என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:47 PM | Best Blogger Tips
Image result for என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்
1.இன்றைய இந்துமதம் சுவாமி விவேகானந்தரின் படைப்பு.சுவாமி விவேகானந்தரது காலத்தில் சைவம்,வைணவம்,சாக்தம் என்று பல பெயர்களில் துண்டு துண்டாக பிரிந்தும் முரண்பட்டும் கிடந்த பல்வேறு மதங்களையும்,மதப்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து இன்றைய இந்து மதத்தை அவர் தந்துள்ளார்.
-
2.
வேதத்தின் கருத்துக்களை இன்றைய விஞ்ஞான உலகிற்கு ஏற்றாற்போல நமக்கு வார்த்து அளித்தார்.
-
Image result for என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்
3.
மக்கள்சேவையே மகேசன் சேவைமக்களிடம் இறைவனைக்கண்டு,அவர்களுக்கு சேவை செய்வதே இறைவனுக்கு செய்யும் மேலான சேவையாகும்மக்களுக்கு சேவைசெய்ய அனைவரையும் கேட்டுக்கொண்டார்
-
4.
முந்தைய தீர்க்கதரிசிகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு சுவாமி விவேகானந்தருக்கு உண்டு.ஏழைகளுக்காக அழுத முதல் தீர்க்கதரிசி அவர்ஏழைகளுக்காக பேசிய முதல் இறையுணர்வாளர் அவர்.ஏழைகளை பாவிகள் என்று அன்றைய சமுதாயம்கூறி ஒதுக்கியது.அதை மாற்றிநாடு குடிசையில் வாழ்கிறது என்பதை நினைவில் வையுங்கள்.ஆனால் அந்தோ அவர்களுக்காக யாரும் எதையும் எப்போதும் செய்ததில்லை என்று கூறினார்.
-
Image result for என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்
5.
வெள்ளையர்களிடமிருந்து விடுதலை கேட்கிறீர்களே,முதலில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு நீங்கள் விடுதலை கொடுங்கள்.பிறருக்கு சுதந்திரம் கொடுக்க விரும்பாதவனுக்கு சுதந்திரம் பெற தகுதி இல்லை என்றார்.இந்தியாவின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் உயர்சாதி மக்கள் தாழ்ந்த சாதி மக்களை புறக்கணித்ததே காரணம் என்று முழங்கிய முதல் மனிதர் அவர்.
-
6.
இந்தியா முழுவதும் யாத்திரை சென்றதன் விளைவாக ஏழைகளை முன்னேற்றுவதற்கு,அவர்களை விழிப்புறச்செய்வதற்கு பரந்த கல்வித்திட்டத்தை வகுத்தார்.அதற்காக பணம் பெற வெளிநாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார்.(ஆனால் அவரது காலத்தில் இது நடக்கவில்லை,வெளிநாட்டினர் இந்திய ஏழைகளுக்கு உதவ முன்வரவில்லை)
-
Image result for என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்
7.
கடல் கடந்து சென்று இந்து மதத்தை பரப்ப கூடாது என்ற விதியை உடைத்து,இந்து மதத்தை அனைத்து நாடுகளிலும் சென்று பரப்பினார்.வெளிறாட்டினர் இதன் மூலம் இந்து மதமே ,தத்துவத்திலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் உயர்ந்த சமயம் என்பதை ஏற்றுக்கொள்ளச்செய்தார்.
--
8.
மேல்சாதி மக்கள் மட்டுமே படிக்கலாம் என்றிருந்த வேத கருத்துக்களை எல்லோரும் படிக்கும்படி ஏற்பாடு செய்தார்.
-
9.
இந்தியாவை இணைக்க வேண்டுமானால் அது இந்து மதத்தால் மட்டுமே முடியும் என்று கூறினார்இந்துமதம் வலுவாக இல்லாவிட்டால் இந்தியா வலுவிழந்து பல துண்டுகளாக உடைந்துவிடும் என்று எச்சரித்தார்.
-
10.
