உணவே மருந்து - வெந்தயம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:01 PM | Best Blogger Tips

Photo: உணவே மருந்து - வெந்தயம் 

வெந்தய களி:- வெந்தய சாலட்- வெந்தய பொங்கல்:

மூலிகைகள் நோய்களை களைவதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் உதவுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருளில் ஒன்றான வெந்தயம் பல சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் அடக்கி வைத்துள்ளது.

வெந்தயம் என்ற வார்த்தையின் பிற்பகுதி ``அயம்'' என்று உள்ளதற்கேற்ப வெந்தயத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.

வெந்தயத்தில் 13-7 கிராம் ஈரப்பதம், 26 கிராம் புரதம், 5.8 கிராம் கொழுப்பு, 3.0 கிராம் தாதுக்கள் 7.2 கிராம் நார்சத்து, 1.60 மில்லி கிராம் கால்சியம், இரும்பு 65 மில்லி கிராம் உள்ளது. இதை தவிர வெந்தயத்தில் ``பைட்டோ ஈஸ்ட்ரால்'' என்ற சத்து உள்ளது.

ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களில் காணப்படும் இனப்பெருக்கத்திற்கு உதவும் ஹார்மோன். இது சில வகை தாவரங்களிலும் காணப்படும் இதைத் தான் ``பைட்டோ ஈஸ்ட்ரால்'' என்போம். மேலும் இதில் டயோஸ்கெனின் என்ற ஸ்டீராய்ட் காணப்படுகிறது. அரிய வகைசத்துக்கள் அடங்கிய வெந்தயம் பல நோய்களுக்கு மருந்தாகிறது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்பால் பெருகுவதற்கு வெந்தயம் சிறந்த மருந்து. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கநாடுகளில் குழந்தை பெற்ற பெண்கள் தங்கள் தினசரி உணவில் வெந்தயம் சேர்த்து கொள்கிறார்கள்.

வெந்தயத்தில் உள்ள ஸ்டீராய்டு பெண்களின் மார்பகங்களின் வளர்ச்சிக்கு பெரும் துணை புரிகிறது. ஆண்களுக்கும் மிகுந்த சக்தி யளிக்கக் கூடியதாக உள்ளது, வெந்தயம் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இது நன்மை செய்யும் கொழுப்பு அளவை குறைப்பதில்லை.

இதில் உள்ள ``லெசிட்டின்'', கோலைன் என்ற சத்துக்கள் மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தெளிவாக சிந்திக்க உதவுகிறது, வயதை தடுக்க உதவுகிறது. முக்கியமாக புரதச்சத்தும் நிறைந்துள்ளது அதனால் தோல், மற்றும் தலைமுடியை பாதுகாக்கின்றது. வெந்தயம் கசப்பு சுவையுள்ளது. உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது. பெண்களுக்கு உடல் சூட்டால் தோன்றக் கூடிய நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு, மற்றும் வெள்ளைப்படுதலுக்கு சிறந்த மருந்து. பெண்கள் பருவம் எய்தியது முதல் மாதவிடாய் நிற்கும் காலம் வரை வெந்தயம் அவர்களுக்கு எல்லா காலகட்டங்களிலும், மருந்தாக பயன் அளிக்கின்றது. வயிற்று சூட்டினால் உண்டாகும் வயிற்றுப்போக்குக்கு இது மிக நல்ல மருந்து. இது கிழுகிழுப்பு தன்மை வாய்ந்ததால், உடல் சூட்டையும், வறட்சியையும் நீக்கும்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் அவதிப்படும் வலிக்கு 2 தேக்கரண்டி வெந்தயத்தை நன்கு வறுத்து நீர் கலந்து கொதிக்க வைத்து, பின் வடிகட்டி தேன் கலந்து சாப்பிட, வலி உடன் குறையும், குழம்பு தாளிக்கவும் இட்லி, தோசைகளில் நாம் வெந்தயம் பயன்படுத்துகிறோம். வெந்தயக் குழம்பும் பலர் வீடுகளில் செய்யும் பழக்கம் உள்ளது.

கிராமங்களில் பிரசவித்த பெண்களுக்கும், பருவம் அடைந்த இளம் பெண்களுக்கும். வெந்தயக்களி செய்து கொடுக்கும் பழக்கம் உள்ளது.

வெந்தய களி:

வெந்தயம் - 100 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
கருப்பட்டி - 100 கிராம்
நல்லெண்ணை - தேவையான அளவு
நெய் - சிறிதளவு.

செய்முறை:

1. வெந்தயத்தை நன்கு வறுத்து பொடியாக செய்து கொள்ள வேண்டும்.
2. அரிசி மாவை நன்கு வறுத்து கொள்ள வேண்டும்.
3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை கரைய விட வேண்டும்.
4. கரைந்ததும், நீரை வடிகட்டி நன்கு கொதிக்கவிட வேண்டும்.
5. பின் வெந்தயம், அரிசி மாவை கலந்து நன்கு கிளற வேண்டும், மாவு நன்கு வேகும் வரை நன்கு கிளறவும், சிறிது, சிறிதாக நல்லெண்ணையை ஊற்றவும்.
6. பக்குவம் வந்த பின் நெய் ஊற்றவும். இந்த வெந்தய களியை தினமும் காலை பிரசவித்த பெண்கள் சாப்பிட்டு வர, பால் பெருகும். இளம் பெண்களின் மார்பக வளர்ச்சி மற்றும் வெள்ளைப்படுதலுக்கும் சிறந்த உணவாகிறது.

