குளிர் கால சளியில் இருந்து தப்பிப்பது எப்படி

மணக்கால் அய்யம்பேட்டை | 5:38 PM | Best Blogger Tips

3 குளிர் கால சளியில் இருந்து தப்பிப்பது எப்படி?

 
 
குளிர் காலம் வந்து விட்டாலே சளித் தொல்லையும் வந்து விடும். சிலருக்கு விடாத சளியும் இருமலும் படாத பாடு படுத்தும். என் அனுபவத்தில் இருந்து  சிலவற்றை பகிர்கிறேன்
சளியும் இருமலும் நுண்ணுயிரிகளாலே உண்டாகின்றன. இதனால் இந்த நுண்ணுயிரியை சமாளிக்கும் வைட்டமின் சி உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை. நெல்லிக்காய் எல்லாமே இயற்கையிலேயே வைட்டமின் சி உள்ளவை. சுக்கு, மிளகு , திப்பிலி , சித்தரத்தை,ஆடா தொடை , தூது வளை போன்ற மூலிகைகள் கொண்ட சுக்குக் காபி சாப்பிடலாம். சில  சமயம் சளி நுரையீரலில் புகுந்து கொண்டு அவஸ்தை படுத்தும். இதை வெளியேற்றும் ஆயுர்வேத இருமல் சாறு கிடைக்கிறது. இதை வாங்கி கை வசம் வைத்துக் கொண்டு குடிக்கலாம். சளி தங்காது வெளியேறி விடும்.
எல்லாவற்றிக்கும் மேல் கண்டங்கத்திரி லேகியம் என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இது இருமல் சளி இரண்டுக்கும் கேட்கும்.. என்னடா பழங்கால பாட்டி வைத்தியம் என்று நினைக்க வேண்டாம் .தாவரங்களில் தாவர வேதிகள்(phyto chemicals) உள்ளன .அவைதான் குணம் அளிக்க காரணம்.
சில வருடங்கள் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். சில வருடம் அவ்வளவு குளிர் இருக்காது. அதற்க்கு காரணம்.  கடல் அலை ஓட்டம் வெப்பமாக எல் நினாவாக(EL Nina) இருந்தாலோ அல்லது குளிர்ச்சியாக லா நினாவாகவோ(La Nina) இருப்பதை பொறுத்து அதிக குளிரின்மை , அதிக குளிர் உண்டாகிறது. இது ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு மாதிரி குளிர் அமைவதற்கு நான் தேடிய போது கிடைத்த விடை
நீங்களும் இப்போது கொஞ்சம் தெரிந்து கொண்டு குளிர் இருமலை சமாளியுங்க!

சுருக்கமாகவும் சிறப்பாகவும் சொன்னால் ஏனோ பலருக்கு அதன் அருமை தெரிவதில்லை, நீங்களும் அப்படி இருந்துடாதீங்க 

சுண்டக்காயின் மருத்துவ குணம்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:13 PM | Best Blogger Tips
சுண்டக்காயின் மருத்துவ குணம்..!

கசப்பான விசையங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசையமாக இருக்கு ...

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

மருத்துவக் குணங்கள்:

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

கொய்யா எடுங்க...குழந்தைங்களுக்கு கொடுங்க...!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:11 PM | Best Blogger Tips
கொய்யா எடுங்க...குழந்தைங்களுக்கு கொடுங்க...!

வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிகம் தேவை. அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால்...

குழந்தைகளின் :
* எலும்புகள் பலப்படும்.
* பற்கள் பலமடையும்.
* நரம்புகளைப் பலப்படுத்தும்.
* உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
* நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
* அறிவுத்திறன் அதிகரிக்கும்.
* சரும நோய்களைக் குணப்படுத்தும்
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]

கொய்யா எடுங்க...குழந்தைங்களுக்கு கொடுங்க...!

வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிகம் தேவை. அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால்...

 குழந்தைகளின் :
* எலும்புகள் பலப்படும். 
* பற்கள் பலமடையும். 
* நரம்புகளைப் பலப்படுத்தும். 
* உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும். 
* நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். 
* அறிவுத்திறன் அதிகரிக்கும். 
* சரும நோய்களைக் குணப்படுத்தும்

இதை யாரும் படிக்க வேண்டாம்!....

மணக்கால் அய்யம்பேட்டை | 2:33 PM | Best Blogger Tips
இதை யாரும் படிக்க வேண்டாம்!....

ஈகோ: இது பரவலாக பயன்படுத்தும் சொல்லாகி விட்டது. யாராவது, யாரை பார்த்தாவது, அவர் நடவடிக்கை பிடிக்க வில்லை என்றால், அந்தாளு ஈகோ பேர்வழி என்று எளிதாக சொல்லிவிடுவார்கள்.

அது என்ன ஈகோ?

தலைக்கனம், திமிர், ஆணவம், கர்வம் இவற்றின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு இன்னொரு பெயர் ஈகோ.

நான் என்று சொல்வது கூட ஈகோ. நாம் என்று தன்னடக்கமாக சொல்லணும். அல்லது யாம் என்று சொல்லலாம் தவறில்லை.

அப்படியா?

அப்படித்தான். இதை நான் சொல்லலை. ஊருக்குள்ளே அப்படித்தான் பேசிக்கிறாங்க.

பாருங்கையா.... இந்தாளை. நான்னு சொல்றதே ஈகோ, தலைக்கணம்னு சொல்லும்போது, என்ன தெனாவெட்டு இருந்தா, நெஞ்சழுத்தம் இருந்தா, நான்னு சொல்லுவான்! சிந்தனை வருதா? வந்தால் சந்தோசம், வராவிட்டால் ரொம்ப சந்தோசம். வாங்க பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.

