ஆட்கொல்லி நோயாக உருவெடுக்கும் நுரையீரல் நோய்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:13 PM | Best Blogger Tips
ஆட்கொல்லி நோயாக உருவெடுக்கும் நுரையீரல் நோய்கள்

2020ஆம் ஆண்டுவாக்கில் நுரையீரல் தொடர்பான நோய்கள் உயிர்பறிக்கும் நோய்களாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அதாவது மும்பை நகரில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களில் பாதிப்பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 10 கோடி மக்கள் நுரையீரல் வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருநகரங்களில் வாகனப்புகையை சுவாசிக்கும் பெருமபகுதி மக்களுக்கு பல்வேறு விதமான மூச்சுக்குழல் நோய்கள் உருவாகி வருவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

குறிப்பாக சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்துத் துறை காவலர்களில் பெரும்பாலானோருக்கு நுரையீடல் நோய் இருப்பது தற்போது மும்பையில் தெரியவந்துள்ளது.

மும்பை செவென் ஹில்ஸ் மருத்துவமனையில் சுமார் 115 போக்குவரத்துக் காவலர்களுக்கு இலவச நுரையீரல் சோதனை நடத்தப்பட்டதில் 45% காவலர்களுக்கு நுரையீரல் பலவீனமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

20 சதவீதத்கினருக்கு ஆரம்ப நிலை நுரையீரல் பாதிப்புகள் உள்ளன. மும்பையின் அதிக வாகனப்புகை கக்கும் ஒரு பகுதியில் போக்குவரத்துக் காவலராக பணியாற்றி வரும் சுரேஷ் பாட்டீல் என்ற காவலர் வாகனப்புகையினால் தனது முடி கொட்டிப்போனதையும், சரும நோய்கள் ஏற்பட்டிருப்பதையும் தெரிவித்துள்ளார்.

மற்றொரு போக்குவரத்துக் காவலரான சுஹாஸ் பாட்டீல் தனது நிறம் கரிய நிறமானதோடு இரவில் மூச்சு விடுவதில் கடும் சிரமங்கள் தோன்றியிருப்பதாகவும் கூறுகிறார்.

நுரையீரல் பாதிப்பு பற்றிய அறிகுறிகள் தாமதமாகவே தெரியவருகிறது. உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டால் சிகிச்சை சாத்தியம் என்று இந்த மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காவலர்கள் மட்டுமல்ல பெருநகரங்களில் நாள் முழுதும் சாலையில் சுற்றும் நபர்களும், சாலையோரங்களில் கடை கண்ணிகள் நடத்துவோரும் இன்னும் பலரும் தங்களது நுரையீரலின் நிலைமை குறித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று இந்த மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளனர்

பிரசவத்திற்கு பின்பு...

மணக்கால் அய்யம்பேட்டை | 5:58 PM | Best Blogger Tips
பிரசவத்திற்கு பின்பு...

*ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய காலகட்டம் தாய்மைப் பருவம். குழந்தை பெற்ற பிறகு, அது சுகப் பிரசவமானால் 1 மாதமும், சிசேரியன் என்றால் 3 மாதங்களும் ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்த, பெண், முழுமையாக மனதளவிலும், உடலளவிலும் பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தது 18 மாதங்கள் அவசியம் என்கிறது லேட்டஸ்ட் மருத்துவக் குறிப்பு.

*சிசிசேரியன் என்றாலும் சுகப்பரசவம் என்றாலும் சரி அதிக கணம் கொண்ட பொருட்களை தூக்குவது கூடாது.ஏனென்யால் அது உடல் நிலை பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும்.குழந்தைக்கு முதலில் தாய் பால் தான் தரவேண்டும்.தாய்பாலைவிட சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை. பிறந்த குழந்தையை தாயின் உடலோடு இணைத்து அந்த சூட்டில் குழந்தையை படுக்க வேண்டும்

*குழந்தை பெற்ற உடன் அனேகப் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளவு சரேலெனக் குறைகிறது. உடல் எடை தாறுமாறாக மாறுகிறது. சருமம் பொலிவிழக்கிறது. அவர்களது ஒட்டுமொத்த தோற்றமுமே மாறிப் போகிறது. 18 மாதங்களுக்குப் பிறகே எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்புமாம். அதுவரை பொறுமை அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வாழும் வழிகள் 30 THIRTY TIPS + அமுத மொழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:35 PM | Best Blogger Tips
1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2.
காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3.
இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4.
உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5.
தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. 2009
விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.

7.
ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8.
குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9.
குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11.
எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12.
உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13.
மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14.
நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15.
அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16.
கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17.
வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18.
எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19.
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20.
முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21.
வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22.
மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70
வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24.
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25.
உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26.
உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27.
ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28.
உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29.
உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30.
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:33 PM | Best Blogger Tips
கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?

தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.

எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.

சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது.

கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய்.

குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:31 PM | Best Blogger Tips
Photo: இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்

இன்சுலின் என்பது கணையத்தில் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த இன்சுலினானது குறைய ஆரம்பித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடும். ஆகவே உடலில் நீரிழிவு நோயானது தாக்காமல் இருக்க வேண்டுமெனில், இன்சுலினின் அளவை சீராக பராமரிக்க வேண்டும்.

