மணக்கால் அய்யம்பேட்டை | 11:19 PM | Best Blogger Tips
விழுந்தால் அழாதே...
எழுந்திரு !

தோற்றால் புலம்பாதே... போராடு !

கிண்டலடித்தால் கலங்காதே...
மன்னித்துவிடு !

தள்ளினால் தளராதே...
துள்ளியெழு !

நஷ்டப்பட்டால் நடுங்காதே...
நிதானமாய் யோசி !

ஏமாந்துவிட்டால் ஏங்காதே...
எதிர்த்து நில் !

நோய் வந்தால் நொந்து போகாதே...
நம்பிக்கை வை !

கஷ்டப்படுத்தினால் கதறாதே...
கலங்காமலிரு !

உதாசீனப்படுத்தினால் உளறாதே...
உயர்ந்து காட்டு !

கிடைக்காவிட்டால் குதிக்காதே...
அடைந்து காட்டு !

மொத்தத்தில் நீ பலமாவாய் . . .

சித்தத்தில் நீ பக்குவமாவாய் . . .

உன்னால் முடியும் !

உயர முடியும் !

உதவ முடியும் !

உனக்கு உதவ நீ தான் உண்டு !

உன்னை உயர்த்த

நீ தான் . . . 
நம்பு !

உன்னை மாற்ற நீ தான் . . . 
முடிவெடு !

நீயே பாறை . . .
நீயே உளி !

நீயே சிற்பி . . .
நீயே செதுக்கு !

நீயே விதை . . .
நீயே விதைப்பாய் !

நீயே வளர்வாய் . . . நீயே அனுபவிப்பாய் !

நீயே நதி . . . 
நீயே ஓடு !

நீயே வழி . . . 
நீயே பயணி !

நீயே பலம் . . . 
நீயே சக்தி !

நீயே ஜெயிப்பாய் !
எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே !!!

இனிய இரவு வணக்கம்
ரமேஷ்