வல்சியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:56 PM | Best Blogger Tips
Photo: வல்சியம்

பச்சரிசி மாவு - 400 கிராம் 
வெல்லம் - அரை கிலோ 
அவல் - 150 கிராம்
பாசிப்பயறு - 150 கிராம்
நேந்திரம் பழம் - 2
உப்பு, வாழையிலை - தேவையான அளவு.

வெல்லத்தை உடைத்துப் பாகு காய்ச்சுங்கள். அவலை ஊற வையுங்கள். பாசிப்பயிறை குழைய வேக வையுங்கள். நேந்திரம் பழத்தை கையால் மாவாக மசித்துக் கொள்ளுங்கள். 

வாழையிலையை சிறிது சிறிதாக சதுர வடிவத்தில் வெட்டியெடுத்துக் கொள்ளுங்கள். வெல்லப்பாகில் பாசிப்பயிறு, பழம், அவலைப் போட்டு கெட்டியாக பூரணம் போல பிசைந்து கொள்ளுங்கள். 

அரிசி மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி இடியாப்ப மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளுங்கள். வாழை இலையில் மாவை அள்ளிவைத்து இலை அகலத்துக்கு பரப்பி, நடுவில் பூரணத்தை அள்ளிவைத்து, மடித்து செருகி, இட்லிச் சட்டியில் வேக வையுங்கள். இலை பிரிந்து விடுவது போலிருந்தால் சிறிய தென்னை ஓலையால் கட்டி வேக வைக்கலாம். வாழையிலை வாசனையும் பூரணத்தின் மணமும் நாசியில் உரசும்போது எடுத்துச் சுவையுங்கள்!

நன்றி ஆரோக்கியமான வாழ்வு