பொதுவாக இது எளிதான காரியம் அல்ல. இது மிகவும் கடினமானது. ஆனால் சரியான வாழ்க்கை முறை, உணவுகள் போன்றவற்றை மேற்கொண்டு வந்தால், நிச்சயம் இன்சுலினை சீராக வைத்துக் கொள்ளலாம். அதிலும் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் சர்க்கரையின் அளவும், கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவாக இருக்க வேண்டும். இவ்வாறு கவனமாக இல்லாவிட்டால், நீரிழிவு நோயானது முற்றிவிடும்.

சரி, இப்போது அந்த இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சில செயல்களைப் பார்ப்போம்.

சரியான எடை

உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், இன்சுலின் உற்பத்தியில் குறைபாடு ஏற்படும். எனவே உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். அதற்கு சரியான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

சுறுசுறுப்பான நடை

போதிய உடற்பயிற்சியானது இல்லாவிட்டாலும், இன்சுலின் குறைபாடு ஏற்படும். எனவே, தினமும் 30 நிமிடம் சுறுசுறுப்பான நடையை மேற்கொண்டால், இன்சுலினானது சரியாக சுரக்கப்பட்டு, உடல் முழுவதும் சீராக செல்லும்.

பூசணிக்காய்

பூசணிக்காய் இனிப்பான உணவுப் பொருளாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. மேலும் பூசணிக்காயில் உள்ள ஒருசில நொதிகள் இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ளும்

ஸ்டார்ச் உணவுகளை தவிர்க்கவும்

ஏற்கனவே நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள், ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக சாதத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த தினை, கம்பு போன்ற உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

 கொழுப்பு நிறைந்த ஈரல்

தற்போதுள்ள இளம் தலைமுறையினர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கொழுப்பு நிறைந்த கல்லீரல் பிரச்சனை. இந்த பிரச்சனையில் கொழுப்புக்களானது கல்லீரலில் அதிகம் தங்கி, கிளைகோஜன் பயன்படுத்தப்படாமல் அதிகப்படியாக சேகரிக்கப்பட்டிருக்கும். இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. எனவே கல்லீரலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதோடு, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் குறையும். எனவே ப்ராக்கோலி, பசலைக்கீரை போன்ற உணவுகளை அதிகம் சேர்ப்பது நல்லது.

குறைந்த கிளைசீமிக் உள்ள உணவுகள்

உண்ணும் உணவுகளில் சர்க்கரையின் அளவு மட்டும் குறைவாக இருந்தால் போதாது. அதில் உள்ள கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவாக இருக்க வேண்டும்.

பட்டை

பட்டையை உணவில் அதிகம் சேர்த்தால், இன்சுலின் குறைபாட்டை போக்கி, நீரிழிவு நோயை தடுக்கலாம். அதற்கு தினமும் காலையில் காபி குடிக்கும் போது, அதில் சர்க்கரைக்கு பதிலாக சிறிது பட்டையை பொடி செய்து போட்டு குடிப்பது மிகவும் நல்லது.
 
குரோமியம் குறைபாடு

உடலில் குரோமியம் என்னும் கனிமச்சத்து குறைவாக இருந்தாலும், இன்சுலின் சுரப்பில் தடை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே குரோமியம் அதிகம் உள்ள உணவான கடல் சிப்பியை அதிகம் உட்கொள்வது சிறந்தது.

வைட்டமின் கே உணவுகள்

எளிதில் கரையக்கூடிய கொழுப்பு தான் வைட்டமின் கே. இந்த வைட்டமின் கே உள்ள உணவுப் பொருட்களையோ அல்லது மருந்துகளையோ சாப்பிட்டால், இன்சுலின் குறைபாட்டை தவிர்க்கலாம். அதிலும், பச்சை இலை காய்கறிகளான பசலைக்கீரை, வெந்தயக் கீரை போன்றவற்றில் வைட்டமின் கே அதிகம் உள்ளது.
வெண்டைக்காய்

இரவில் படுக்கும் போது வெண்டைக்காயை நீரில் நறுக்கி போட்டு, காலையில் எழுந்து அந்த நீரைப் பருகினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவதோடு, இன்சுலின் குறைபாடும் நீங்கும்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு
 
கொள்ளு சாலட்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:30 PM | Best Blogger Tips
Photo: கொள்ளு சாலட்

தேவையான பொருட்கள்.... 

கொள்ளு - 1 கப் 
வெங்காயம் - 1 
ப.மிளகாய் - 1 
கேரட் - 1 
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி தழை - சிறிதளவு 

செய்முறை.... 

• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 

• கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

• கொள்ளுவை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். 

• ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கொள்ளு, வெங்காயம், ப.மிளகாய், துருவிய கேரட், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலக்கவும். 

• கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும். 

• சத்தான இந்த கொள்ளு சாலட் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது

கேழ்வரகு - நட்ஸ் இட்லி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:26 PM | Best Blogger Tips
Photo: கேழ்வரகு - நட்ஸ் இட்லி

தேவையான பொருட்கள்: 

கேழ்வரகு மாவு - 1 கப் 
பாதாம் பருப்பு - 15 
காய்ந்த திராட்சை - சிறிதளவு
முந்திரி - சிறிதளவு 
அக்ரூட் - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

• ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு போட்டு அதில் பாதாம் பருப்பு, காய்ந்த திராட்சை,முந்திரி, அக்ரூட் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். 

• இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இந்த மாவை ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். 

* இப்போது சுவையான, சத்தான கேழ்வரகு - நட்ஸ் இட்லி ரெடி. 

• டயட்டில் இருப்பவர்கள் இவ்வாறு கேழ்வரகு - நட்ஸ் இட்லியை செய்து சாப்பிடலாம்