மோடியின் உண்ணாவிரதத்தினால் உயர்ந்த சர்தார் சரோவர் அணை

மணக்கால் அய்யம்பேட்டை | 3:54 PM | Best Blogger Tips
Image result for சர்தார் சரோவர் அணை
இன்று மோடியின் பிறந்தநாள்.இந்த நாளில் சுமார்
25
வருடங்களுக்கு மேலாக 16,000 கோடி ரூபாய் செல வில் கட்டப்பட்டு வந்த சர்தார்சரோவர் அணை யை இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.இதன் மூலம் உலகிலேயே இரண்டாவது பெரிய அணை மோடியால் கட்டப்பட்டது என்று நீர் மேலாண்மை வரலாற்றில் மோடியின் பெயர் நிலைத்து நிற்கும்.
சமீபத்தில் நான் வேலை பார்க்கும் இடத்தில் மேனே ஜர் ஒருவர்குஜராத்தில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி மீண்டும் மதுரைக்கே வந்து இருந்தார்.வழக்கம் போ நலம் விசாரணைகள் முடிந்த பிறகு மோடியை பற்றி நான் கேட்க பதிலுக்கு அவர் சொன்னது என்னை பிரமிக்க வைத்தது..
.
Image result for சர்தார் சரோவர் அணை
அவர் குஜராத்தில் உள்ள வத்நகர் அலுவலகத்தில் இருந்து மதுரைக்கு மாற்றலாகி வந்திருந்தார்.
அவரிடம் பேசிய பொழுது அவர் சொன்ன வார்த்தை கள் குஜராத்தில் ரோடுகள்,மின்சாரம் தண்ணீர் இந்த மூன்றும் சூப்பர் என்றார்.அதோடு அங்கே ஆபிசில் போர்வாட்டர் கிடையாதாம். ஜெனரேட்டர் கிடையா தாம்.அந்தளவுக்கு தண்ணீர் கார்ப்பரேசன் குழாய்க ளில் வந்துவிடுமாம்.பவர் கட் என்கிற பேச்சே இல் லா ததால் ஜெனரேட்டர் தேவையே கிடையாதாம்..
ஆபிசுக்கே போர் ஜெனரேட்டர் கிடையாது என்றால்
வீடுகளுக்கு சொல்லவா வேண்டும்.
Image result for சர்தார் சரோவர் அணை
அந்தளவிற்கு 24 மணிநேரமும் குஜராத்தில் தண்ணீர்
மின்சாரம் செய்து கொடுத்த மோடியை இன்றும் குஜ
ராத் மக்கள் இங்குள்ள தமிழ்ஹீரோக்களை விட மேன்மையாக கொண்டாடுகிறார்கள் என்றார் இப்ப டி குஜராத் மக்கள் மோடியின் புகழ் பாடி நிற்க முக்கி காரணம் நர்மதா அணையில் கட்ட ப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை தான்.
இன்றளவில் நம் நாட்டில் 4300 அணைகள் கட்டப் பட்டு ள்ளன.இதில் இருந்து உலகளவில் இந்தியா வின் பெய ரை சொல்லிக்கொண்டு இருப்பது மோடி யால் விரிவுபடு த்தப்பட்ட சர்தார் சரோவர் அணைதா ன்.ஆம்உலகின் இரண்டாவது கான்கிரீட் மூலம் கட்டப்பட்டபெரிய அணை என்கிற பெருமை இந்த அணைக்கே உள்ளது.
இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஆறு நர்மதா. இந்தி யா வுக்குள்ளேயே உற்பத்தியாகும் ஆறுகளில், கிருஷ்ணா, கோதாவரிக்கு அடுத்து மூன்றாவது பெரியது. மத்திய பிரதேசத்தில் உற்பத்தியானாலும், குஜராத் வழியாகத் தான் பெருமளவு ஓடுகிறது. நர்மதா நதியின் முகத்து வாரத்திலிருந்து சுமார் 1163 கிலோமீட்டர் தொலைவில் குஜராத்தில் உள்ளது. நாவகம் .இங்கு தான் கான்கிரீட் மூலம் கட்டபட்ட உலகின்இரண்டாவது பெரிய அணைஉள்ளது
..
முதலாவது அணை அமெரிக்காவில் கொலம்பியா நதியில் கட்டபட்ட கிராண்ட் கூலே அணையாகும்.
பொதுவாக அணைகள்இரண்டு வகையில் உள்ளது
ஒன்று ஆர்ச் அணை இன்னொன்று கிராவிட்டி ணை.ஆர்ச் அணை என்றால் வளைவாக கட்டப்ப டுவது. கிராவிட்டி அணைகள் நேராக கட்டப்பட்டு இருக்கும்.உலகில்உள்ள பெரிய அணைகள் எல்லாம் கிராவிட்டி அணைகள் தான்.நம்ம முல்லை பெரியார் அணையும் கிராவிட்டி அணைதான்.நம்ம கரிகால் சோழன் கட்டிய கல்ல ணை ஆர்ச் அணைகளில் ஒன்று.
