4338
 2. Eye Bank, Sankara Nethralaya, New No. 41, Old No. 18,
 College Road, Chennai - 600 006. Phone No. 2828 1919
 இணையதளம் வழியாக கண்தானம் செய்ய விரும்பும் அன்பர்கள்கீழ்க்கண்ட இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
http://donateeyes.org/registration/registration-form.php

Via சுபா ஆனந்தி

தமிழ்தந்த அகத்தியர்....

மணக்கால் அய்யம்பேட்டை | 6:11 PM | Best Blogger Tips
தமிழ்தந்த அகத்தியர்....

சிவபெருமான் உமையம்மை திருமணத்தின் பொழுது உலகமே இமயமலையில் குழுமியது. எனவே வடக்கே இமயமலை தாழ்ந்தது. இதைச் சமன் செய்ய சரியான ஒருவர் அகத்தியர் என்றும் அவர் தெற்கே சென்றால் பூமி சமனாகும் என்று சொல்ல.  சிவபெருமானின் ஆணையை ஏற்ற அகத்தியர் தெற்கே சென்று பூமியை சமப்படுத்தினார். 

இது எல்லோரும் அறிந்த கதை..!

ஆனால் உண்மை என்ன? 

திருமந்திரத்தில் இரண்டாம் தந்திரத்தில் அகத்தியம் என்னும் பிரிவில் திருமூலர் விளக்குகிறார். 

நடுவு நில்லாது  இவ்வுலகம்  சரிந்து
கெடுகின்ற தெம்பெருமான் என்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்தியா நீபோய்
முடுகிய வையத்து முன்னி ரென்றானே.

- திருமந்திரம்.

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. 

- திருமந்திரம்.

இவ்வுலக மக்கள் ஆன்ம யோக வழிகளை மறந்து கெடுகிறர்கள். அகத்தியா நீ போய் அவர்களை தெளிவுபடுத்தி நல்வழி காட்டு என்று ஈசன் அகத்தியருக்குச் சொல்கிறார்.

ஈசனின் ஆணைக்கு கட்டுப்பட்ட அகத்தியர் தெற்கு நோக்கி வந்து தமிழ்ச்சங்கதில் அமர்ந்து அகத்தியம் என்னும் ஐந்திலக்கண நூலை எழுதினார். இதுவே தமிழின் முதல் இலக்கண நூல்.

இதனால் அகத்தியர், தமிழ்தந்த அகத்தியர் என்றும், அருந்தமிழ் குறு முனி என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆக்கம்,
ரகசிய தோழி

ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:09 PM | Best Blogger Tips
ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி என்ற தலைப்பில் இன்று ரேஷன் கார்டு மற்றும் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போம்.

ரேஷன் கார்டு:

புதிய ரேசன் கார்டு வாங்க கிராமப்புறங்களில் வட்டார உணவுப்பொருள் வழங்கு அலுவலரையும், நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையரையும் அணுக வேண்டும். காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையைத் தர வேண்டும்.

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் புதிய ரேசன் கார்டு கிடைத்துவிடும்.

நடைமுறை:

சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ்:

மாவட்டப் போக்குவரத்து அதிகாரியை அணுக வேண்டும். பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண் வழங்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகனம் இரண்டுக்குமே கட்டணம் ரூ.315 செலவாகும். விண்ணப்பம் செய்த பிறகு அதிகபட்சமாக ஒரு வாரத்தில் புதிய டிரைவிங் லைசன்ஸ் கிடைக்கும்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் FIR (NON TRACEABLE) சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.

Via மைலாஞ்சி ( Mylanchi )

கரீபியன் தீவுகளில் தமிழா் !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:03 PM | Best Blogger Tips
கரீபியன் பகுதி அமெரிக்கக் குடியரசு, இலத்தின் அமெரிக்க நாடுகளின் அருகில் இருக்கிறது. இப்பகுதியில் டிரினிடாட், டொபாகோ கயானா, சூரிநாம், ஜமைக்கா, கிரெனடா, குவாடிலோப், மார்தினீக், அங்குயிலா போன்ற நாடுகள் இருக்கின்றன. வெளிசூலா கடற்கரை அருகிலேயே டிரினிடாட், டொபாகோ முதலிய இரண்டு தீவுகள் இருக்கின்றன. இவை தென் அமெரிக்கத் தலைநிலப்பரப்புப் பகுதியில் இருக்கின்றன. கயானாவின் மேற்கே வெனிசூலாவும், கிழக்கே சூரிநாமும், தெற்கே பிரேசில் நாடும் இருக்கின்றன. டச்சு கயானா என்று அழைக்கப்படும் சூரிநாம், பிரேசில், கயானா அருகில் இருக்கிறது. கரீபியன் பகுதியில் பரப்பளவில் மூன்றாவது இடத்தை ஜமைக்கா பிடித்திருக்கிறது. ஜமைக்கா, கியூபா நாட்டின் அருகில் இருக்கிறது.
 
