குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | 11:43 PM | Best Blogger Tips


செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் குடிநீரை தேக்கிவைக்கும் இந்திய மற்றும் இலங்கையரின் பழக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
செப்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகங்கள், தண்ணீரில் சுகயீனத்தை விளைவிக்கும் நுண்ணுயிர்க் கிருமிகள் பெருகுவதை தடுக்கும் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர். பி. இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இப்படியாக தண்ணீரை இந்த பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை உள்ளது என்றும், அதிலும் குறிப்பாக, இந்த செப்பு மற்றும் பித்தளை போன்ற உலோகங்களுக்கு அந்த தன்மை அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணத்தினாலேயே கங்கை நீர், செப்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
செப்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என, இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை.
செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட குடிநீர், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என, ஆயுர்வேதம் கூறுகிறது. எகிப்தில், தொன்மைக் காலம் முதலே, செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கும் பழக்கம் உண்டு. செப்பு உலோகத்தின் இன்னும் சில அதிசயங்கள்:
* கடந்தாண்டு உலகையே அச்சுறுத்திய இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.
* செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, நான்கே மணி நேரத்தில், நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில், பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில், நான்கு நாட்கள் உயிர் வாழ்கின்றன.
* ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.
* இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.
* உடலில், "மெலானின்' என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், "விடிலிகோ' என அழைக்கப்படும் வெண் படையும் குறைகிறது.

 நன்றி இணையம்

புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும் தர்பூசணி

மணக்கால் அய்யம்பேட்டை | 11:41 PM | Best Blogger Tips


தண்ணீரும், இயற்கையான சர்க்கரையும் நிறைந்த பழம் தர்பூசணி. வைட்டமின்கள், தாதுக்கள், லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட, குறைந்த அளவு கலோரிகள் இதில் உள்ளன. 92 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளதால், தாகத்தைத் தணிக்கும். உடலில் உள்ள நீர்த் தன்மையைச் சரிசெய்யும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும். செரிமானத்துக்கு உதவி, மலச்சிக்கலைப் போக்குகிறது. வைட்டமின் ஏ உள்ளதால் கண், சருமத்துக்கு நல்லது. சீபம் சீராகச் சுரக்க உதவுவதால், சருமம், கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

நன்றி இணையம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 11:41 PM | Best Blogger Tips

சர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகள் ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது.. ஆராய்ச்சி மூலம் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற நிறமியாகிய பூநீலம் ஏராளமாக உள்ளது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டது..
இது கடின உலோகங்கள் மற்றும் பிராணவாயு உறுப்புக்களில் உண்டாகும் ஆபத்தை குறைக்கிறது. ஆக்சிஜனேற்ற பண்புகள் சர்க்கரை வள்ளி கிழங்கின் சேமிப்பு நொதிகளை உற்பத்தி செய்கின்றது-. சர்க்கரை வள்ளி கிழங்கு சேதமடைந்து இருப்பின் தன்னுடைய பகுதிகளை சரிசெய்து கொள்ள ஆண்டிஆக்சிடெண்ட் திறனை பயன்படுத்தி சரிசெய்து கொள்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் 
கலோரிகள்- 90 
பேட் -0 கிராம்
செறிவூட்டப்பெற்ற கொழுப்பு -0 கிராம்
கொலஸ்ட்ரால்- 0மில்லிகிராம்
கார்போஹைட்ரேட் -21 கிராம்
புரதம் -2 கிராம்
நார்ச்சத்து -3கிராம்
சோடியம் -36 மில்லிகிராம்
வைட்டமின் ஏ -19.218 சர்வதேச அலகு
ஃபோலிக் அமிலம்- 6 மைக்ரோகிராம்
பேண்டோதெனிக் அமிலம் -1 மில்லிகிராம்
வைட்டமின் பி- 61 மில்லிகிராம்
வைட்டமின் சி- 20 மில்லிகிராம்
வைட்டமின் ஈ -1 மில்லிகிராம்
கால்சியம் 3-8 மில்லிகிராம்
மாங்கனீஸ் -1 மில்லிகிராம்
கரோட்டினாய்டுகள் -11.552 மைக்ரோகிராம்
பொட்டாசியம் -475 மில்லிகிராம்
மாக்னீஷியம்- 27 மில்லிகிராம்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வாழ்வை ஆரோக்கியமாக்கிடுங்கள்.

