வயிற்றில் சங்கடம் - வாயு தொல்லை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:35 | Best Blogger Tips

 இரப்பை வயிறு அழற்சி Gastritis எனப்படும். இதன் பெயரை வைத்து பலர் இதை வாய்வுத் (Gas) தொல்லை என்று நினைக்கிறார்கள். இல்லை, இது இரைப்பையில் ஏற்படும் வீக்கம். அல்சர் வருவதற்கு முன் ஆரம்பமாகி, அல்சரில் கொண்டு விடும். இந்த வீக்கம் அழற்சி, இரப்பையின் சுவர்களில் உருவாகும். Gastritis என்பது ஆயுர்தேத்தில் அமல பித்தம் எனப்படும். பித்த பிரகிருதிகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம்.
காரணங்கள்

• காரம், மசாலா நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல். முன்பே சொன்ன மூன்று விஷயங்கள் Hurry, Worry, Curry. மற்றவரைப்பார்த்து பொறாமை படுதல் கூட வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரப்பிக்கும்.

• தொற்றுகளினால் (Infection). பேக்டீரியா, வைரஸ், ஃபங்கள் கிருமிகளால் வரும். பெயர் பெற்ற ஹெலிகோ பேக்டர் பைலோரி (Helicobacter Pylori) என்ற பயங்கர வாத ரகத்தை சேர்ந்த வலுமையான பேக்டீரியா காஸ்டிரைடீஸையும் உண்டாக்கும், பிறகு அல்சரையும் உண்டாக்கும். நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்று வர வாய்ப்புகள் அதிகம். இந்த நோய்களால் இரப்பைக்கு போகும் ரத்தம் குறைந்த விடுவதால், வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும்.

• உடலின் நோய் தடுப்பு சக்தி குறைந்துவிட்டாலும் கேஸ்டிரைடீஸ் வரும்.

• சில நச்சுப் பொருட்களை உண்ணுதல், ஆஸ்பிரின், ப்ரூஃபென் போன்ற மருந்தகளாலும் வரும். மூட்டுவலி, முதுகுவலி, தலைவலி, இவற்றுக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் வயிற்றை பாதிக்கும் பக்க விளைவுகள் உள்ளவை. இவற்றால் கேஸ்டிரைடீஸ் வரும். இந்த மாத்திரைகள், இரைப்பையின் சுவற்றிலுள்ள ப்ரோஸ்டா கிளான்டின் (Prosta glandin) என்ற ஹார்மோன் போன்ற வேதிப் பொருள் வற்றிப்போய் விடும். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு புண்கள் உண்டாகின்றன. புண்கள் தீவிரமாகி, அல்சராக மாறிவிடுகின்றன.

• திருப்பி, திருப்பி சொல்வது, மன இறுக்கம், டென்ஷன், ஸ்ட்ரெஸ், இவை காரணமாகலாம். காரணங்களை பொறுத்து கேஸ்டிரைடீஸ் பலவகைகளாக சொல்லப்படுகிறது.

அறிகுறிகள் / சிக்கல்கள்

• கேஸ்டிரைடீஸ் காண்பிக்கும் அறிகுறிகள் குறைவு. அறிகுறிகள் தோன்றினால் அவை – வலி, பிரட்டல், வாந்தி. இவற்றை நாம் அஜீரணம் என்றும் நினைப்போம். கேஸ்டிரைடீஸ் அல்சராக முன்னேறும் போது அறிகுறிகள் தீவிரமாகும்.
• இரப்பை அல்சரை உருவாக்குவது கேஸ்டிரைடீஸ். இதை அல்சரின் முன் நிலை என்றே கூறலாம்.

சிகிச்சை

அலோபதி முறையில் எச். பைலோரியை அழிக்க ஆன்டி – பயாடிக் மாத்திரைகள் தரப்படுகின்றன. அன்டாசிட் அமிலத்தை எதிர்க்கும் மருந்துகள் தரப்படும். அலுமினியம் ஹைட்ராக்ஸைட் பொதுவாக பயன்படும் ஆன்டாசிட். இதை விட பயன் அளிப்பது மக்னீஷயம் ஹைட்ராக்ஸைட். சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்களுக்கு மக்னீஷயம் ஹைட்ராக்ஸைட் குறைவாகத் தான் கொடுக்க வேண்டும். பல அன்டாசிட் மருந்துகள், அலுமினியம் மற்றும் மக்னீஷயம் ஹைட்ராக்ஸைடுகள் இரண்டும் கலந்தவை.

ஆயுர்வேத அறிவுரைகள்

• மிளகாய், மசாலா, புளி, ஆரஞ்ச், சாத்துக் குடி, இவற்றை ஒதுக்கவும்.
• பூண்டு, இஞ்சி, தனியா, ஜீரகம் இவற்றின் உபயோகத்தை குறைக்கவும்
• அப்பளம், சட்னி, ஊறுகாய் – தவிர்க்கவும்.
• பால் நல்லது.
• வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், கேரட் எடுத்துக் கொள்வது நல்லது. கேஸ்டிரைபீஸ் நோய்க்கு பீடா காரேடீன், வைட்டமின் ‘சி’ சேர்ந்த உணவுப் பொருட்கள் தேவையான மருந்தாகும்.
• புகையிலை, மது தவிர்க்கவும்
• மன அமைதி தேவை.