இந்த ஈகோ என்கிற வார்த்தைக்குள் ஏகப்பட்ட பொருள் பொதிந்து இருப்பதாக சொல்கிறார்கள்.

தன்னம்பிக்கை, தலைக்கணம் இரண்டுக்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய கோடுதான். இதையே கொஞ்சம் மேம்படுத்தி, என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை, என்னால் மட்டுமே முடியும் என்பது தலைக்கணம் அல்லது ஈகோ என்கிறார்கள்.

இங்கேதான் என்னால் உடன் பட முடியவில்லை. ஒரு சுலோகம் உண்டு. உழைக்க தெரிந்தவனால் தான் பிழைக்க முடியும்.

தன்னை உணர்ந்தவனால் தான் தலைவனாக முடியும். இந்த தன்னை என்கிற வார்த்தைதான் தவறுதலாக தலைக்கணம் என்று உச்சரிக்க படுகிறது

நான் என்று சொல்லுகிற அத்தனை பேருமே தலைக்கணம் பிடித்தவர்களும் அல்ல. நாம் என்று சொல்லுகிற அத்தனை பேருமே தன்னடக்க பேர்வழியும் அல்ல.

இன்று மைன்ட் பவர், ஆழ்நிலை தியானம், மூச்சு சுவாச பயிற்சி, இப்படி நீண்டு கொண்டே போகும் பல்வேறு கலைகள் கற்று தருவது தன்னம்பிக்கையைதான்.

உன்னால் முடியும், முயன்றால் முடியும், முற்றும் செய்ய கற்றுக்கொள் என்று உபதேசம் செய்தால் தவறில்லை.

ஆனால் என்னால் முடியும் என்னால் மட்டும் முடியும் என்று சொல்ல முனைந்தால், அதை தன்னம்பிக்கை என்பதை விட, ஈகோ என்று தலையில் குட்டுகிற செயலும் அரங்கேறுகிறது.

அது ஒரு கிராமம்.

அந்த கிராமத்தில் குடியிருக்க சொந்த இடம் இல்லாத நூற்றுக்கணக்கான நபர்களுக்கு அரசாங்கம் இலவசமாக நிலத்தை பட்டா போட்டு கொடுத்தது. ஒரு நபருக்கு நாலு ஏக்கர்.

எல்லோரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை போய் பார்த்தார்கள். அது உடனடியாக பயன்படுத்துவதற்கேற்ற நிலம் இல்லை. பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால் மட்டுமே அதில் வீடு கட்டவோ, விளைநிலமாகவோ மாற்ற முடியும்.

கூட்டத்தில் இருந்தவர்கள் கொதித்துப்போனார்கள். இந்த அரசாங்கம் நம்மை எல்லாம் வஞ்சித்து விட்டது.

அரைப்படி அரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம் என்கிற மாதிரி, பெரிய அறிவிப்பு விட்டு நிலத்தை தந்தார்களே தவிர முற்றிலும் ஏமாற்று வேலை.

நம் வாழ்நாள் முழுவதும் போராடினாலும், இந்த நிலத்தை சீற்படுத்தவோ, செப்பணிடவோ முடியாது.

அதனால் நம் எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு உடனே சாலை மறியல் செய்ய வேண்டும் என்று கூட்டமாக, சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

ஆனால் என்பது வயது முதியவர் மட்டும் மண்வெட்டி, கோடாலி, கடப்பாரை, கத்தி சகிதம் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இறங்கி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

வளர்ந்து கிடந்த முற்புதர்களை அழித்து, மேடு பள்ளங்களை சீர்படுத்தி, வளர்ந்து கிடந்த பாறைகளை உளி சுத்தியல் கொண்டு உடைக்க தொடங்கினார்.

இதை கவனித்த கிராமவாசிகள்... உனக்கு என்ன பைத்தியமா?

நாங்கள் எல்லாம் அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வேறு நல்ல இடம் கேட்கும் போது, நீ ஒருவன் மட்டும் இங்கே வந்து விட்டாயே. உன்னால் இந்த பாறையை உடைத்து நிலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியுமா? என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த பெரியவர் என்னால் முடியும் என்றார்.

உனக்கு புத்தி பிசகி விட்டதா? உனக்கு வயது என்பது. உன் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் இந்த இடத்தில் ஒரு வீடு கட்டவோ, விவசாயம் செய்யவோ முடியாது.

தெரிந்தும் ஏன் விழலுக்கு இறைத்த நீர் மாதிரி உன் சக்தியை வீணடிக்கிறாய் என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த பெரியவர், அது எனக்கும் தெரியும். இந்த இடத்தை சுத்தம் செய்யும் வேலையை நான் துவக்கி வைக்கிறேன்.

எனக்கு உறுதுணையாக என் மகன் இருப்பான். அவனுக்கு பின்னால் என் பேரன் காலத்தில் இதில் வீடு கட்டவும், விவசாயம் செய்யவும் அருமையான இடம் கிடைத்துவிடும் என்றாராம்.

இந்த பெரியவர் சொன்னது தன்னம்பிக்கையா? தான் என்ற அகந்தையா? தன்னால் முடியும் நேற்று யார் நினைக்கிறார்களோ அவர்கள் தான் சாதிக்கிறார்கள்.

ஒரு விமானி விமானத்தை ஓட்டுகிறார் என்றால் அவர் பயிற்சி பெற்றதால் ஓட்டுகிறார். நீங்கள் பயிற்சி பெற்றால் ஓட்ட முடியாதா?

முடியும்.