தமிழர் குடியேறிய வரலாறு :
 
கரீபிய நாடுகளில் தமிழர்களுக்கு முன்பாக தோட்டங்களில் ஆப்ரிக்கர்களே வேலை செய்து வந்தனர். 1834-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆப்ரிக்கர்களின் அடிமைவாழ்வு முடிந்து தோட்டங்களைவிட்டு வெளியேறியவுடன், வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இந்தியாவிலிருந்து பிரஞ்சு குடியேற்றங்களுக்கு நிறையபேர் அனுப்பப்படுவதை கேள்விப்பட்ட ஆங்கிலேயர்கள் தாமும், இந்தியாவிலிருந் தொழிலாளர்களை இறக்குமதி செய்தனர். இதன் விளைவாக 1938-ஆம் ஆண்டு இந்தியக் கூலிகள் கயானாவுக்கு அழைத்துவரப்பட்டனர். பிறகு 1845-ஆம் ஆண்டு டிரினிடாட் டுபாக்கோவிலும், 1873-ஆம் ஆண்டு சூரிநாம், ஜமைக்கா நாடுகளுக்கும் இந்தியக் கூலிகள் கொண்டு வரப்பட்டனர். இவ்வாறு வந்திறங்கிய இந்தியக் கூலிகள் சிலர் இத்தீவுகளிலிருந்து கிரானடா நாட்டிற்கும் சென்றனர். கயானாவிலிருந்து இரண்டு பெரிய தோட்ட முதலாளியான ஜான் கிளாட்ஸ்டோன், கிளினெல்பிரபு என்பவரின் துணையோடு இந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளைக் கொண்டுவரத் தொடங்கினார். இதன் பயனால் 156 ஒப்பந்தக் கூலிகள் இந்தியாவிலிருந்து கிளம்பி ஹெஸ்பரஸ் என்னும் கப்பலில் 1838-ஆம் ஆண்டு கயானாவில் வந்து இறங்கிய கூலிகள் மொத்தம் 156 பேர். அதே மாதத்தில் விட்பை என்னும் கப்பலும் 263 கூலிகளைக் கொண்டு வந்து இறக்கியது. முதற் கப்பல் கொண்டு வந்த கூலிகளைக் தோட்ட முதலாளியான கிளாட்ஸ்டோன் டெமராரா நதிக் கரையில் உள்ள வி.எம்.வூப், வீடஸ்டீன் என்ற தோட்டங்களுக்கும் எசிக்யூபோ நதிக்கரையில் உள்ள அன்னாரி ஜ"னாவிற்கும் அனுப்பி வைத்தார். விட்பை ஏற்றி வந்த கூலிகளை டெமராராவில் உள்ள பெலிவ்யூ என்னும் தோட்டத்திற்கும், எசிக்யூபோ நதிக்கரையில் உள்ள ஹைபரி, வாடர்லூ என்னும் தோட்டங்களுக்கும் அனுப்பி வைத்தார். இவ்வாறு 1838-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தியக் கூலிகளின் கயானா வருகை 1917-ஆம் ஆண்டோடு முடிவடைந்தது. இந்த என்பது ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வந்த கூலிகள் பலர் மேற்கிந்தியத் தீவுகளான டிரினிடாட், ஜமைக்கா, செயிண்ட் லூசியா, குவாடிலோப், மார்த்தினிக்கிற்கும், கயானாவின் கிழக்கில் உள்ள சூரிநாமிற்கும் அனுப்பப்பட்டனர். 1838-ஆம் ஆண்டு தொடங்கி 1917-ஆம் ஆண்டு வரை கயானாவிற்கு மட்டும் வந்த இந்தியர்களின் தொகை 2,38,979 ஆகும். 
 
டிரினிடாட் :
 
டிரினிடாட்டிற்கு முதன் முதலாக 1845-இல் இந்தியர்கள் வந்து குடியேறினார்கள். பேட்டல் ரோசாக் எனும் கப்பலில் 1845-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் நாள் போர்ட் ஆப் ஸ்பைன் துறைமுகத்தில் முதலாவது வந்த 225 இந்தியர்கள் இறங்கினார்கள். இந்தியர்கள் முதல் முதலாக டிரினிடாட்டிற்கு வந்த தினம் முதல் முறையாக 1978-இல் கொண்டாடப்பட்டது. 
 
ஜமைக்கா : 
1845-ஆம் ஆண்டு மே திங்கள் 9-ஆம் நாள் 200 இந்திய ஆண்கள், 28 இந்திய பெண்கள், 16 சிறுவர்கள் செயிண்ட் கேதரைனிலுள்ள பழைய துறைமுகத்தில் முதன் முதலாக வந்திறங்கினார்கள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 4,550 இந்தியர்கள் ஜமைக்காவில் வந்து குடியேறினார்கள். 1845-1917 ஆம் ஆண்டுகளுக்கிடையே 36,412 இந்தியர்கள் ஜமைக்காவிற்கு வந்து குடியேறினார்கள்.
 
சூரிநாம் :
 
தென் அமெரிக்கத் தலை நிலப்பரப்பிலிருக்கும் சூரிநாம் மட்டும் டச்சுக்குடியேற்றப் பகுதியாக இருந்தது. 1853-1939 ஆம் ஆண்டுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்துகொண்ட 74,000 கூலிகள் சூரிநாமிற்குக் கொண்டுவரப்பட்டனர். இதில் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் 46% பேர்கள்.
 
