பீட்ரூட் ஜூஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:56 AM | Best Blogger Tips
பீட்ரூட் ஜூஸ்
-------------------

* பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

* பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

* கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

* பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

* தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும்.

* புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

* பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

* புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

விண்டோஸ் இயக்கம் எதிர்பார்க்காமல் முடங்க காரணம் என்ன

மணக்கால் அய்யம்பேட்டை | 11:53 AM | Best Blogger Tips
விண்டோஸ் இயக்கம் எதிர்பார்க்காமல் முடங்க காரணம் என்ன??

விண்டோஸ் இயக்கம் நாம் எதிர்பாராத நேரங்களில், தொடர்ந்து இயங்க முடியாமல், முடங்கிப் போகும் வாய்ப்புகள் சில வேளைகளில் ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பொதுவாகக் குற்றம் சாட்ட முடியாது. வேறு பல காரணங்களாலும் இது ஏற்படலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.மெமரி மதர்போர்ட் பிரச்னை:

கம்ப்யூட்டர் முடங்கிப் போய், நீல வண்ணத்தில் திரை மாறுவதற்கான காரணங்களில், முதன்மையாக இருப்பது, மெமரி அல்லது மதர்போர்டில் ஏற்படும் பிரச்னைகளே. இதனை Fatal Exception Error என அழைக்கின்றனர். மெமரியில் ஸ்டோர் செய்யப்பட்ட டேட்டாவினை, மீண்டும் பெற முடியாத பிரச்னையே இது.

2.பயாஸ் செட்டிங்ஸ்:

பொதுவாக மதர்போர்டுகள் தயாரிக்கப்படும் இடத்திலேயே, அனைத்து வகை டிஜிட்டல் இயக்கத்திற்கும், இணைப்பிற்கும் தயாராக இருக்கும் வகையிலேயே வடிவமைக்கப் படுகின்றன. பெர்சனல் கம்ப்யூட்டரில் அவை இணைக்கப் படுகையில், கம்ப்யூட்டர் தயாரிப்பவரால், மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பின் தனிநபராகிய பயனாளரால், அவருக்கான பயாஸ் மெமரியில் இவை பதிவு செய்யப்பட்டு அமைக்கப்படுகின்றன. பயாஸ் மெமரியில் பதிவு செய்யப்பட்டவை, அதற்கு மின் சக்தி வழங்கும் சீமாஸ் பேட்டரியின் மூலம் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும். இந்த பேட்டரி தன் சக்தியை இழக்கும் போது, பயாஸ் தன் பழைய, பேக்டரி செட்டிங்ஸ் நிலைக்குத் திரும்புகிறது. அப்போது, கம்ப்யூட்டரை வடிவமைத்தவர் மற்றும் பயனாளர் அமைத்த செட்டிங்ஸ் இல்லாமல், கம்ப்யூட்டர் மதர்போர்டுக்கும், இணைக்கப் பட்டுள்ள சாதனங்களுக்கும் இடையே இயக்க பிரச்னை ஏற்படுகிறது. மேலும் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், முதலில் சிடி அல்லது யு.எஸ்.பி. ட்ரைவில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத் தேடி இயங்கட்டும் என செட்டிங்ஸ் அமைத்து, அவற்றில் சிஸ்டம் இல்லை என்றாலும், கம்ப்யூட்டர் பூட் செய்வதில் பிரச்னை ஏற்படும்.

3.விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி:

கம்ப்யூட்டர் இயக்கம் முழுமைக்குமான குறியீட்டு வரிகள் எழுதப்பட்டுள்ள தொகுப்பே விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி. இப்போது இயங்கும் கம்ப்யூட்டர்களில், ரெஜிஸ்ட்ரி தொகுப்பில் முன்பு போல பிரச்னை ஏற்படுவதில்லை. இருப்பினும், இதன் குறியீட்டு வரிகளில் சிக்கல் ஏற்பட்டால், விண்டோஸ் இயக்கம் தொடங்குவதிலும், தொடர்ந்து இயங்குவதிலும் பிரச்னை ஏற்படும். இவ்வாறு பிரச்னைகள் ஏற்பட்டால், சரி செய்வதற்கென பல சாப்ட்வேர் தொகுப்புகள் கிடைக்கின்றன. இவை Registry Fix Software என அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் சரியாக இயங்கவில்லை எனில், அதனைப் பாதுகாப்பான வழியான சேப் மோடில் (Safe Mode) இயக்கி, அதிலிருந்தே புரோகிராம்களை இயக்கிப் பார்க்கலாம்.

4.மாறிப் போன ட்ரைவர்கள்:

ஹார்ட்வேர் சாதனங்கள் எப்படி செயல்பட வேண்டும் என கட்டளை கொடுப்பவை ட்ரைவர் புரோகிராம்களாகும். அவை சரியாக இயங்கவில்லை என்றால், நிச்சயம் விண்டோஸ் இயக்கம் முடங்கிப் போகும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகையில், நமக்கு ஒரு எர்ரர் மெசேஜ் (Error Message) கிடைக்கும். இந்த பிழைச் செய்தியில் எங்கு பிரச்னை உள்ளது எனக் காட்டப்படும். இது புரியவில்லை என்றால், அதனை அப்படியே காப்பி செய்து, கூகுள் தேடல் தளத்தில் ஒட்டி தேடினால், அந்த பிரச்னை குறித்த விளக்கமும், அதனைத் தீர்க்க என்ன செய்திட வேண்டும் என்ற வழிகாட்டலும் கிடைக்கும். அதனைப் பின்பற்றலாம். பிரச்னை தொடர்ந்து ஏற்பட்டால், குறிப்பிட்ட ட்ரைவர் புரோகிராமினை, சிஸ்டத்திலிருந்து நீக்கி, மீண்டும் அதன் மேம்படுத்தப்பட்ட ட்ரைவர் புரோகிராமினைப் பதிவது சரியான தீர்வாகும்.

5. ஹார்ட் ட்ரைவ் தரும் பிரச்னை:

ஹார்ட் ட்ரைவ்களில் ஏற்படும் பழுதுகளால், விண்டோஸ் முடங்கிப் போவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். பயாஸ் புரோகிராம் சரியாக வடிவமைக்கப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டர், ஹார்ட் ட்ரைவில் பூட் செய்யக்கூடிய பகுதியைத் தேடி அறிய முடியவில்லை எனில், இதற்குக் காரணம் ஹார்ட் ட்ரைவாகத்தான் இருக்க முடியும். பொதுவாக, இவற்றில் பதிந்துள்ள பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கும் போதுதான், ஹார்ட் ட்ரைவில் பிரச்னை இருப்பது தெரியவரும். இலவசமாக ஹார்ட் ட்ரைவினை சோதித்து முடிவுகளைத் தரும் புரோகிராம்கள், இணையதளங்களில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி, சோதனை செய்து, கிடைக்கும் அறிக்கையில் தவறு உள்ளது என முடிவு கிடைத்தால், உங்கள் ஹார்ட் ட்ரைவ் தன் மரணத்தைச் சந்திக்க இருக்கிறது என்று பொருள். எப்படியாவது சரி செய்து, அதில் உள்ள டேட்டாவினை மீள எடுத்துவிட்டு, ட்ரைவினை அழித்துவிடுவதே நல்லது. அதற்கு முன், அந்த ட்ரைவினை இன்னொரு கம்ப்யூட்டரில் இணைத்து , இயக்கிப் பார்க்கலாம். அதில் சரியாக இயங்கினால், மீண்டும் சோதனை நடத்திப் பார்த்து முடிவெடுக்கலாம். ட்ரைவ் சரியாக உள்ளது என சோதனை முடிவுகள் தெரிவித்தால், பிரச்னை கம்ப்யூட்டரின் பிற பகுதிகளில் உள்ளதா எனத் தேடிப் பார்க்க வேண்டும்.