முயன்றால் முயற்ச்சி செய், முடியாவிட்டால் பயிற்சி செய் என்பதுதானே வாழ்க்கை தத்துவம்.

அதனால் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. என்னால் முடியும் என்கிறிர்களா!

பலே..!

என்னால் மட்டும் முடியும் என்கிறீர்களா?

பலே...பலே...!

உங்கள் தன்னம்பிக்கையின் பலம் அதிகரித்திருக்கிறது என்று அர்த்தம்.

லட்சம் பேர் கூடிய சபையில் கூட சொல்வேன். நான் எபது அகந்தையின் அடையாளம் அல்ல. நான் என்பது உணர்தலின் வெளிப்பாடு.

நான் என்பது எதிர்மறை எண்ணங்களுக்கு கடிவாளம். நான் என்பது முயற்சியின் முகவரி. அதனால் நான் என்று சொல்லுங்கள்.

அப்படியானால் ஈகோ என்பது எது?

ஒப்பிட்டு பார்க்கும் குணம் எப்போது தலை தூக்குகிறதோ, அப்போது தான் ஈகோ பிறக்கிறது.

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று யோசிக்க முடிகிறதா? அப்போது தான் ஈகோ பிறக்கிறது.

நான் மெத்த படித்த மேதாவி. பட்டங்கள் பல பெற்றதால் எனக்கு கொம்பு முளைத்து விட்டது. எனக்கு இணையாக யாருமே இல்லை என்று நினைத்தால், படிக்காத நபர்களோடு நான் பழக மாட்டேன் என்று வட்டம் போட்டுக்கொண்டு வாழ்க்கையை நடத்தினால், அது ஈகோ அல்லது தலைக்கணம்.

அவர் படித்த முட்டாள்.

நான் பணபலம் பெற்றவன். அவன் ஏழை. என்னோடு சரிசமமாக அவனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நினைத்தால் அது ஈகோ மட்டும் அல்ல, அவர்தான் மாடி வீட்டு ஏழை.

பணம் என்பதும், பதவி என்பதும், இன்று வரும் நாளை போகும். வரும் போது சொல்லிக்கொண்டு வருவதில்லை. போகும் போது சொல்லிக்கொண்டு போவதும் இல்லை. இதுதான் உலக நியதி.

இளமையும் அழகும் வேண்டுமா? கலர் கலரான மரக்கறி பழவகைகளை உண்ணுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:12 PM | Best Blogger Tips
இளமையும் அழகும் வேண்டுமா? கலர் கலரான மரக்கறி பழவகைகளை உண்ணுங்கள்

உணவுகளின் வர்ணங்கள் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையவை. ஓரஞ்ஸ், சிவப்பு, பச்சை, வயலட் என பல்வேறு நிறங்கள் உணவுப்பொருட்களில் நிறைந்திருக்கின்றன. இந்த நிறங்கள் நம் ஆரோக்கியத்தோடும் அழகோடும் தொடர்புடையவை. எனவே எந்த கலர் காய்கறிகளை சாப்பிட்டால் என்ன மாதிரியான சத்து கிடைக்கும் என்று உணவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர் தெரிந்து கொள்ளுங்களேன்.

சிவப்பு காய்கறிகள்

காலையில் சாப்பிடப்படும் ஒரஞ்ஸ், மஞ்சள் நிறமுள்ள பழங்கள், முன்தினம் இரவில் உண்ட உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் அதை நீக்கும். மலச்சிக்கல் இருந்தால் சிவப்பு நிறமுள்ள தக்காளிச் சாறு அருந்தவும். ஏனெனில் இது குடலை அபாரமாகச் சுத்தப்படுத்திவிடும். காலையில் ஒரு கோப்பை தோடம்பழசாறு அல்லது தக்காளிச்சாறு. இத்துடன் மூன்று ரொட்டித் துண்டுகள் ஒரு கப் தயிர். (அல்லது) வாழைப்பழம், தோடம்பழம், அப்பிள், பீச், பிளம்ஸ், அன்னாசித் துண்டுகள் இவற்றில் ஏதேனும் ஒன்று, ஒன்றிரண்டு பழங்கள் சாப்பிடலாம். அன்னாசிப் பழம் என்றால் ஒரு கிளாஸ் சாறு, இத்துடன் வறுத்த ரொட்டித் துண்டு ஒன்று சாப்பிடலாம்.

பச்சை நிற உணவுகள்

மதியம் பச்சை உணவுகளை சாப்பிடலாம் ஏனெனில் பச்சை நிறமுள்ள கீரைகள், காய்கறிகள், பச்சை நிறத் திராட்சை முதலியவைகளில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

இதயத்தையும் எலும்புகளையும் இந்த தாது உப்புக்கள் பலப்படுத்துகின்றன. இவை இதயம் சிறப்பாக இயங்கவும் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. எனவே மதிய உணவில் ஒரு றொட்டி அல்லது ஒரு பாண்துண்டுடன் வெங்காயம், மிளகாய், சீஸ், வெள்ளரிக்காய், முதலியவற்றை காய்கறி சாலட்டாக ஒரு கிண்ணம் சாப்பிடவும். இத்துடன் ஒரு தேக்கரண்டி ஒலிவ் ஒயில் ( ஒலிவ் எண்ணெய்) சாப்பிடவும். 50 கிராம் ஏதாவது ஒரு கீரையை அவியலாகச் சாப்பிடவும் அல்லது காய்கறி சூப்புடன் ஒரு துண்டு ரொட்டி அல்லது பாண் துண்டு மற்றும் பச்சை நிற திராட்சை சாப்பிடலாம்.

