மன்மத குளம்:

மணக்கால் அய்யம்பேட்டை | 3:11 PM | Best Blogger Tips
மன்மத குளம்:

நம் அரசர்கள் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று இருந்தனர் என்பது நம் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால் நன்கு புலப்படும். அதேபோன்று நம் கோவிலின் சிற்பங்கள் வாயிலாக பல அறிய தகவல்களையும் நாம் பெற முடியும். அவற்றில் ஒன்று கலவியல் கலை, ஆம் தற்போது உள்ள காலக்கட்டத்தில் காமம் பற்றி பேசுவது மகா பாவமாக சித்தரிக்கபடுகிறது, ஆனால் நம் முன்னோர்கள் காமமும் நம் வாழ்கையின் முக்கிய அம்சம் என்பதை நன்

கு உணர்ந்து இருந்தனர். ஆகையால் அதை கலையாக போற்றி காமசாஸ்திரத்தை கண்டு பிடித்தவ
ர்கள். அந்த கலையை சிற்பத்திலும் ஏடுகளிலும் ஏற்றி தன் சங்கதியர்க்கு விட்டு சென்று உள்ளனர்.

அவற்றில் ஒன்று தான் இந்த சின்னையன் குளம், திருவண்ணாமலை அருகில் உள்ள சின்னியம்பேட்டை என்ற ஊரில் அமைந்து உள்ளது இந்த குளம். இதன் சிறப்பம்சம் என்னவெனில் இது வெறும் குளம் அல்ல, மன்மத குளம் என்றும் கூறலாம். இந்த குளத்தின் ஒவ்வொரு படிக்கட்டிலும் பல நிர்வான சிலைகள் வெவ்வேறுவிதமான கலவியலில் இடுப்படுவது போன்று நிறுவபட்டுள்ளது. இதை 16-17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சின்னையன் என்ற குறுநில மன்னன் தன் மகளின் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட துன்பத்தை போக்கி அவள் மீண்டும் தன் கணவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ கட்டப்பட்டதாக கூறப்படுகிறது . இதை போன்று மற்றும் ஒரு குளம் "Kilravandavadi" என்ற இடத்தில் உள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அதே போன்று இந்த குளங்கள் நாயகர் காலக்கட்டத்தில் கட்டப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆகையால் அடுத்த முறை திருவண்ணாமலை செல்பவர்கள் தவறாமல் இந்த மன்மத குளத்தையும் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்...


நன்றி: தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நக்கீரன்(புகைப்பட உதவி)

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:04 PM | Best Blogger Tips


மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

நன்றி: சித்தாந்தம்

முத்துகள் உருவாவது பற்றிய தகவல்.

மணக்கால் அய்யம்பேட்டை | 2:57 PM | Best Blogger Tips
முத்துகள் உருவாவது பற்றிய தகவல்.
+++++++++++++++++++++++++++++++++++
இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.

கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும்.
அதைத் தெரிந்துகொண்ட சீனர் கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.

ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.

பஞ்சபூதத் சிவஸ்தலங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:48 PM | Best Blogger Tips
பஞ்சபூதத் சிவஸ்தலங்கள்
***************************************************
1) திருவாரூர் அல்லது காஞ்சிபுரம் பிருதிவி தலம்
2) திருவானைக்கா அப்புத்தலம்
3) திருவண்ணாமலை தேயுத்தலம்
4) காளத்தி வாயுத்தலம்
5) சிதம்பரம் ஆகாயத் தலம்

பஞ்ச சபைத் சிவஸ்தலங்கள்
***************************************************
1) திருவாலங்காடு ரத்தினசபை
2) சிதம்பரம் கனகசபை
3) மதுரை இரஜிதசபை
4) திருநெல்வேலி தாமிரசபை
5) திருக்குற்றாலம் சித்திரசபை

பஞ்ச காட்டுத் சிவஸ்தலங்கள்
**************************************************
1) திருவெண்பாக்கம் இலந்தைக்காடு
2) திருப்பாசூர் மூங்கிற்காடு
3) திருவாலங்காடு ஆலங்காடு
4) திருவெவ்வூர் ஈக்காடு
5) திருவிற்கோலம் தர்ப்பைக்காடு.
ஏழு விடங்கத் சிவஸ்தலங்கள்.
ஏழு விடங்கத் சிவஸ்தலங்கள்.
உளியால் செதுக்கப்படாமல், சுயம்புவாகச் சிவபெருமான் விளங்கும் தலங்கள். இத்தலங்களில் உள்ள உற்சவ மூர்த்திகளில் சோமாஸ்கந்தமூர்த்தி விசேஷம்.
***************************************************
1) திருவாரூர்: வீதி விடங்கர்- அசபா நடனம்
2) திருநள்ளாறு: நகவிடங்கர்- உன்மத்த நடனம்
3) நாகைக்காரோணம்: சுந்தர விடங்கர்- பாராகார நடனம்
4) திருக்காறாயில்: ஆதிவிடங்கர்- குக்குட நடனம்
5) திருகோளிலி: அவனிவிடங்கர்- பிருங்க நடனம்
6) திருவாய்மூர்: நீலவிடங்கர்- கமல நடனம்
7) திருமறைக்காடு: புவனி விடங்கர்- அசம்பாத நடனம்
மூன்று காயாரோகணத் சிவஸ்தலங்கள்
***************************************************
1) காஞ்சி
2) குடந்தை
3) நாகப்பட்டினம்

மூன்று மயான சிவஸ்தலங்கள்
***************************************************
1) காஞ்சி,
2) திருக்கடவூர்,
3) திருநாவலூர்.
 