கிரானடா :
 
1857-1917 ஆம் ஆண்டுகளுக்கிடையே சுமார் 2,750 இந்தியக் கூலியாட்கள் இத்தீவிற்கு வந்து குடியேறினார்கள். இவர்கள் பிற கரீபியன் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டனர். ஆனாலும் தேவைக்கேற்ப மிகுதியான கூலியாட்கள் கிடைக்காததால், பல கரும்புத் தோட்டங்கள் வளர்ச்சியடைந்த போதிலும், பொதுவாக இத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் தோன்றவில்லை.
 
மார்டினிக்தீவு :
 
காரைக்கால், பாண்டிச்சேரி பகுதியிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக 10,063 பேர் 1874-ஆம் ஆண்டில் மார்டினிக் சென்றுள்ளனர். இங்கிருந்து குவாடலோப் முதலிய தீவுகளுக்கும் சென்றுள்ளனர். 
 
தமிழரின் இன்றைய நிலை 
 
சமயம் :
 
கரீபிய நாடுகளில் மாரியம்மன், காளி, மதுரை வீரன் கோயில்கள் கட்டாயம் இருக்கும். ஏனெனில் தொழிலாளர்களாக சென்ற தமிழர்களில் முக்கால்வாசிபேர் சமூகத்தின் அடித்தட்டில் இருந்து சென்றவர்கள். மற்றும் சிலர் மதம்மாறி கிறிஸ்தவர்களானார்கள். ஒவ்வொரு தோட்டத்திலும் இத்தெய்வங்களைக் காணலாம். இந்துக் கோயில்களைக்கூட "சர்ச்" என்றே அழைக்கின்றனர். பெரும்பான்மையான கோயில்கள் சர்ச் பாணியிலேயே இருக்கின்றன. சிலைகளுக்கு பதிலாக படங்களே இருக்கின்றன. 'சேவலை' காவு கொடுக்கும் வழக்கமும்; வேலாடும் வழக்கமும் இருக்கின்றன. சாதிப்பேய் அங்கேயும் இருக்கிறது. கோவிலில் சிலரை உள்ளே அனுமதிப்பதில்லை. கயானாவில் பெர்பீஸ் பகுதியில் இவ்வழக்கம் இருப்பதாக ஈசா. விசுவநாதன் தெரிவிக்கிறார். மாரியம்மன் தாலாட்டு, சிலக்குத்து என்னும் நூலிலுள்ள பாடல்களை பாடுகின்றனர். ஒரு வரியை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் பின்பற்றும் கிருத்துவ முறை காணப்படுகிறது. பக்தர்களுக்கு சுண்டல், வடை உண்டு. 
 
சாமிமீதேறப் பெற்றவர் 'வெறியாடும்' வழக்கம் இருக்கிறது. அப்போது 'குறி'யும் சொல்லப் படுகிறது. நோயுற்றோருக்கு மந்திரம் ஜெபித்து, தண் ர் தெளித்து வேப்பிலை அடிப்பதோடு, நாட்டு மருத்துவமும் செய்கின்றனர். இத்தகைய கோயில்களுக்கு எல்லோரும் வருகின்றனர். கொரன்டீனிலுள்ள ரோஸ்ஹால் கோயிலை நடத்துபவர் ஓர் ஆப்ரிக்கர்; ஹெர்ஸ்டெலிங் கோயிலில் குறிசொல்பவர் ஒரு முஸ்லீம், மதராசிகள் (தமிழர்) நடத்தும் இக்கோயில்கள் வெறும் வழிபாட்டுக் கோயில்களாக இல்லாமல் நோய் தீர்க்கும் மருத்துவ நிலையங்களாகவும் உள்ளன. கிரானடாத் தமிழர்கள் அனைவரும் கிருத்துவர்களாக மாறி விட்டனர். சூரிநாமில் இந்துக்கள் வட இந்திய முறைப்படி வழிபாடு செய்கின்றனர். ஜமைக்கா, குவாடலுப் போன்ற நாடுகளில் மதம்மாறி விட்டாலும் ஒவ்வொரு நாட்டிலும் முறையே 500 குடும்பங்கள் இருப்பதாக 1987-ஆம் ஆண்டு கணக்கெடுத்துள்ளனர். மார்ட்டினிக் தீவில் இன்றும் ஏராளமான தமிழர்கள் தமிழக முறைப்படி வழிபட்டு வருகின்றனர். இந்துக் கோயில்கள் மௌலின், கிராடிஸ், மாகௌபா முதலிய ஏழு இடங்களில் இருந்ததாக தனிநாயகம் அடிகள் தெரிவிக்கிறார். 16 அடி உயரத்தில் இலிங்கம் மௌலின் கோயிலில் இருந்ததாக தெரிவிக்கிறார். மார்ட்டினிக்கில் தமிழக முஸ்லீம்களும் பெருமளவு குடியேறி இருந்தனர். நாகூர் மீரான் ஆண்டவருக்கு அங்கு ஒரு நினைவு பள்ளி இருந்ததாக வின்சென்ட் சாய்பு தனிநாயகம் அடிகளிடம் தெரிவித்துள்ளார் சாயுபு கூட வின்சென்ட் ஆகியிருப்பதிலிந்து நிலமையை உணரலாம். 
 
உணவு-உடை-தகவல் தொடர்பு:
 
பெரும்பாலான பெண்கள் இன்று நீக்ரோக்கள் உடையையும், கௌனையுமே அணிகின்றனர். ஆண்கள் வேட்டி கட்டும் பழக்கமே இல்லை. அமெரிக்க உடைகளே வழக்கில் இருக்கின்றன. உணவும்கூட ஆங்கில, பிரஞ்சு முறைப்படி இருந்தாலும் சமயசடங்கு நேரத்தில் மட்டும் சுண்டல், வடை முதலியவை செய்யப்படுகின்றன. காய்போட்டு காய்ச்சும் குழம்பை 'கொலம்போ' என்று அழைக்கின்றனர். புலவு, பிரியாணிக்கு கரீபியர்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும், முக்கிய உணவிடங்களில் கூட பிரியாணிக்கு செல்வாக்கிருப்பதாக தனிநாயகம் அடிகள் தெரிவிக்கிறார். இந்தியப் படங்களை வீடியோ நாடாக்கள் மூலம் பார்த்து வருகின்றனர். கரீபிய நாடுகளில் தமிழ் இதழ்கள் எங்கும் நடத்தப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
கரீபிய நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் பலரும் படிப்பறிவில்லாத கிராமப்புற தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரம் போக மற்ற விடுமுறை காலங்களில் தமிழகத்தில் தாங்கள் பார்த்து கேட்டு அனுபவித்த நாடகங்களை அங்கு நடத்தியதை பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அருணாசல கவிராயரின் இராமநாடகம், தேசிங்குராசன் நாடகம், இரண்யன் நாடகம், அல்லாபாஷா நாடகம் போன்றவையும், இராமாயண, மகாபாரத கிளைக் கதைகளை நடித்ததையும் டி.டபிள்யூ.டி கொமின்ஸ் தம் நூலில் தெரிவித்துள்ளார். தமிழர்கள் பாடிய பல நாட்டுப்பாடல்களின் மெட்டுக்களை ஆப்ரிக்கர்கள் தங்கள் கிரியோல் மொழிப் பாடல்களில் கேட்கலாம். சில பாடல்களின் இறுதி அடிகளில் சின்னமுத்தம்மா, பெரியமுத்தம்மா என முடிவதிலிருந்து அறிகிறோம். 
 
தமிழ்மொழியின் நிலை
 
கரீபிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இன்று யாருக்கும் தமிழ் தெரியாது. ஆங்கிலம், பிரஞ்ச், ஸ்பானிஷ், கிரியோல் பேசுபவர்களாக மாறிப்போய் விட்டனர். தமிழர்களுடைய பெயர்களை எழுதிய பல்வேறு நாட்டு தோட்ட முதலாளிகள் அவரவர் மொழிக்கேற்ப மாற்றி எழுதி வைத்துள்ளனர். அதை மாற்றாமல் பல தமிழர்களும் அப்படியே வைத்துக் கொண்டுள்ளனர்.ராம்சமி சின்னபேன் - ராமசாமி சின்னப்பன்
 
மரியாய் - மாரியம்மா
 
வெள்ளினி - வள்ளி
 
-என மாறி இருக்கிறது. இந்துக்களாக இருப்பவர்கள் கூட தங்கள் பெயரின் பின் ஜான், ஜோசப் முதலிய கிருத்துவப் பெயர்களுடனே இருப்பது வியப்பாக இருக்கிறது. கயானாவில் தமிழர்கள் 60 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். கங்காராம், ரோஸ்ஹால், ஆல்பியன் போன்ற பெர்பீஸ்-கொரன்டீன் பகுதியில் உள்ள ஊர்களிலும், மேற்கு டெமராராவில் உள்ள ஸ்டுவர்ட் வில்லிலும், ட்ரையம்பிலும் நூறுகுடும்பங்கள் இருப்பதாக விசுவநாதன் தெரிவிக்கிறார்.
 
கல்வி நிலை :
 
"தம் தாய்மொழியை யார் மறக்கிறார்களோ அவர்கள் தம் பண்பாட்டையும் மறக்கின்றார்கள்" என்று கயனாநாட்டு நோயல் மெனீஸ் கூறுகிறார். இன உணர்வையும், மொழியையும் இழந்த தமிழர்கள் இன்று அந்தந்த நாட்டு மொழியைதான் படிக்கின்றனர். மொழி இழந்ததால் அவர்களிடம் இலக்கியமும் போய்விட்டது. ஆப்ரிக்கர்கள் பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட போதும் தங்கள் வாய்மொழி இலக்கியத்தை விடாமல் இருந்ததை தமிழர்கள் இனியாகிலும் உணரத்தான் வேண்டும்.
 
அமைப்புக்கள் :
 
ஜமைக்காவில் மட்டும் 8 இந்திய அமைப்புக்கள் இருக்கின்றன. மற்ற நாடுகளின் விபரங்கள் அறிய முடியவில்லை.
 
தமிழர் சாதனைகள் 
கயானாவில் மருத்துவத் துறையில் புகழ்பெற்று விளங்கும் ஒருசிலரில் திரு.லெஸ்வி முத்து என்னும் தமிழர் குறிப்பிடத்தக்கவர். இவர் ஜார்ஜ் (தலைநகரம்) டவுனில் மருத்துவராக உள்ளார். திரு. சாமி என்பவர் வியாபாரத் துறையில் செல்வாக்கு பெற்றிருப்பதோடு, இந்த நாட்டில் உள்ள லட்சாதிபதிகளில் ஒருவராக திகழ்கிறார். கல்வித்துறையில் டாக்டர்.ஜே.ஆர் ராமசாமி, கயானாப் பல்கலைக் கழகத்தில் உயிர்நூல் துறையில் பணியாற்றுகிறார் இவருடைய தம்பி டாக்டர் ஹெர்னன் ராமசாமி என்பவர் செல்வாக்குள்ள மருத்துவர்களில் ஒருவராக கொரன்டீன் பகுதியில் இருக்கிறார். அரசு அதிகாரியாக வேலையில் இருக்கும் ஒருநபர் ஜேம்ஸ் நாயுடு ஆவார்.
 