அமைதியான நீல நிறம்

இரவு உணவில் நீலம், ஊதா, தங்க நிறம், வெள்ளை ஆகியவற்றில் உள்ள பழங்கள், காய்கறிகளைச் சேருங்கள். நீலம், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் உள்ள பழங்கள் காய்கறிகளில் உள்ள தாவரச் சத்துக்கள் உணர்ச்சிகளை மெல்ல அமைதிப்படுத்தி தூங்க வைக்கும். இரவில் ஒரு கிண்ணம் சாதம், ஒரு கிண்ணம் தயிர், பீட்ரூட், கத்தரிக்காய் லேசாக அவிய வைத்து ஒரு கிண்ணம், ஒரு ரொட்டி என்று சாப்பிடலாம். (அல்லது) பீட்ரூட் சாறு ஒரு கிளாஸ், ஒரு கிண்ணம் தயிர் சாதம், ஒரு ரொட்டி, கத்தரிக்காய் அவியல் அரை கிண்ணம் என்று சாப்பிடலாம்.

மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் எடை குறைந்து அழகாக மாறிவிடுவீர்கள். முதல் ஒரு மாதத்திலேயே இளமையான தோற்றம் கிடைக்கும். உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் சக்தியுடன் வாழவும் உணவுத் திட்டம் அவசியம் இதன் மூலம் 1000 முதல் 1200 கலோரி உணவையே நாம் சாப்பிடுவதால் இளமைத் துடிப்புடன் வாழலாம்.

குண்டான ஆண், பெண்கள் இந்த உணவு முறையை இன்றே தொடங்குங்கள், ஒரே மாதத்தில் கண்டிப்பாக பத்து கிலோ எடை குறைவது உறுதி. இதனால் ஆரோக்கியமும் உறுதிப்படுத்தப்படுகிறது.

கரும்பை சாப்பிட்டால் என்ன நன்மைகளைப் பெறலாம்?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:12 PM | Best Blogger Tips
கரும்பை சாப்பிட்டால் என்ன நன்மைகளைப் பெறலாம்?

பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் கரும்பும் அதிக அளவில் கடைகளில் விற்கப்படுகிறது. கரும்பை பார்க்கும் போதே நா ஊற ஆரம்பிக்கும். ஆனால் அதை வாங்கி சாப்பிடலாம் என்று நினைக்கும் போது, உடலில் உள்ள நோய்கள் கண் முன் வந்து நிற்கும். ஏனெனில்
மார்கழி மாதத்தில் சிலர் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, கோவிலுக்கு சென்று வருவர். மார்கழி மாதம் பொதுவாக பனி பொழியும். அதனால் சிலருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆகவே என்ன தான் நாக்கு ஊறினாலும், வீட்டில் உள்ளோர் கரும்பை சாப்பிட விட மாட்டார்கள். உண்மையில் கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது தான் கரும்பு மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இந்த நாட்களில் கரும்பை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். இப்போது கரும்பை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போமா!!!

மஞ்சள் காமாலை

கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். அதுமட்டுமின்றி மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

தொற்றுநோய்கள்

உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.

சிறுநீரக கற்கள்

கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.

நீரிழிவு கரும்பு

இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.

ஊட்டச்சத்துக்கள்

கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

சளி, இருமல் மற்றும் தொண்டை வலி

நிறைய பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது கரும்பு தான்.

புற்றுநோய்

கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.

நீர் வறட்சி

நிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம். மேலும் கோடைகாலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது நல்லது.

மகிழ்ச்சியாக வாழ 25 வழிகள்.......

மணக்கால் அய்யம்பேட்டை | 12:09 PM | Best Blogger Tips
மகிழ்ச்சியாக வாழ 25 வழிகள்.......

இன்று தான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதைப் போல ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர், விபத்தில் சிக்கிப் பிழைத்தவர், நெருங்கிய ஒருவரை இழந்தவர்... இவர்களை பாருங்கள்! வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதமே, "பாசிடிவ்'வாக இருக்கும். "அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்!' என்று எதையும் தள்ளிப் போட மாட்டார்கள். எங்கேயாவது போக வேண்டுமா, ஒரு நண்பரை பார்க்க வேண்டுமா? உடனே, செய்து விடுவர்; அவர்களிடம், "பிறகு' என்ற வார்த்தையே இருக்காது.

* நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதுங்கள். பேச ஆரம்பிக்கும் போது, உங்கள் அருமை குழந்தை என்ன, என்ன வார்த்தைகள் பேசினாள் என்பதையும் எழுதி வையுங்கள். அவற்றையெல்லாம் எழுதி வைக்காவிட்டால், பிறகு ஞாபகம் இருக்காது. பிரச்னைகளை எழுத ஆரம்பியுங்கள்; தீர்வு கிடைக்கும்.

* உங்கள் வாழ்க்கையை பற்றி உங்கள் பேரக் குழந்தைகளிடம் என்ன நினைவு கூற விரும்புகிறீர்கள்? எப்படி உங்களை மற்றவர்கள் நினைவு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தையின் பள்ளி ஆண்டு விழாவை தவிர்த்து, ஆபீஸ் மீட்டிங் தான் முக்கியம் என்று சென்றீர்களே... இப்போது அது முக்கியமா? பெட்ஷிட் வாரா வாரம் மாற்றப்பட வேண்டும், தரை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் மற்றவற்றை விட முக்கியமா?