 

குடை: எப்படி வந்தேன் தெரியுமா ?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:47 PM | Best Blogger Tips
குடை: எப்படி வந்தேன் தெரியுமா ?

- இரா.நடராசன்

வணக்கம் நண்பர்களே... நான்தான் குடை பேசுறேன். மழை பெய்யும்போது கவனமாக எடுத்து பையில் வெச்சுக்கிட்டு, அப்புறம் எங்கேயாவது வெச்சுட்டு மறந்துறீங்களே... அந்தக் குடைதான். நான் எப்படி எல்லாம் உருவாகி உருமாறி வருகிறேன்னு தெரிஞ்சா, இப்படி அலட்சியமாகத் தொலைக்க மாட்டீங்க.

ஆரம்பக் காலத்தில் என்னை பருத்தி, பட்டு, கம்பளினு பலவகையான துணிகளால் செய்தாங்க. அப்புறம், எனக்காகவே என்று வந்த குடைத் துணியான, 'குளோரியா' அறிமுகம் ஆச்சு. பிறகு, ரேயான் வகைத் துணி மேற்புறமும், உட்புறம் அசடேட் பளபளப்பு ஏற்றியும்... மேற்கூரை செய்தாங்க. நைலான் துணியும் அக்ரிலிக் எனப்படும் லேசான மெழுகுக் கோட்டிங்கும்கூட கொடுப்பது உண்டு. சமீப காலமாக நானோ தொழில்நுட்பம் வழியே நுண் ஃபைபர் முறையில் தண்ணீரை உறிஞ்சாத புதிய வகைத் தயாரிப்பு முறை வந்து இருக்கு.

முதலில் என்னுடைய பாகங்களைப் பார்க்கலாம். மேற்கூரை (கனோபி என்பார்கள்), ஷாஃப்ட் மற்றும் ரிப் எனப்படும் 'ஹி' வடிவ அமைப்பு. அடுத்து, ஸ்ட்ரெட்சர், ரன்னர் மற்றும் கைப்பிடி. இவை உலோகம், பிளாஸ்டிக், ஃபைபர், மரம் என வகைக்கு ஏற்ற பொருட்களால் ஆனதாக இருக்கும்.

இனி, நான் தயாராகும் தொழிற்சாலைக்குள் நுழைவோம்... ஒன்றிரண்டு பாகங்கள் இயந்திரங்களால் தயாராகும். அவை, ரிப் அமைப்பின் கம்பிகள், பிரதான மையக் குழாய்க்கு ஷாஃப்ட் என்று பெயர். இவை, தனித்தனிப் பிரிவுகளில் தயாராகி வருகின்றன.

முதலில் கூரைப் பகுதி தயாராகும் இடம். தலையில் ஒரே ஒரு பிட் வைத்து நான் உருவாவது இல்லை. என் அளவுக்கு ஏற்ப, 6 கம்பிகள், 8 கம்பிகள், சில சமயம் பெரிய கல்யாணக் குடையாக நான் உருவாகும்போது... 10 கம்பிகள், அந்தக் கால ஆசிரியர்கள் கையில் இருந்தபோது... 12 கம்பிகள் எனத் தரத்திற்கு ஏற்ப நான் உருவாகிறேன். எத்தனை கம்பிகளோ... அத்தனை துண்டுகளாகத் துணியை இயந்திரம் வெட்டித் தள்ளுகிறது. இது கட்டிங் செக்ஷன்.

அங்கே இருந்து பார்த்தால், கம்பி பற்றவைக்கும் பட்டறை தெரியும். பயங்கர இரைச்சல் வருகிறது அல்லவா? அங்கேதான் எனது 'எலும்புக்கூடு' தயாராகிறது. மேல் பட்டன் மற்றும் இணைப்பு ரிப் கம்பிகளுடனான பிரதான அமைப்பு. ஷாஃப்ட், அதில் மேலும் கீழும் திறந்து மூடும் ரன்னர் எனப்படும் சின்ன பிளாஸ்டிக் குழலை இணைக்கிறார்கள்.