மதம் ஒரு சிலருக்கானது அல்ல தோட்டி முதல் தொண்டைமான் வரை அனைவரும் மதக் கல்வி பெற வேண்டும்மதத்தை ஒவ்வொருவரின் வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.
-
Image result for என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்
11.
துறவியரை சமுதாய சேவையில் ஈடுபடச்செய்து இந்துத்துறவு நெறிக்கு ஒரு புதிய,நவீன பரிமாணத்தை அளித்தார்
-
12.
அன்றாட வாழ்வில் வேதாந்தத்தை செயல்முறைப்படுத்துவதன் மூலம் எல்லோரும் முக்திபெற முடியும் என்று கூறினார்சாதாரண கூலிகூட வேதாந்த கருத்துக்களை செயல்முறைப்படுத்தினால் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று கூறினார்.செயல்முறை வேதாந்தம் என்ற அவரது கருத்து அற்புதமானது,அனைவருக்கும் பொதுவானது
-
13.
கிறிஸ்தவ மதமே உலகில் மிக உயர்ந்த மதம் என்பதை நிரூபிப்பதற்காக அமைக்கப்பட்ட சிகாகோ சர்வமத மகாசபையில் இந்துமதமே சிறந்த மதம் என்பதை நிரூபித்து கிறிஸ்தவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்
-
14.
ஆரியர்.திராவிடர் என்று இன ரீதியாக மக்களை பிரித்து சூழ்சியில் ஈடுபட்ட வெள்ளையர்களின் சூழ்ச்சிகளை தகர்த்து,இந்தியர்கள் இனத்தால் வேறுபட்டிருந்தாலும்,மதத்தால் ஒன்றுபட்டிருக்கிறோம் என்று கூறினார்
-
15 
சுவாமி விவேகானந்தரது காலத்திற்கு பிறகே சுதந்திரப்போராட்டம் தீவிரம் அடைந்தது.அந்த காலத்தில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் கையில் சுவாமி விவேகானந்தரின் புத்தகம் இருந்தது.தனது உயிரைக்கூட துச்சமாக மத்தித்து தலைவர்கள் போராடியதற்கு பின்னால் சுவாமி விவேகானந்தரின் ஊக்கம்மிக்க கருத்துக்கள் இருந்தது.
16.சுவாமி விவேகானந்தர் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா கிறிஸ்தவ நாடாக மாறியிருக்கும்கிறிஸ்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.அமெரிக்க பூர்வீக குடிமக்களான செவ்விந்தியர்கள் மறைந்துபோனதுபோல இந்தியாவிலிருந்து இந்துக்களும்,இந்துமதமும் காணாமல் போயிருக்கும்.
-
என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்?
-
மேலை நாடுகளுக்குச் சென்று,நமது ஆன்மீக பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் அங்கே அறியச்செய்தபோது இந்தியர்களின் ஆழ்மனத்தை சுவாமிஜி தட்டி எழுப்பினார்.நீங்கள் அடிமைகள்,நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்,உங்களுக்கு எந்த பாரம்பரியமும் இல்லை,எல்லாம் நாங்கள் வந்தபிறகே உங்களுக்கு தந்தோம்.எனவே நீங்கள் எங்களுக்கு கைகட்டி சேவகம் செய்யுங்கள் என்று வெள்ளையர்கள் கூறியதைக்கேட்டு இந்தியர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்ந்த காலம் அது.
-
நாங்கள் எதற்கும் உதவாதவர்கள்,எங்கள் புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் கற்பனைகள் என்றே படித்த இளைஞர்கள் நினைத்தார்கள்.
