ஆந்தைகள் பற்றிய தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:55 AM | Best Blogger Tips

Photo: ஆந்தைகள் பற்றிய தகவல்கள்:-

ஆந்தை, ஸ்ட்றைஜிபோர்மெஸ் இனத்தைச் சார்ந்த பறவை. இது பெரும்பாலும் தனித்தே காணப்படும். ஆந்தை இனத்தில் மொத்தம் 133 வகைகள் உள்ளன. அவற்றுள் மிகவும் அதிகமாக காணப்படும் வகை பார்ன் (Barn Owls) ஆந்தைகள். ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், அலகையும் கொண்டவை. இதனால் பார்க்கும் திசையை மாற்றுவதற்கு முழுத்தலையையும் திருப்பவேண்டியுள்ளது. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 பாகைகள் வரை திருப்பவல்லது.

      ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை. அவற்றின் கண்களுக்கு சில அங்குலம் தூரத்திலுள்ளவற்றைக் கூட தெளிவாகப் பார்க்க முடியாதவை. எனினும், அவற்றின் பார்வை, மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது. பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியைப் பின்தோடர்ந்து வேட்டையாடக் கூடியவை.

      இவை காடுகள், பாலைவனங்கள், புல்வெளிகள், வயல்வெளிகள் மற்றும் மரங்கள் நிறைந்த இடங்களில் மரங்களின்மேல் அல்லது நிலத்தின்கீழ் உள்ள வளைகள், குகைகள், பாழடைந்த கட்டிடங்கள், பாறை இடுக்குகள் போன்றவற்றில் வாழ்கின்றன. ஆந்தைகள் அவற்றின் இனத்தைப் பொறுத்து 6 இன்ச்-லிருந்து 28 இன்ச் வரையும், 1 கிலோ முதல் 4 கிலோ எடை வரையும் உள்ளன. பெண் ஆந்தைகள் ஆண் ஆந்தைகளைவிடப் பெரியதாக இருக்கும். இவற்றின் இறகுகள் மிக மென்மையானவை. எனவே, இவை பறக்கும்போது சத்தம் கேட்பது இல்லை.

      ஆந்தை முட்டைகள் கிட்டத்தட்ட கோளவடிவம் கொண்டவை. ஆந்தைகள் அவற்றின் வகையைப் பொறுத்து பன்னிரெண்டு வரையிலான முட்டைகளை இடுகின்றன. பாறைகளின் விளிம்பிலோ, மரங்களில் வெறும் உதிர்ந்த இலைகள், இறக்கைகளின் மேலேயோ முட்டையிடும். இவை அடைகாக்கும் 15 முதல் 35 நாட்களில் குஞ்சுகள் பொரிக்க ஆரம்பிக்கிறது.

Via Karthikeyan Mathan