6.வைரஸ் அல்லது மால்வேர்:

ஒரு வைரஸ் அல்லது மால்வேர் எனப்படும் கம்ப்யூட்டர் இயக்கத்தினைக் கெடுக்கும் புரோகிராம்களும், கம்ப்யூட்டரை முடக்கிப் போடலாம். இவை ட்ரைவர் புரோகிராம்களைக் கெடுக்கலாம்; அல்லது நீக்கலாம். முக்கியமான சிஸ்டம் பைல்களை அழிக்கலாம்; அல்லது கம்ப்யூட்டர் இயக்கத்தினை நிர்வகிக்க நாம் அமைத்திருக்கும் செட்டிங்குகளை மாற்றலாம். இவை எல்லாமே நாம் எதிர்பாராத நேரத்தில், கம்ப்யூட்டரை முடக்கிப் போடலாம்.
வெளிப்படையாக ஓர் உண்மையைச் சொல்வதென்றால், ஒரு மால்வேர் புரோகிராம் இருப்பதனை அறியும் போதே, அதற்கு எதிரான போராட்டத்தில் நாம் தோல்வி அடைந்து நிற்கிறோம். உங்கள் சிஸ்டத்தினை அது கைப்பற்றிவிட்ட நேரத்திலிருந்து, வழக்கமாக நம் பெர்சனல் கம்ப்யூட்டரின் பிரச்னைகளை அறிய நாம் மேற்கொள்ளும் வழிகளும் அடைப்பட்டுப்போகின்றன. எனவே, புதியதாக ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை, டவுண்லோட் செய்து அல்லது மற்றவர்களிடமிருந்து பெற்று, இன்ஸ்டால் செய்து இயக்கி அதனை நீக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். என்ன செய்தும் அதனை நீக்க இயலவில்லை என்றால், ட்ரைவில் உள்ள பைல்களுக்குப் பேக் அப் எடுத்துவிட்டு, ஹார்ட் ட்ரைவினை பார்மட் செய்து, விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் பதிக்க வேண்டியதுதான். இதனால் தான், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, அவ்வப்போது மேம்படுத்த வேண்டும் என்றும், சரியான பயர்வால் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும் என்றும், நம் டேட்டா பைல்களை அவ்வப்போது பேக் அப் எடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்படுகிறது.

7. மின்சக்தி பிரச்னை:

மேலே சொல்லப்பட்ட பிரச்னைகள் எதுவும் இல்லை என்றால், கம்ப்யூட்டருக்கு வழங்கப்படும் மின்சக்தி ஓட்டத்தில் பிரச்னை இருக்கலாம். போதுமான மின்சக்தி இல்லாத நிலை, சமநிலையில் மின் ஓட்டம் கிடைக்கப்பெறாத சூழ்நிலை என இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முழுமையாக நமக்கு மின்சக்தி வழங்கும் பாதையினைச் சோதனை செய்து குறைகளை நீக்க வேண்டும்.

8. சாப்ட்வேர் பிரச்னை:

பொதுவாக சாப்ட்வேர் புரோகிராம் களால் விண்டோஸ் முடக்கப்படும் நிகழ்வு ஏற்படாது. மிக அரிதான வேளைகளில் இது ஏற்படலாம். குறிப்பிட்ட சாப்ட்வேர் புரோகிராமினை இயக்கும்போது மட்டும், விண்டோஸ் இயக்கம் நின்று போகிறது என்பதனைக் கண்டறிந்தால், அந்த சாப்ட்வேர் புரோகிராமினை நீக்கி, மீண்டும் பதிவதன் மூலம் இதனைச் சரி செய்திடலாம்.

9. அதிக வெப்பம்:

கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் உறுப்புகள் இயங்குகையில் வெப்பம் உண்டாகும். இதனை நீக்கிட சிறிய மின்விசிறிகள் அமைக்கப்பட்டாலும், முழுமையாக வெப்பத்திலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களைக் காப்பாற்ற இயலாது. சில வேளைகளில் இதனாலும் விண்டோஸ் இயக்கம் முடங்கிப் போகலாம். இதனை உணரும் பட்சத்தில், கம்ப்யூட்டர் இயக்கத்தினை நிறுத்தி, வெப்பம் முழுமையாக நீங்கிய பின்னர் இயக்கிப் பார்க்கலாம். வெப்பக் காற்று வெளியேறும் வழிகளில் தூசு படிந்திருந்தால் நீக்கலாம். மின்விசிறிகள் முழுமையாக இயங்குகின்றனவா எனச் சரி பார்த்து, புதியனவற்றை அமைக்கலாம். பொதுவாக விண்டோஸ் இயக்கம் முடக்கப்பட்டவுடன், நம்மை பதற்றம் தொற்றிக் கொள்ளும், அதனை விடுத்து, பொறுமையாகக் காரணத்தை ஆய்வு செய்தாலே, பாதி வெற்றியை நாம் அடையலாம். மேலோ சொன்ன வழிகளில் நிச்சயம் ஒன்று காரணமாக இருக்கும். அதற்கேற்ற தீர்வினை மேற்கொள்வது நல்லது.

கிட்னி அறிந்ததும் அறியாததும்..!:

மணக்கால் அய்யம்பேட்டை | 11:39 AM | Best Blogger Tips
தெரியாததை தெரிந்து கொள்வோம்
தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

தமிழில் சில செய்திகள் உங்களுக்காக :

நம் உடல்நலத்தை நாம் அறிந்துகொள்வது மிகவும் நல்லது , வருமுன் காப்போம் அது எதுவாக இருந்தாலும் சரி , கிட்னி செய்யும் வேலைகள் மற்றும் அதன் பலன்களும் அது எதனால் கேடாகிறது என்பதையும் நாம் இதில் பார்போம் , உங்கள் கிட்னியை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள இது ஒரு அறிய வாய்ப்பு என நீங்கள் நினைத்தால் மற்றவருடன் பகிர்ந்து கொண்டு அவருக்கும் இந்த வாய்ப்பை கொடுக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

கிட்னி அறிந்ததும் அறியாததும்..!:

"ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். சிறுநீரகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு அவருடைய பதில்கள் இதோ:-

யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.

பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன?

வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?

முடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.

அதை எப்படி கண்டுபிடிப்பது..?

வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்சினை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது.

அறிகுறிகள் இருக்குமா..?

இருக்கும். கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீ­ர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்­ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.

எதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..?

தண்­ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம்.

தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?

அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

உணவு முறைகள் என்ன?

எதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாசியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாசியம் சேர்த்துக்கொள்ளலாம்.

எந்தெந்த உணவுகளில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது..?

வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாசியம் சாப்பிடக்கூடாதா..?

அப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலைவரைக்கும் போனவர்கள் பொட்டாசியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே...?

வாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா?

முடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் 'டி' உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.

சிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்...

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.

இல்லாவிட்டால்...

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது.

அப்புறம்...

இளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.

இளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..?

இளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்.

கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..?

என்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா?

முடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..?

முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

நிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.


சிறுநீரக:
சிறுநீரகங்கள் தான் முதுகு விலா கீழே, முதுகெலும்பு அல்லது பக்கத்தில் காணப்படுகின்றன என்று உறுப்புகளின் ஒரு ஜோடி உள்ளன. சிறுநீரகங்கள்:

இரத்தம் கழிவு பொருட்கள் வடிகட்டி மற்றும் சிறுநீர் உடல் வெளியே அனுப்ப

. உடலில் இரத்த அழுத்தம் மற்றும் நீர் நிலைகள், உப்புக்கள், மற்றும் கனிமங்கள் கட்டுப்படுத்தும்
உடலின் மற்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்தும். விளைபொருட்களை ஹார்மோன்கள்
சிறுநீரகங்கள் சேதம் நீரிழிவு நன்றாக கட்டுப்படுத்த முடியாத, குறிப்பாக, பல வருடங்களாக நீரிழிவு இருந்தது மக்கள் ஏற்படலாம்.

சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்களை அகற்றி தண்ணீர் திரவ அளவை கட்டுப்படுத்தும் அத்தியாவசிய செயல்படுபவை. கீழே விளக்கப்படம் சிறுநீரக அடிப்படை கட்டமைப்பு காட்டுகிறது.


சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து வடிகட்டி கழிவுகள் (யூரியா போன்றது) மற்றும் சிறுநீர், தண்ணீர் சேர்த்து, அவர்களை வெளியேற்ற என்று உறுப்பாக. சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் படிக்கும் மருத்துவ துறையில் சிறுநீரகவியலின் (; சிறுநீரக தொடர்பான பெயரடை சிறுநீரக பொருள் சிறுநீரகங்கள் அதாவது, லத்தீன் rēnēs இருந்து nephro-பொருள் சிறுநீரக பண்டைய கிரேக்கம் வார்த்தை nephros இருந்து) என்று அழைக்கப்படுகிறது.

மனிதர்களில், சிறுநீரகங்கள் வயிறு பின்பக்க பகுதியில் அமைந்துள்ளது. முதுகெலும்பு ஒவ்வொரு பக்கத்தில் ஒரு உள்ளது; சரியான சிறுநீரக இடது இடைப்படலம் மற்றும் மண்ணீரல் அருகில் கீழே, ஒரு கல்லீரல் கீழே அமைந்திருக்கும். ஒவ்வொரு சிறுநீரக மேலே ஒரு அட்ரினல் சுரப்பி (மேலும் suprarenal சுரப்பி என அழைக்கப்படுவது). இடது சிறுநீரகம் சற்று உள்நோக்கிய அமைந்துள்ளது போது வலது சிறுநீரகம் இடது ஒரு விட சற்று குறைவாக இருப்பது கல்லீரல் முடிவு ஏற்படும் அடிவயிற்று உள்ள சமச்சீரின்மையாகும்.

சிறுநீரகங்கள் retroperitoneal உள்ளன, அவை, வயிற்றறை உறையில் பின்னால் வயிற்று துவாரத்தின் அகவுறை பொய் பொருள். அவர்கள் L3 வேண்டும் முதுகெலும்பு நிலை T12 சுமார் உள்ளன. சிறுநீரகங்கள் மேல் பகுதிகளில் ஓரளவு பதினோராவது மற்றும் பன்னிரண்டாவது விலா பாதுகாக்கப்படும், மற்றும் ஒவ்வொரு முழு சிறுநீரக அது மெத்தை உதவி இது கொழுப்பு (perirenal மற்றும் pararenal கொழுப்பு) இரண்டு அடுக்குகள் சூழப்பட்டுள்ளது. ஒருதலைப்பட்ச அல்லது இருதரப்பு சிறுநீரக agenesis occur.1 முடியும் என்று அறியப்பட்ட ஒன்று அல்லது இரண்டு சிறுநீரகங்கள், ஆகியவற்றின் பிறவி இல்லாத

மனித உடல் பற்றி மேல் 5 ஆச்சரியம் உண்மைகள்:

1. உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல் ஆகும். ஒரு வளர்ந்த மனிதன் அதை 1.9m2 (20sq அடி) பற்றி உள்ளடக்கியது. விட்டு தோல் தொடர்ந்து செதில்களாக - ஒவ்வொரு நபரும் தோல் 18kg (40 பவுண்டு) சுற்றி வடிக்கிறாள் ஒரு வாழ்நாளில்.

2. நீங்கள் தூங்க போது, உன்னை பற்றி 8mm (0.3in) மூலம் வளரும். அடுத்த நாள் உங்கள் முன்னாள் உயரம் தயங்குவதில்லை. காரணம் நீ நிற்க அல்லது உட்கார போது உங்கள் குருத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசை மூலம் கடற்பாசிகள் போன்ற பிழியப்பட்ட என்பதுதான்.

3. மேற்கு சராசரி நபர் அவரது வாழ்க்கையின் போது உணவு மற்றும் திரவ பானங்கள் 50,000 லிட்டர் (11,000 கேலன்கள்) என்ற 50 டன்கள் சாப்பிடுவார்.

4. ஒவ்வொரு சிறுநீரக 1 மில்லியன் தனிப்பட்ட வடிகட்டிகளை கொண்டுள்ளது. அவர்கள் நிமிடத்திற்கு இரத்தம் சுமார் 1.3 லிட்டர் (2.2 pints) சராசரியாக வடிகட்ட, மற்றும் 1.4 லிட்டர் (2.5 pints) சிறுநீர் ஒரு நாள் வரை வெளியேற்ற.

5. கண்கள் குவிமைய தசைகள் 100,000 முறை ஒரு நாள் நகர. உங்கள் கால் தசைகள் அதே வொர்க்அவுட்டை கொடுக்க, நீங்கள் ஒவ்வொரு நாளும் 80km (50 மைல்கள்) நடக்க வேண்டும்.


