வேப்ப
மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது.இது
உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக் கொல்லும் சக்தியை
உடையது.வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில்
நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும்
வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி
உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம்
குறையும். உடல் உபாதைகளும் நீங்கும்.இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட
அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம்
பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு.
இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும்.இதனால் ஒளிச்சேர்கையின் போது
வெளியாகும் ஆக்சிஜனில் வெகு சக்தியுள்ள ஒசான் (O3)கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது.
இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை ,மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல்
ஓடு ,உள்ளிருக்கும் பருப்பு,வேப்பமரத்து பால் ,வேப்பம் பிசின்,வேப்பங்காய்
, வேப்பம் பழம் ,பூ,இலை ,இலையின் ஈர்க்கு ,வேப்பங் கொழுந்து போன்றவை
மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த , ஆயுர்வேத முறை
வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.
இதனால் தான் அம்மை கண்டுள்ள வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம்
கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல்
இருக்கும்.அம்மை நோய்க்கு ஆளானவர்களை வேப்பிலை மீது தான் படுக்க
வைத்திருப்பார்கள் .இது அம்மை நோய்
இறங்கும் போது உடம்பில் ஒரு வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும் .இதை தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள்.அம்மை நோய் இறங்கிய பின்
தலைக்கு தண்ணீர் விடுவார்கள்.அவ்வாறு தண்ணீர் விடும் சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து
எடுத்த விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசி பின் உடம்பை கழுவுவார்கள்.
சமீப காலமாக அறிவியல் ஆய்வுகளின் வாயிலாக வேப்பிலைக்கு நச்சினை முறிக்கும்
தன்மை மற்றும் நுண்ணிய விஷ கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது என தெளிவு
படுத்துகிறது.
மேலும் குழந்தை பிரசவமான வீட்டின் வாசற்புறத்தில்
வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் வெளியிலிருந்து
வருபவ்ரகளிடமிருந்து நச்சுகிருமியானது தாய் சேய் இருவரிடமும் பரவாமல்
தடுத்து இருவரையும் பாதுகாக்கும்.
நீரழிவு என்று சொல்லகூடிய
சர்க்கரை வியாதியையும் இது கட்டுபடுத்தும். எவ்வாறென்றால் வேப்பங்
கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை
வியாதியின் கடுமை குறைந்து அதை கட்டுபடுத்தலாம் .மேலும் மஞ்சள்
காமலை,குடற்புண்,பாம்புகடி,வீக்கம்,காய்ச்சல் போன்றவைகளையும் இது குணபடுத்த வல்லது.
வேப்பபூ ஆனது நிம்பஸ்டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது,இது மனித உடலில்
சுரக்கும் ஹார்மோன்களில் ஒன்றை ஒத்து போவதால் இது பசியை தூண்டிடவும்,
பித்தம் ,வாந்தி, வாதம் சமந்தப்பட்ட நோய்களை குணபடுத்துகிறது.
மரங்கள் அனைத்திலும் புனிதமாகவும்,பலவகையான நோய்களை குண படுத்த வல்லதுமாக
இந்த வேப்பமரம் கருத படுகிறது. இதனால் நாமும் கோயில்கள்,குளக்கரை பொது
இடங்கள் போன்ற பகுதிகளில் நட்டு வைத்து பராமரித்தால் விஞான
ரீதியாகவும்,சாஸ்த்திர ரீதியாகவும் பல நன்மைகளை பெற்று வாழலாம்.
இலை :
வேப்ப மரத்தின் இலைகள் தோல் நோய்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகின்றன.
வேப்ப மர இலைகளை அரைத்து பசைபோல் செய்து வீக்கம், நாள்பட்ட புண்கள்,
கட்டிகள் மீது பூசி வரலாம். தாய்மார்கள் பால் சுரப்பை நிறுத்த வேப்ப மர
இலைகளை மார்பகங்களின் மீது வைத்து கட்டுவார்கள்
.வேப்பம் பூ:
வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல்,பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்பார்கள்.
வேப்பங்காய்:
வைரஸ் காய்ச்சலால் தொழுநோய், சிறுநீர் சம்பந்தமான நோய்களுக்கு வேப்பங்காய் நல்ல பலன் தருகின்றது.
வேப்பம் பழம் :
வேப்பம் பழத்தை அரைத்து சாற்றை எடுத்து தோல் புண், சொறி, சிரங்குகளில் பூச அவை குணம் பெறும்.
வேப்பங் கொட்டை:
உடலில் உள்ள புண்களில் தொற்று நோய்க்கிருமிகள் தாக்காதபடி செய்ய
வேப்பங்கொட்டையை அரைத்துப் பூசும் வழக்கம் கிராமங்களில் நிலவி வருகின்றது.