* சின்ன, சின்ன தவறுகளை பெரிது படுத்தாதீர்கள். ஓவர் டேக் செ#ய, உங்களை அனுமதிக்காத டிரைவரின் மீது ஏன் கோபம்! புன் சிரிப்பு செய்யுங்கள்; உங்கள் மீது அவருக்கு கோபமாக இருந்தால் அது அவர் பிரச்னை. ரயிலை தவற விட்டு விட்டீர்களா? போகட்டுமே! அதற்கு ஏன் டென்ஷன், ஸ்டேஷனில் ஒரு காபி குடித்து, அடுத்த ரயிலில் போகலாமே!

* பிடிக்காத வேலை, கஷ்டமான வேலை என்றால், ஏன் தள்ளிப் போடுகிறீர்கள்? தள்ளி போடுவது, நம் சக்தியைத்தான் விழுங்குகிறது; வீணாக்குகிறது. கூடவே, "இந்த வேலையை இன்னும் பண்ணவில்லையே...' என்ற கவலை வேறு; அந்த வேலையை உடனே செய்து முடிப்பதே நல்லது.

* புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள். ஞாயிற்றுக்கிழமை என்றால் நிறைய தூங்கி லேட்டாக எழுந்து கொள்ளத்தான் வேண்டுமா? சீக்கிரம் எழுந்து அருகே உள்ள பூங்காவில் காலை ப்ரேக் பாஸ்ட்டை ஏன் சாப்பிடக் கூடாது? மற்றவர்கள் வருவதற்கு முன் திரும்பி விடலாம். அன்றைய நாள் நீண்டதாக இருக்கும். மத்தியானம் எப்போதும் தூங்காதவரா? ஒரு,"ஞாயிறு' நன்றாக தூங்குங்கள்.

* அடுத்த வீட்டுக்காரர் புது கார், புது ஸ்டீரியோ சிஸ்டம் வாங்கினால் என்ன? நன்றாக கவனித்து பாருங்கள். அவர் சனி, ஞாயிறு கிழமையிலும் ஆபீசுக்கு போக வேண்டியிருக்கும். உங்களை மாதிரி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அவர் இருக்கிறாரா? உங்களை மாதிரி, நண்பர்களை அவர் சந்திக்கிறாரா? இருக்காது.

* அணியாத டிரஸ், வெளியே எடுக்காத கிச்சன் பாத்திரங்கள், யூஸ் செ#யாத படுக்கை, இதேபோல பொம்மைகள், புத்தகங்கள், மர சாமான்கள் இவற்றை தர்ம ஸ்தாபனத்திற்கோ, ஏழை, எளியவருக்கோ தானமாக கொடுத்து விடுங்கள்! நிறைய மகிழ்ச்சி கிடைக்கும்; வீட்டிலும் நிறைய இடம் மிஞ்சும்.

* "நோ' சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே மிகவும், "பிசி'யாக இருக்கிறீர்கள் என்றால், இன்னும் அதிக வேலை என்றால், "நோ' சொல்லுங்கள். உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

* சில ஆண்டுகள் தொடர்ந்து ஓடினால், மெஷினுக்கும் ரிப்பேர் பார்க்க வேண்டும்; அதே போலத் தான் மனித உறவுகளும். காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள், முன் மாதிரி இன்னும் காதலிக்கிறீர்களா? கணவர், மனைவி, பார்ட்னர் எல்லா உறவுக்கும் ரிப்பேர் தேவை; நேரம் ஒதுக்குங்கள்.

* நண்பர்களுக்கு கொடுக்கும் நேரத்தை, கொஞ்சம் உங்கள் குடும்பத்தினருக்கும் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உங்கள் நேரம் கண்டிப்பாக தேவை.

* உங்கள் குடும்பத்தினர், பார்ட்னர், நண்பர்கள் இவர்களிடம் நீங்கள் விரும்பும், பாராட்டும் நல்ல குணங்களை பற்றி சொல்லுங்கள். நன்றாக ஒரு விஷயத்தை செய்தால், அவர்களை வாய்விட்டு பாராட்டுங்கள்; நல்ல டானிக் போன்று அது உதவும். நீங்கள் செய்யும் பல காரியங்களையும் அவர்களும் பாராட்டக் கூடும்.

* எல்லா பிரச்னைகளையும் உங்கள் மீது போட்டு விடுகின்றனரா உங்கள் நண்பர்கள்? அது தவறு. அதற்கு, இனி மேலும் இடம் கொடுக்காதீர்கள். அவர்கள் பிரச்னைகள் உங்களையும் பாதிக்க ஆரம்பித்தால், கொஞ்சம் ஒதுங்குங்கள். தங்கள் பிரச்னையை சந்திக்க, தீர்த்துக் கொள்ள அவர்கள் ஆரம்பித்துக் கொள்ளட்டும்.

* நண்பர்கள், தூரத்து உறவினர்கள் - இவர்களுடன், "டச்' விட்டு போய் விட்டதா? பரவாயில்லை... இன்று துவங்குங்கள்... போனில் பேசலாம், இ-மெயில் அனுப்பலாம், லெட்டர் எழுதலாம். அவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவர்.

* உங்கள் மனதுக்கு பசுமை நல்லது. தோட்டத்திலிருந்து புது பூக்களை பறித்து வையுங்கள். விடியற்காலை எழுந்து மார்கெட்டிற்கு சென்று குறைந்த விலையில் காய்கறி பழங்களை வாங்கி வாருங்கள். தொட்டிகளில் செடி வளர்ப்பது கூட வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
* நிறைய அலைகள், கடல் மணல், வெறும் கால்கள் இவை எல்லாம் உடலுக்கும், உள்ளத்திற்கும், மகிழ்ச்சி அளிப்பவை. கடற்கரைக்குச் செல்லுங்கள்; முடியாதவர்கள், நதிக்கரை செல்லுங்கள். இயற்கை மிகவும் சிறப்பானது.

