கண்டந்திப்பிலி ரசம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:02 PM | Best Blogger Tips

நம் இன்றைய வாழ்வில் உடலுக்கு நன்மை தராத எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவையும் தான் அதிகமாக எடுத்துக் கொண்டு வருகிறோம். அப்படிப்பட்ட சூழலில் வாரத்தில் ஒரு நாளாவது இதுபோன்ற மருத்துவ குணமுள்ள உணவை எடுத்துக் கொண்டால் நல்லது. இது ஒரு மருத்துவ குணமுள்ள ரசம். ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, உடல்வலி, அஜீரணம் இவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை சாப்பிடலாம். மற்றவர்களும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்

கண்டந்திப்பிலி – ஒரு மேசைக்கரண்டி
தக்காளி – ஒன்று
கொத்தமல்லி – ஒரு கொத்து
வேக வைத்த பருப்பு – கால் கப்
புளி தண்ணீர் – அரை கப்
உப்பு – ஒன்றரை தேக்கரண்டி
மிளகு, சீரகப் பொடி – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

தக்காளியை கழுவி விட்டு நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கொத்தமல்லியை ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.

கண்டந்திப்பிலியை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு எண்ணெய் சட்டியில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைப் போட்டு கரண்டியை வைத்து நன்கு மசித்து விடவும்.

அதனுடன் மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றரை தேக்கரண்டி கண்டந்திப்பிலிப் பொடி போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.

ரசம் ஒரு கொதி வந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை அதனுடன் சேர்த்து கலக்கி விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். பருப்பு சேர்ப்பதால் ரசம் நன்கு சுவையாக இருக்கும்.
ரசம் 3 நிமிடம் நன்கு கொதித்து நுரைத்து வரும் போது மேலே கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

பிறகு இரும்பு குழிக்கரண்டி அல்லது சிறிய வாணலியில் 2 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.

கடுகு வெடித்ததும் மீதம் உள்ள கண்டந்திப்பிலி பொடியை போட்டு தாளித்து அதை ரசத்தில் ஊற்றி அதே கரண்டியை வைத்து ரசத்தை கலக்கி விடவும்.

இப்போது சுவையான கண்டந்திப்பிலி ரசம் தயார். உடல் அலுப்பினை போக்குவதற்கு இந்த கண்டந்திப்பிலி ரசம் கைகண்ட மருந்து.

உணவே மருந்து - வெந்தயம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:01 PM | Best Blogger Tips

Photo: உணவே மருந்து - வெந்தயம் 

வெந்தய களி:- வெந்தய சாலட்- வெந்தய பொங்கல்:

மூலிகைகள் நோய்களை களைவதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் உதவுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருளில் ஒன்றான வெந்தயம் பல சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் அடக்கி வைத்துள்ளது.

வெந்தயம் என்ற வார்த்தையின் பிற்பகுதி ``அயம்'' என்று உள்ளதற்கேற்ப வெந்தயத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.

வெந்தயத்தில் 13-7 கிராம் ஈரப்பதம், 26 கிராம் புரதம், 5.8 கிராம் கொழுப்பு, 3.0 கிராம் தாதுக்கள் 7.2 கிராம் நார்சத்து, 1.60 மில்லி கிராம் கால்சியம், இரும்பு 65 மில்லி கிராம் உள்ளது. இதை தவிர வெந்தயத்தில் ``பைட்டோ ஈஸ்ட்ரால்'' என்ற சத்து உள்ளது.

ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களில் காணப்படும் இனப்பெருக்கத்திற்கு உதவும் ஹார்மோன். இது சில வகை தாவரங்களிலும் காணப்படும் இதைத் தான் ``பைட்டோ ஈஸ்ட்ரால்'' என்போம். மேலும் இதில் டயோஸ்கெனின் என்ற ஸ்டீராய்ட் காணப்படுகிறது. அரிய வகைசத்துக்கள் அடங்கிய வெந்தயம் பல நோய்களுக்கு மருந்தாகிறது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்பால் பெருகுவதற்கு வெந்தயம் சிறந்த மருந்து. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கநாடுகளில் குழந்தை பெற்ற பெண்கள் தங்கள் தினசரி உணவில் வெந்தயம் சேர்த்து கொள்கிறார்கள்.

வெந்தயத்தில் உள்ள ஸ்டீராய்டு பெண்களின் மார்பகங்களின் வளர்ச்சிக்கு பெரும் துணை புரிகிறது. ஆண்களுக்கும் மிகுந்த சக்தி யளிக்கக் கூடியதாக உள்ளது, வெந்தயம் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இது நன்மை செய்யும் கொழுப்பு அளவை குறைப்பதில்லை.

இதில் உள்ள ``லெசிட்டின்'', கோலைன் என்ற சத்துக்கள் மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தெளிவாக சிந்திக்க உதவுகிறது, வயதை தடுக்க உதவுகிறது. முக்கியமாக புரதச்சத்தும் நிறைந்துள்ளது அதனால் தோல், மற்றும் தலைமுடியை பாதுகாக்கின்றது. வெந்தயம் கசப்பு சுவையுள்ளது. உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது. பெண்களுக்கு உடல் சூட்டால் தோன்றக் கூடிய நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு, மற்றும் வெள்ளைப்படுதலுக்கு சிறந்த மருந்து. பெண்கள் பருவம் எய்தியது முதல் மாதவிடாய் நிற்கும் காலம் வரை வெந்தயம் அவர்களுக்கு எல்லா காலகட்டங்களிலும், மருந்தாக பயன் அளிக்கின்றது. வயிற்று சூட்டினால் உண்டாகும் வயிற்றுப்போக்குக்கு இது மிக நல்ல மருந்து. இது கிழுகிழுப்பு தன்மை வாய்ந்ததால், உடல் சூட்டையும், வறட்சியையும் நீக்கும்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் அவதிப்படும் வலிக்கு 2 தேக்கரண்டி வெந்தயத்தை நன்கு வறுத்து நீர் கலந்து கொதிக்க வைத்து, பின் வடிகட்டி தேன் கலந்து சாப்பிட, வலி உடன் குறையும், குழம்பு தாளிக்கவும் இட்லி, தோசைகளில் நாம் வெந்தயம் பயன்படுத்துகிறோம். வெந்தயக் குழம்பும் பலர் வீடுகளில் செய்யும் பழக்கம் உள்ளது.