ஜமைக்காவில் 1950 வரை காய்கறிகளின் ஏகபோக உரிமை தமிழர்களிடமே இருந்தன. ஜமைக்கா பாராளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வணிகம்/தொழில் புரிவோர் விபரங்கள் :
 
கயானாவில் வாழும் தமிழரில் 85% விழுக்காட்டினர் தோட்டங்களிலும், சிற்றூர்களிலும் வாழ்கின்றனர். பொறியியல் வினைஞர்களாகவும், நர்சு, ஆசிரியர்களாக சிலர் அங்கொன்றும், இங்கொன்றுமாக வாழ்கின்றனர். நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதாரச் சூழ்நிலைகளின் காரணமாக அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் சென்று விட்டதாக இங்குள் தமிழர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் குறைந்தது ஒருவராகிலும் அமெரிக்காவிலோ கனடாவிலோ, பிரிட்டனிலோ வாழ்ந்து வருகின்றனர். சூரிநாமில் சரபாச்சா, நிக்கெரி மாவட்டங்களில் சிறுவிவசாயிகளாகவும், ஏற்றுமதி-இறக்குமதி தொழிலிலும் இவர்களின் பங்கு உள்ளது. ஜமைக்காவில் விவசாயத்திலும் வியாபாரத்திலும் இருக்கின்றனர். கிரனடாவில் கரும்புத் தோட்டங்களி பணிபுரிகின்றனர். கரீபிய நாடுகளில் தமிழர்கள் பண்பாட்டை முதலில் வட இந்தியரிடம் இழந்தனர். பின்னர் அந்தந்த நாட்டு மொழி, பண்பாடுகளால் விழுங்கப்பட்டவர்களாக இன்று வாழ்கின்றனர். இன்றைய இளம் தமிழர்கள் தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர். இந்திய அரசாங்கம் உலகில் உள்ள நான்கு நாடுகளில் (கயானா, சுரிநாம், பீஜி, மொரீசியஸ்) இந்திய பண்பாட்டு மையம் (Indian cultural centre) நிறுவி அதன் மூலம் இந்திமொழி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றை பரப்பி வருகிறது. அதுபோல தமிழக அரசும் தமிழர்கள் அதிகமாக அந்நாடுகளில் வாழ்வதால் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்கிறார் விசுவநாதன். ஒட்டுமொத்த தமிழரின் விருப்பமும் இது என தமிழக அரசு உணரவேண்டும்.
 
தொகுப்பு : ப. திருநாவுக்கரசு
 
உதவிய நூல்கள் :
 
1. Tamil Emigration to Martinique - Fr. Thaninayagam.
 
2. பாரெல்லாம் பரந்த தமிழர் - ஈசா. விசுவநாதன்.
 
3. அயல்நாடுகளில் தமிழர் - நாகராஜன்

https://www.facebook.com/notes/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-tamil/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-tamils-in-caribbean-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/10150279415679710
 
நன்றி 
தொகுப்பு : ப. திருநாவுக்கரசு

உதவிய நூல்கள் :

1. Tamil Emigration to Martinique - Fr. Thaninayagam.

2. பாரெல்லாம் பரந்த தமிழர் - ஈசா. விசுவநாதன்.

3. அயல்நாடுகளில் தமிழர் - நாகராஜன்

https://www.facebook.com/notes/தமிழ்-tamil/தமிழர்-வாழும்-நாடுகள்-கரீபிய-நாடுகளில்-தமிழர்-tamils-in-caribbean-தொகுப்பு-ப-திர/10150279415679710

யூனிட் மின்சாரம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 5:53 PM | Best Blogger Tips
Photo: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்! ! ! !

மாதம்தோறும் மீட்டரில் கணக்குப்பார்த்து எழுதிவிட்டுப் போகும் மின்சாரத்துறை ஊழியர்களிடம்"இந்த மாதம் எத்தனை யூனிட் ஆகி இருக்கிறது?'' என்று கேட்பது ஒவ்வொரு குடும்பத்திலும் ­ உள்ள வழக்கமான கேள்வி. அதிலிருந்து மின்சார 'பில்' அந்த மாதம் எவ்வளவு ஆகும் என்று கணக்கிடுவதற்காக ­த்தான் அந்தக் கேள்வி. ஆனால், ஒரு யூனிட் மின்சாராத்தில் என்னென்ன செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து.....

2500 காலன் தண்ணீரை 50 அடி உயரம்பம்ப் செய்யலாம்.

40 வாட் விளக்கை 25 மணி நேரம் எரிக்கலாம்.

60 துண்டு ரொட்டிகளை வாட்டிச் சமைக்கலாம்.

நான்கு பேருக்கு சிற்றுண்டி தயார் செய்யலாம்.

ஆறு காலன் வெந்நீர் போட்டுக் குளிக்கலாம்.

ஆறு மணி நேரம் தரையைப் பாலிஷ் செய்யவோ சுத்தம் செய்யவோ உபயோகிக்கலாம்.

ஒரு தையல் மிஷினை 20 மணி நேரம் ஓட்டலாம்.

ஒரு சலவை மிஷினில் ஆறு பேர்களுடைய உடையை இரண்டு வாரங்களுக்கு வெளுக்கச் செய்யலாம்.

தலைக்கு மேல் சுற்றும் மின் விசிறியை 10 மணி நேரம் உபயோகிக்கலாம்.

180 பவுண்டு வெண்ணை எடுக்கலாம்.

2500 பால் புட்டிகளைக் கழுவலாம்.

இரண்டு காலன் தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.

பத்து பவுண்டு ஐஸ் கட்டி செய்யலாம்.நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்! ! ! !

பத்து பவுண்டு ஐஸ் கட்டி செய்யலாம்.
 
Via Useful INFO

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி ? ? ?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:50 PM | Best Blogger Tips

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி ? ? ?

சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை Copy செய்யும் போது"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக ்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும்.இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.

எளிமையான வழி:

Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.

reg add "HKLM\System\Cu rrentControlSet \Control\Storag eDevicePolicies " /t Reg_dword /v WriteProtect /f /d 0

பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும். இப்பொழுது நீங்கள் விரும்பியபடிவேலை செய்யலாம்.

உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.

reg add "HKLM\System\Cu rrentControlSet \Control\Storag eDevicePolicies " /t Reg_dword /v WriteProtect /f /d 1

சில நேரங்களில் இதை கொடுத்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்.

நல்லதை கற்றுக்கொள்! - சு.கி.சிவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:42 PM | Best Blogger Tips
"Home Work கணக்கு போட்டாச்சா?" என்று பாபுவை அதட்டினாள் அக்கா.

"கஷ்டமா இருக்குக்கா. ராமு எப்படியும் கணக்கு போட்டுட்டு வந்துடுவான். கோபுவும், நானும் அவனை பார்த்து காப்பி பண்ணி எழுதிக்குவோம். இதுதான் ஈஸின்னு கோபுவும் சொன்னான்" என அக்காவிடம் விளக்கமாகப் பேசினான் பாபு.

பாபுவை அருகில் அழைத்து "எங்க டீச்சர், ஒரு கதை சொன்னாங்க பாபு. அதை உனக்கு சொல்லட்டுமா?" என்றாள் அக்கா.

"ஹை, கதையா..?! சொல்லு... சொல்லு" என ஆர்வமானான் பாபு.

"காட்டில் மிகவும் சிரமப்பட்டு விறகுகளை வெட்டி ஒருவர் சம்பாதித்து வந்தார். ஒரு நாள் அவர் விறகு வெட்டிக் கொண்டு இருக்கும்போது ஒரு புலி கொழுத்த மான் ஒன்றை வேட்டையாடுவதை பார்த்தார். உடனே பாதுகாப்பாக மரத்தின் மேலே ஏறி உட்கார்ந்துவிட்டார். துரத்தி துரத்தி படாதபாடுபட்டு மானை புலி அடிச்சு... சாப்பிட்டது! ஆனால், அந்த மானை முழுமையாக சாப்பிட முடியாததால், மிச்ச இரையை அப்படியே போட்டுட்டு புலி போயிடுச்சு. பிறகு வயசான கழுதைப்புலி ஒண்ணு அங்கு நொண்டியபடியே வந்தது. அதுக்கு ஒரே சந்தோஷம். "கொழுத்த மான்! கஷ்டமே இல்லாம கடவுளா கொடுத்திருக்காரு. கடவுளுக்கு நன்றி!" என்று சொல்லிட்டு மானை முழுமையாக தின்றுவிட்டு ஏப்பம் விட்டது.

இதை பார்த்த விறகுவெட்டி, "அட உழைக்காத கழுதைப்புலிக்கு கடவுள் எவ்வளவு நல்ல உணவு கொடுத்தாரு. படாதபாடுபட்டு புலிக்கு கிடைச்ச அதே உணவு, உழைக்காமலேயே கழுதைப்புலிக்கு கிடைக்கும் படியா செஞ்ச கடவுளை நாம புடிச்சுக்கணும்னு!" நினைச்சு கோடாரியை தூக்கி வீசியெறிந்தாரு.

'இனிமேல் உழைக்கவே தேவையில்லை. கழுதைப் புலிக்கு உணவு கிடைக்கச் செய்தது போல் நமக்கான உணவையும் கடவுள் கொடுப்பாரு’ அப்படின்னு நினைச்சு மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டு நேராக கோவிலுக்குப் போனார்.

சாமி சாப்பாடு கொடுக்கும்னு இரண்டு நாள் இரவு பகலாக காத்திருந்தாரு. பசி மயக்கம். கண்ணை மூடினாரு. அவரது கனவுல கடவுள் வந்தாரு.

"முட்டாளே, உழைக்காம சாப்பிடணும்ங்கிற தப்பான விஷயத்தை கழுதைப்புலி கிட்டேயிருந்து நீ கற்றுக் கொள்வதற்காகவா உனக்கு அறிவை கொடுத்தேன். உழைச்சுதான் சாப்பிட வேண்டும் என்பதை புலியிடம் இருந்து கற்றுக்கொள்" என்றார்.