சிறுநீரகங்கள் முதுகெலும்பிகள் மற்றும் சில முதுகெலும்பில்லாத உட்பட பெரும்பாலான விலங்குகளில் பல அத்தியாவசிய கட்டுப்பாட்டு பாத்திரங்கள், சேவை என்று உறுப்பாக. அவர்கள் சிறுநீர் அமைப்பு அவசியமாக உள்ளது, மேலும் இது போன்ற எலக்ட்ரோலைட்கள் கட்டுப்பாடு, அமிலகார சமநிலை பராமரிப்பு, மற்றும் இரத்த அழுத்த கட்டுப்பாடு (உப்பு மற்றும் நீர் சமநிலையை பராமரிப்பது வழியாக) என ஹோமியோஸ்டசிஸ் செயல்பாடுகளையும். அவர்கள் இரத்த ஒரு இயற்கை வடிகட்டி உடலின் சேவை, மற்றும் சிறுநீர்ப்பை விடப்படுகிறது அவை கழிவுகள் நீக்க. சிறுநீர் உற்பத்தி, சிறுநீரகங்கள் வெளியேற்றம் போன்ற யூரியா மற்றும் அம்மோனியம் போன்ற கழிவுகள், மற்றும் அவர்கள் தண்ணீர் மீளுறிஞ்சல், குளுக்கோஸ், மற்றும் அமினோ அமிலங்கள் பொறுப்பு. சிறுநீரகங்கள் கால்சிட்ரியல், எரித்ரோபொயிடின், மற்றும் நொதி ரெனின் உட்பட ஹார்மோன் உற்பத்தி.

Retroperitoneum உள்ள அடிவயிற்று பின்புறம் அமைந்துள்ள, சிறுநீரகங்கள் ஜோடியாக சிறுநீரக தமனிகள் ரத்தம் பெற, மற்றும் ஜோடியாக சிறுநீரக நரம்புகள் ஒரு சாக்கடை. ஒவ்வொரு சிறுநீரக தன்னை, ஒரு காரணங்களாலும், சிறுநீர்க்குழாய் ஒரு ஜோடியாக அமைப்பு சிறுநீர் excretes என்று சிறுநீர்ப்பை இந்த empties.

சிறுநீரகவியலின் சிறுநீரக நோய்கள் அக்கறை மருத்துவ சிறப்பு போது சிறுநீரக உடலியல், சிறுநீரக செயல்பாடு ஆய்வு. சிறுநீரக நோய்கள் மாறுபட்ட, ஆனால் சிறுநீரக நோய் உள்ளவர்கள் அடிக்கடி குறிப்பிடத்தக்க மருத்துவ வசதிகள் காட்ட. சிறுநீரக சம்பந்தப்பட்ட பொதுவான மருத்துவ நிலைமைகள் nephritic மற்றும் nephrotic அறிகுறிகள், சிறுநீரக நீர்க்கட்டிகள், தீவிரமான சிறுநீரக காயத்துடன், நாள்பட்ட சிறுநீரக நோய், சிறுநீர் பாதை நோய் தொற்று, சிறுநீரகக்கல், மற்றும் சிறுநீரக பாதை தடுப்புகளும் அடங்கும் [1] சிறுநீரக பல்வேறு புற்றுநோய்களுக்கு உள்ளன;. மிக பொதுவான பெரியோர் சிறுநீரக புற்றுநோய் சிறுநீரக உயிரணு புற்றுநோய் உள்ளது. புற்றுநோய், நீர்க்கட்டிகள், மற்றும் வேறு சில சிறுநீரக நிலைமைகள் சிறுநீரக அகற்றுதல், அல்லது குண்டிக்காயை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறிதல் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். குளோமரூலர் வடிகட்டுதல் விகிதம் மூலம் அளவிடப்படுகிறது சிறுநீரக செயல்பாடு, தொடர்ந்து ஏழை போது, கூழ்மப்பிரிப்பு மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை விருப்பங்கள் இருக்கலாம். அவர்கள் கடுமையாக தீங்கு இல்லை என்றாலும், சிறுநீரக கற்கள் ஒரு வலி மற்றும் ஒரு தொந்தரவும் இருக்க முடியும். சிறுநீரக கற்கள் நீக்குவது பிறகு சிறுநீர் குழாய் வழியாக இவை சிறிய துண்டுகள், ஒரு கல் உடைக்க ஒலி அலை சிகிச்சை கொண்டுள்ளது. சிறுநீரக கற்கள் ஒரு பொதுவான அறிகுறி குறைந்த திரும்பி உள்நோக்கிய / பக்கவாட்டு பிரிவுகளில் ஒரு கூர்மையான வலி.

ஜெராக்ஸ் இயந்திரம்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:16 PM | Best Blogger Tips
ஜெராக்ஸ் இயந்திரம்..!

"ஒரு சராசரி மனிதன் வரலாற்றின் பக்கங்களில் விஞ்ஞானியாக பதிவு செய்யப்பட்டான்"

உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்கமுடியாதவை ஆகிவிட்டது.
ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடிக்க செஸ்டர் கார்ல்சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை.

வருங்கள் நண்பர்களே நகலெடுக்கும் இயந்திரத்தின் வரலாற்றை
புரட்டிப்பார்போம்.

1960 மார்ச் மாதம்
"ஜெராக்ஸ் 914" எனும் நகலெடுக்கும் கருவி நடைமுறைக்கு வருவதற்குமுன்,
நகலெடுப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்தது.

அதாவது புகைப்படக்கலையின் நுட்பங்களை பயன்படுத்தி பயிற்சிபெற்ற பணியாளர்கள் பலவிதமான இரசயனங்களில் நனைத்து மணிக்கணக்கில் காயவைத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டி கவனமாக நகலெடுத்தனர்.

கொஞ்சம் கவனம் சிதறினால் நகலெடுக்க வேண்டிய
முக்கிய தாள்கள் பாதிப்புக்கு உள்ளாகிவிடும் .

1906ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலாத்தில் ஒரு வறுமைகுடும்பத்தில் பிறந்த செஸ்டர் கார்ல்சன்,
பகுதி நேரம் உழைத்து இயற்பியலில் பட்டம் பெற்றார்.

தனது குடும்பத்தின் வறுமையை போக்க பல இடங்களில் பணியாற்றினார்.

“பேடண்ட்” துறையில் பணியாற்றியபோது கார்ல்சனுக்கு தனது அலுவலகத்தில் நகலெடுக்கபட்ட கஷ்டங்களை பார்த்து நகலெடுக்க வேண்டிய தாளை ஒரு கருவி மேலேவைத்தால் ஈரம் படாமல் நகல் வந்துவிழுந்தால் எப்படி இருக்குமென்று
ஜீ பூம்பா கணக்கில் யோசித்தார்.

தனது யோசனையை அலுவலக நண்பர்களிடம் சென்னார் ஒட்டுமொத்த அலுவலகமோ கை கொட்டி சிரித்தது தனது யோசனையை நடைமுறைபடுத்தப்போகிறேன் என்று சொன்னதிற்கு பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் முயற்சித்து தோற்றுவிட்டனர் உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா என ஏளனம் செய்தனர் .

முயற்சியே மூலதனம்

கையிலோ காசில்லை ஆனாலும் தனது சிந்தனையின் மேல் அபாரநம்பிக்கை கொண்டு இருந்தார் அவருடைய நல்ல காலம் ஒளிமின் நிகழ்வு ( photo electricity) அவருடைய கவணத்தை ஈர்த்தது இருட்டாக இருக்கும் போது மின்சாரம் பாயமல் தடுக்கும் இயல்பு கொண்ட சில பொருள்களின் மீது ஒளிக்கதிர்கள் படும் போது அவைகள் மின்சாரத்தை கடத்தும் இது ஒளிமின் நிகழ்வு அது போல முடி, பட்டுத்துணி, எண்ணைதோய்த காகிதம்
ஆகியவற்றை அழுத்தி தேய்தால் நிலை மின்சாரம் உண்டாகும் இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து நகலெடுக்கும் கருவிக்கு வடிவம் கொடுத்தார் செஸ்டர் கார்ல்சன் . கருவியின் மேற்பரப்பில் தகடு ஒன்றில் ஒளிஉணர் பொருளினால் பூச்சு ஏற்படுத்தி அதில் நிலை மின்சாரத்தை ஏற்படுத்தி அதற்கு மேல் நகலெடுக்க வேண்டிய ஒளி ஊடுருவும் தாளை வைத்து அதன் வழியே ஒளியை பாய்ச்சினார் தாளின்
எழுத்துகள் இல்லாத வழியே ஒளி பாய்ந்தது அதற்கு அடியில் உள்ள தகட்டில் ஒளி பட்டதும் நிலைமின்சாரம் அகன்று விட்டது எனவே இந்த அமைப்பை அப்படியே ஒரு தாளில் பதிய வைத்து வெற்றியும் பெற்றார் அக்கருவிக்கு உரிமமும் பெற்றார்

இரண்டாம் உலகப்போரினால் கார்ல்சன் பட்ட கஷ்டம்

தனது கருவியை 1938 இல் சந்தைக்கு அறிமுகம் செய்தார் . பார்பதற்கு காம , சோமா வென்ற கருவி தெளிவில்லாத எழுத்துகள் , ஒளி ஊடுருவும் தாளில் இருந்தால் மட்டுமே நகலெடுக்க முடியும் சாதாரண தாள்களை நகலெக்க முடியாது போன்ற பல காரணங்களால் கருவி தோல்வி அடைந்து விட்டது கருவியில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் அதற்கு பணம் நிறைய வேண்டும் எல்ல நிறுவனங்களும் கார்ல்சனை
கிண்டலடித்தார்களே தவிர யாரும் உதவ முன் வரவில்லை இதற்க்கிடையில் இரண்டாம் உலகபோர் தொடங்கி விட்டது தான் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சம் கார்ல்சனுக்கு தோன்றி விட்டது

தோல்வி மேல் தோல்வி

எதிர்பாரத விதமாக நியூயார்க்கை சேர்ந்த ஹோலாய்ட் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வில்சன் என்பவர் பண உதவி செய்ய முன் வந்தார் சாதாரண தாளினை நகலெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க ஹோலாய்ட் கார்பரேஷன் பல லட்ச கணக்கான டாலர்களை செலவிட்டதால் பணமின்மையால் நகலெடுக்கும் கருவியை முழுமையடையாமலே 1950 இல் வெளிட்டது மீண்டும் செஸ்டர் கார்ல்சனுக்கு தோல்வி
இருப்பினும் லித்தோகிராபிக் அச்சுத்துறைக்கும் இராணுவதில் பெரிய வரைபடங்களை நகலெடுக்க உதவியதால் செஸ்டர் கார்ல்சனின் கருவி இந்த முறை தப்பித்தது

சாதித்த ஜெராக்ஸ் 914

பல வித இடர்பாடுகளுக்கு பின் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ சந்தைக்கு வந்தது இருப்பினும் பெரிய நிறுவனங்கள் யாரும் ஆதரவு தராததால் ஹோலாய்ட் கார்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு நேரிடையாகவே வாடகைக்கு விட்டது கருவியின் விரைவான நகலெடுக்கும் தன்மையும், நகல் எழுத்துகளின் துல்லியமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து விடவே ஹோலாய்ட் கார்பரேஷனுக்கு ஆர்டர்கள்
குவிந்தன நிறுவனத்தின் பங்கு மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது செஸ்டர் கார்ல்சனுக்கு உரிமைத்தொகையாக மட்டும் இரண்டரை கோடிக்கும் அதிகமான டாலர்கள் கிடைத்தது கடைசியில் ஜெராக்ஸ் இயந்திரம் மட்டும் ஜெயிக்க வில்லை அதை கண்டுபிடித்த ஒரு சராசரி மனிதன் வரலாற்றின் பக்கங்களில் விஞ்ஞானியாக பதிவு செய்யப்பட்டான்.

Xerox இந்த என்கிற பெயர்தான்
பின்னாளில் அனைத்து நகலெடுக்குமியந்திரங்களுக்குமான (photo state copying machine)

பொதுப்பெயராகிவிட்டதையும்,
இப்படி தனிப்பட்டவொன்றின் பெயரை
அதுசார்ந்த அனைத்திற்கும் பொதுவான பெயரிட்டழைப்பதை
ஆங்கிலத்தில் "Eponym" என்று சொல்கிறார்கள்.

via ஃபீனிக்ஸ் பாலா.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் @[297395707031915:274:Relaxplzz]
உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடிக்க செஸ்டர் கார்ல்சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை வருங்கள் நண்பர்களே நகலெடுக்கும் இயந்திரத்தின் வரலாற்றை புரட்டிப்பார்போம்.

1960 மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ எனும் நகலெடுக்கும் கருவி நடைமுறைக்கு வருவதற்க்கு முன் நகலெடுப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்தது அதாவது புகைப்படக்கலையின் நுட்பங்களை பயன்படுத்தி பயிற்ச்சி பெற்ற பணியாளர்கள் பலவிதமான இரசயனங்களில் நனைத்து மணிக்கணக்கில் காயவைத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டி கவனமாக நகலெடுத்தனர் கொஞ்சம் கவனம் சிதறினால் நகலெடுக்க வேண்டிய முக்கிய தாள்கள் பாதிப்புக்கு உள்ளாகி விடும் .

1906 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலாத்தில் ஒரு வறுமைகுடும்பத்தில் பிறந்த செஸ்டர் கார்ல்சன் பகுதி நேரம் உழைத்து இயற்பியலில் பட்டம் பெற்றார் தனது குடும்பத்தின் வறுமையை போக்க பல இடங்களில் பணியாற்றினார் “பேடண்ட்” துறையில் பணியாற்றிய போது கார்ல்சனுக்கு தனது அலுவலகத்தில் நகலெடுக்க பட்ட கஷ்டங்களை பார்த்து நகலெடுக்க வேண்டிய தாளை ஒரு கருவி மேலே வைத்தால் ஈரம் படாமல் நகல் வந்து விழுந்தால் எப்படி இருக்குமென்று ஜீ பூம்பா கணக்கில் யோசித்தார் தனது யோசனையை அலுவலக நண்பர்களிடம் சென்னார் ஒட்டுமொத்த அலுவலகமோ கை கொட்டி சிரித்தது தனது யோசனையை நடைமுறைபடுத்தப்போகிறேன் என்று சொன்னதிற்கு பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் முயற்சித்து தோற்றுவிட்டனர் உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா என ஏளனம் செய்தனர் .

முயற்சியே மூலதனம்

கையிலோ காசில்லை ஆனாலும் தனது சிந்தனையின் மேல் அபாரநம்பிக்கை கொண்டு இருந்தார் அவருடைய நல்ல காலம் ஒளிமின் நிகழ்வு ( photo electricity) அவருடைய கவணத்தை ஈர்த்தது இருட்டாக இருக்கும் போது மின்சாரம் பாயமல் தடுக்கும் இயல்பு கொண்ட சில பொருள்களின் மீது ஒளிக்கதிர்கள் படும் போது அவைகள் மின்சாரத்தை கடத்தும் இது ஒளிமின் நிகழ்வு அது போல முடி, பட்டுத்துணி, எண்ணைதோய்த காகிதம் ஆகியவற்றை அழுத்தி தேய்தால் நிலை மின்சாரம் உண்டாகும் இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து நகலெடுக்கும் கருவிக்கு வடிவம் கொடுத்தார் செஸ்டர் கார்ல்சன் . கருவியின் மேற்பரப்பில் தகடு ஒன்றில் ஒளிஉணர் பொருளினால் பூச்சு ஏற்படுத்தி அதில் நிலை மின்சாரத்தை ஏற்படுத்தி அதற்கு மேல் நகலெடுக்க வேண்டிய ஒளி ஊடுருவும் தாளை வைத்து அதன் வழியே ஒளியை பாய்ச்சினார் தாளின் எழுத்துகள் இல்லாத வழியே ஒளி பாய்ந்தது அதற்கு அடியில் உள்ள தகட்டில் ஒளி பட்டதும் நிலைமின்சாரம் அகன்று விட்டது எனவே இந்த அமைப்பை அப்படியே ஒரு தாளில் பதிய வைத்து வெற்றியும் பெற்றார் அக்கருவிக்கு உரிமமும் பெற்றார்

இரண்டாம் உலகப்போரினால் கார்ல்சன் பட்ட கஷ்டம்

தனது கருவியை 1938 இல் சந்தைக்கு அறிமுகம் செய்தார் . பார்பதற்கு காம , சோமா வென்ற கருவி தெளிவில்லாத எழுத்துகள் , ஒளி ஊடுருவும் தாளில் இருந்தால் மட்டுமே நகலெடுக்க முடியும் சாதாரண தாள்களை நகலெக்க முடியாது போன்ற பல காரணங்களால் கருவி தோல்வி அடைந்து விட்டது கருவியில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் அதற்கு பணம் நிறைய வேண்டும் எல்ல நிறுவனங்களும் கார்ல்சனை கிண்டலடித்தார்களே தவிர யாரும் உதவ முன் வரவில்லை இதற்க்கிடையில் இரண்டாம் உலகபோர் தொடங்கி விட்டது தான் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சம் கார்ல்சனுக்கு தோன்றி விட்டது

தோல்வி மேல் தோல்வி

எதிர்பாரத விதமாக நியூயார்க்கை சேர்ந்த ஹோலாய்ட் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வில்சன் என்பவர் பண உதவி செய்ய முன் வந்தார் சாதாரண தாளினை நகலெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க ஹோலாய்ட் கார்பரேஷன் பல லட்ச கணக்கான டாலர்களை செலவிட்டதால் பணமின்மையால் நகலெடுக்கும் கருவியை முழுமையடையாமலே 1950 இல் வெளிட்டது மீண்டும் செஸ்டர் கார்ல்சனுக்கு தோல்வி இருப்பினும் லித்தோகிராபிக் அச்சுத்துறைக்கும் இராணுவதில் பெரிய வரைபடங்களை நகலெடுக்க உதவியதால் செஸ்டர் கார்ல்சனின் கருவி இந்த முறை தப்பித்தது

சாதித்த ஜெராக்ஸ் 914

பல வித இடர்பாடுகளுக்கு பின் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ சந்தைக்கு வந்தது இருப்பினும் பெரிய நிறுவனங்கள் யாரும் ஆதரவு தராததால் ஹோலாய்ட் கார்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு நேரிடையாகவே வாடகைக்கு விட்டது கருவியின் விரைவான நகலெடுக்கும் தன்மையும், நகல் எழுத்துகளின் துல்லியமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து விடவே ஹோலாய்ட் கார்பரேஷனுக்கு ஆர்டர்கள் குவிந்தன நிறுவனத்தின் பங்கு மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது செஸ்டர் கார்ல்சனுக்கு உரிமைத்தொகையாக மட்டும் இரண்டரை கோடிக்கும் அதிகமான டாலர்கள் கிடைத்தது கடைசியில் ஜெராக்ஸ் இயந்திரம் மட்டும் ஜெயிக்க வில்லை அதை கண்டுபிடித்த ஒரு சராசரி மனிதன் வரலாற்றின் பக்கங்களில் விஞ்ஞானியாக பதிவு செய்யப்பட்டான்

புதினாக்கீரையின் ம‌க‌(த்துவ‌ம்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:14 PM | Best Blogger Tips
புதினாக்கீரையின் ம‌க‌(த்துவ‌ம்..!

சிறு குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வாந்தி குணமாக:
சிறு குழந்தைகளுக்கு ஆகார விகற்பத்தின் காரணமாக வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படுவதுண்டு. இதற்குப் பல வகையான மருந்துகள் உண்டு என்றாலும் புதினாக்கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக்கிறது. புதினாக்கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு அம்மியில் வைத்து லேசாக நைத்து, அதை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து, நன்றாக வதக்கி அதில் ஆழாக்களவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அரை ஆழாக்களவாகச் சுண்டியபின் சட்டியை இறக்கி வடிகட்டி, அதில் வேளைக்குச் சங்களவு வீதம் காலை மாலையாக மூன்று வேளை கொடுத்தால் போதும், வயிற்றுப் போக்கு, வாந்தி நின்று விடும்.

கர்ப்பஸ்திரீகளுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த:

கருத்தரித்த இரண்டாவது மாதம் முதல் கருத்தரித்திருப்பதை மெய்ப்பிக்க, காலை வேளையில் வாந்தி உண்டாகும். சில சமயம் ஆகாரம் உண்டவுடன் வாந்தி வரும். தலைச் சுற்றல், சோம்பல், அரோசிகம் ஏற்படும். இதை மசக்கை வாந்தி என்று கூறுவார்கள். தினசரி இப்படி இருக்கும். 2, 3 வாரங்களுக்குப் பின் இது தானே மாறிவிடும். சில பெண்களுக்கு பிரசவிக்கும் வரை வாந்தி சாயந்திர வேளைகளில் ஏற்படும். இந்த மாதிரி வாந்தியை நிறுத்த புதினா நன்கு பயன்படுகிறது.

புதினாக்கீரையைக் கொண்டு வந்து ஆய்ந்து எடுத்து, உரலில் போட்டு இடித்து அதை எடுத்துச் சாறு பிழிய வேண்டும். பிழிந்த சாறு இரண்டு ஆழாக்களவு எடுத்து அதைத் துணியில் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, களிம்பு ஏறாத ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் இந்தச் சாற்றைவிட்டு அதில், ஒரு சீசா அளவு அதாவது சின்னபடிக்கு ஒரு படியளவு சீமைக் காடியை விட்டு நன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து, பிறகு அத்துடன் அரை கிலோ பழுப்புச் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கரைத்து, இந்தச் சாற்றை வேறு ஒரு பாத்திரத்தின் மேல் துணி வேடு கட்டி அதன் மூலம் வடிகட்டி எடுத்து, முதல் பாத்திரத்தைக் கழுவி அதில் இதைவிட்டு, அடுப்பில் வைத்து, நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த சமயம் மருந்து சர்பத் போல பாகுபதமாகும். நன்றாக ஆறியபின் அதை ஒரு சுத்தமான சீசாவில் விட்டு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாந்தி வரும் சமயம் இந்தப் பாகில் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து உள்ளங்கையில் விட்டு, நாவால் நக்கி அதை வாயில் வைத்துச் சுவைத்து விழுங்க வேண்டும். இந்த விதமாக ஒரு நாளைக்கு எத்தனை தரம் வேண்டுமானாலும் சுவைக்கலாம். எந்த விதமான கெடுதலும் ஏற்படாது.

ரொட்டி, ஆப்பம், தோசை, இட்டிலி இவைகளை இந்தப் பாகில் தொட்டுத் தின்னலாம். ருசியாக இருக்கும். காலை வேளையில் இவ்விதம் சாப்பிடுவது நல்லது.

புதினாக்கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஆறு அவுன்ஸ் நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை தெளிய வைத்து குடித்து வரவும். இக்குடிநீரை அருந்துவதால் வாந்தி, வாயுவு கோளாறுகள், வயிற்றுப் போக்கு, பொருமல் போன்ற நோய்கள் குணமாகும்.

புதினாக்கீரையைத் துவையலாகவோ அல்லது அவித்து பிற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் சீர்படும். புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்திவரின் இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும். தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற கோளாறுகளுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர குணம் தெரியும்.

புதினாக்கீரையைக் கொண்டு ஒரு அருமையான பற்பொடி கூட தயார் செய்யலாம். இந்த புதினா பற்பொடியைக் கொண்டு தினசரி பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும். கஷ்டத்தைப் பாராமல் ஒவ்வொருவரும் புதினா பற்பொடி தயாரித்து பல்துலக்கி வந்தால், பற்கள் முத்தைப் போல வெண்மையாகவும், பிரகாசமாகவும் தோன்றும். பல் சம்பந்தமாக எந்த வியாதியும் வராது. இதைத் தயாரிப்பதும் சுலபம் தான்.

புதினாக்கீரையை எடுத்து, சுத்தம் பார்த்து, அதை ஒரு பெரிய தட்டு அல்லது முறத்தில் போட்டு வெய்யிலில் நன்றாகக் காயவைக்க வேண்டும். புதினா காய்ந்து சருகான பின் உரலில் போட்டு இடிக்கவேடும். இந்த சமயம் இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு கறி உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இடித்துச் சல்லடையில் சலித்து, கண்ணாடி அல்லது மங்கு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்த வேண்டும். தகர டப்பா கூடாது.

அடிக்கடி புதினாக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

எக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்தச் சமயம் புதினாக்கீரைத் துகையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

- செங்கை நில‌வ‌ன்

உடலின் உறுப்புகள் தானம் பற்றிய தகவல்...!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:06 PM | Best Blogger Tips
உடலின் உறுப்புகள் தானம் பற்றிய தகவல்...!

குருதி கொடை மட்டுமே கேள்விபட்ட நாம் சமீபமாக உடல் தானம், உடலின் உறுப்புகள் தானம் பற்றி பேசி வருகிறோம், கேட்க பெறுகிறோம் இதை பற்றி நிறைய பேருக்கு சரியான விவரம் தெரியாததால் தெரிந்து கொள்ளுங்கள். இது போக உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்த அல்லது தெரிந்தவர்களுக்கோ இதயம், சிறுநீரகம், கண்கள், லிவர், லங்க்ஸ்,எலும்பு, இதயவால்வுகள், தோல் போன்ற பல குறைபாடுகள் இருந்தால் இந்த லின்க்கில் உள்ள அரசு அப்ருவ் செய்த மருத்துவமனைகளில் நீங்கள் பதிவு செய்தால் உங்களுக்கு இந்த உறுப்புகள் புக்கிங் அடிப்படையில் இலவசமாக கிடைக்க பெறூம். இதற்க்கு புரோக்கர்கள் தேவை இல்லை.

அது மட்டுமல்ல உங்கள் அல்லது உங்களது மைனர் மற்றும் தெரிந்தவர்களின் உடம்பை மருத்துவ ஆய்வுக்கு கூட நீங்கள் கொடுத்து உதவலாம்.

இந்தியாவிலே தமிழ் நாட்டில் தான் அதிக உடல் மற்றும் உறுப்பு தானம் செய்யும் நெ 1 திகழ்கிறது. தானம் செய்யும் அட்டை படிவம் மற்றூம் மற்ற எல்லா அப்ளிகேஷனும் இனைத்துள்ளேன் பலன் பெருங்கள். ஒன்றும் பெறாத பேப்பர் கூட ரீசைக்கிள் ஆகி இன்னொரு வாழ்வை கொடுக்கும்போது நம் கூட நம்மின் உடலையோ அல்லது உடல் பாகங்கலையோ இல்லாதவர்களுக்கு வழங்கலாம்.

Hyper Links

To Donate your body after death & Government Order - http://www.dmrhs.org/tnos/orders-of-tn-govt/donation-of-body-after-death-procedure-for-donation


FAQ about Each and Every Organ Donation and how it is used - http://www.dmrhs.org/tnos/faq-for-public


Organ Waiting List Details - http://tnos.org/


Approved Hospitals for Organ Donors & Organ Transplants by Govt - http://www.dmrhs.org/tnos/notifications/list-of-approved-hospitals-for-kidney-transplantation-as-on-13-02-2012
(Please follow the same link for all organs)

Please fill your form and send it by email OR post :

Cadaver Transplant Program,
165 A, Tower Block I, 6th Floor, [Next to Bone Bank],
Government General Hospital
Chennai – 600 003

E-Mail : organstransplant@gmail.com

Phone : (91)44 25305638

Fax : (91)44 25363141
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
உடலின் உறுப்புகள் தானம் பற்றிய தகவல்...!

குருதி கொடை மட்டுமே கேள்விபட்ட நாம் சமீபமாக உடல் தானம், உடலின் உறுப்புகள் தானம் பற்றி பேசி வருகிறோம், கேட்க பெறுகிறோம் இதை பற்றி நிறைய பேருக்கு சரியான விவரம் தெரியாததால் தெரிந்து கொள்ளுங்கள். இது போக உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்த அல்லது தெரிந்தவர்களுக்கோ இதயம், சிறுநீரகம், கண்கள், லிவர், லங்க்ஸ்,எலும்பு, இதயவால்வுகள், தோல் போன்ற பல குறைபாடுகள் இருந்தால் இந்த லின்க்கில் உள்ள அரசு அப்ருவ் செய்த மருத்துவமனைகளில் நீங்கள் பதிவு செய்தால் உங்களுக்கு இந்த உறுப்புகள் புக்கிங் அடிப்படையில் இலவசமாக கிடைக்க பெறூம். இதற்க்கு புரோக்கர்கள் தேவை இல்லை.

அது மட்டுமல்ல உங்கள் அல்லது உங்களது மைனர் மற்றும் தெரிந்தவர்களின் உடம்பை மருத்துவ ஆய்வுக்கு கூட நீங்கள் கொடுத்து உதவலாம். 

இந்தியாவிலே தமிழ் நாட்டில் தான் அதிக உடல் மற்றும் உறுப்பு தானம் செய்யும் நெ 1 திகழ்கிறது. தானம் செய்யும் அட்டை படிவம் மற்றூம் மற்ற எல்லா அப்ளிகேஷனும் இனைத்துள்ளேன் பலன் பெருங்கள். ஒன்றும் பெறாத பேப்பர் கூட ரீசைக்கிள் ஆகி இன்னொரு வாழ்வை கொடுக்கும்போது நம் கூட நம்மின் உடலையோ அல்லது உடல் பாகங்கலையோ இல்லாதவர்களுக்கு வழங்கலாம்.

Hyper Links

To Donate your body after death & Government Order - http://www.dmrhs.org/tnos/orders-of-tn-govt/donation-of-body-after-death-procedure-for-donation

FAQ about Each and Every Organ Donation and how it is used - http://www.dmrhs.org/tnos/faq-for-public

Organ Waiting List Details - http://tnos.org/

Approved Hospitals for Organ Donors & Organ Transplants by Govt - http://www.dmrhs.org/tnos/notifications/list-of-approved-hospitals-for-kidney-transplantation-as-on-13-02-2012 (Please follow the same link for all organs)

Please fill your form and send it by email OR post :

Cadaver Transplant Program,
165 A, Tower Block I, 6th Floor, [Next to Bone Bank],
Government General Hospital
Chennai – 600 003

E-Mail : organstransplant@gmail.com

Phone : (91)44 25305638

Fax : (91)44 25363141

குடியரசு தினம் என்பதன் விளக்கம் -

மணக்கால் அய்யம்பேட்டை | 1:52 PM | Best Blogger Tips
netaji subhash chandra bose க்கான பட முடிவு
குடியரசு தினம் என்பதன் விளக்கம் -

ஒவ்வொரு வருடமும், சனவரி திங்கள் 26 நாள் அன்று, இனிப்பு வழங்கி விடுமுறை அளிக்கப்படும். இவை மட்டுமே, என் அகவை 20 வரை... என் மனதில் நான் வைத்திருந்த குடியரசு தினத்தை பற்றிய பிம்பங்கள். ஒரு நாள், நூலகத்தில் சட்ட மாமேதை முனைவர் அம்பேத்கார் பற்றிய புத்தகத்தை படிக்க நேர்ந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்ற அவர் எடுத்த முயற்சிகள் மற்றும் சட்டம் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்கள் பற்பல அறிய நேர்ந்தது.
netaji subhash chandra bose க்கான பட முடிவு

1947 ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 15 ம் நாள், ஆங்கிலேயர்கள் வெளியேறி.. நமக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், பல இனம், சாதிகள் மற்றும் மொழிகளால் வேறுபட்ட மக்கள் இருக்கும் இந்திய தேசம், மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் சரியாகப் பிரிக்கப்படாமலும் மற்றும் பெயரிடப்படாமலும் இருந்தது. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திய பிராந்தியங்களை மற்றும் அதன் எல்லைகளை ஒழுங்கு படுத்தும் முயற்சி மேற்கொண்டார். அதன் படி, இரண்டரை ஆண்டுகள் அயராது உழைத்து, 1950 இந்திய தேசத்தைப் பல மாநிலங்களாக பிரித்து பெயரிட்டார். இவ்வாறாக, இந்திய ராணுவம், தரைப்படை, கப்பல் படை மற்றும் விமான படை ஆகியவை உருவாக்கப்பட்டது. அவைகள், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் காவலுக்கு அமர்த்தப்பட்டன. பண்டைய இந்தியா, முறையே பாகிஸ்தான், வங்காளதேசம், அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள் மற்றும் தற்போதைய இந்தியா என பிரிக்கப்பட்டது.
modi republic க்கான பட முடிவு
மக்களாட்சி செவ்வனே நடக்க... சட்டங்கள் அவசியமாக இருந்தது. அதனை இயற்றும் பொறுப்பை, சட்ட மாமேதை முனைவர் அம்பேத்கார் ஏற்றார். அவர் இரண்டு வருடம் கடினமாக உழைத்து, இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக புதிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஆண்டு கொண்டு வந்தார். இவர் இயற்றிய சட்டம், மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தியாவின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இவர் இயற்றிய சட்டங்கள் உதவியது.

modi republic க்கான பட முடிவு
முடிவில், இந்திய தேசியக் கொடி, தேசியச் சின்னம், தேசிய மொழி, தேசியப் பறவை, தேசியப் பண் மற்றும் தேசிய மலர் ஆகியவை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்திய நாட்டின் முதல் குடிமகன் (சனாதிபதி) மற்றும் இந்திய பிரதமர் மக்களின் ஆதரவுடன் நியமிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கென, ஆளுனர் மற்றும் சட்டபேரவை தலைவர், முதலமைச்சர் உருவாக்கப்பட்டார்கள்.
modi republic க்கான பட முடிவு
இவ்வாறு இந்தியா, "உலக அரங்கில் தனக்கென ஒரு அடையாளத்தை அடைந்த நாளை நாம் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக" கொண்டாடுகிறோம்.


  Thanks for
1. மணிகண்டன் பாரதிதாசன்
2. தமிழ் கவிதை [Tamil Kavithai] ( FACEBOOK)