கிராமங்களில் பிரசவித்த பெண்களுக்கும், பருவம் அடைந்த இளம் பெண்களுக்கும். வெந்தயக்களி செய்து கொடுக்கும் பழக்கம் உள்ளது.

வெந்தய களி:

வெந்தயம் - 100 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
கருப்பட்டி - 100 கிராம்
நல்லெண்ணை - தேவையான அளவு
நெய் - சிறிதளவு.

செய்முறை:

1. வெந்தயத்தை நன்கு வறுத்து பொடியாக செய்து கொள்ள வேண்டும்.
2. அரிசி மாவை நன்கு வறுத்து கொள்ள வேண்டும்.
3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை கரைய விட வேண்டும்.
4. கரைந்ததும், நீரை வடிகட்டி நன்கு கொதிக்கவிட வேண்டும்.
5. பின் வெந்தயம், அரிசி மாவை கலந்து நன்கு கிளற வேண்டும், மாவு நன்கு வேகும் வரை நன்கு கிளறவும், சிறிது, சிறிதாக நல்லெண்ணையை ஊற்றவும்.
6. பக்குவம் வந்த பின் நெய் ஊற்றவும். இந்த வெந்தய களியை தினமும் காலை பிரசவித்த பெண்கள் சாப்பிட்டு வர, பால் பெருகும். இளம் பெண்களின் மார்பக வளர்ச்சி மற்றும் வெள்ளைப்படுதலுக்கும் சிறந்த உணவாகிறது.

வெந்தய சாலட்

வெந்தயம் - 100 கிராம்
எலுமிச்சம் பழம் - 1
மிளகுத் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

வெந்தயத்தை ஒரு நாள் இரவு ஊற வைத்து, பின் வடிகட்டி சிறிது நேரம் ஒரு உலர்ந்த துணியில் பரப்பி வைக்கவும். பின்பு ஒரு ஈர துணியில் கட்டி தண்ணீர் தெளித்து முளைக்க வைக்க வேண்டும். முளைக்க வைக்கும் பொழுது கசப்பு குறைகிறது. முளைக்கும் பொழுது வைட்டமின் `சி' சத்து அதிகரிக்கிறது 2 நாள் முளைக்க வைப்பது சிறந்தது. இந்த முளையுடன் எலுமிச்சபழசாறு, மிளகு தூள் உப்பு கலந்து சாலட் ஆக சாப்பிடலாம்.

தயிர் பச்சடி

முளை விட்ட வெந்தயத்துடன், கடைந்த தயிர் கலந்து, சிறிது உப்பு சேர்த்து தயிர் பச்சடியாகவும் சாப்பிடலாம், கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொள்ளவும்.

வெந்தய பொங்கல் 1:

வெந்தயம் - சிறிதளவு (ஊற வைத்துக் கொள்ளவும்)
பச்சரிசி - 100 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
நெய் - தாளிக்க
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.

பச்சரிசியை வறுத்துக் கொள்ளவும், ஊற வைத்த வெந்தயத்தை சேர்த்து 3 மடங்கு நீர் விட்டு வேகவைக்கவும், வெந்தயத்துடன் மிளகு, சீரகம், இஞ்சி, தாளித்து கொள்ள வேண்டும். இதை கொத்தமல்லி, புதினா சட்னியுடன் சூடாக சாப்பிடலாம்.

வெந்தயப் பொங்கல் 2:

பச்சரிசி --250கிராம்
வெந்தயம் --2டாஸ்பூன்
முழு பூண்டு --2
தேங்காய் --1

முதலில் வெந்தயத்தைப் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பூண்டையும் உரித்துக் கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் வைத்துத் தண்ணீர் நன்றாகக் கொதிநிலை வந்ததும் அரிசி, வெந்தயம், பூண்டு மூன்றையும் ஒன்றாக வேகவிடவும். நன்றாக பசை போல் வெந்ததும் உப்பைத் தேவைக்கேற்ப போட்டு இறக்கி விடவும். பிறகு தேங்காயைப் பால் எடுத்துப் பிழிந்து பொங்கலில் ஊற்றிக் கிளறவும். சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

வெய்யில் காலத்தில் இது மிகவும் உஷ்ணத்தைத் தவிர்க்கும். மலச்சிக்கலைத் தவிர்க்கும்

சூடு தணிக்கும் வெந்தயக் கீரை
நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக் கீரை.
இதில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உண்டு. பல விதமாக இதனைச் சமையலில் சேர்க்கலாம். துவரம் பருப்புடன் வேக வைத்து கூட்டு செய்யலாம். புளிசேர்த்து வேக வைத்து கூட்டு தயாரிக்கலாம். காரக் குழம்பு செய்யவும் வெந்தயக் கீரையைப் பயன்படுத்தலாம். இக்கீரையுடன் புளி, மிளகாய் சேர்த்து கடைந்தும் உணவுடன் சேர்த்தும் கொள்ளலாம்.