* ஏதாவது புதியதாக உருவாக்குங்களேன்... சித்திரம் வரைவது, தைப்பது, கேக் செய்வது, தோட்டத்தில் செடி வளர்ப்பது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

* வீட்டுக்கு வெளியே சென்று நிறைய சுத்தமான காற்றை சுவாசியுங்கள். நுரையீரலின் அடித்தளத்திலிருந்து நிறைய காற்றை உட்கொள்ளுங்கள். பழைய காற்றெல்லாம் போவதை சுகமாக உணர்வீர்கள்.

* வாக்கிங் செல்லுங்கள் - மெதுவான, ஆனால், நிச்சயம் பயனுள்ள எக்சர்சைஸ். உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது. ரெகுலராக வாக்கிங் செல்வதால் தினமும் நன்றாக இருப்பதை உணர்வீர்கள்.

* நல்ல, பழைய - புதிய நகைச்சுவை வீடியோக்கள், திரைப்படங்களை வீட்டில் போட்டு பார்த்து, குடும்பம் முழுவதும் நிறைய சிரித்து மகிழுங்கள்.

* வீட்டில் பர்னிச்சர், பொருட்களை இடம் மாற்றி வையுங்கள்; அந்த மாதிரி வீட்டை மாற்றி அமைப்பதே ஒரு நல்ல ஹாலிடே தான்!
* நல்ல, மகிழ்ச்சியான விஷயத்தை விரும்பி, காத்திருந்து அனுபவியுங்கள். விடுமுறையில் ஒரு சுற்றுலாப் பயணம்; வெளியே சென்று சாப்பிடுவது போல!

* உங்கள் வீட்டுக்கு, டின்னருக்கு நண்பர்களை கூப்பிடுங்கள். சாப்பிடும் அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்யுங்கள். விசேஷ மெனு தயாரித்து, அதற்காக பொருட்கள் வாங்குவதும், டின்னரை தயாரிப்பதுமே மகிழ்ச்சியான, "சுமை.' வருபவர்
களும் மகிழ்ந்து பாராட்டுவர். அன்று இரவு எல்லாருக்கும் மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

* சிரியுங்கள். சிரிப்பு ஒரு தொற்று வியாதி! அனைவருக்கும் பிடிக்கும்.
* யாராவது ஒருவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குங்கள். சமயம் கிடைக்கும்போது ஏதாவது நல்ல, தர்ம காரியத்திற்கு உங்கள் நேரத்தை செலவழியுங்கள். குழாயில் தண்ணீர் வரவில்லை, குழந்தையை ஸ்கூலுக்கு அழைத்துப் போக ஆட்டோக்காரன் வரவில்லை, பணிப்பெண் வரவில்லை, பஸ் கிடைக்கவில்லை என்று வாழ்க்கையில் பல கஷ்டங்கள்; இவற்றையெல்லாம் மீறி மகிழ்ச்சியாக இருப்போம்!

ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி ???

மணக்கால் அய்யம்பேட்டை | 12:09 PM | Best Blogger Tips
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி ???

”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான்.

ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார்.

இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட சுவாமி சுகபோதானந்தா அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள்.

“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெட்டை (சி.டி, டி.வி.டி எல்லாம் வர ஆரம்பிக்காத காலகட்டம் அது) தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார்.

ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ...முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.

“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்தா.

அவருடைய அழகிய வார்த்தைகளில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”

இது அறிவுபூர்வமாக எல்லோருக்கும் புரியக் கூடிய நல்ல விஷயம். ஆனால் மனம் அறிவின் படியா நடக்கிறது? எதை நினைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றியே அல்லவா மனம் பிடிவாதமாக நினைக்கிறது. இந்த காயங்கள் ஒவ்வொரு முறை நினைக்கும் போது புதிய காயம் போலல்லவா வலிக்கிறது. இந்த காயங்களை ஆற வைப்பதெப்படி? மறப்பதெப்படி?

இது சாத்தியமாக வேண்டுமானால் இரண்டு மாபெரும் உண்மைகளை நினைவில் இருத்த வேண்டும்.

ஒன்று எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டனைகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே. அது சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரம் இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ’இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை’. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடை போடுவது சரியானதாக இருக்காது.

எனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தர் பல அப்பாவி ஏழை ஊழியர்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேரவிருந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியவர். அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உண்டு. அவர் அப்படி ஏமாற்றியவர் என்றாலும் அவருடைய செல்வச் செழிப்பில் ஒரு குறையும் கடைசி வரை இருக்கவில்லை. அவர் கடைசியாக விற்ற சொத்து ஒன்று எதிர்பாராத நல்ல விலைக்குப் போய் அவர் இலாபத்தை பல மடங்கு ஈட்டித் தந்தது. இதையெல்லாம் பார்க்கையில் ’ஏமாற்றிய ஆள் நன்றாகத் தானே இருக்கிறார். அவருக்குப் பணம் சேர்ந்து கொண்டே தானே இருக்கிறது’ என்று யாருக்குமே தோன்றுவது இயற்கை.

ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு. அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவறிழைத்தவர் தண்டனை பெறாமல் தப்புவதில்லை என்றறிந்து தெளியும் போது காயத்தின் தீவிரம் குறையும்.

