தமிழ்தந்த அகத்தியர்....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:11 | Best Blogger Tips
தமிழ்தந்த அகத்தியர்....

சிவபெருமான் உமையம்மை திருமணத்தின் பொழுது உலகமே இமயமலையில் குழுமியது. எனவே வடக்கே இமயமலை தாழ்ந்தது. இதைச் சமன் செய்ய சரியான ஒருவர் அகத்தியர் என்றும் அவர் தெற்கே சென்றால் பூமி சமனாகும் என்று சொல்ல.  சிவபெருமானின் ஆணையை ஏற்ற அகத்தியர் தெற்கே சென்று பூமியை சமப்படுத்தினார். 

இது எல்லோரும் அறிந்த கதை..!

ஆனால் உண்மை என்ன? 

திருமந்திரத்தில் இரண்டாம் தந்திரத்தில் அகத்தியம் என்னும் பிரிவில் திருமூலர் விளக்குகிறார். 

நடுவு நில்லாது  இவ்வுலகம்  சரிந்து
கெடுகின்ற தெம்பெருமான் என்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்தியா நீபோய்
முடுகிய வையத்து முன்னி ரென்றானே.

- திருமந்திரம்.

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. 

- திருமந்திரம்.

இவ்வுலக மக்கள் ஆன்ம யோக வழிகளை மறந்து கெடுகிறர்கள். அகத்தியா நீ போய் அவர்களை தெளிவுபடுத்தி நல்வழி காட்டு என்று ஈசன் அகத்தியருக்குச் சொல்கிறார்.

ஈசனின் ஆணைக்கு கட்டுப்பட்ட அகத்தியர் தெற்கு நோக்கி வந்து தமிழ்ச்சங்கதில் அமர்ந்து அகத்தியம் என்னும் ஐந்திலக்கண நூலை எழுதினார். இதுவே தமிழின் முதல் இலக்கண நூல்.

இதனால் அகத்தியர், தமிழ்தந்த அகத்தியர் என்றும், அருந்தமிழ் குறு முனி என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆக்கம்,
ரகசிய தோழி