வெந்தயக் கீரை ஜீரண சக்தியை சீராக்குகிறது. சொறி சிரங்கை நீக்குகிறது. பார்வைக் கோளாறுகளைச் சரி செய்கிறது. இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோயும் குணமடையும் என்று மூலிகை மருத்துவத்தில் கூறப்படுகிறது.

இந்தக் கீரையை வேக வைத்து, அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டு வந்தால் மலச் சிக்கல் தொடர்பான அத்தனை பிரச்சினை களும் நீங்குகின்றன.

வெந்தயக் கீரையை வெண்ணை யிட்டு வதக்கி உண்டு வந்தால் பித்தக் கிறுகிறுப்பு, தலைச் சுற்றல், வயிற்று உப்புசம், பசியின்மை, ருசி யின்மை முதலியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட் டுப் படும்.

வெந்தயக் கீரை நல்லதொரு பத்திய உணவு. இதை அரைத்து நெய் சேர்த்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு இடுப்பு வலி தவிர்க்க முடியாத ஒன்று. இவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய் பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கி விடும்.

மூல நோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையுடன் அத்திப்பழம், திராட்சை, சீமைப் புளி மூன்றையும் சேர்த்து கசாயம் செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி, மூக்கடைப்பு நீங்கும்.

ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையை குறைக்கும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. இக்கீரையை தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து பசியைத் தூண்டிவிடும். சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளையும் பலப்படுத்தும். வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி போன்ற நோய்களைக் குணப்படுத்துகிறது.

வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெருத்த உடல் இளைக்கும்.

நன்றி ஆரோக்கியமான வாழ்வு

அவகோடா சப்பாத்தி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:00 PM | Best Blogger Tips
Photo: அவகோடா சப்பாத்தி 

தேவையான பொருட்கள்: 

அவகோடா பழம் - 6 
கோதுமை மாவு - 1 கப் 
சீரகத்தூள் - அரை ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
ப.மிளகாய் - 1 
கொத்தமல்லி - சிறிதளவு 
எண்ணெய் - தேவையான அளவு  

செய்முறை: 

• அவகோடா பழத்தை தோல்,கொட்டையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 

• ப.மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 

• ஒரு பாத்திரத்தில் அவகோடா பழத்தின் சதை, கோதுமை மாவு, ப.மிளகாய், கொத்தமல்லி, சீரகத்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். 

• பின்னர் இந்த மாவை சப்பாத்திகளா உருட்டி தோசைக்கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். 

• இப்போது சுவையான, சத்தான அவகோடா சப்பாத்தி ரெடி.

பிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிறேன். என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:00 PM | Best Blogger Tips
Photo: பிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிறேன். என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?

மருந்துப் பொருட்களில் மிகவும் உயர்ந்த ஒரு பொருள் கடுக்காய். 

கடுக்காயில் மருத்துவ குணங்களுடன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய குணங்களும் நிரம்பியுள்ளன.
சாதாரணமான இரண்டு கடுக்காய்களை அதனுள்ளே இருக்கக் கூடிய கொட்டையை நீக்கி, தோல் சதையுடன் கூடிய பகுதிக்குச்  சம அளவு கரும்பு வெல்லம் கலந்து இரண்டையும் பற்களால் கடித்து தினமும் காலையில் உணவுக்கு முன் ஒரு வேளை மட்டும் சுவைத்துச் சாப்பிடலாம். வெல்லத்துக்குப் பதிலாக தேனும் கலந்து சாப்பிடலாம். கடுக்காயின் பாதி அளவு சுக்கு, கடுக்காயின் கால் பங்கு திப்பிலி, கடுக்காயின் கால் பங்கு இந்துப்பு என்ற அளவிலும் சாப்பிடலாம். இதில் சுக்கு - திப்பிலி - இந்துப்பு மூன்றையும் சூரணம் செய்து, சூரணம் செய்யாத கடுக்காய்த் தோலுடன் ஒன்றாகக் கலந்து கடித்துச் சாப்பிட்டால் பிணியின்றி இன்பத்துடன் நீண்டகாலம் வாழும் பாக்கியம் கிடைக்கும். பருவ காலங்களுக்குத் தகுந்தபடியும் மேற்குறிப்பிட்ட மருந்து சரக்குகளைக் கடுக்காயுடன் கலந்து சாப்பிட்டாலும் மேலும் பல நன்மைகளைப் பெறலாம்.
 
வாதம் எனும் உடல் தோஷம் மழைக்காலத்தில் இயற்கையாகவே கூடுவதால், காலையில் எழும்போது தசைப் பிடிப்பு, மூட்டு வலி, பூட்டுகளில் வீக்கம் வலி போன்றவை அதிகம் தென்படும். இரண்டு கடுக்காய் தோலுடன் இந்துப்பு சேர்த்துச் சாப்பிட்டால், இந்த உபாதைகள் நன்கு குறையும்.
 
பித்தம் எனும் தோஷம் மழைக்காலத்துக்கு அடுத்த பருவகாலமாகிய இலையுதிர்க் காலத்தில் உடலில் கூடுகிறது. இதனால் உடல் சூடு அதிகமாகி, வாய்ப்புண், கண்ணெரிச்சல், சிறுநீர் எரிச்சல், வியர்வை கூடுதல் போன்ற உபாதைகள் கூடும். பழுப்புச் சர்க்கரையுடன் கடுக்காய்த் தோலைச் சாப்பிட்டால், இந்த பித்த தோஷம் அமைதியாகிவிடும்.
 