இரண்டாவது உண்மை நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் எதுவுமே காரணம் இல்லாமல் வருவதில்லை. அவை நாம் நம் முந்தைய செயல்களால் சம்பாதித்தவையாக இருக்கலாம், நம்முடைய குறைபாடுகளால் நாம் வரவழைத்தவையாக இருக்கலாம், அல்லது நாம் புடம் போட்ட தங்கமாக மாறத் தேவையான அனுபவங்களாக இருக்கலாம். இதை ஒத்துக் கொள்ள நமக்கு சிறிது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது மாபெரும் உண்மை.
இதற்கு நாமே காரணம், அல்லது நம் பக்குவத்தினை அதிகப்படுத்த கிடைத்த பாடம் இது என்று உணரும் போது ஒரு அனுபவத்தின் கசப்புத் தன்மை குறைகிறது. தெளிதலும், மறந்து முன்னேறுவதும் சாத்தியமாகிறது.

இந்த உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு சுவாமி சுகபோதானந்தா சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள். நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மைக் காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே இதெல்லாம் புரியும் போது அது வரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.

கறுப்பாக இருக்கிறோம் என்ற கவலையா???

மணக்கால் அய்யம்பேட்டை | 12:08 PM | Best Blogger Tips
கறுப்பாக இருக்கிறோம் என்ற கவலையா???

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே.

இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.

அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

* பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.

* கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும்.

மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும். மேற்கூரியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக பொலிவோடு இருக்கும்.

* 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும்.

* சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.

கல்லீரல் பழுதடைந்துள்ளதென்பதை அறிய சில அறிகுறிகள் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:05 PM | Best Blogger Tips
கல்லீரல் பழுதடைந்துள்ளதென்பதை அறிய சில அறிகுறிகள் !!

உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம்.
ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம். இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும். இப்போது கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதைப் பார்ப்போமா!!

வாய் துர்நாற்றம்

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

கருவளையம்

கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

செரிமானப் பிரச்சனை

கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

வெளுத்த சருமம்

கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.

அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

மஞ்சள் நிற கண்கள்

கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.

வாய் கசப்பு

கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்

வயிறு வீக்கம்

கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்

தெரிந்து கொள்வோமே....

மணக்கால் அய்யம்பேட்டை | 12:04 PM | Best Blogger Tips
தெரிந்து கொள்வோமே....

ஞாபக சக்தி பெருக - பப்பாளிப் பழத்தை தினசரி சிறிய அளவு சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்.

உடல் பருக்க - பச்சை நிலக்கடலையும் நூறு கடலையும் வாழைப்பழம் ஒன்றும் ஒரு கப் பாலும் தினசரி சாப்பிட்டு வர உடல் விரைவில் பருக்கும்.

உடல் பருமன் குறைய - கரட் தினசரி சமையலில் சேர்த்துக்கொள்வதுடன் இரண்டு கப் மோருடன் இரண்டு கரட்டையும் போட்டு மைய அரைத்துக் குடித்து ஒரு வர வாரத்தில் இருந்து உடல் மெலிய ஆரம்பித்து விடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவரை நிறுத்திவிட வேண்டும்.
முகம் அழகு பெற - துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் படுத்து காலையில் எழுந்து கழுவினால் முகம் அழகு பெறும்.

வாய் துர்நாற்றம் நீங்க - வாய் நாற்றம் உள்ளவர்கள் தினசரி காலை வெறும் வயிற்றில் 4 கப் நீரைக் குடித்துவிட்டு எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து சிறிது தண்ணீர் சேர்த்து வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும்.

தேள் கடி விஷம் குறைய - தேள் கொட்டிவிட்டால் அந்தக் கடிவாயில் வெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி ஒரு பகுதியை கொட்டிய இடத்தை சுற்றி நன்கு அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியை தேய்க்க வேண்டும். சிறிது நேரத்தில் வலி நிற்கும்.

நாவறட்சி நீங்க - நாவறட்சி உள்ளவர்கள் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்த நீரில் ஒரு மஞ்சளைப் போட்டு சிறிது நேரம் மஞ்சள் வெந்ததும் அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன் சிறிது சேர்த்துக் குடிக்க நாவறட்சி நீங்கும்.

கம்பளிப் பூச்சி கடி குணமாக - கம்பளிப்பூச்சி கடித்துவிட்டால் வெற்றிலையை கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் அழுத்தித் தேய்த்தால் சிறிது நேரத்தில் குணம் கிடைக்கும்.

உதடுகள் சிவப்பாக மாற - புதிதாகச் செடியில் பறித்த கொத்துமல்லி இலையை மைய அரைத்து இரவு படுக்கப்போகும் போது உதட்டில் தடவி வர, உதடு சிவப்பாக மாறும்.

முகப்பருவை போக்க - வீட்டில் உள்ள சீரகத்தை எருமைப்பால் விட்டு மைய அரைத்து முகப்பருவின் மீது தடவ முகப்பரு மறையும்.

உள்நாக்கு வளர்ச்சி நிற்க - காரிசலாங்கண்ணி கீரைச் சாறும் பசுவின் நெய்யும் சம அளவு கலந்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி காலை, மாலை உட்கொண்டால் 20 நாட்களில் பலன் கிடைக்கும். மிகக் குளிர்ச்சியான உணவு வகைகளை நீக்கவும்.

உங்கள் உறவு முறியும் நிலையில் உள்ளதா ...?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:04 PM | Best Blogger Tips
உங்கள் உறவு முறியும் நிலையில் உள்ளதா ...?

தொடக்கம் என்று இருந்தால் நிச்சயம் முடிவு என்றும் ஒன்று கூடவே இருக்கும். அதுபோலத்தான் பிரிவும். அது வரும்போது எதிர்கொள்ளத் தயாராகிக் கொள்வதுதான் எல்லோருக்கும் நல்லது.

