அனைவரும் சமம் .....

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:20 | Best Blogger Tips

 May be an image of 2 people and text that says "மக்கள் தலைவர், வரலாற்று நாயகன், பெருந்தலைவர் கு.காமராஜர்.."

 

அனைவரும் சமம்
 
மதிய உணவுத்திட்டம் 
 
அமல்படுத்தியபின் கலெக்டர்கள் மீட்டிங்கைக் கூட்டினார் முதல்வர் காமராஜர்,
 
இப்போ எல்லா பசங்களும் பள்ளிக்கூடத்துக்கு வர்றாங்களா?" 
 
என்று கேட்க, அதற்கு கலெக்டர்கள் "எல்லாரும் வரலை, ஓரளவுக்கு வர்றாங்க. 
 
காரணம் என்னன்னா, பணக்கார வீட்டுப்பசங்க பளபளன்னு சட்டை போட்டுக்கிட்டு வர்றாங்க. 
 
இவனுங்களோ கோவணாண்டிகள். அவங்களோடு உட்கார கூச்சப்படுறாங்க" என்று சொன்னதும் தலைவர் யோசித்தார்.
 
"சரி, இனிமேல் எல்லாரும் ஒரேமாதிரி யூனிபார்ம் போட்டுக்கிட்டு வரணும்னு சட்டம் போட்டுறேன். 
 
வசதியுள்ளவர்கள் அவர்களே வாங்கிக்கட்டும். 
ஏழை மாணவர்களின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய காமராஜரின் கல்வித் திட்டங்கள்!
 
ஏழைகளுக்கு அரசாங்க சார்பில் இலவச சீருடை வழங்குவோம்" என்று சொன்னதோடு சட்டமும் பிறப்பித்தார்.
 
இலவச சீருடை அணிந்து பள்ளிக்கு சென்ற ஏழை மாணவனுக்கு அங்கே ஆச்சரியம். நேற்று வரை தங்க ஜரிகை சட்டை போட்டு வந்த பஸ் கம்பெனி முதலாளி மகனும் தன்னைப் போலவே சீருடை அணிந்திருப்பதைப் பார்க்கிறான்.
 மற்றும் ஒரு காமராஜர் - தமிழகத்தின் கல்வி குருவான காமராஜரின் பிறந்த நாள்  ஜுலை 15 தமிழகம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு ...
அவனுடைய தாழ்வு மனப்பான்மை துடைத்தெரியப் படுகிறது.
 
துடைத்தெரிந்தவர் பெருந்தலைவர் காமராஜர்...🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