கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கு சிறந்த இயற்கை வைத்தியம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:23 PM | Best Blogger Tips

Photo: கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கு சிறந்த இயற்கை வைத்தியம்!

ஒருவருடைய அழகை பிரதிபலிப்பது கண்களே. எப்போதும் சரும நிறத்தை விட கண்களே ஒருவரின் அழகை அதிகரித்து காட்டும். பல காரணங்களுக்காக கண்களில் சுற்றி கருவளையமும் வீக்கமும் ஏற்படும். அதில் ஹார்மோன் மாற்றங்கள், பலதரப்பட்ட அலர்ஜிகள், நஞ்சுக்கள், தூசிகள், தண்ணீர் தேங்குதல் போன்ற காரணங்களால் கண்கள் சோர்வாக ஆகலாம்.

அதனால் முகமும் கலையிழந்து போகும். மேலும் நம்மில் பல பேர் தூக்கத்தை இழப்பதால் மற்றும் போதிய தூக்கம் இல்லாததால், கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். தூக்கமே கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கும், வீக்கத்திற்கும் சிறந்த இயற்கை வைத்தியமாகும்.

மேலும் கருவளையத்தை போக்க எளிய முறையில் சில இயற்கை வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

கண்ணில் வரும் கருவளையங்களுக்கு ஒரு மிகச் சிறந்த மருந்தாக விளங்குவது வெள்ளரிக்காய்கள். வெள்ளரிக்காய்களில் உள்ள அதிகமான நீர்ச்சத்து கண்களை சுற்றியுள்ள கருவளையத்திற்குண எதிராக இயற்கை பாதுகாவலாக விளங்கும்.

இது கண் கருவளையத்தை படிப்படியாக குறைத்து முகத்திற்குப் பொலிவைக் கொடுக்கும். அதிலும் ஓய்வெடுக்கும் வேளையில், தலையை பின்னால் நன்கு சாய்த்து, நல்ல தடிமனான வெள்ளரித் துண்டுக்களை எடுத்து, கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் இந்த துண்டுகள் வெப்பம் ஆகும் வரை கண்களின் மேலே அது இருக்கவும் வேண்டும்.

குளிர்ந்த ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி உள்ளதால், அவை கண்களின் கருவளையங்களை குணப்படுத்த பெரிதும் உதவும். இயற்கை பொருளான இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் வைக்க உதவும்.

அதனால் தான் முகத்திற்கு தடவும் விலை உயர்ந்த பல க்ரீம்களில் இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி கலக்கப்பட்டிருக்கிறது. ஆகவே கண்களின் கருவளையம் நீங்கி, கண்கள் ஜொலிக்க செய்ய வேண்டியதெல்லாம், குளிர்ந்த பெரிய அளவிலான ஸ்ட்ராபெர்ரியின் தோல்களை நீக்கி, 3 மி.மீ தடிமானத்தில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின் ஓய்வெடுக்கும் வேளையில், இந்த துண்டுகளை கண்களின் மேல் சில நிமிடம் வைத்து விட்டு, பிறகு முகத்தை கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக கருவளையம் மறைவதை காணலாம்.ஒருவருடைய அழகை பிரதிபலிப்பது கண்களே. எப்போதும் சரும நிறத்தை விட கண்களே ஒருவரின் அழகை அதிகரித்து காட்டும். பல காரணங்களுக்காக கண்களில் சுற்றி கருவளையமும் வீக்கமும் ஏற்படும். அதில் ஹார்மோன் மாற்றங்கள், பலதரப்பட்ட அலர்ஜிகள், நஞ்சுக்கள், தூசிகள், தண்ணீர் தேங்குதல் போன்ற காரணங்களால் கண்கள் சோர்வாக ஆகலாம்.

அதனால் முகமும் கலையிழந்து போகும். மேலும் நம்மில் பல பேர் தூக்கத்தை இழப்பதால் மற்றும் போதிய தூக்கம் இல்லாததால், கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். தூக்கமே கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கும், வீக்கத்திற்கும் சிறந்த இயற்கை வைத்தியமாகும்.

மேலும் கருவளையத்தை போக்க எளிய முறையில் சில இயற்கை வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

கண்ணில் வரும் கருவளையங்களுக்கு ஒரு மிகச் சிறந்த மருந்தாக விளங்குவது வெள்ளரிக்காய்கள். வெள்ளரிக்காய்களில் உள்ள அதிகமான நீர்ச்சத்து கண்களை சுற்றியுள்ள கருவளையத்திற்குண எதிராக இயற்கை பாதுகாவலாக விளங்கும்.

இது கண் கருவளையத்தை படிப்படியாக குறைத்து முகத்திற்குப் பொலிவைக் கொடுக்கும். அதிலும் ஓய்வெடுக்கும் வேளையில், தலையை பின்னால் நன்கு சாய்த்து, நல்ல தடிமனான வெள்ளரித் துண்டுக்களை எடுத்து, கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் இந்த துண்டுகள் வெப்பம் ஆகும் வரை கண்களின் மேலே அது இருக்கவும் வேண்டும்.

குளிர்ந்த ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி உள்ளதால், அவை கண்களின் கருவளையங்களை குணப்படுத்த பெரிதும் உதவும். இயற்கை பொருளான இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் வைக்க உதவும்.

அதனால் தான் முகத்திற்கு தடவும் விலை உயர்ந்த பல க்ரீம்களில் இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி கலக்கப்பட்டிருக்கிறது. ஆகவே கண்களின் கருவளையம் நீங்கி, கண்கள் ஜொலிக்க செய்ய வேண்டியதெல்லாம், குளிர்ந்த பெரிய அளவிலான ஸ்ட்ராபெர்ரியின் தோல்களை நீக்கி, 3 மி.மீ தடிமானத்தில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின் ஓய்வெடுக்கும் வேளையில், இந்த துண்டுகளை கண்களின் மேல் சில நிமிடம் வைத்து விட்டு, பிறகு முகத்தை கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக கருவளையம் மறைவதை காணலாம்.


Via  தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி