பெரும்பாலானவர்கள் சாப்பிட்டு முடித்ததும் அடிவயிற்று வலி மற்றும் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் மலம் கழிப்பதற்கு முன்னால் வயிற்றைப் பிசைவது போல ஒரு உணர்வு இருக்கும்.
ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் மிக அதிகம். இதற்குக் காரணம் நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் வேலையைக் குடல் சரியாக செய்ய முடியாததால் தான்.
நம்முடைய உடலில் தேங்குகின்ற உணவுக் கழிவுகளை வெளியேற்றுவதுதான் குடலின் மிக முக்கிய வேலை. அது சரியாக நடக்காத போதுதான் இந்த ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் ஆகியவை உண்டாகின்றன. ஆம். உடலில் இருந்து டாக்சின்களை வெளியேற்றுவது அவ்வளவு முக்கியம். அதை குடல் சரியாகச் செய்ய வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும் என்று முதலில் யோசிக்க வேண்டும்.
இதை ஆரம்ப காலத்திலேயே வீட்டிலேயே ஜீரணக் கோளாறுகளையும் கழிவுகளை வெளியேற்றுவதையும் சரி செய்து கொண்டால், எந்த பிரச்சினையும் இருக்காது. இல்லையென்றால் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாகப் பழுதாக ஆரம்பித்துவிடும். சரி. வீட்டிலேயே குடலை சுத்தம் செய்து எப்படி கழிவுகளை வெளியேற்றலாம் என்று பார்ப்போம்.
குடலை சுத்தம் செய்வதற்கு பெரிதாக நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. குடலில் எவ்வளவு கழிவுகள் இருந்தாலும் கூட, இந்த ஒரு ஜூஸ் மட்டும் குடித்தாலே போதும். கழிவுகள் முழுக்க வெளியேறிவிடும். இதில் மிக முக்கியமான விஷயமே இது மூன்று ஜூஸ்களின் கலவையை சேர்த்துக் குடிப்பது தான்.
குடலை சுத்தம் செய்வதற்கு அடிப்படையான மூன்று ஜூஸ்கள் உண்டு. அது ஃபிரஷ்ஷான லெமன் ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், இஞ்சி சாறு, உப்பு மற்றும் வெதுவெதுப்பான நீர் ஆகியவை தான் உங்களுடைய குடலை முழுமையாக சுத்தம் செய்துவிடும். இதை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள் அரை கப் ஆப்பிள் ஜூஸ் 2 டீஸ்பூன் ஃபிரஷ் லெமன் ஜூஸ் 1 டீஸ்பூன் இஞ்சி சாறு அரை ஸ்பூன் உப்பு அரை கப் வெதுவெதுப்பான நீர் செய்முறை நீளமான டம்ளர் எடுத்துக் கொண்டு, அதில் 4 ஸ்பூன் அளவுக்கு சுத்தமான வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரை மூன்று அவுன்ஸ் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை கொதிக்க வைக்கக் கூடாது. வெதுவெதுப்பாக தான் இருக்க வேண்டும். அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஆப்பிள், இஞ்சி, லெமன் ஆகிய மூன்று ஜூஸ்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், மதிய உணவுக்கு முன்பும், மதிய உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு முறையும் என மூன்று முறை குடிக்க வேண்டும்.
மூன்று முறை மட்டும் என்பது கட்டாயம் இல்லை. இடைவெளிகளிலும் குடிக்கலாம். கிட்டதட்ட ஒரு நாளைக்கு 6 முதல் 8 கிளாஸ் வரையிலும் குடிக்கலாம். இப்படி குடிப்பதால் இரவில் தூக்கத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படியல்ல. மாலை நேரத்துக்குள்ளாகவே அந்த ஜூஸில் உடலுக்குத் தேவையான ஆற்றல் உறிஞ்சப்பட்டு, மீதி சிறுநீராக வெளியேறிவிடும்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