பட்டை:
வேப்பம் பட்டையுடன் நீர்,எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச்
சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி, சிரங்குகளின் மீது
பூசிவந்தால் அவை குணம் பெறும் என்று மூலிகை மருத்துவ நூல்களில் கூறப்பட்டு
வருகிறது.
மேலை நாட்டு அறிவியல் வல்லுனர்கள் இந்திய குடும்ப
பெண்கள், பல நூற்றாண்டு களாக நம்பி வந்த கருத்தை அறிவியல் மூலம்
நிரூபித்துள்ளனர். அதுதான் வேப்ப மரத்தின் பயன். வேப்ப மரத்தின் நோய்
நீக்கும் பயனை தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர்.
வேம்பு
தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும்,
வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே
“தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.
வேம்பு (Azadirachta indica). வேப்ப மரம் இந்தியா, இலங்கை, பர்மா போன்ற
நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி,
ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர
வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை
என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூ இல் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி,
ரசம் என்பவை செய்யலாம். வேப்ப எண்ணையும் மருத்துவ ரீதியாக
பாவிக்கப்படுகின்றது.
சித்தர்கள் மூலமாக நமக்கு தெறிந்த சித்த மருத்துவம்:
இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள்
அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர்.
இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
*இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.
*லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம்
வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல்
புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.
*வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும்
ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.
வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக்
கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.வேப்ப எண்ணெய்யை
சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று
எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.
*எலிகளுக்கு வேப்பிலை
சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது
வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி
விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.
*நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின்
வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம் பூவிலிருந்து
அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக சித்திக் ஆலம்
என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.சுற்றுச் சூழலை பாதுகாத்து
நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை
வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக்
கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.
*வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து
மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து
அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.வேப்பம் விதைக்கும்,
எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
***வேறுபெயர்கள்:
அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.
மருத்துவப் பண்புகள்:
*இலை:
. புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.
*2. வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.
*3. வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.
*4. வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
பூ:
*பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.
காய் + பழம்:
*தோல் நோய் தீரும்.
விதை:
1. மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.
2. விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.
நெய்:
1. துஷ்ட புண்கள் தீரும்.
2. ஆராத இரணங்கள் தீரும்.
வேப்பம் பட்டை:
1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.
*2)கஷாயம் குட்டம் தீரும்.
*அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும்
Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.
வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும்
ஆற்றல் பெற்றுள்ளது.
பிசின்:
*மேக நோயைப் போக்கும்.
குறிப்புகள்:
1. பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.
*2. 100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.
*3. பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.
*4. வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில்
கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து
வளரும்.
*5. வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை
பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை
உடையதாகும். விந்து கட்டும்.
*6. வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து
காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள்
வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.
*7. நம் வீடுகளில் வேம்பு
வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை
சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது
தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
கிராமங்களின் மருத்துவ சாலை
வாஷிங்டனில் உள்ள தேசிய விஞ்ஞான ஆய்வு மையத்தில் வேப்பமரம் பற்றிய சிந்தனை
கள் ஒரு புதிய திருப்புமுனையை உருவாக்கியுள்ளது. வேப்ப மரம்
பல்லாயிரக்கணக்கான மக் களுக்கு விலை குறைவான மருந்துகளை தருகிறது.
வேப்பமரம் எண்ணிக்கையில் அதிகம் வளர்வதால் சுற்றுப்புற சூழ்நிலையை
பாதுகாக்கிறது. பூமியில் சூரியனின் வெப்ப தாக்குதல் குறைகிறது.
வேப்ப மரம் கிராமங்களின் மருத்துவச் சாலை என்ற கருத்தை அமெரிக்க விஞ்ஞானி
கள் வலியுறுத்துகின்றனர். கி.பி.1959-ல் ஜெர் மானிய பூச்சிக்கொல்லி அறிஞர்
திரு. ஹெயன் ரிச் ஸ்கூமுட்டர் சூடானில் ஒரு அதிசயத்தை கண்டார். பூச்சிகள்
ஒரு தோட்டத்தை நாசமாக்க படை யெடுத்து சென்றன. தோட்டத்தில் இருந்த வேப்ப
மரத்தை தவிர அனைத்து செடி, கொடிகளும் நாசமாயின. இந்த அதிசயத்தை கண்ட ஜெர்
மானிய விஞ்ஞானி இதனை உலகுக்கு அறிவித் தார். புதுடெல்லியில் இருக்கும்
இந்திய விவசாய கழகத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் மூன்று
மாதத்துக்கு ஒரு முறை வேப்பமரத்தின் பயன்குறித்து கட்டுரைகள் வெளிவரலாயின.
