மோடியின் மீது தமிழ் மக்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? இது திணிக்கப்பட்ட ஒன்றா?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:22 AM | Best Blogger Tipsஒருவரின் மீது பூச்சாண்டி காட்டி தங்களுக்கான காரியத்தை நிகழ்ச்சி கொள்வது வரலாறு நெடுகிலும் உலகளவில் நடந்திருக்கிறது
எடுத்துக்காட்டுக்காக அமெரிக்கா ரஷ்யாவை தன் மக்களுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டு தனது நிதியை இராணுவ பயன்பாட்டுக்காக ஏராளமாக வாரி இறைத்தது

அது போல பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். நீங்கள் சற்று யோசித்துப் பாருங்கள். ஒருவனை உங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்றால் அவனிடத்தில் பயத்தை உருவாக்க வேண்டும் அல்லது ஆசை காட்ட வேண்டும். இது இரண்டையும் செய்வதில் திராவிட கட்சிகள் பெயர் போனவை

குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை பார்க்கும் போது காங்கிரஸ் கட்சியை அகற்றி திமுக ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் அரசு அப்போது மத்திய அரசாகவும் இருந்ததால் மாநில காங்கிரஸ் அரசையும் மத்திய காங்கிரஸ் அரசையும் எதிர்ப்பது திமுகவிற்கு இரட்டை லாபமாக இருந்தது. இன்னும் ஒரு படி மேலே போனால் திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது கூட மத்திய காங்கிரஸ் அரசை பூச்சாண்டி காட்டி மக்களிடையே செல்வாக்கை தக்க வைக்க முடிந்தது

காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாத ஒரு விஷயம் ஆனால் அரசியல் ரீதியாக பலன் தரும் விஷயம் இப்படி ஒரு விஷயம் இருந்து திமுக அதை செய்யாமல் இருந்திருந்தால் தான் அதிசயம். மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறது, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறது என்றெல்லாம் கூறி அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுக.             ( அதிகாரத்திற்காக மத்திய அரசில் பங்கு பெற்றதை நீங்கள் கண்டு கொள்ளக் கூடாது)

அதே யுத்தியை தற்போது பாஜக விடமும் கடைபிடிக்கிறது. பாஜகவிடம் இந்த உத்தியை தீவிரமாக கடைபிடிப்பதற்கு மேலும் ஒரு காரணம் உள்ளது காங்கிரஸ் அப்போதைய காலகட்டத்தில் செல்வாக்கை இழந்து கொண்டிருந்தது

அனைத்து மாநிலங்களிலும் ஆனால் தற்போது பாஜக அனைத்து மாநிலங்களிலும் செல்வாக்கை மிக மிக வேகமாக பெற்றுக்கொண்டு வருகிறது. எதிரியை அதுவும் மிக வேகமாக வளர்ந்து வரும் எதிரியை அவன் பலவீனமாக இருக்கும் போதே அளிக்கும் தந்திரம் தான் இது. சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் முழுவீச்சில் எதிர்ப் பிரச்சாரம் செய்யப்பட்டது. தமிழக மக்கள் பொய்ப் பிரச்சாரத்திற்கு இரையாக கூடியவர்கள் காமராஜரையே தோற்கடித்தவர்கள் என்ற முன்னனுபவம் திமுகவிற்கு பெரும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும்.

அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்லாமல் தத்துவ முரண்பாடுகளும் உள்ளன. திமுக திராவிட நாடு கேட்ட கட்சி. பாஜக ஒரே தேசம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சி. அதனால் இயல்பாகவே பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக் கூடாது என்ற எண்ணம் தோன்றியிருக்கலாம்.

இறுதியாக உங்கள் கேள்விக்கு வருகிறேன். மோடியின் மீதும் பாஜகவின் மீதும் தமிழகத்தின் வெறுப்பு திணிக்கப்பட்ட ஒன்றா என்றால் கண்டிப்பாக திணிக்கப்பட்ட ஒன்று தான்.( மீத்தேன் நீட் தேர்வு ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களால் தான் பாஜகவின் மீது வெறுப்பு தமிழகத்தில் உள்ளது என்று எடுத்துக் கொண்டால் அதை ஆரம்பித்து வைத்த காங்கிரஸ் கட்சி மீது பல மடங்கு வெறுப்பு இருக்கவேண்டும் அல்லவா ஆனால் அப்படி இல்லையே இதிலிருந்தே தமிழக கட்சிகளின் திட்டமிட்ட பிரச்சாரம் வெற்றி பெற்றுள்ளது என்பதை உணரலாம்). பாஜகவும் திமுகவின் இடத்தில் இருந்திருந்தால் இதையேதான் செய்திருக்கும்
Image may contain: 1 person, text
ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான் வாட்ஸ்அப்பிலும் முகநூலிலும் வரும் செய்திகளை நம்பும் அளவுக்கு அறியாமையில் மக்கள் இருக்கும் வரை தமிழகத்தில் நல்ல தலைவரை பற்றியோ மாற்றங்களைப் பற்றியோ நாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.

குறிப்பாக இணையதளம் பயன்படுத்த தெரிந்த மற்றும் முடிந்த இளைய தலைமுறையினரே உண்மையான செய்தியை கண்டுபிடிக்கும் அக்கறை இல்லாமல் போலி செய்திகளை நம்பி அதன் அடிப்படையிலேயே முடிவு எடுக்கும் நிலைமை இருக்கும் வரை ' இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்' என்பது தான் நடக்கும். உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவெடுக்காமல் சற்றே அறிவும் அக்கறையும் பொறுமையும் கொண்டு உண்மையைத் தேடிச் செல்லும் நாள் தான் தீயவர்கள் அரசியலை விட்டு ஓடும் நாள் நல்லவர்கள் அரசியலை நாடும் நாள்.

நன்றி இணையம்