கடவுள் சொன்னதைக் கேட்டு புத்தி தெளிந்தவராக மீண்டும் கோடாரியை தூக்கிக் கொண்டு உழைப்பதற்காக காட்டுக்குச் சென்றார் அந்த விறகுவெட்டி!" என்று கதை சொல்லி முடித்தாள் அக்கா.

"பாபு, இந்த கதையில வர்ற மாதிரி காப்பி அடிக்கலாம் என்ற விஷயத்தை கோபுவிடம் இருந்து கத்துக்காதே. கஷ்டப்பட்டு கணக்கு போடணும்ங்கறதை ராமுவிடம் இருந்து கற்றுக்கொள்" என்றாள் அக்கா.

Via  Chutti Vikatan

கற்றது ஒழுகு! - சுகி.சிவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:41 PM | Best Blogger Tips
''தாத்தா, திருக்குறள் மனப்பாடப் பகுதியை ஒப்பிக்கிறேன். சரியா இருக்கான்னு பாருங்க...'' என்று தமிழ் புத்தகத்தை நீட்டினான் பாபு. ''சொல்லு'' என்றவாறே நிமிர்ந்து உட்கார்ந்தார் தாத்தா.

''கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக''

என்று வைகை எக்ஸ்பிரஸ் வேகத்தில் கடகடத்தான் பாபு. ''இந்த குறளுக்கு என்ன அர்த்தம் சொல்லு?'' என்று தாத்தா இடையில் கேள்வி கேட்டதும், ''இது மனப்பாடப் பகுதி, ஒப்பிச்சா போதும்... அர்த்தம் எல்லாம் கேட்க மாட்டாங்க...'' என்று நழுவினான் பாபு.

''பாபு, எதை கற்றாலும் அதன் உண்மையான அர்த்தம் தெரிஞ்சு கத்துக்கணும். அதைவிட முக்கியம், அப்படி கற்ற வழியிலே நடக்கணும். இதுதான் இந்த குறளோட அர்த்தம். இது வெறும் மதிப்பெண்கள் வாங்க மட்டுமல்ல. வாழ்க்கை முழுக்க பயன்படுற திருக்குறள்'' என்றவர் மேலும் தொடர்ந்தார்.

''இப்பதான் நான் ஒரு கதை படிச்சேன். ஏசுவின் தொண்டராய் தன்னை அர்ப்பணித்து கொண்டவர் தெய்வீக ஊழியரான புனித பிரான்சிஸ் அசிசி என்ற பாதிரியார். அவர் ஒரு துறவியர் இல்லத்தின் தலைவர். பல துறவிகள் அந்த இல்லத்தில் தங்கி, அவரிடம் பைபிள் கல்வி கற்று தொண்டர்களாக தயாராகினார்கள்.

ஒருநாள் இரவு அந்த இல்லத்தின் வாசலில் வந்த ஓர் ஏழைப் பெண், ''பசிக்கிறது, ஏதாவது பிச்சை தாருங்கள்'' என்று அழுதாள். இரக்கம் மிகுந்த புனித பிரான்சிஸ் அசிசியார் தமது இல்லத்திலிருந்த மற்றொரு துறவியிடம், ''அந்த பெண் பசியாற ஏதாவது கொண்டு வந்து தாருங்கள்'' என்றார்.

உள்ளே போய்விட்டு வெறுங்கையுடன் திரும்பி வந்த துறவி, ''இவள் மிகுந்த பாவம் செய்திருக்க வேண்டும். இரவு உணவு முடிந்துவிட்டது. உள்ளே ஒரு சின்ன ரொட்டித் துண்டு கூட மிச்சம் இல்லை'' என்றார்.

''அப்படியானால் அவளுக்கு வேறு ஏதாவது கொடுத்து அனுப்ப முடியுமா பாருங்கள்'' என்றார் புனித பிரான்சிஸ் அசிசி.

கொஞ்சம் எரிச்சலுடன் ''வேறு எதைக் கொடுப்பது? இது துறவியர் இல்லம். இங்கு வேறு என்ன இருக்கும்? வேண்டுமானால் நீங்கள் எங்களுக்கு பாடம் சொல்லுகிற வேத புத்தகம்தான் இருக்கிறது'' என்றார் அந்த துறவி.

''ஆஹா, நல்ல யோசனை! இவள் அதை விலைக்கு விற்றால் நல்ல பணம் கிடைக்கும். பிற ஊழியர்களிடம் கருணைக்காட்டு என்று ஏசுபிரான் உபதேசித்த புத்தகத்தை தினமும் நாம் வாசித்துவிட்டு இரக்கமான செயல்கள் செய்யாமல் இருப்பதைவிட படித்ததை பின்பற்றும் முகமாக இரக்க செயல்கள் செய்வதே நலம்'' என்று வேத புத்தகத்தை அப்பெண்ணுக்கு கொடுத்துவிட்டார் அவர்.

இந்த காலம் போல புத்தகங்கள் அவ்வளவு விலை மலிவாக கிடைக்காத பழைய காலம் அது. அச்சு இயந்திரங்கள் இல்லாததால் வெகு சிரமப்பட்டு கையாலேயே எழுதப்பட்ட நூல் அது. எனவே அது நல்ல விலைக்கு வாங்கப்படும். ஆனால், அதே போன்று இன்னொன்று கிடைப்பது கடினம். அப்படிப்பட்ட நூலை கற்பதைவிட கற்ற வழியில் நிற்பது முக்கியம் என்ற நோக்கத்தில் புத்தகத்தை கொடுத்தார் புனித பிரான்சிஸ் அசிசி.