 நன்றி இணையம்

வேளைக்கேற்ற உணவு !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:38 PM | Best Blogger Tips

காலை எழுந்தவுடன் திரவ உணவுக்குப் பிறகு, அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் காலை உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும். அன்றைய நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றல் கிடைக்
கும்படி, கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை போன்றவற்றில் செய்த இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்.
காலை உணவு முடிந்து, நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, மதிய உணவைச் சாப்பிடுவது நல்லது. கீரைகள், பருப்பு, கைக்குத்தல், சிறுதானியங்களை சாப்பிடலாம்.
எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகள் இரவில் சிறந்தவை. இரவு 7.30 மணிக்குள் சாப்பிட்டுவிடலாம். தூங்கும் முன், பாலில் பனங்கற்கண்டு, மிளகுத்தூள் சேர்த்துக் குடிக்கலாம். இரவில் கபத்தை அதிகரிக்கும் உணவுகளான தயிர், இனிப்புகள், கீரை உடலில் செரிமானப் பிரச்னைகளை உண்டாக்கும் என்பதால் தவிர்க்கவும்.

 நன்றி இணையம்

ராம நாம மகிமை - மஹா பெரியவா !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:37 PM | Best Blogger Tips

ராம நாம மகிமை - மஹா பெரியவா !!!
==============================

நம்முடைய இந்து சமயத்திலே ராமனும், கிருஷ்ணனும் பிரிக்கமுடியாத இரு வடிவங்களிலே நமக்கு அருள் பாலித்து வரகிறார்கள். ஒருவர் தட்சிணாயனம், மற்றொருவர் உத்தராயணம். ராமர் உத்தராயணத்திலே பங்குனி மாதக் கடைசியிலே சைத்ரமாச, சிரேஷ்ட மாசத்திலே அவதரித்தார். ராமன் சுக்ல பட்சத்திலே அவதரிக்கிறார். ராமன் நவமியிலே அவதரிக்கிறார். கிருஷ்ணன் அஷ்டமியிலே அவதரிக்கிறார். இப்படி ஒவ்வொரு விதம். ராமன் திரேதா யுகத்திலே, கிருஷ்ணன் த்வாபர யுகத்திலே, ஆனால் வடிவத்திலே இருவரும் நீலமேக ஸ்யாமளமாக, ஒரே வடிவத்திலே இருக்கிறார்கள். 
அங்கே ராமன் தர்மத்தை வாழ்நாள் முழுவதும் நடததிக் காட்டினார். கண்ணபிரான் தர்மத்தை தன் வாழ்நாள் முழுவதும் நடத்திக் காட்டியேதாடு மாத்திரம் இல்லாமல், அவருடைய பகவத் கீதையை நமக்கு அருளிச் செய்தார். இப்படியாக ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் பொருத்தம் அதிகமாக இருக்கிறது. அங்கேயும் ராமபிரான் தனியாகச் செல்லும்போது முதன்முதலாக விஸ்வாமித்ரர் யாக ஸம்ரட்சணத்தின் போது தாடகையை முதன் முதலாக கொல்கிறார். இங்கேயும் கிருஷ்ணபகவான் பிறந்தவுடன் முதன் முதலாக பூதனையைத்தான் கொல்கிறார். இப்படி இருவருக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்க்கும்போது, தர்ம ஸம்ரட்சணத்துக்காக நாம் எந்த காரியத்தைச் செய்தாலும் தவறில்லை என்பதைத்தான் அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். அந்த வகையிலே ராமனும், கிருஷ்ணணும், இருவரும் நம்முடைய வாழ்க்கைக்கு உயிர்நாடியான தீபங்கள். அதிலும் ராம நாமம் என்பது மிகவும் உன்னதமான நாமம் "ராமேதீ ராமா" மூன்று பெயருக்கும் அர்த்தம் உண்டு. "க்ருஷ்ணேதி க்ருஷ்ணா". நம்முடைய துக்கத்தையெல்லாம் போக்கடிப்பவர் ராமன். "ராமேதி ராமா" ஆனந்தத்தை எல்லாம் அளிப்பவர் ராமன் என்று பெயர். தசரதர் காலம் முதல் பழங்காலம் தொட்டு எத்தனையோ பேருக்கு வாழ்க்கையிலே துனபத்தையெல்லாம் போக்கி, ஆனந்தத்தை அளித்த பரம்பொருள். அந்த பரம்பொருளின் நாமம், மஹாவிஷ்ணு குரு வடிவத்திலே இருந்து ஸ்ரீ ராமனாக தசரதகுமாரனாக அவதாரம் செய்தார். தசரதருக்கு வெகு நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்ததனால் இந்த துன்பம் எல்லாம் நீங்குவதுடன் குழந்தை பிறந்தவுடன் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்ட பொழுது துன்பங்கள் எல்லாம் நீக்கி ஆனந்தத்தை கொடுக்கக் கூடிய பெயர் 'ராமன்' என்ற பெயரை வைத்தார்கள். உபநிஷத்திலேயிருந்து ராமனுடைய நாமம் விளங்கி வருகிறது. தசரதர் மெய்மறந்து அந்த பெயரை வைத்தார். தசரதனுடைய குமாரனுக்கு 'ராமன்' என்று பெயரை வைத்தார்களே தவிர 'ராமா ராமா' என்பது அனாதியாக உலகம் தோன்றிய காலம் முதல் உபநிஷத்திலேயிருந்து நாமமாக உள்ளது ராம நாமம். 