-
இந்தியாவின் பெருமையை,அதன் ஆன்மீப் பாரம்பரியத்தை சுவாமிஜி மேலை நாடுகளில் எடுத்துக் கூறியபோது வியப்பில் ஆழ்ந்தது மேலைநாடு மட்டுமல்ல,இந்தியாவும் தான்.நாம் உண்மையிலேயே இவ்வளவு பெருமைவாய்ந்தவர்களா?உலகிற்கே ஆன்மீகத்தை போதிக்கும் குருவாக விளக்க நம்மிடம் தகுதி இருக்கிறதா?நமது மத்தில் ஆழ்ந்த விஞ்ஞானம் இருக்கிறதா?நமது மதம் உலகத்திலேயே இவ்வளவு பெருமை வாய்ந்ததா?என்று இந்தியர்கள் சிந்திக்க தொடங்கினார்கள்.
-
சுவாமிஜி மட்டும் இல்லாதிருந்தால்,இந்தியாவில் இந்துமதம் இருந்திருக்காது.அது மட்டுமல்ல இந்தியாவையே இணைத்து வந்த இந்துமதம் இல்லாமல் போனால் இந்தியாவே இருந்திருக்காது.நாம் பல்வேறு சிறுசிறு நாடுகளாக பிரிந்து நமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருப்போம்.
--
இந்தியாவின் குடிசைவாழ் மக்கள் வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லீம்களின் காலடியிலும்,கிறிஸ்தவர்களின் காலடியிலும் ,அது மட்டுமல்ல சொந்த நாட்டு மக்களே ஏற்படுத்திய சாதி கொடுமையினாலும் மிதிபட்டு,நாம் இவ்வாறு மிதிபட்டு சாவதற்கே பிறந்திருக்கிறோம் என்று வாழ்ந்து வந்த காலத்தில்அவர்களின் தனித்துவத்தை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் .அவர்கள் சமஅந்தஸ்துடன் வாழவேண்டும் என்று சுவாமிஜி விரும்பினார்.
-
அதற்காக அவர் வகுத்த திட்டம்தான்,ஒவ்வொரு கிராமத்திலும் இலவசபள்ளிகளை ஏற்படுத்துவதுஅந்த காலத்தில் குடிசைமக்கள் சிறுவர்கள் முதல்,ஆண்கள்,பெண்கள் என அனைவரும் முதுகொடிய வேலை செய்து கால்வயிறு உணவை பெற்றார்கள்.ஆகவே இவர்களுக்கு கல்விசாலைகளை ஏற்படுத்தினாலும்,இவர்களால் வந்து படிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார்.ஆகவே இவர்கள் கல்வி சாலைக்கு வரவேண்டியதில்லைகல்வி இவர்களை தேடி இவர்களின் குடிசைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார்அதையே அவர் தமது சீடர்களுக்கு கடிதங்கள் வாயிலாக எழுதினார்.
-
சுயநலமற்ற ஆண்களையும் பெண்களையும் நூற்றுக்கணக்கில் ஒன்று சேருங்கள் அவர்களை ஏழைகள் வாழும் குடிசைகளுக்கு அனுப்புங்கள்,அவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு வந்த பிறகு அவர்களுக்கு கல்வி கற்பியுங்கள்.அதுவும் எப்படிப்பட்ட கல்விஅரசியல்,வரலாறு,புவியியல்,மதம்,சுயதொழில் போன்றவை.இவ்வாறு கல்வி கற்பதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வரும்நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்ற சுயமரியாதை வரும்.
-
அதேபோல் பெண்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும்இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள அதிகப்படியான வேறுபாட்டை கண்டு வேதனைப்பட்டார்ஒவ்வொரு மனிதனும் இறைவன் இருக்கிறார்.அவர் ஆணிலும் பெண்ணிலும் சமமாகவே இருக்கிறார்.அப்படி இருக்கும் போது பெண்களை இவ்வாறு அடிமைப்படுத்தி வைப்பது நியாயமாஎன்று கேட்டார்.பெண்களுக்கு தனியாக பள்ளிகளை ஆரம்பிக்க விரும்பினார்.எந்த நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக நடத்தப்படவில்லையோ அந்த நாடு விரைவில் அழிந்துவிடும் என்று கூறினார்.
--
நன்றி   🕉சுவாமி வித்யானந்தர்-குருஜி --