ஒவ்வொரு உறவும் ஒரு கட்டத்தில் உராய்வுகளையும், உரசல்களையும், சந்திக்க நேரிடுகிறது. இதுபோன்ற நிலையில் பல உறவுகள் முறியும் நிலைக்குப் போய் விடுகின்றன.

பிரிவோம் என்ற வார்த்தையைச் சொல்லவே பலருக்கு கிலியாக இருக்கும். பிரிந்து விடுவோம், ஒருவரை ஒருவர் மறந்து விடுவோம் என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதை பதைத்துப் போய் விடுகிறது. இனிமேல் நமக்குள் எதுவும் இல்லை என்பதைச் சொல்ல பலருக்கும் தைரியம் வருவதில்லை. ஆனால் இனியும் உறவைத் தொடர முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படும்போது என்னதான் செய்வது...?

பிரிவு கஷ்டம்தான்... மன முறிவு பெரும் துயரம்தான்... ஆனால் எடுத்தாக வேண்டும் என்று வரும்போது அதைச் சமாளிப்பது எப்படி...?

பிரிய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், அதை எளிதாக ஏற்றுக் கொள்ள முதலில் உங்களது மனதைப் பழக்கப்படுத்திக கொள்ளுங்கள். இன்று எல்லாவற்றுக்குமே முதலில் மனசுதான் காரணமாக அமைகிறது. மனசைக் கட்டுக்குள் கொண்டு வந்து உங்கள் சொல்படி கேட்க வைப்பது நிச்சயம் பெரும் சவாலான காரியம்தான்.

நெஞ்சம் பதறத்தான் செய்யும், மனசெல்லாம் வலிக்கும், எங்காவது போய் விடலாமா என்று கூடத் தோன்றும்... ஆனால் எங்கு போவீர்கள், என்ன தான் செய்ய முடியும் உங்களால்... முயன்றுதான் பார்க்க வேண்டும், முடிவு என்று வந்து விட்டால்.

டெனிஸ் நோல்ஸ் என்ற மன நல ஆலோசகர் இப்படிக் கூறுகிறார்... உறவு முறிவு என்பது மிகவும் வேதனையான விஷயம். பலரால் அதை ஜீரணிக்கவே முடியாது. ஆனால் உங்களது மனதை நீங்கள் எப்படித் தட்டிக் கொடுத்து உங்களது கட்டுக்குள் கொண்டு வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அந்தப் பிரிவை தாங்கும் சக்தி உங்களுக்கு கைகூடும்...

பிரிய வேண்டிய நிலை வரும்போது, பிரிவுக்கான சூழல்கள் உங்களை நோக்கி பாயும்போது அதைத் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். மனதை கட்டுப்படுத்துங்கள், கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள். இப்படிச் செய்வதன் மூலம் மனதை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கிறார் நோல்ஸ்.

உறவுகள் எப்போதுமே பசுமையானவை... கண்களுக்குக் குளிர்ச்சி தரும் பச்சைப் புல்வெளி போல மனசுக்குள் ஒரு சுகானுபவத்தைக் கொடுக்கக் கூடியவை. அதிலும் உடல் ரீதியானதாக இல்லாமல், மனதைத் தொட்ட உண்மையான காதலுக்கும், உறவுகளுக்கும் என்றுமே மரணம் கிடையாது.

உன் உடல் வேண்டாம், உன் காதல் போதும், உன் அன்பு போதும், உன் பாசம் போதும் என்று நினைத்திருக்கும் மனங்களுக்கு பிரிவுகள் பெரும் பிரளயமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே எந்தச் சூழ்நிலையில், எந்த நிலையில் உறவுகள் பிரிந்தாலும், முறிந்தாலும், மனசுக்குள் அந்த உறவுகளின் நினைவுகள் ரீங்காரமிட்டபடிதான் இருக்கும்...நீங்கள் பிரிந்து போனாலும், உங்களை உங்களது உறவுகள் வேண்டாம் என்று தட்டி விட்டாலும். அந்த நினைவுகளுடன் நீங்கள் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்து விட முடியும்... !

அறிவை விட உயர்ந்தது எது ???

மணக்கால் அய்யம்பேட்டை | 12:02 PM | Best Blogger Tips
அறிவை விட உயர்ந்தது எது ???

அதுவேண்டும் இதுவேண்டும் என்று அனைவரும் ஆலாய்ப் பறக்கிறார்கள். மனதில் ஏதாவது ஆசை இருந்து கொண்டே இருக்கும் வரை அமைதி வருவதில்லை.

* வாழ்க்கைத் தரம் என்பது பொருளாதாரம் சார்ந்ததில்லை. மனநிறைவும், நிம்மதியும் நிறைந்திருப்பதே உயர்ந்த வாழ்க்கை.

* கோடீஸ்வரனாக இருப்பவன் கூட ஏதாவது மனக்குறையுடன் அலைந்து கொண்டிருக்கிறான் என்பதை ஏழைகள் உணர மறுக்கிறார்கள்.

* எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதுவாக நாம் ஆகிறோம் என்று மனோதத்துவம் மனதின் வலிமையை எடுத்துக் கூறுகிறது.

* அழகு, கருணை, சக்தி, ஞானம் போன்ற கடவுளின் குணங்களை எப்போதும் மனதில் சிந்தித்து வந்தால் நாமும் நல்லவர்களாகி விடுவோம்.

* அறிவை விட ஒழுக்கம் ஒருவனுக்கு அவசியம். ஒழுக்கம் இல்லாத அறிவு தீமைக்கு வழிவகுக்கும்.

* குழந்தைப் பருவத்திலேயே ஒழுக்கத்தின் உயர்வை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.....