முன் பனிக் காலத்தில் கபதோஷம் வளர்ந்து, தலை பாரம், தலைவலி, உடல் கனம், பசி மந்தம் போன்றவை தோன்றும். சுக்குப் பொடியுடன் கடுக்காய்த் தோல் சாப்பிட்டால் எல்லா உபாதைகளையும் தவிர்க்கலாம். கபம் உறையும். கடும்பனிக் காலத்தில் திப்பிலி பொடியுடனும், நெஞ்சிலிருந்து கபம் உருகி வயிற்றில் பசியைக் குறைக்கும், வசந்தகாலத்தில் தேனுடனும், கபம் வறண்டு போகும் கடும் கோடையில் வெல்லத்துடனும் கடுக்காய்த் தோலைச் சாப்பிடுவது உடலைப் பிணியின்றிக் காக்கும். சிறந்த பயனைத் தரும் என்று பிருந்த மாதவர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். இதில் உணவுக் கட்டுப்பாடு என்றும் எதுவும் கிடையாது. தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள், ஜீரண உறுப்புகளைச் சார்ந்த நோய்கள் ஒன்றும் அணுகாது என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.
 
துன்பத்தைத் தரும் சில பிணிகளாகிய பசியின்மை, வயிறு உப்புசம், ருசியின்மை, புளித்த ஏப்பம், மலச்சிக்கல் போன்ற அஜீரண நோய் நிலைகளில் கடுக்காய் தோல் 9 கிராம், சுக்கு, திப்பிலி, இந்துப்பு வகைக்கு 3 கிராம் சேர்த்துச் சாப்பிட உகந்தது. இதில் திப்பிலியை மட்டும் லேசாய் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நான்கு சரக்குகளையும் ஒன்றாய் இடித்துத் துணியால் சலித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். கொஞ்சம் சர்க்கரை சேர்த்துத் தண்ணீருடனோ, வெறும் தேனுடன் குழைத்தோ சாப்பிடலாம். வெறும் வெந்நீருடனும் சாப்பிடலாம்.
உடலில் பலம் வெகு நீண்ட காலம் குன்றாமல் நிலைத்திருக்க, சுமார் 2 கிராம் கடுக்காய்த் தோல் சிறு சிறு துண்டங்களாக்கி சுமார் 15 மி.லி. அளவு பசு நெய்யுடன் நன்றாகப் பொரித்து ஆறிய பிறகு அந்தக் கடுக்காய்த் தோலை கடித்துச் சாப்பிட்டு, அந்த நெய்யையும் உடனே குடித்தால் போதுமானது.
 
கடுக்காயைக் கொண்டு தயாரிக்கப்படும் சில ஆயுர்வேத மருந்துகளாகிய அகஸ்திய ரஸாயன லேஹ்யம், தசமூலஹரீதகீ லேஹ்யம், அபயாமிருத ரஸாயனம், திரிபலா சூரணம் போன்ற தரமான ஆயுர்வேத மருந்துகளை, ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட்டு வந்தாலும், நீங்கள் கேட்ட கேள்விக்கான சிறந்த விடையாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்:
By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை- 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771

பக்கவாதத்தைக் குணமாக்கும் கொண்டைக் கடலை மற்றும் சோயாபீன்ஸ் (நரம்பு மண்டலம /இரத்த பாதிப்பு)

மணக்கால் அய்யம்பேட்டை | 1:59 PM | Best Blogger Tips
Photo: பக்கவாதத்தைக் குணமாக்கும் கொண்டைக் கடலை மற்றும் சோயாபீன்ஸ்
(நரம்பு மண்டலம /இரத்த பாதிப்பு)

சோயாபீன்ஸ் மற்றும் வெள்ளைக் கடலையில் (கொண்டை கடலை அல்லது மூக்கு கடலை) உள்ள சத்துகள் ஸ்டிரோக் (Strokes) எனப்படும் பக்கவாதம் உள்ளிட்ட வாதம் தொடர்புடைய நரம்பியல் நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று தெரிய வந்துள்ளது.

உணவில் அதிகளவில் சோயாபீன்ஸ், கொண்டைக் கடலை உள்ளிட்ட புரதச் சத்துகள் நிறைந்த பயறு வகைகளை எடுத்துக் கொள்வதால், அவற்றில் காணப்படும் இஸோஃப்ளேவோன் (isoflavone), பக்கவாத நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதாக லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு இந்த வகை பயறுகளை கொடுப்பதால், அவர்களுக்கு நல்ல குணம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

மூளையின் நரம்பு மண்டலத்தில் இரத்தம் பயணிப்பதில் பாதிப்பு ஏற்படுவதாலேயே பக்கவாதம் ஏற்படுகிறது. மூளைக்கு இரத்தம் சென்று வருவதில் ஏற்படும் பாதிப்பினாலேயே இதுபோன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்துவோர், பயறு வகைகளுடன் கூடிய சமச்சீர் உணவு வகைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆய்வுக்குத் தலைமை வகித்த ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹங்-ஃபேட் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய இதய மருத்துவ இதழில் அவரது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

****************************************

ஆரோக்கியம் தரும் கொண்டைக் கடலை ஹம்முஸ் (hummus)

நன்றி:
சமையல் அட்டகாசங்கள் -  திருமதி ஜலிலா கமால் 

http://samaiyalattakaasam.blogspot.ae/2010/05/hummus.html?m=1

அரபிகளின் உணவுகளில் இந்த குபூஸ் மற்றும் சிக்கன்,பிலாபிலுக்கு இந்த ஹமூஸ் இல்லாமல் இருக்காது.