Image result for சர்தார் சரோவர் அணை
சரி நாம் இந்த சர்தார்சரோவர் அணைக்கு வருவோ ம்.இந்த சர்தார் சரோவர் அணைக்கு என்ன விசேஷம் என்றால் கான்கிரீட் தொழில் நுட்பத்தின்மூலமாக கட்டபட்ட உலகில் உள்ள இரண்டாவது பெரிய ணை தான் சர்தார் சரோவர் அணை.சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு மேல் 163 அடி உயரத்திற்கு கான்கிரீட் கலவை களால் கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையின் கட்டுமானத்தில் ஒரு தமிழனி ன் அறிவும் அடங்கியுள்ளது.
உலகமே போற்றும் இந்த கான்கிரீட் தொழில்நுட்பத் தில் நம்முடைய தமிழ்நாட்டின் பங்கும் இருக்கிறது
என்று எத்தனை பேருக்கு தெரியும்?பேராசிரியர் ராம கிருஸ்ணன் தெரியுமா? கோயம்புத்தூரில் பீளமேட்டி ல் பிறந்து அமெரிக்காவில் ஐக்கியமானவர். லாவா இருக்கிறதல்லவா..
அதாங்க எரிமலை குழம்பு.அதுபாறையாக மாறியது ம் அதை உருக்கி அதில் இருந்து கொஞ்சூண்டு எடுத்து கான்கிரீட்டோடு சேர்த்து கட்டினால் பில்டிங்
படு ஸ்டிராங்காக இருக்குமாம்..இது இவரோட கண்டுபிடிப்பு..மவுலிவாக்கம் பில்டர்ஸ்க்கு இது
தெரியாமல் போனது ஆச்சரியம் தான்..எதுவாக
இருந்தாலும் கான்கிரீட் தொழில்நுட்பத்தில் நம்மு டை மாநிலத்தில் பிறந்த ஒருவரின் அறிவும் இணைந்துள்ளது நமக்கு சந்தோசம் தானே..
வாழ்த்துக்கள் ராமகிருஸ்ணன் சார்..
Image result for சர்தார் சரோவர் அணை
சர்தார் சரோவர் அணைக்கு நேரு 1961 ம் ஆண்டு அடிக்கல் நாட்டினாலும் இந்த அணையின் கட்டு மான பணிகள் குஜராத் மாநிலத்திற்கும் மத்திய பிரதேசத்து க்கும் இடையில் ஏற்பட்ட ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களை முடித்து 1979ம் ஆண்டு தான் கட்டுமானப் பணியே ஆரம்பமானது.
1979ம் வருடத்திலேயே துவங்கப்பட்ட இந்த சர்தார் சரோவர் அணை மோடி தன்னுடைய காலத்தில் திட்ட மதிப்பீட்டில் இருந்து 163 மீட்டர் அதிகப்படி யான உயரத்திற்கு பல எதிர்ப்புகளுக்கிடையே கட்டி முடித்தார். இதனால் தான் இந்த அணை இன்று உல கில் இரண்டா வது பெரிய அணையாக போற்றப்படு கிறது
Image result for சர்தார் சரோவர் அணை
இந்த அணையின் உயரத்தை அதிகரிக்கக்கூடாது என்று மேதாபட்கர் அருந்ததி ராய் போன்ற முட்டாள் கூட்டம் மக்களை பய முறுத்தி போராட வைத்தாலு ம் தன்னுடைய உண்ணாவிரதத்தினால் அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து தான் நினைத்ததை சாதித்தார் மோடி.
அரை மணி நேரம் மவுண்ட் ரோடில் உண்ணாவிரதம் இருந்ததற்க்கே அலப்பறை கொடுக்கும் திராவிட தலைவர்களிடையே 51 மணி நேரம் தொடர் உண் ணாவிரதம் இருந்து மேதாபட்கர் போன்ற கோமாளி களை களத்தில் இருந்து துரத்திவிட்டு கட்டப்பட்ட இந்த சர்தார் சரோவர் அணை தன்னுடைய வரலா ற்றில் மோடியின் பெயரை என்றும் சொல்லிக்கொ ண்டே இருக்கும்.
சர்தார் சரோவர் அணையில் நீர் தேக்கும் உயரத்தை உயர்த்த மோடிஎடுத்த முயற்சிகள் தான் இன்று ஒட்டு மொத்த குஜராத் தையும் வாழ வைத்துக்கொ ண் டு இருக்கிறது. ஏனென் றால் மோடி முதல்வராக பதவி ஏற்கும் முன் அணை யின் உயரம் 90 மீட்டர் தான் இருந்தது.ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தன்னுடைய தொடர் முயற்சிகளால் இன்று 138 மீட்டர் உயரத்திற்கு அணையில் நீரை தேக்கி வைத் து விட்டார்.
இந்த அணையில் இருந்து தான் உலகிலேயே நீள மான கான்கிரீட் கால்வாயான நர்மதா கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,நர்மதா கால்வாய்
திட்டத்தை செயல்படுத்தி பக்கத்து மாநிலமான ராஜஸ்தானுக்கும் தண்ணீர் கொண்டு சென்றுள்ளார் என்றால் அணையின் உயரத்தை அதிகரிக்க வேண் டும் என்று அவர் போராடிய அவசியத்தினை புரிந்து கொள்ளவேண்டும்.
சுமார் 70 மீட்டர் அகலத்தில் 7 மீட்டர் ஆழத்தில் 535 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு மெயின் கால்வாயை வெட்டி அதில் இருந்து 75,000 கிலோமீட்டர் தூரத்து க்கு துணைகால்வாய்கள் வழியே தண்ணீர் கொண்டு செல்ல தண்ணீர்எங்கிருந்து வரும்,அதனால் தான் அணையில் நீர் தேக்கும் அளவை உயரத்த மோடி போராடி வெற்றிக்கண்டார். இப்பொழுது 4.73 மில்லி யன் கியூபிக் மீட்டர்தண்ணீர் இந்த அணையில் சேமிக்கப்பட்டுள்ளது.
இதனால் 18 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இந்த அணை யில் இருந்து வெளியேறும் நீரினால் பயன் பெறுகிறதுஎன்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.சுமார் மூன்று கோடி மக்களுக்கு அதாவது குஜராத்தில் 9633 கிராமங்கள்; மற்றும்131 நகர ங்கள் ராஜஸ்தானில் 1336 கிராமங்கள், 3 நகரங்கள்குடிநீர் வசதி பெறுகின் றன
Image result for சர்தார் சரோவர் அணை
.
நர்மதா கால்வாய் மூலம் குஜராத்தில் சுமார் 5 லட்ச ம் ஹெக்டேர் நிலங்கள்:உள்ள 15 மாவட்டங்கள்; 73 தாலு காக்கள்; 3,112 கிராமங்கள் . விவசாய வசதி பெற்றுள்ள து இது தவிர ராஜஸ்தானின் பார்மர் மற்றும் ஜல்லூர் மாவட் டங்களில் உள்ள 7.2 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் விரிவாகியுள்ளது.
அதோடு இந்த அணையில் இரு நீர் மின்நிலையங்க ள் அமைக்கப்பட்டு 150.மெகாவாட்மின்சாரம் உரு வா க் கப்பட்டு குஜராத் மகாராஸ்டிரா மத்திய பிரதே சம் மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது. இப்படி நர்மதா நதியின் திசையையே மாற்றி சர்தார் சரோவர் அணையில் தேக்கி வைத்து அதை குஜராத் முழுவதும் கொண்டு சென்று சோழநாடு சோறுடைத் து என்பது போல குஜராத்தை பருத்தியுடைத்து என் று மாற்றிய பெருமை மோடியையே சாரும்.
சோழ நாடு என்றவுடன் குலோத்துங்க சோழனின்
முடிசூட்டும் விழாவில் அவ்வையார் பாடிய வரப்பு
உயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்.நெல் உயர குடி உயரும்.குடி உயர கோன் உயர்வான் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
மோடி கட்டிய சர்தார் சரோவர் அணையினால் குஜ ராத்தில் விவசாய நிலங்களில் உள்ள வரப்புகளின் கரைகள் உயர்ந்ததால் அங்கு நீர் மட்டம் உயர்ந்த து.நீர் மட்டம் உயர்ந்ததால் பருத்தி கோதுமை நெல் பயிரி டும்விவசாயம் வளர்ந்தது. விவசாயம் பெருகி யதால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது.
இதனால்குடி உயர கோன்உயர்வான் என்ற அவ்வை யாரின் கூற்றை குஜராத் நிரூபித்தது.குஜராத் மக்க ளின் வா ழ்வு முன்னேறியதால் அந்த மக்களை ஆண்ட மோடி இன்று அந்த மாநிலத்தை உள்ளடக் கிய 29 மாநில ங்களையும் 7 யூனியன் பிரதேசங்க ளை யும் கொண்ட பாரத நாட்டை ஆளும் பிரதமராக உயர்ந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த சர்தார் சரோவர் அணை தான்.
நன்றி ; Vijiyakumar Arunagiri