பிறகு, கட்டிங் செக்ஷனில் இருந்து எலும்புக்கூடாக வருபவன், மேல்தோல் போல் துணி தைக்கப்படும் இடம் அசெம்பிள் செக்ஷன். மேல் பட்டனை அமைப்பதுதான் பெரிய சவால். ஒழுகாமல் இருப்பதற்காக பல வகை மெழுகு, பசைகளைப் பயன்படுத்துகிறார்கள். பட்டனை அழுத்தினால், தானாகவே திறக்கும் குடைகளில்... இரண்டு ரன்னர் குழல்கள் இருக்கும். அப்புறம், கைப்பிடி. உங்கள் கைக்குத் தோதாகப் பிடித்துக்கொண்டால், வலிக்காத விதமாய் வழவழப்பாக உருவாக்குகிறார்கள். அந்தக் காலத்தில் குடையை விரிக்காத சமயங்களில் கைத்தடியாக ஊன்றி நடந்ததால்... கைப்பிடி, தாத்தாவின் தடி போலவே வளைந்து இருந்தது. இப்போது எல்லாம் இரு சக்கர வாகனத்தின் ஹேண்ட் பார் கைப்பிடி போல என்னைச் செய்கிறார்கள். பெரிய குடையை வைத்து ஸ்டால்கள் பார்த்திருக்கிறாயா? விதவிதமான வண்ணத்தில் இருக்குமே... அதற்கு 'ப்ராசல்' என்று பெயர். அவற்றைப் பெரும்பாலும் சாதாரணமான துணியில் மரத்தாலான ரிப்களால் செய்கிறார்கள். அது மழைக்கு உதவாது.

இப்படியாக உருவாகி, உங்கள் கைகளில் பல வண்ணங்களில் அழகாக ஜொலிக்கிறேன். மழை, வெயில் இரண்டில் இருந்துமே காப்பாற்றும் என்னைத் தொலைக்காமல் பத்திரமாக வெச்சுக்கிட்டு அம்மாகிட்டேயும் நல்ல பெயர் வாங்குங்க!

- சுட்டி விகடன்

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

அன்னாபிஷேகம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:40 PM | Best Blogger Tips
ஐப்பசி மாதப் பௌர்ணமியில் [வரும் ஞாயிறு 28/10/2012] நிகழ்கின்ற அன்னாபிஷேகம் சிவபெருமான் சிறப்பாகச் செய்யப்படுவது.*** www.fb.com/thirumarai

சிவன் பரம்பொருள். சிவனது பிரதிபிம்பம் எல்லா உயிர்களிலும் பதிந்துள்ளது. அபிஷேக அன்னப் போர்வையால் சிவலிங்கத் திருமேனியில் அகமும் புறமும் குளிரும்போது, உயிர்களும் பேர் அருட் கவசத்தால் குளிரும்.


சிவன் அபிஷேகப் பிரியன். அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை.அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்பு.

அன்னம், அபிஷேக நிலையில் ஆண்டவனை முழுவதும் தழுவி, சிவனைத் தன்னுள் அகப்படுத்தி, சிவனிடம் அடைக்கலமாகிறது. இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும், அவற்றின் உள்ளிருந்து இயக்கும் ஆண்டவனே பரம்பொருள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன. இதன் உண்மை நிலையை உணர்த்துவதே அன்ன அபிஷேகம்.

அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களின் உயிர்நாடி. உலக வாழ்க்கைக்கு அச்சாணி. அன்னமே பிரத்யட்சமான பிரம்ம சொரூபம்; விஷ்ணு சொரூபம்; சிவ சொரூபம். ஆகையால், அது மிக உயர்வானது. நம் வாழ்வின் இயக்கத்துக்கு ஜீவாதாரமாக இருப்பது அன்னம்.

பட்டினி இருந்து, மகாபிஷேகம் செய்து, அதன்பின் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த பிரசாதத்தை உண்ணும்போது பக்தி, புண்ணியப் பலன்கள் பக்தர்களைச் சேர்கின்றன.

சிவலிங்கத்திற்கு மட்டும் சுத்த அன்னத்தால் அபிஷேகம் செய்கின்றனர்.

அன்ன அபிஷேகத்தின்போது சிவலிங்கத் திருமேனி முழுவதும் அடங்கும்படியாக அன்னத்தை ஒரு வெள்ளைப் பட்டுப் போர்வையைப்போலச் சார்த்துகின்றனர்.

அப்போது கரிய சிவலிங்கத் திருமேனி, அன்னப் போர்வையால் தூய வெள்ளைத் திருமேனியாகக் காட்சியளிப்பது ஒரு அரிய சிறப்பான வேறுபட்ட தரிசனம்

அறுவடையாகும் புதுநெல்லைச் சிவனுக்கு முதலில் அர்ப்பணம் செய்வதைப்போல அன்ன அபிஷேகம் நடைபெறுகிறது.

ஐப்பசி மாதப் பௌர்ணமி அன்னாபிஷேக நாள்.

மூலிகை மருந்துகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:39 PM | Best Blogger Tips
மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

நன்றி: சித்தாந்தம்