இது பல சுவைகளில் தயாரிக்கலாம். அதில் சுலபமுறை இது.

தேவையானவை:

கொண்டை கடலை - 100 கிராம் (அரை டம்ளர்)
பூண்டு - இரண்டு பல்
லெமன் - ஒன்று
(தஹினா) வெள்ளை எள் - முன்று தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
வெள்ளை மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் -சிறிது
ஆலிவ் ஆயில் - முன்று மேசை கரண்டி

செய்முறை:

1.கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும்.

2.வெந்த கொண்டைகடலையை ஆறியதும் பூண்டு, வெள்ளை எள் எலுமிச்சை சாறு உப்பு தேவையான அளவு தண்ணீர் ( கடலை வெந்த தண்ணீரே கூட பயன் படுத்தலாம்) சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

3.ரொம்ப கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

4. கடைசியாக ஆலிவ் ஆயில் கலந்து பப்பரிக்கா பவுடர் கொண்டு அலங்கரிக்கவும்

5. சுவையான ஹமூஸ் ரெடி

குறிப்பு

1.இது நம் சுவைக்கேற்ப தயாரிக்கலாம், ஆனால் கலர் தான் சிறிது வித்தியாசப்படும்.

2. வெள்ளை மிளகு இல்லை என்றால் சிறிது மிளகாய் தூள், (அ) கருப்பு மிளகும் சேர்த்து கொள்ளலாம்.

3. இதையே சிறிது தயிர் வெங்காயம் சேர்த்து கொஞ்சம் நீர்க்க அரைத்தால் பிலாபில் சாண்ட்விச், சவர்மா சாண்ட்விச்சுக்கு பயன் படுத்தும் சாஸ் ஆகவும் பயன் படுத்தலாம்.

4. கைபடாமல் பிரிட்ஜில் வைத்து என்றால் நான்கு நாட்கள் பயன் படுத்தலாம்.

5. அடிக்கடி ஹமூஸ் சாப்பிடுபவர்கள் எள் பேஸ்ட் தனியாகவே விற்கிறது கடைகளில் அதை வாஙகி வைத்து சுலபமாக பூண்டு பொடி சேர்த்தும் தயாரிக்கலாம்.

6. வெளிநாடுகளில் கொண்டைகடலை கூட டின்னில் ரெடி மேட் கிடைக்கிறது. நான் இதில் எல்லாமே பிரெஷ் தான் பயன் படுத்தி உள்ளேன்.

7. புளிப்பு சுவை அதிகம் விரும்பதவர்கள் அரை பழம் பிழிந்து கொண்டால் போதுமானது.

8. இது குபூஸுக்கு என்றில்லை சப்பாத்தி ரொட்டி பூரிக்கும் தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.

படங்கள்: 
http://www.vegrecipesofindia.com

http://www.vegrecipesofindia.com/
 
நன்றி ஆரோக்கியமான வாழ்வு

வரகு தம் பிரியாணி

மணக்கால் அய்யம்பேட்டை | 1:57 PM | Best Blogger Tips
Photo: வரகு தம் பிரியாணி

வரகரிசி - 2 கப், கேரட், 
பட்டாணி, பீன்ஸ், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு (பொடியாக நறுக்கியது) - ஒன்றரை கப், 
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - அரை கப், 
பொடியாக நறுக்கிய தக்காளி - கால் கப், 
எலுமிச்சம்பழ ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன், 
எண்ணெயும் நெய்யுமாகச் சேர்த்து - கால் கப், 
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் அல்லது காரத்துக்கேற்ப, 
உப்பு - தேவையான அளவு, 
தண்ணீர் - மூன்றரை கப், 
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்.
அரைப்பதற்கு...
பட்டை -  ஒரு பெரிய துண்டு, 
கிராம்பு - 3, புதினா, 
கொத்தமல்லித் தழை - சிறிது, 
இஞ்சி - பெரிய துண்டு, 
பூண்டு - 7 (தோலுடன்).
தாளிப்பதற்கு...
பிரியாணி இலை - 1, 
பட்டை - ஒரு சிறிய துண்டு, 
கிராம்பு - 2.

எப்படிச் செய்வது?

வரகரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெயும் நெய்யுமாக உள்ளதில் பாதி  ஊற்றி தாளிப்புப் பொருள்களைச் சேர்க்கவும். வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறி, காய்கறிகளைச் சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கிய பின் தக்காளி சேர்க்கவும். தக்காளி உடையாமல் கிளறி தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து  எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். 

நன்கு வதங்கிய காய்களில் தண்ணீர் சேர்த்து, கொதி வந்ததும் உப்பும் எலுமிச்சம்பழச் சாறும் சேர்த்து பிறகு அரிசியைப் போடவும். பெரிய தீயில் 5  நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை குறைத்து சிம்மில் 15 நிமிடங்கள் வைக்கவும். இடையில் இரு முறை மீதமிருக்கும் நெய்யும் எண்ணெயும் சேர்த்து  அரிசி உடையாமல் கலந்துவிட வேண்டும். இப்போது முக்கால் பதம் வெந்திருக்கும். இனி தம் போடும் முறை... 

தம் போடும் முறை

பாத்திரத்தின் வாயை ஒரு துணியில் கட்டி அதன் மேல் ஒரு தட்டு வைத்து எரிதணல் போடலாம். எரிதணல் கிடைக்காதவர்கள் நன்றாகக் கொதிக்கும்  தண்ணீரை பாத்திரத்துடன் அந்தத் தட்டின் மேல் வைக்கலாம் அல்லது சூடான குக்கரை கூட வைக்கலாம். அதிகபட்சம் 10 நிமிடங்கள் போதும்.இறுதியாக பிரியாணியை சிறிது நெய்விட்டு ஒரு முறை கிளறி தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்.

பிரியாணி செய்முறையில் இது எளிய முறை. குக்கரில் வைத்தால் குழைந்து கட்டியாகி விடும். அதே அளவு நேரத்தில் தம் பிரியாணி  செய்துவிடலாம். 

தண்ணீரின் அளவு என்பது பொதுவாக ஒன்றுக்கு இரண்டு இருக்கும். ஆனால், உதிராக பிரியாணி வரவேண்டும் எனில் மொத்த  அளவில் அரை கப் குறைத்தால் போதும். 

புதினா, கொத்தமல்லி அரைத்து விடுவதால் குழந்தைகள் அதை ஒதுக்குவதைத் தவிர்க்கலாம்.

அதிக மசாலா வாசனை பிடித்தமானவர்கள் ஏலக்காயைக் கூட தாளிப்பில் சேர்க்கலாம்.

வல்சியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:56 PM | Best Blogger Tips
Photo: வல்சியம்

பச்சரிசி மாவு - 400 கிராம் 
வெல்லம் - அரை கிலோ 
அவல் - 150 கிராம்
பாசிப்பயறு - 150 கிராம்
நேந்திரம் பழம் - 2
உப்பு, வாழையிலை - தேவையான அளவு.

வெல்லத்தை உடைத்துப் பாகு காய்ச்சுங்கள். அவலை ஊற வையுங்கள். பாசிப்பயிறை குழைய வேக வையுங்கள். நேந்திரம் பழத்தை கையால் மாவாக மசித்துக் கொள்ளுங்கள். 

வாழையிலையை சிறிது சிறிதாக சதுர வடிவத்தில் வெட்டியெடுத்துக் கொள்ளுங்கள். வெல்லப்பாகில் பாசிப்பயிறு, பழம், அவலைப் போட்டு கெட்டியாக பூரணம் போல பிசைந்து கொள்ளுங்கள். 

அரிசி மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி இடியாப்ப மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளுங்கள். வாழை இலையில் மாவை அள்ளிவைத்து இலை அகலத்துக்கு பரப்பி, நடுவில் பூரணத்தை அள்ளிவைத்து, மடித்து செருகி, இட்லிச் சட்டியில் வேக வையுங்கள். இலை பிரிந்து விடுவது போலிருந்தால் சிறிய தென்னை ஓலையால் கட்டி வேக வைக்கலாம். வாழையிலை வாசனையும் பூரணத்தின் மணமும் நாசியில் உரசும்போது எடுத்துச் சுவையுங்கள்!

சாமை கல்கண்டு பாத்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:55 PM | Best Blogger Tips
Photo: சாமை கல்கண்டு பாத்

சாமை அரிசி - 1 கப், 
பயத்தம் பருப்பு - அரை கப், 
நெய் - இரண்டு டீஸ்பூன், 
கல்கண்டு - முக்கால் கப், 
திராட்சை, முந்திரி - 1 டேபிள்ஸ்பூன், 
தண்ணீர் - 4 கப்

எப்படிச் செய்வது?

பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். சாமை அரிசியையும் பருப்பையும் கழுவி குக்கரில் 6 விசில் வேகவிடவும். கல்கண்டை  மிக்ஸியில் பொடித்து வைக்கவும். கடாயில் நெய் காயவைத்து திராட்சை, முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும். சாமை சாதத்துடன் கல்கண்டு  பொடியைப் போட்டு நன்கு கிளறவும், முந்திரி, திராட்சை சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது நெய் சேர்க்கவும். சூடாக பரிமாறவும்.4 தண்ணீருக்கு பதில் தண்ணீரும் பாலுமாகச் சேர்த்து வேக விட்டால் இன்னும் சுவை கூடும்.

ஜீரணசக்தியை அதிகரிக்கும் கொடாம்புளி கசாயம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:54 PM | Best Blogger Tips
Photo: ஜீரணசக்தியை அதிகரிக்கும் கொடாம்புளி கசாயம்

உடல்பருமன் என்பது இன்றைக்கு அனைவரையும் பாதிக்கும் ஒன்றாகிவிட்டது. பாஸ்ட் புட் காலமாகிவிட்டதால் உண்ணும் உணவானது தேவையற்ற கொழுப்பாக மாறி ஆங்காங்கே சேகரிக்கப்பட்டு உடலானது பருமனடைகிறது. இதனால் ஏராளமானோர் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

உடல் எடையைக் குறைக்க சிலர் பட்டினி கிடக்கின்றனர். சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழக்கின்றனர். பட்டினி கிடந்தாலே, மருந்து மாத்திரைகளை உபயோகித்தாலோ உடல் எடை குறையாது. உணவும், உடற்பயிற்சியும் தான் உடல் எடையை முறையாகக் குறைக்கும் மருந்தாகும். கொழுப்பை கரைப்பதில் கொடாம்புளி முக்கிய பங்கு வகிக்கிறது.

கொடாம்புளியின் பூர்வீகம் இந்தியாதான். தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விளைகின்றது. இலங்கை மக்களும் புளிக்குப் பதிலாக கொடாம்புளியைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் கொடாம்புளி அதிகம் பயன்படுத்துகிறார்கள்

கொழுப்பு குறையும்

கொடாம்புளியின் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மேல் தோலுடன் உள்ள தசைப் பகுதிதான் மருத்துவத் தன்மை கொண்டது. இதில் உள்ள ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் தான் உடலின் எடையைக் குறைக்க பெருமளவில் உதவுகிறது.

உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான மாவுச்சத்துக்கள் அனைத்தும் கொழுப்புச் சத்தாக மாறுகின்றது. இதனால் கொழுப்புப் படலம் உடலில் தங்கி உடலைப் பருமனாக்குகிறது.

உடல் பருமன் உள்ளவர்கள் சமையலில் இந்த கொடாம்புளியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஹைட்ரஸி சிட்ரிக் அமிலம் மாவுச் சத்தை கொழுப்புச் சத்தாக மாறாமல் தடுக்கிறது. இதனால் உடலில் கொழுப்புச் சத்து உருவாவது தடுக்கப்படுகிறது. மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.

மூட்டுவலி குணமடையும்

கொடாம்புளியின் விதையை நீக்கி அதன் சதைப் பகுதியை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக்கி அருந்தினால் மூட்டுவலி குணமாகும். உடலில் உள்ள வாத பித்த நோய்களை சீராக்கும்.

சீரணமண்டலம் பலப்படும்

புளிக்குப் பதிலாக கொடாம்புளியை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும். கொடாம்புளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். சீரண மண்டலத்தை பலப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வெகு விரைவில் கரையும்.

பீட்ரூட் அல்வா செய்யும் முறை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:47 PM | Best Blogger Tips
Photo: Sunday Special - பீட்ரூட் அல்வா செய்யும் முறை

தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 1/4 கிலோ
பால் - 1/4 லி
சீனி - 150 கிராம்
பசுநெய் - 50 கிராம்
ஏலக்காய் - .2
முந்திரி - 10

செய்முறை:

பீட்ரூட்டை தோல் நீக்கி, பொடிதாக நறுக்கி, மிக்சியில் நன்றாக (நீர் கலக்காமால் - தேவையெனில் சற்று பால் சேர்த்து) அரைத்துக் கொள்ள வேண்டும். 

சற்று தடிமனான வாணலியை அடுப்பில் வைத்து முக்கால் பங்கு பசுநெய்யை ஊற்றி ஏலக்காய், பொடிதாக நறுக்கப்பட்ட முந்திரியை இட்டு பொன்னிறமாக வறுக்கவும். 

அரைக்கப்பட்ட பீட்ரூட்டை வாணலியில் இடவும். 
பின்னர் பாலை வாணலியில் ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும். 

வற்றி கெட்டி நிலையை அடைந்ததும் சீனியை விட்டு மீண்டும் கெட்டி நிலையை அடையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். 

மீதமிருக்கும் பசுநெய்யை ஊற்றி அடுப்பிலிருந்து இறக்கவும். பீட்ரூட் அல்வா ரெடி.

நன்றி :
சமையல் செய்வது எப்படி

கலக்கலான தகவலுக்கு கதம்பம்....
https://www.facebook.com/Kadhambam

கதம்பம்....

பனீர் பட்டர் மசாலா செய்யும் முறை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:45 PM | Best Blogger Tips
பனீர் பட்டர் மசாலா செய்யும் முறை

தேவையான பொருட்கள்

பனீர் 250 கிராம்
வெங்காயம் 2 (நறுக்கவும்)
தக்காளி 2 (அரைக்கவும் )
மிளகாய்தூள் 1 டீஸ்பூன்
சீரகத்தூள் 1 டிஸ்பூன்
காய்ந்த வேந்தையக்கிரை 1 டிஸ்பூன்
கரம் மசாலாத்தூள் 1/4 டிஸ்பூன்
பால் 1/4 கப் ப்ரேஷ் க்ரீம் 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணைய் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

அரைத்துக் கொள்ளவேடியவை

வெங்காயம் ஒன்று இஞ்சி சிறிய துண்டு
பூண்டு 6 பல் 
உடைத்த முந்திரி 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை : 

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும் 

கடாயில் எண்ணெய் ஊத்தி சூடானதும் அரைத்த மசாலா மிளகைத்துள் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்

இதனுடன் சீரகத்துள் கரம் மசாலா சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கி தனியாக வைக்கவும் 

மற்றொரு வானலையில் வெண்ணையை சூடாகி நறுக்கிய வெங்காயம் காய்ந்த வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும் 

ஏற்கனெவே வதக்கி வைத்துள்ள தக்காளி கலவையில் சேர்க்கவும் இதனுடன் நீளத் துண்டுகளாக நறுக்கிய பனீர், பால்,உப்பு ,சேர்த்து கொதிக்கவிட்டு ,பிரேஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும் 

சூடான பனீர் பட்டர் மசாலா தயார்.

தயாரிப்பு : சுல்தான் பீவி 

மிகுந்த பயனுள்ள சமையல் குறிப்புகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:21 PM | Best Blogger Tips

*வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

*அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

*கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

*தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

*வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.

*பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

*இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

*பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி – தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

*தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.

*எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

*ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.

*இட்லியை குக்கரில் வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல் இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.

*பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.

*இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.
காய்கறிகளில் சில காய்கள் கசப்பு சுவையுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.

*காபி, தேனீர் போன்ற பானங்கள் சுவையும் மணமும் கொண்டதாக இருக்க, அவ்வப்போது புதிதாக இறக்கிய டிகாஷனையே பயன்படுத்த வேண்டும்.

*கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

*காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.

*மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

*பால் வைக்கும் பாத்திரம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பால் கெடாமல் இருக்கும். பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.

*சமையலறையில் வைத்திருக்கும் உப்பில் குளிர் காலத்தில் ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமல் இருக்க, சிறிது அரிசியைக் கலந்து வைக்கவும்.

*வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம்.

* காலிபிளவர், கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் அவற்றில் உள்ள புழு, மண் அடியில் தங்கிவிடும்.

*குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

*அடைக்கு அரைத்த மாவில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.

*ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.

*அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

* தக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் சிறிது கீறிவிட்டு 10 நொடிகள் சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாகக் கழன்று விடும்.

* சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும்.

*சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.

*குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.

*கட்லெட் செய்ய ‘பிரெட் கிரம்ப்ஸ்’ கிடைக்கவில்லையெனில் ரவையை மிக்சியில் அரைத்து பயன்படுத்தலாம்.

*கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளை விடாமல் இருக்க, கூடவே, கூடையில் ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வையுங்கள்.

*வீட்டில் டீ தயாரிக்க நீரைக் கொதிக்க விடும் போது ஒரே ஒரு புதினா இலையையும் போட்டுக் கொதிக்க விட்டுப் பாருங்கள். டீயின் மணமும், ருசியும் அபாரமாயிருக்கும்.

@ ரசம் தயாரிக்கும் போது சுண்டைக்காய் அளவு இஞ்சி சேருங்கள். சூப்பராக இருக்கும் ரசம்.

@ இட்லிக்கு மாவாட்டும்போது ஒரே ஒரு ஆமணக்கு விதையைத் தோல் நீக்கிப் போட்டுப் பாருங்கள். இட்லி விள்ளாமல் விரியாமல் மெத்மெத்தென்று இருக்கும்.

@ காட்டு நெல்லிக் காயைக் கழுவி, கொதிக்க வைத்த நீரில் போட்டு சிறிது உப்பு போட்டு மூடி வையுங்கள். வைட்டமின் குறையாத ஊறுகாய் ரெடி.தேவைப்பட்டால் மிளகாய்ப் பொடியும் போட்டுக் கொள்ளலாம்.

@ அடைக்கு அரைக்கும் போது மர வள்ளிக் கிழங்கை உரித்து சில துண்டுகள் நேர்த்து அரைக்கலாம். உருளைக் கிழங்கையும் துண்டுகளாக்கிப் போட்டு அரைக்கலாம். மொறுமொறுவென்று இருக்கும் அடை.

@ மிஞ்சி விட்ட பழைய சோற்றை உப்பு போட்டுப் பிசைந்து நாலைந்து மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடி செய்து போட்டுக் கலந்து சிறிய உருண்டைகளாய் உருட்டி வெயிலில் வைத்து விடுங்கள். சோற்று வடாம் ரெடி.

@ பச்சைக் கொத்துமல்லித் தழையைப் பச்சையாகவே துவையல் அரைக்கும் போது புளி போடுவதற்குப் பதிலாக ஒரு துண்டு மாங்காயைப் போட்டு அரைத்தால் சுவையும் மணமும் அதிகமாகும்.

@ மோர்க் குழம்பு வைக்கும் போது அரிநெல்லிக்காய் களை அரைத்துப் போட்டால் சுவை மிகுதியாக இருக்கும்.

நன்றி:

பெட்டகம்

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி

கோயிலில் கொடிமரம் ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:14 PM | Best Blogger Tips
கோயிலில் கொடிமரம் ஏன்?
--------------------------------------
கோயில்களுக்கு அழகு தருவது கொடிமரமாகும்.பக்தர்களை காக்கவும்,இறை சக்தியை அதிகரிக்கவும்,தீய சக்திகளை விரட்டவும் கோயிலில் கொடிமரம் நடப்படுகிறது.

இதில் சூட்சும ரகசியம் என்னவென்றால் கொடிமரம் அடியில் சதுரமாக இருக்கும் இது இறைவனின் படைக்கும் கடவுள் பிரம்மனை குறிக்கிறது.அதன் மேல் பாகம் கோண வடிவில் இருக்கும் இது காக்கும் கடவுள் மாகாவிஷ்ணுவை குறிக்கிறது.அதன் மேல் பாகம் உருண்டு நீளமாக இருக்கும்,அகம்பாவத்தை அழிக்கும் உருத்திரனை(சிவன்) குறிக்கிறது.அதாவது கோயிலில் நமக்கு முதலில் காட்சியளிக்கும் கொடிமரம் மும்மூர்த்திகளின் முத்தொழிலை நமக்கு உணர்த்துகிறது.

கோயிலில் நடக்கும் திருவிழா கோடியேற்றத்துடன் ஆரம்பிக்கிறது.இதன் தத்துவம் என்னவென்றால் நாம் பூமியில் பிறந்து(படைத்தல்),நல்ல நிலையில் வாழ்ந்தாலும்(காத்தல்),கடைசியில் சிவனின் காலடியில் சரணடைகிறோம்(அழித்தல்) என்பதை உணர்த்துவதாகும்.

கொடிமரத்தின் மேல் உள்ள உருவங்கள்;
சிவன் -நந்தி.
பெருமாள்-கருடன்.
அம்பாள்-சிங்கம்.
முருகன் -மயில்.
விநாயகர்-மூஞ்சுறு.
சாஸ்தா-குதிரை.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.