மைசூர் மசாலா தோசை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:46 PM | Best Blogger Tips
பெரும்பாலானோருக்கு தோசை மிகவும் பிடித்தமான ஒரு உணவாகும். இத்தகைய தோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலும் மசாலா தோசையைத் தான் அநேக மக்கள் விரும்புவர். அத்தகையவர்களுக்காக, மசாலா தோசையில் ஒன்றான மைசூர் மசாலா தோசையை எப்படி செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம். 
 
இந்த மசாலா தோசையை செய்வது என்பது மிகவும் எளிது மற்றும் சுவையானதும் கூட. சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு...

உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மிளகாய் சட்னிக்கு...

சிவப்பு மிளகாய் - 4-5
வறுத்த கடலைப் பருப்பு - 1/2 கப்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
பூண்டு - 2 பற்கள்
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் அரிசி மற்றும் பருப்புக்களை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனைக் கழுவி, நன்கு மென்மையாக அரைத்துக் கொண்டு, 6-8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் மிளகாய் சட்னிக்கு கொடுத்த அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு, நன்கு பேஸ்ட் போல் அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* 6-8 மணிநேரம் ஆனப் பின்பு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் போட்டு நன்கு பிரட்டி, உப்பு சேர்த்து கிளறி, அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைத்துக் கொள்ளவும்.

* அடுத்து, ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் மாவை ஊற்றி தோசைப் போன்று சுற்றி, 1 நிமிடம் கழித்து, ஒரு ஸ்பூன் மிளகாய் சட்னியை அதன் மேல் பரப்பி, நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மெதுவாக, தோசையின் ஒரு பக்கமாக மடித்து, தட்டில் எடுத்து வைத்து பரிமாற வேண்டும். இதேப் போன்று வேண்டிய அளவில் தோசைகளைச் சுட்டுக் கொள்ளலாம்.

* இப்போது மைசூர் தோசை ரெடி!!! இதனை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Thanks & Copy from Thatstamil.com

சிக்கன் ஜல்ப்ரேசி ரெசிபி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:10 PM | Best Blogger Tips
என்ன பேரை கேட்டாலே ஒன்னும் புரியவில்லையா? சிக்கன் ஜல்ப்ரேசி ஒரு பாகிஸ்தான் ரெசிபி. இந்த ரெசிபி சாதத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும். எனவே எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பை செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிகளை விடுமுறை நாட்களிலோ அல்லது பண்டிகையின் போதோ செய்து சாப்பிடலாம். 
 
இந்த சிக்கன் ஜல்ப்ரேசியை செய்தால், சற்று ஸ்பெஷலான உணவாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியின் செய்முறை மிகவும் எளிமையானது. இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

 சிக்கன் ஜல்ப்ரேசி ரெசிபி
தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - 1/2 கிலோ 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 
டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
குடைமிளகாய் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 2 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது) 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
 
செய்முறை: 
 
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட், 
 
மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 
 
 பின்பு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, 
 
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5-7 நிமிடம் வதக்கி விட வேண்டும். 
 
பிறகு பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் கிளறி, தக்காளி மற்றும் உப்பு போட்டு, தக்காளி நன்கு வேகு வரை வதக்க வேண்டும். 
 
அடுத்து கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் ஜல்ப்ரேசி ரெடி!!! 
 
இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து சிறிது நேரம் மூடி வைத்து, பின் சாதத்துடன் பரிமாறினால் நன்றாக இருக்கும்.

Via Thatstamil.Com
 

இறால் சில்லி வறுவல் Read more

மணக்கால் அய்யம்பேட்டை | 11:59 AM | Best Blogger Tips
கடல் உணவுப் பிரியர்களுக்கு நிச்சயம் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய இறாலை இதுவரை கிரேவி, குழம்பு என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த இறலை கொண்டு அருமையான முறையில் ஒரு சில்லி வறுவல் செய்யலாம். மேலும் இந்த இறால் சில்லி வறுவலுடன் தேங்காயை துருவி சேர்த்திருப்பதால், அதன் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.