'தாரக நாமம்' என்று சொல்லுவார்கள். நம்முடைய துக்கங்களை எல்லாம் கடக்க வைக்கக்கூடியது ராம நாமம் என்றும் சொல்லுவார்கள். எத்தனையோ கோடிக்கணக்கான மக்களுடைய துன்பங்களை எல்லாம் கடக்கவைப்பது ராம நாமம். தசரத ராஜாவுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் துன்பங்களை போக்கியதால் 'ராமன்' என்று பெயர் வைத்தார்கள். இப்படி தேவதைகளுடைய துன்பங்கள் எல்லாம் போக்கடித்தார் ஸ்ரீராமன் தாடகா ஸம்ஹாரம் மூலமாக.
ரிஷிகளுக்கு எல்லாம் வந்த துன்பதைப் போக்கடித்து ஆனந்தத்தைக் கொடுத்தார். பதினான்கு வருடம் காட்டிற்கு யாத்திரை செய்து ரிஷிகளுக்கு எல்லாம் தரிசனம் கொடுத்தார். இப்படி பல செய்கையாலும் பலருக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பது 'ராம நாமம்' இன்றைக்கும் பலருக்கும் மனதிற்கு சாந்தியை அளித்து, ஆனந்தத்தை அளிக்ககூடியது 'ராம நாமம்' அப்படிப்பட்ட 'ராம நாமத்தினுடைய' ஜெயந்தி உத்சவம் ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று வருகிறது. அன்றைய தினம் நாம் ஒவ்வொருவரும் ராமபிரானை மனதில் நினைத்து ராம நாமத்தை ஜெபித்து நம்முடைய வாழ்க்கையிலும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருக ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று எல்லோரும் சொல்லவேண்டும். ராமனுடைய ஆட்சி காலத்திலே உலகிலே உள்ள பொருள்கள் இன்றைக்கு விலையேறி கிடந்தும் கிடைக்காத நிலையில் இருப்பது போல் அன்றைக்கு பொருள்கள் கிடைக்காத நிலையிலிருந்தும் வருந்திக்கொண்டு அத கிடைக்கவில்லை. இது கிடைக்கவில்லை அந்தப் பொருள் இல்லை என்று அழவில்லை "ராமோ ராமோ ரானமதி இராஹா மனோ கதாஹா:" ராம ராஜ்யம் உலகம் முழுவதும் ராமமே ராஜ்யம் உஷ சகி. ராமன் ராஜ்ய பரிபாலனம் பண்ணும் போது ராமா ராமா என்று சொல்லுகின்ற ஜனங்கள் அரிசியில்லை, உளந்து இல்லை, கிருஷ்ணாயில் இல்லை, கறிகாய் இல்லை என்று ஒருவரும் அழவில்லை. அப்படிப்பட்ட நிலையை நம்முடைய நாட்டில் திரும்பவும் கொண்டு வர உலகம் முழுவதும் ராமா ராமா ராமா என்று ஜபத்தை ஜபித்து நம்முடைய வாழ்க்கையில் உள்ள எல்லா துன்பங்களும் அகலுவதற்கும், மனிதனுடைய துன்பங்கள் எல்லாம் அகலுவதற்கும், நல்ல புத்தி கிடைப்பதற்கு "ஸப்கோ சன்மதி ஹே பகவான்" என்று பிரார்த்தனை செய்து எல்லோருக்கும் நல்ல புத்தி கிடைப்பதற்கு ராமபிரான் அருள்வாராக !!!
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸபதாம் !
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் !!
யதாவர்ணயத் கர்ணமூலேஸந்த காலே
சிவோ ராம ராமேதி ராமேதி காச்யாம்
ததேகம் பரம் தாரகப்ரஹ்மரூபம்
பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம் !!!
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே !!!


 நன்றி இணையம் 
மணக்கால் அய்யம்பேட்டை | 11:26 PM | Best Blogger Tips




காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒழிந்தாயோ
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்திய்மா
நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதமா
அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீ தான் உயிரே வாராய்
கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல கழன்று விழுந்தது ஏன்
விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது தான்
உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்லச் சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீ தான் உயிரே வாராய்
தேடித் தேடித் தேடித் தீர்ப்போம் வா.....
தேடல் தொடங்கியதே...... மெய்தேடல் தொடங்கியதே....
சங்கில் குதித்து விட ஒரு சமுத்திரம் நினைப்பது போல்
அங்கம் நிறைந்து விட என் ஆவி துடித்ததுதான் (தேடி)
தேடிக் கிடைப்பதில்லை......
வாழ்ந்த வாழ்வெனக்கும் .......
காதல்.... காதல்.... காதல்.... 
!!