ஆயுர்வேத மருந்துகள்

• அதி மதுரம் கேஸ்டிரைடிஸை கட்டுப்படுத்த, பல தலை முறைகளாக பயன்படுத்தப்படும் மருந்து. இது எச். பைலோரி பாக்டீரியாவையும் வளரவிடாமல் தடுக்கும். ஒரு தேக்கரண்டி அதி மதுரப் பொடி, 1/2 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி தேன் இவற்றை கலந்து வெறும் வயிற்றில் உட்கொள்ளவும் தினசரி 2 வேளை போதுமானது.
• சதவாரி, நெல்லிக்காய் பொடி நல்ல, நிரூபிக்கப்பட்ட மருந்துகள்
• ஆம்லக்கி சூரணம், தாத்ரீலோஹா, சுகமார க்ருதம். போன்றவை கேஸ்டீரைடீஸ§க்கு கொடுக்கப்படும் மருந்துகள்.
எந்த மருந்தானாலும், உங்களின் ஆயுர்வேத மருத்துவரின்
ஆலோசனைப் படி உட்கொள்ளவும்

வயிற்றை துன்புறுத்தும் எச்.பைலோரி

ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter Pylori) என்ற பாக்டீரியா கேஸ்டிரைபீஸ் பாதிப்புக்கு முக்கிய காரணம். தவிர பெப்டிக் அல்சருக்கும், இந்த கிருமியே காரணம்.

எச்.பைலோரி கிருமிகள் இரப்பையின் ம்யூகோஸா என்ற ஜவ்வுப்படலத்தில் புகலிடம் தேடி வசிக்கின்றன. இந்த ஜவ்வுப் படலத்தால் கிருமிகளுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் பாதிப்பு ஏற்படுவதில்லை. அமிலம் சுரக்கும் போதெல்லாம் எச்.பைலோரி, ஜவ்வுப் படலத்தை துளைத்து, உள்புறச் செல்களுக்குள் பாதுகாப்பாக ஒளிந்து கொள்கின்றன. தவிர யூரிஸ் (Urease) என்ற நொதியை (Enzyme) உண்டாக்குகின்றன. இதிலிருந்து வெளிப்படும் அம்மோனியாவுடன் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சேர்ந்து, நீர்த்துப் போய் விடுகிறது. இதனால் அமில ஆபத்தின்றி, தங்குதடையின்றி எச்.பைலோரி எல்லையில்லாமல் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த கிருமிகள் ஏற்படுத்தும் ஒட்டைகளினால் ரத்தக்கசிவு ஏற்படுகிறது. அட்ரோபிக் (Atrophic) கேஸ்டிரைடிஸ் ஏற்படுகிறது. ரத்த சோகையும் ஏற்படும்.

எச்.பைலோரிகிருமியுள்ள அனைவருக்கும் கேஸ்டிரைடீஸ் ஏற்படும். முழுவயிற்றையும் பாதிக்கலாம். இல்லை வயிற்றின் கீழ்பாகத்தை (Antrum) பாதிக்கலாம். கேஸ்டிரைட்டீஸ், அல்சராகமாறி நாளடைவில் புற்று நோயாக மாறும்.

எச்.பைலோரியை அழிப்பதற்கான வழி – அமில சுரப்பை கட்டுப்படுத்தும் மருந்துகளுடன் இரண்டு ஆன்டிபயாட்டிக் (அமோக்ஸிலின், க்ளரித்ரோமைசின்) மருந்துகள் கொடுப்பது தான்.

எச்.பைலோரி நமது விரல்களில் நகங்களின் இடுக்கில் இருக்கும் அழுக்கில் காணப்படுகிறது. அசுத்தமான குடிநீர், ஈ மொய்க்கும் தெருவோர உணவுக் கடைகள் இவற்றிலிருந்து எச்.பைலோரி பரவும்.

எச்.பைலோரி கிருமிகளை, மூச்சுக்காற்று, மலம், ரத்தம் ஆகிய பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம். என்டோஸ் கோபி மூலமும் கண்டுபிடிக்கலாம்.

மார்ஷலும், வாரனும்

எச்.பைலோரி பாக்டீரியா (Helicobacter Pylori) தான் கேஸ்டிரைடீஸ் மற்றும் அல்சருக்கு காரணம் என்று கண்டுபிடித்தவர். மார்ஷல் எனும் ஆஸ்திரேலிய மருத்துவ மாணவர். முதலில் இதை இவரது கல்லூரி தலைவர் ஒப்புக் கொள்ளாததால், மார்ஷல் விடாமுயற்சியாக, வாரன் என்ற டாக்டருடன் சேர்ந்து தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். இந்த கிருமியை தனியாக பிரித்து தன் உடலிலேயே மார்ஷல் தைரியமாக செலுத்திக் கொண்டார்! இரண்டு நாட்களில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட, இவரின் ஆராய்ச்சி தோழர் வாரனை வைத்து “என்டோஸ்கோபி” உள்பட பல சோதனைகளை தனக்கு செய்து கொண்டார். சோதனைகளின் முடிவில், மார்ஷலுக்கு “ஆன்ட்ரல் கேஸ்டிரைடீஸ்” வந்திருப்பது தெரியவந்தது. அல்சருக்கு காரணம் எச்.பைலோரி கிருமி என்பதை மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டது. இந்த கண்டுபிடிப்புக்காக மார்ஷலுக்கும், வாரனுக்கும் 2005 ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
Thanks FB ஆரோக்கியமான வாழ்வு