எனவே விடுமுறை நாட்களில் இறால் வாங்கினால், அப்போது இந்த இறால் சில்லி வறுவலை முயற்சி செய்து பாருங்கள். இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
 இறால் சில்லி வறுவல்
தேவையான பொருட்கள்:

இறால் - 200 கிராம்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, நன்கு ஒரு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு கழுவி வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் இறாலை வேக வைக்க வேண்டும்.
அடுத்து மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள தேங்காய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் அனைத்து பொருட்களும் நன்கு வேகுமாறு 5-6 நிமிடம் வதக்கி இறக்கினால், சூப்பரான இறால் சில்லி வறுவல் ரெடி!!!

Via Thatstamil.com

துணிக‌ளை அல‌சும் போதும் காய‌ப்போடும் போதும்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:45 AM | Best Blogger Tips
துணிக‌ளை அல‌சும் போதும் காய‌ப்போடும் போதும்..!

லைனிங் வைத்து தைத்து உள்ள‌ துணிகளை துவைத்து காயப்போடும் போது உள்பக்கமாக அதாவது லைனிங் பக்கமாக காயபோடவேண்டும்.மேல் பக்கம் காய போட்டால் உள்ளே உள்ள லைனிங் துணி சுருங்கி நிற்கும். அயர்ன் செய்யும் போது ரொம்ப சிரமமாக இருக்கும்.

புதுசா டிரெஸ் எடுத்தால் எல்லா துணிகளோடும் போட கூடாது சில சமயம் டார்க் கலர் டிரெஸ் சாயம் போகும், தனியாக ஊறவைத்து துவைப்பது நல்லது.

சில‌ பேர் நிறைய‌ சோப் போட்டு பிரெஷ் போடுவார்க‌ள் ஆனால் ச‌ரியா அல‌சமாட்டார்க‌ள். சோப்பை ந‌ன்கு குமிக்கி பிழிந்து விட்டு பிற‌கு வெண்ணீரில் அல‌சினால் கூட‌ சீக்கிற‌ம் சோப் நுரை விடும். முன்று த‌ண்ணீரில் ந‌ல்ல‌ அல‌ச‌னும். அதில் சிறிது சோப் இருந்தால் கூட‌ அல‌ர்ஜி ம‌ற்றும் அரிப்பு வ‌ரும்.

பிசு பிசுப்பான துணிகளை துவைக்கும் போது சிறிது வெண்ணீரில் சோப் பொடி போட்டு ஊறவைத்து பிறகு துவைக்கலாம்.

டூர் செல்லும் போது ஹேங்க‌ரும், கிளிப்ஸும் எடுத்து சென்றால் துணிக‌ளை காய‌ப்போடுவ‌து சுல‌ப‌ம்.

வாசிங் மிசின் இல்லாமல் பெட் சீட் போன்ற கடினமான துணிகளை துவைக்கும் போது சோப்பில் அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு கீழே போட்டு கையால் குமிக்கி துவைப்பதற்கு பதில் நல்ல இரண்டு காலால் ஒரு ஐந்து நிமிடம் மிதிக்கலாம்.அது காலுக்கு ஒரு உட‌ற்ப‌யிற்சியும் ஆச்சு.இதே போல் மிதிய‌டிக‌ளையும் அல‌ச‌லாம்.

டெய்ல‌ரிட‌ம் லைனிங் துணி வைத்து காட்ட‌ன் டிரெஸ்க‌ளை தைக்கும் போது அதை அல‌சி அய‌ர்ன் செய்து கொடுக்க‌வும், இல்லை என்றால் ஒரு முறை போட்டு துவைத்த‌தும், க‌ருவாடு போல் சுருங்கிவிடும். அதுவும் விலை உய‌ர்ந்த‌ துணியாக‌ இருந்தால் இன்னும் உங்க‌ளுக்கு ம‌ன‌சே ஆறாது.

காட்ட‌ன் புட‌வை க‌ட்டுப‌வ‌ர்க‌ள் அத‌ற்கு பால்ஸ் வைத்து தைத்து க‌ட்டினால் புட‌வை தூக்கி கொள்ளாம‌ல் இருக்கும்.