 


உடம்பு ரொம்ப சூடாகுது என்பது அனைவராலும் சொல்லப்படும் ஒரு பாதிப்பு.

மணக்கால் அய்யம்பேட்டை | 11:23 PM | Best Blogger Tips

உடம்பு ரொம்ப சூடாகுது என்பது அனைவராலும் சொல்லப்படும் ஒரு பாதிப்பு.
இதற்கான பொதுவான காரணங்கள்...
* இறுக்கமான ஆடை 
*
ஜுரம் 
*
தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக வேலை செய்தல் 
*
கடும் உழைப்பு 
*
மருத்துவ காரணங்கள்
*
சில மருந்துகள் 
*
நரம்புக் கோளாறுகள்
அதிக வெயில்
உடலின் உஷ்ணம் குறைய சில வழிமுறைகள்
* இளநீர் குடிக்க வேண்டும்.
* கார, மசாலா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* உப்பு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
* வாழைப்பழம், வெள்ளரி, கரும்புச்சாறு மூன்றுமே நன்மை பயக்கும்.
* ஆலிவ் எண்ணெயில் சமைக்கலாம்.
* காய்கறி உணவு சிறந்தது.
* ஒரு பேசினில் நீர் பிடித்து பாதங்களை அதில் சிறிதுநேரம் அமிழ்த்தி வைக்கலாம்.
* வெந்தயம் ஊற வைத்து தினம் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம்.
* சந்தனம், பன்னீர் கலந்து உடலில் தடவலாம்.
* ஒரு டீஸ்பூன் வெண்ணையை பாலில் கலந்து அருந்தலாம்.
* பழங்கள் உண்பது உடல் சூட்டினைத் தணியச் செய்யும்.
* ஏலக்காய் டீ, பால் சிறந்தது.
* மோர் சூட்டை நன்கு தணிக்கும்.
* 92 சதவீதம் நீரும், வைட்டமின் `சி' சத்தும் கொண்ட தர்பூசணி பழம் உடல் சூட்டினை நன்கு தணிக்கும்.
* கிர்ணி பழம் வெயில் காலத்தில் உண்ண வேண்டிய ஒன்று.
* வெள்ளரிக்காயினை அடிக்கடி தினமும் சாப்பிடுங்கள் அல்லது தோல் சீவி ஜுஸ் செய்து குடியுங்கள்.
* புதினா சாறு, மோருடன் கலந்து பருகுவது உடனே சூடு தணியும்.
* முள்ளங்கி சூட்டை தணிக்கும். எதிர்ப்பு சக்தியினைத் தரும். வைட்டமின் `சி' சத்து நிறைந்தது. வீக்கங்கள் குறைக்கவல்லது.
* எள் உண்பதும், நல்லெண்ணை உடலில் தேய்ப்பதும் உடலை குளிர்ச்சியாக வைக்கும்.
* சோம்பு ஊற வைத்த நீர் உடலுக்கும், குடலுக்கும் நன்மை பயக்கும்.
* குளிர்ந்த பாலில் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் அருந்த சூடு தணியும்.
* பாதாம் பிஸின் சிறிது, இரவில் நீரில் ஊற வைத்து காலை பாலுடன் கலந்து பருக சூடு தணியும்.
* நனைத்த பருத்தி ஆடையினை உடலில் 15-20 நிமிடம் சுற்றி இருக்க உடலில் சூடு தணியும்.
* சாதாரண நீர் குடிப்பது உடலை குளிரச் செய்யும்.
* துளசி விதைகளை நீரில் ஊறச் செய்து குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.
* தனியா, சீரகம், சோம்பு இவற்றினை பொடித்து நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க உஷ்ணம் குறையும்.
* தேங்காய் எண்ணை உடலில் தேய்த்துக் குளிக்க சூடு தணியும்.
* கொழுப்பற்ற தயிர் தினமும் உட்கொள்ளுங்கள்.
* மனதினை அமைதியாய் வைத்திருப்பதும், யோகா செய்வதும் உடல் சூட்டினைத் தணிக்கும்.
* தினம் ஒரு டம்ளர் நெல்லி சாற்றினை அருந்தலாம்.
* தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு அருந்தலாம்.
* ஆப்பிள் உடல் சூடு தணிய உதவும்.☆☆☆


நன்றி இணையம்