வெந்தய சாலட்

வெந்தயம் - 100 கிராம்
எலுமிச்சம் பழம் - 1
மிளகுத் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

வெந்தயத்தை ஒரு நாள் இரவு ஊற வைத்து, பின் வடிகட்டி சிறிது நேரம் ஒரு உலர்ந்த துணியில் பரப்பி வைக்கவும். பின்பு ஒரு ஈர துணியில் கட்டி தண்ணீர் தெளித்து முளைக்க வைக்க வேண்டும். முளைக்க வைக்கும் பொழுது கசப்பு குறைகிறது. முளைக்கும் பொழுது வைட்டமின் `சி' சத்து அதிகரிக்கிறது 2 நாள் முளைக்க வைப்பது சிறந்தது. இந்த முளையுடன் எலுமிச்சபழசாறு, மிளகு தூள் உப்பு கலந்து சாலட் ஆக சாப்பிடலாம்.

தயிர் பச்சடி

முளை விட்ட வெந்தயத்துடன், கடைந்த தயிர் கலந்து, சிறிது உப்பு சேர்த்து தயிர் பச்சடியாகவும் சாப்பிடலாம், கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொள்ளவும்.

வெந்தய பொங்கல் 1:

வெந்தயம் - சிறிதளவு (ஊற வைத்துக் கொள்ளவும்)
பச்சரிசி - 100 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
நெய் - தாளிக்க
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.

பச்சரிசியை வறுத்துக் கொள்ளவும், ஊற வைத்த வெந்தயத்தை சேர்த்து 3 மடங்கு நீர் விட்டு வேகவைக்கவும், வெந்தயத்துடன் மிளகு, சீரகம், இஞ்சி, தாளித்து கொள்ள வேண்டும். இதை கொத்தமல்லி, புதினா சட்னியுடன் சூடாக சாப்பிடலாம்.

வெந்தயப் பொங்கல் 2:

பச்சரிசி --250கிராம்
வெந்தயம் --2டாஸ்பூன்
முழு பூண்டு --2
தேங்காய் --1

முதலில் வெந்தயத்தைப் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பூண்டையும் உரித்துக் கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் வைத்துத் தண்ணீர் நன்றாகக் கொதிநிலை வந்ததும் அரிசி, வெந்தயம், பூண்டு மூன்றையும் ஒன்றாக வேகவிடவும். நன்றாக பசை போல் வெந்ததும் உப்பைத் தேவைக்கேற்ப போட்டு இறக்கி விடவும். பிறகு தேங்காயைப் பால் எடுத்துப் பிழிந்து பொங்கலில் ஊற்றிக் கிளறவும். சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

வெய்யில் காலத்தில் இது மிகவும் உஷ்ணத்தைத் தவிர்க்கும். மலச்சிக்கலைத் தவிர்க்கும்

சூடு தணிக்கும் வெந்தயக் கீரை
நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக் கீரை.
இதில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உண்டு. பல விதமாக இதனைச் சமையலில் சேர்க்கலாம். துவரம் பருப்புடன் வேக வைத்து கூட்டு செய்யலாம். புளிசேர்த்து வேக வைத்து கூட்டு தயாரிக்கலாம். காரக் குழம்பு செய்யவும் வெந்தயக் கீரையைப் பயன்படுத்தலாம். இக்கீரையுடன் புளி, மிளகாய் சேர்த்து கடைந்தும் உணவுடன் சேர்த்தும் கொள்ளலாம்.

வெந்தயக் கீரை ஜீரண சக்தியை சீராக்குகிறது. சொறி சிரங்கை நீக்குகிறது. பார்வைக் கோளாறுகளைச் சரி செய்கிறது. இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோயும் குணமடையும் என்று மூலிகை மருத்துவத்தில் கூறப்படுகிறது.

இந்தக் கீரையை வேக வைத்து, அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டு வந்தால் மலச் சிக்கல் தொடர்பான அத்தனை பிரச்சினை களும் நீங்குகின்றன.

வெந்தயக் கீரையை வெண்ணை யிட்டு வதக்கி உண்டு வந்தால் பித்தக் கிறுகிறுப்பு, தலைச் சுற்றல், வயிற்று உப்புசம், பசியின்மை, ருசி யின்மை முதலியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட் டுப் படும்.

வெந்தயக் கீரை நல்லதொரு பத்திய உணவு. இதை அரைத்து நெய் சேர்த்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு இடுப்பு வலி தவிர்க்க முடியாத ஒன்று. இவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய் பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கி விடும்.

மூல நோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையுடன் அத்திப்பழம், திராட்சை, சீமைப் புளி மூன்றையும் சேர்த்து கசாயம் செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி, மூக்கடைப்பு நீங்கும்.

ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையை குறைக்கும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. இக்கீரையை தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து பசியைத் தூண்டிவிடும். சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளையும் பலப்படுத்தும். வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி போன்ற நோய்களைக் குணப்படுத்துகிறது.

வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெருத்த உடல் இளைக்கும்.

நன்றி ஆரோக்கியமான வாழ்வு