நிறைய‌ க‌ர்சீப் துவைத்து காய‌போடும் போது ஒவ்வொன்றிற்கா கிளிப் குத்த‌ தேவையில்லை. எல்லாத்தையும் ஒன்றோடு ஒன்று மூலைக‌ளை சேர்த்து முடிச்சி போட்டு காய‌ போட‌லாம்.
லைனிங் வைத்து தைத்து உள்ள‌ துணிகளை துவைத்து காயப்போடும் போது உள்பக்கமாக அதாவது லைனிங் பக்கமாக காயபோடவேண்டும்.மேல் பக்கம் காய போட்டால் உள்ளே உள்ள லைனிங் துணி சுருங்கி நிற்கும். அயர்ன் செய்யும் போது ரொம்ப சிரமமாக இருக்கும்.

புதுசா டிரெஸ் எடுத்தால் எல்லா துணிகளோடும் போட கூடாது சில சமயம் டார்க் கலர் டிரெஸ் சாயம் போகும், தனியாக ஊறவைத்து துவைப்பது நல்லது.

சில‌ பேர் நிறைய‌ சோப் போட்டு பிரெஷ் போடுவார்க‌ள் ஆனால் ச‌ரியா அல‌சமாட்டார்க‌ள். சோப்பை ந‌ன்கு குமிக்கி பிழிந்து விட்டு பிற‌கு வெண்ணீரில் அல‌சினால் கூட‌ சீக்கிற‌ம் சோப் நுரை விடும். முன்று த‌ண்ணீரில் ந‌ல்ல‌ அல‌ச‌னும். அதில் சிறிது சோப் இருந்தால் கூட‌ அல‌ர்ஜி ம‌ற்றும் அரிப்பு வ‌ரும்.

பிசு பிசுப்பான துணிகளை துவைக்கும் போது சிறிது வெண்ணீரில் சோப் பொடி போட்டு ஊறவைத்து பிறகு துவைக்கலாம்.

டூர் செல்லும் போது ஹேங்க‌ரும், கிளிப்ஸும் எடுத்து சென்றால் துணிக‌ளை காய‌ப்போடுவ‌து சுல‌ப‌ம்.

வாசிங் மிசின் இல்லாமல் பெட் சீட் போன்ற கடினமான துணிகளை துவைக்கும் போது சோப்பில் அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு கீழே போட்டு கையால் குமிக்கி துவைப்பதற்கு பதில் நல்ல இரண்டு காலால் ஒரு ஐந்து நிமிடம் மிதிக்கலாம்.அது காலுக்கு ஒரு உட‌ற்ப‌யிற்சியும் ஆச்சு.இதே போல் மிதிய‌டிக‌ளையும் அல‌ச‌லாம்.

டெய்ல‌ரிட‌ம் லைனிங் துணி வைத்து காட்ட‌ன் டிரெஸ்க‌ளை தைக்கும் போது அதை அல‌சி அய‌ர்ன் செய்து கொடுக்க‌வும், இல்லை என்றால் ஒரு முறை போட்டு துவைத்த‌தும், க‌ருவாடு போல் சுருங்கிவிடும். அதுவும் விலை உய‌ர்ந்த‌ துணியாக‌ இருந்தால் இன்னும் உங்க‌ளுக்கு ம‌ன‌சே ஆறாது.

காட்ட‌ன் புட‌வை க‌ட்டுப‌வ‌ர்க‌ள் அத‌ற்கு பால்ஸ் வைத்து தைத்து க‌ட்டினால் புட‌வை தூக்கி கொள்ளாம‌ல் இருக்கும்.

நிறைய‌ க‌ர்சீப் துவைத்து காய‌போடும் போது ஒவ்வொன்றிற்கா கிளிப் குத்த‌ தேவையில்லை. எல்லாத்தையும் ஒன்றோடு ஒன்று மூலைக‌ளை சேர்த்து முடிச்சி போட்டு காய‌ போட‌லாம்.

தமிழகத்தில் ஓடும் ஆறுகளும் அதன் மாவட்டங்களும் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:00 AM | Best Blogger Tips

 
Via FB சர்வம் சிவமயம்

உறையூர் முதுகண்ணன் - இன்றைய விஞ்ஞான உலகம் ...

மணக்கால் அய்யம்பேட்டை | 10:57 AM | Best Blogger Tips
சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

"எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதான்!
Via FB தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture