மகாபலியை போற்றும் ஓணம் பண்டிகை:

மணக்கால் அய்யம்பேட்டை | 12:32 PM | Best Blogger Tips


 °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரகலாதனின் பேரன் மகாபலி:

*************

பிரகலாதனுடைய பேரனாகிய பலி என்ற அசு ரராஜன் ஆண்டு வந்த காலம் வாமன அவதார காலம் ஆகும். இந்திரனுடன் போர் செய்து பலி தோற்றான். மீண்டும் பலம் பெற்று எப்படியா வது தேவர்களை ஜெயிக்க வேண்டும் எனத் தனக்குள் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டான்.

 

பிருகு வம்சத்தில் தோன்றிய சுக்ராச்சாரியார் முதலிய அந்தணர்களை அணுகி ஆலோசனை செய்தான். அவர்கள் பலிச் சக்கரவர்த்தியிடம் விக்ரஜித் என்ற ஒரு பெரிய வேள்வியை நடத்தும்படி உபதேசம் செய்தார்கள்.

 

அவ்வாறு அவர் வேள்வி செய்யவே அதில் இருந்து ஓர் பொன் ரதம் வெளிவந்தது. அந்த ரதத்தில் கணக்கற்ற வில்லும், அம்பும், கவச மும் இருந்தன. அதில் சிங்கத்துவஜம் கட்டப் பட்டு இருந்தது. அச்சமயம் பலியினுடைய தாத்தாவாகிய பிரகலாதன் அவன் முன் தோன்றி அவனுக்கு என்றும் வாடாத தாமரை மலர் மாலையைக் கொடுத்தார்.

 

சுக்கிராச்சாரியார் ஒரு சங்கைக் கொடுத்தார். பலிச்சக்கரவர்த்தி வேள்விக்கு வந்திருந்த அந்தணர்களை வணங்கினான். சுக்கிராச்சாரி யாருடைய ஆசியையும் பெற்றான். இரதத்தில் ஏறினான். கவசத்தைத் தரித்துக் கொண்டான். ஒரு கையில் வில்லையும், மறுகையில் சங்கை யும் தாங்கிக் கொண்டான்

 

 அசுர சேனைகள் புடைசூழ நேரே தேவலோகம் சென்றான். அமரர் உலகத் தலைநகர் ஆன அமராவதியை முற்றுகையிட்டான். பலி எழுப் பிய யுத்த சன்னத்தமாகிய சங்கு ஒலி கேட்டதும் இந்திரனுக்கு அச்சம் ஏற்பட்டது.

 

உடனே குல பிரகஸ்பதியாகிய வியாழ பகவா னைப் போய்க் கலந்து ஆலோசித்தான். தேவே ந்திரன் பிரகஸ்பதியிடம், "குருபகவானே! பலி முன்பைவிட அதிக பராக்கிரமத்துடன் அசுர சேனைகளைத் திரட்டிக் கொண்டு நம்மை முற்றுகையிட்டிருக்கிறான். அவன் செய்த வேள்வியின் ஓமகுண்டத்திலிருந்து தோன்றி ரதத்தில் ஏறி வந்திருப்பதைப் பார்த்தால் நாம் அவனை ஜெயிக்க முடியாது என்று கருது கிறேன். ஆகவே, நான் தங்களிடம் அடைக்கல ம் தேடி தேவ சைன்யத்துடன் வந்திருக்கிறே ன்.இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? சரியான உபாயம் சொல்லுங்கள்..." என்றான்.

 

"தேவேந்திரனே! நீ பலிச் சக்கரவர்த்தியை இந்த நிலையில் மோதுவது என்பது உகந்தது அல்ல. அவன் பிருகு வம்சத்து மகரிஷியின் பரிபூரண ஆசியைப் பெற்று வந்திருக்கிறான். அளவிலாப் பராக்கிரமம் பெற்றிருக்கிறான். இப்போது நீ யுத்தம் செய்ய வேண்டாம். நீங்கள் எல்லோரும் சுவர்க்கத்தை விட்டுப் போய் விடுங்கள்..."

 

"அவனுக்கு எப்படியாவது சொர்க்கத்தை தான் கட்டி ஆள வேண்டும் என்ற ஆசை. அந்தக் குறிக்கோளை அவன் அடைவது உறுதி. இருந் தாலும் காலப்போக்கில் அவனே தன்னை அழித்துக்கொள்வான். எந்த மகரிஷிகளினால் அளப்பரிய பலத்தைப் பெற்றானோ அந்த மக ரிஷிகளுக்கு அர்ப்பணம் செய்து, அவர்களா லேயே அவன் அழிவைத் தேடிக் கொள்வான். கவலை வேண்டாம். நீயும், உன் ஆட்களும் ஸ்ரீமந்நாராயணனைத் தேடி சரண் அடையுங்க ள். அவர்தான் பலிக்கு அழிவைத் தரக்கூடிய வர்.." என்று பிரகஸ்பதி அறிவுரை செய்தார்.

 

குருதேவருடைய வார்த்தைகளைத் தட்டாமல் இந்திரன் தேவர்களுடன் தேவலோகத்தை விட்டு வெளியேறினான்.  பலி இதனால் தேவலோகத்தை எளிதில் கைப்பற்றினான். மூன்று உலகங்களையும் கட்டி ஆண்டான்.

 

அந்தணர்களும் மகரிஷிகளும் தத்தம் கர்மா வை குறைவின்றி நடத்திக் கொள்ளவும் பலி வழி செய்து கொடுத்தான். அதனால் ஜீவராசி களும் அவனைப் போற்றிப் புகழ்ந்தன. பிருகு வம்ச அந்தணர்கள் தங்கள் சீடனுக்கு வந்த இந்திர பதவியைப் பார்த்து மகிழ்ந்தனர்.

 

அவன் இந்தப் பதவியில் இருந்து நழுவாமல் இருக்கும்படியாக நூறு அசுவமேத யாகங்க ளைச் செய்யுமாறு அவனிடம் கூறினார்கள். பலியும் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கி னான். தேவர்கள் தட்சன் மகளாகிய அதிதி என்பவளுக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவர்கள்.

 

இதனால் தன் மக்களுக்கு ஏற்பட்ட எளிய, இழி நிலை வாழ்க்கையை எண்ணி அதிதி மிகவும் வருந்தினாள்.

 

இதைக் கண்ட கச்யபர், " அதிதி! உன் முகம் வாடி இருக்கிறதே நீ ஏதோ மனவருத்தம் அடை ந்ததாக நினைக்கிறேன். மேலும் உனக்குத் தெரியும், அந்தணர்களுக்கும் சாதுக்களுக்கும் எந்தவித துன்பமும் ஏற்பட நியாயம் இல்லை" என்றார்.

 

தேவர்களும் உமது புத்திரர்கள், அசுரர்களும் உமது புத்திரர்கள். இருவரும் உமக்கு சமமே. எனினும் எனக்குக் கண் கண்ட தெய்வமாகிய உங்களிடம் ஒன்றை வேண்டுகிறேன்.

 

தேவலோகத்தில் எனது புத்திரர்களான தேவ ர்கள் பதவி, சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து தவிக்கிறார்கள்.அவர்கள் மீண்டும் பழைய நிலையை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாகக் கூறுங்கள் என்றார்.

 

அதிதியின் வார்த்தைகளைக் கேட்டு சிரித்தார் கச்யபர். "பிரியே! உன் விருப்பம் நிறைவேற வேண்டுமானால்  நீ பரந்தாமனை தியானம் செய். அவர் உனக்கு வழியைத் தந்தருள்வார்."

 

"பரந்தாமனை அடையவேண்டுமானால் எத்த கைய விரதத்தை கடைபிடிக்க வேண்டும்." என அதிதி வினவினாள். பயோவ் விரதம் எனப்ப டும் விரதத்தை பங்குனி மாதம் சுக்லபட்சம் பிரதமை திதி வரும் நாளில் ஆரம்பித்து தொடர்ந்து

 

பன்னிரெண்டு நாள்கள் கடைபிடித்து ஸ்ரீஹரி நாராயணனை சந்தோஷப்படுத்துவாயாக என்றார் கச்யபர். அதிதியும் அதை மேற்கொ ண்டாள் விரதத்தை தவறாமல் கடைபிடித்தாள். கடைசி நாள் அன்று பகவான் சங்கு சக்ரதாரி யாக அவளுக்கு காட்சி கொடுத்தார்.

 

அப்போது அவள் மனம் மிக மகிழ்ந்தது. "தேவ மாதா! அதிதி தேவியே! உன் விரதத்தை கண்டு மகிழ்ந்தேன் எதனால் இந்த விரதத்தை அனுஷ்டித்தாய் என்பதை நான் அறிவேன். இப்போது உன் தேவகுமாரர்கள் பதவியிழந்து, கதியிழந்து நின்கின்றனர்..."

 

"அவர்களை மீண்டும் சொர்க்க லோக ஆட்சிக் கு ஆளாக்க வேண்டும். உன் புதல்வன் தேவே ந்திரன் மீண்டும் அமராவதி நகரில் ஆட்சி செய்ய வேண்டும் என நீ ஆசைப்படுகிறாய். ஆனால் தற்சமயம் அது இயலாது. அசுரர்கள் யாரும் வெல்ல முடியாதபடி பராக்கிரமம் பெற்றிருக்கிறார்கள்.."

 

"அவர்கள் நல்ல காலம், அந்தணர்கள் பராமரி ப்பில் ஆட்சி நடத்தி வருகிறார்கள். எனவே போர் செய்து பயன்பெற முடியாது. ஆயினும் நீ என்னை வழிபட்டதற்குரிய பலன் உனக்கு நிச்சயம் உண்டு. ஆகவே உன் விருப்பத்தை வேறொரு விதத்தில் நிறைவேற்றித் தருகிறேன்..."

 

"நானே உனக்குப் புத்திரனாகப் பிறக்கவே ண்டும் என்று மனத்திலே எண்ணி தியானம் செய். அதன்படியே பிறந்து தேவர்களை நான் காப்பாற்றுகிறேன். இது தேவரகசியம். எவரிட மும் வெளியிடாதே. உன் ஆசை நிறைவேறும்."

 

வரம் கொடுத்தது போல பரந்தாமனும் அவளு டைய கர்ப்பத்தை அடைந்தார். அதிதியும், கச்ய பரும் பல மகரிஷிகளை அழைத்து வரச்செய்து வைதீக கர்மாக்களைச் செய்து வாமனன் என் று பெயரிட்டனர். தேவர்களை காப்பது தனது கடமை என கருதிய மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தார்.

 

மண்ணுலகில் விஷ்ணுவின்  அவதாரமாக காஸ்யப முனிவர், திதி தம்பதிக்கு மகனாக அவதரித்திருந்தார். மகாபலி சக்கரவர்த்தி தன் வேள்வி நிறைவு செய்யும் விதமாக, மக்களு க்கு தான, தர்மங்கள் செய்ய தொடங்கினார்.. இதில் தான தர்மங்கள் செய்து முடிக்கும் போது வாமனன் அங்கு வந்தார்.

 

மூன்றடி மண்:

******

வாமனனைப் பார்த்ததும், மகாபலி "தாமதமாக வந்துவிட்டீர்க்ளே. இப்போது தான் தானம் கொடுப்பதை நிறைவு செய்தேன்.."  என்றார்.

 

"அதற்கு வாமனனோ, நானோ மூன்றடி உயரம் கொண்ட சிறுவன். நான் பெரிதாக எதையும் கேட்க மாட்டேன், என் உயரத்தைப் போலவே மூன்றடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும்.." என்றார்.

 

அப்போது அசுர குரு சுக்ராசாரியார், " இவர் விஷ்ணுவின் அவதாரமாக தோன்றுகிறது. அவருக்கு தானம் அளிப்பதற்கு முன் சற்று யோசியுங்கள்.." என்றார்.

 

ஆனால் மகாபலி சக்கரவர்த்தியோ, "மகாவி ஷ்ணுவே என்னிடம் தானம் பெற வந்துள்ளார் என்றால் எந்தளவி ற்கு, நான் சிறந்தவன். நான் தானம் கொடுத்தே தீருவேன்.."  என்றார்.

 

தானம் கொடுக்க கமண்டலத்திலிருந்து நீரை வார்க்க மகாபலி சக்கரவர்த்தி முயன்ற போது, நீர் வராத மாதிரி, வண்டு அவதாரம் எடுத்து சுக்ராச்சாரியர் கமண்டலத்தை அடைத்துக் கொண்டார்.அப்போது வாமனன் அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து கமண்டல நீர் வரும் குழாயை குத்தினார்.

 

 இதனால் சுக்ராச்சாரியரின் ஒரு கண் பறி போனது. அதன் பின் ஒரு அடியால் மண்ணு லகையும், மற்றொரு அடியால் விண்ணுலக த்தையும் அளந்தார் வாமனன். மூன்றாவது அடியை எங்கு வைப்பது என கேட்க, மகாபலி தன் தலை மீது வைக்குமாறு சொன்னார்.

 

மகாபலியின் தலையில் வாமனன் கால் வை த்ததும், மகாபலி பாதாளலோகம் சென்றார். அசுரராக இருந்தாலும், மக்களுக்கு நல்லனவ ற்றை செய்த மகாபலிக்கு என்ன வரம் வேண் டும் என கேட்டார்.  அதற்கு மகாபலி சக்கரவ ர்த்தி, "என் மக்களை நான் ஆண்டுக்கு ஒருமு றை வந்து பார்த்து, அவர்கள் எப்படி வாழ்கிறா ர்கள் என பார்த்து செல்ல விரும்புகிறேன்.." என கூறினார்.

 

அதற்கு அப்படியே ஆகட்டும். நீ உன் மக்களை வந்து பார்ப்பதை மக்கள் ஓணம்  பண்டிகையா கொண்டாடுவார்கள் என மகாவிஷ்ணு வரம் அளித்தார்.

 

யாகம் நிறைவேறியதும் பலி எல்லோருக்கும் அஞ்சலி செய்தான். அனைவரும் அவனைப் பாராட்டினார்கள். அடுத்து பிரகலாதனோடும் தன் உற்றார் உறவினரோடும் சுதல லோகத்தி ற்குப் பலி போனான்.

 ஓம் நமோ நாராயணாய...

சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்...

நன்றி இணையம்