''பாபு, இதையே பாரதியார் புதிய ஆத்திச்சூடியில், 'கற்றது ஒழுகு'என்கிறார். புரிஞ்சுதா'' என்றார் தாத்தா.

குறள் மனப்பாடம் செய்ய மட்டுமல்ல... வாழ்க்கையில் பின்பற்றுவதற்கும் தான் என்பது பாபுக்கு புரிந்து விட்டது.

Via  Chutti Vikatan

அருளிய தோப்புக்கரணம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 5:35 PM | Best Blogger Tips

Photo: நம் முன்னோர்களாகிய
தமிழ்ச்சித்தர்கள்
அருளிய தோப்புக்கரணம்.
====================

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப் பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

பார்த்தீர்களா? தோப்புக்கரணம் என்பது தமிழர்கள் வழக்கத்தில் ஒரு சாதாரணமான விடயம். ஆனால் அவர்களே அறியாத அந்த அறிவியல் உண்மையை ஆதி தமிழர்கள் அறிந்து தன் தலைமுறையினருக்கு அருளியிருக்கின்றர். சிறு வேலையானாலும், தமிழர்களின் கலாச்சாரத்திற்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்பதை உணர்த்துகிறது. நமது பெருமைகளை நாமே உலகிற்கு உணர்த்துவோம்.

ஆதாரம் : http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs

ஆக, ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்தில் இந்த தோப்புக்கரணத்தைக் கைவிட்டு விடாதீர்கள்.

நன்றி: ஆசிரியர் பக்கம்
நம் முன்னோர்களாகிய
தமிழ்ச்சித்தர்கள்
அருளிய தோப்புக்கரணம்.
====================

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கர
ணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப் பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

பார்த்தீர்களா? தோப்புக்கரணம் என்பது தமிழர்கள் வழக்கத்தில் ஒரு சாதாரணமான விடயம். ஆனால் அவர்களே அறியாத அந்த அறிவியல் உண்மையை ஆதி தமிழர்கள் அறிந்து தன் தலைமுறையினருக்கு அருளியிருக்கின்றர். சிறு வேலையானாலும், தமிழர்களின் கலாச்சாரத்திற்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்பதை உணர்த்துகிறது. நமது பெருமைகளை நாமே உலகிற்கு உணர்த்துவோம்.

ஆதாரம் : http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs

ஆக, ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்தில் இந்த தோப்புக்கரணத்தைக் கைவிட்டு விடாதீர்கள்.

நன்றி: ஆசிரியர் பக்கம்

Block செய்யப்பட்ட தளங்களை Open செய்வது எப்படி..?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:33 PM | Best Blogger Tips

Photo: Like here first -->> இன்று ஒரு தகவல். Today A Message.
Block செய்யப்பட்ட தளங்களை Open செய்வது எப்படி..?

அலுவலகத்திலோ, பாடசாலையிலோ , பல்கலைக்கழகத்திலோ சில தளங்கள் Block செய்யப்பட்டு இருக்கலாம்.அதில் சில பயன்படும் தளங்களும் வந்துவிடும். அம்மாதிரியான நேரங்களில் நம்மால் நமக்கு தேவையானதை உடனே தேட முடியாது அல்லது படிக்க முடியாது. அப்படி பிளாக் செய்யப்பட்ட தளங்களை எப்படி படிப்பது என்று பார்க்கலாம் ..

பிளாக் செய்யப்பட்ட தளங்களை ஓபன் செய்ய பல மென்பொருட்கள் இருந்தாலும் இலவசமாக வருவது இல்லை. ஆன்லைனில் நிறைய தளங்களில் இதை இலவசமாக செய்ய முடியும். அவற்றில் ஐந்தை பார்ப்போம்.

1. Hidexy -
அதிக விளம்பரங்கள் வந்தாலும் கொஞ்சம் வேகமாக லோட் ஆகிறது. 

2. Hide IP Surfing - http://hideipsurfing.com/
விளம்பரங்கள் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் மெதுவாக லோட் ஆகிறது. இதை http://www.ezprxy.com/ என்ற முகவரியிலும் பயன்படுத்த முடியும். 

3. Hide My IP Address - http://www.hidemyipaddress.org/
எல்லா தளங்களையும் ஓபன் செய்தாலும் மெதுவாக லோட் ஆகிறது. 

4. Hide IP Free - http://hideipfree.com/
மேலே உள்ளது போலவே மெதுவாக ஓபன் ஆகிறது. சில widget- களை மறைத்து விடுகிறது. 

5. Hide My Ass - http://hidemyass.com/
இருக்கும் ஐந்தில் இது தான் மிக மெதுவாக தளங்களை திறக்கும். 

இந்த ஐந்தின் மூலமும் நிறைய தளங்களை திறக்க முடியும். நல்ல விசயத்துக்காக பகிர்கிறேன். 

ஆக்க பூர்வமான வழியில் பயன்படுத்துங்கள்...!

Via இன்று ஒரு தகவல். Today A Message.