வேப்ப மரப்பட்டையின் சாறு மாத்திரை களாக தயாரிக்கப்பட்டு ஆண்கள் உட்கொண்
டால் ஆண்களுக்கு அது இயற்கையிலேயே ஒரு குடும்ப கட்டுப்பாட்டு சாதனமாக
அமைகிறது. வேப்ப மரப்பட்டைகள் மற்றும் வேப்ப இலைகள் இயல்பாகவே ஒரு பூச்சி
கொல்லி மருந்தாக வேலை செய்கிறது.
பூச்சிக்கொல்லி மருந்து
வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள்
பருத்தி மற்றும் புகை யிலைச் செடிகளை அழிக்கும் பூச்சிகளை அழிக்கிறது. இதனை
சோதனை முறையில் இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தி
அறிவியல் வல்லுநர்கள் வெற்றிகண்டனர்.
வேப்பமரம் சுற்றுப்புறச்
சூழ்நிலையை பாதுகாக்கிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. அதிகமான வேப்ப
மரங்கள் நடுவதால் பூமி குளிர்ச்சி அடைகிறது. எந்த சூழ்நிலை யிலும் வேப்பமர
வளர்ச்சி பாதிப்பு அடைவது இல்லை. வேப்பமரம் மிக வேகமாக வளரும் மரமாகும்.
தொண்ணூறு அடி உயரம் வரை வளரும். பூமியின் பசுமையை காப்பாற்றும் மரம் வேப்ப
மரமாகும்.
கனடாவில் உள்ள ஒட்டவா பல்கலைக்கழகம் விவசாய ஆய்வில்
சிறப்பான இடத்தை வகிக்கிறது. அதில் பணியாற்றும் விஞ்ஞானி டாக்டர் ஜான்
ஆர்னசான் வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கையான பூச்சிக்
கொல்லி மருந்துகள் தற்போது சந்தையில் இடம் வகிக்கும் வேதியியல் பூச்சிக்
கொல்லி மருந்துகளை பின்னுக்கு தள்ளிவிடும் என்கிறார்.
வியாபார முக்கியத்துவம்
வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள்
தாவரங்களை அழிக்கும் பூச்சிகளை அவை கூட்டு புழு பருவத்தில் இருக்கும் போதே
அழித்து விடுகிறது. வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி
மருந்துகளை தெளித்தால் அம்மருந்தின் வாசனை இருக்கும் வரை பூச்சிகள் எந்த
செடியினையும் அழிக்காமல் உள்ளது. மேலும் அப்பூச்சிகள் பட்டினியால்
சாவதையும் கண்டார் டாக்டர் ஜான் ஆர்னசான்.
வேப்ப மரத்தில் இருந்து
தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ரசாயன பூச்சிக் கொல்லி
மருந்தில் உள்ளடையதில் டால மேட்டை விட அதிக சக்தி வாய்ந்தவை யாகும்
இத்தகு கண்டுபிடிப்புகளின் பலனாய் வேப்ப மரத்தின் முக்கியத்துவம் வியாபார
முக்கியத்துவம் அடைந்து விட்டது. ரசாயன பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதால்
ஆண்டுக்கு இருபது ஆயிரம் பேர் மரணம் அடைகின்றனர் பத்து லட்சம் பேர் நோயால்
பாதிக்கப்படுகின்றனர் என கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞான டாக்டர் மர்ரே
இஸ்மான் கூறுகிறார்.
ஆண்மைக் குறைவு
ரசாயன
பூச்சிக்கொல்லி மருந்துகள் அமெரிக்காவில் தற்போது 450 மில்லியன் டாலருக்கு
விற்பனை ஆகிறது. வரும் ஆண்டுகளில் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின்
விற்பனை இரு மடங்கு ஆகிவிடும். இதனால் சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்பு
அடைந்து விடும் என்பதை உணர்ந்த அமெரிக்க மக்கள் இயற்கை உரமான வேப்ப
மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துமாறு
கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பங்கொட்டையை பொடியாக்கி பயன்
படுத்தும் ஊர்களில் மக்கள் மத்தியில் இரண்டு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதனால் ஆஸ்துமா என்ற ஒவ்வாமை நோய் ஏற்படுகிறது என்றும். ஆண்மைக் குறைவு
ஏற்படுகிறது என்றும் மக்கள் கருதுகிறார்கள். இந்த ஐயப்பாட்டை வேளாண்
அறிஞர்கள் களைய வேண்டிய நிலையில் உள்ளனர்.
இவ்வளவு பெருமை வாய்ந்த
வேப்ப மரத்தின் காப்புரிமையைத் தற்போது அமெரிக்க அரசு இந்தியாவிடம்
கோரியுள்ளது. எனவே வேப்ப மரத்தின் அவசியத்தை இந்திய மக்கள் உணர்ந்து வேப்ப
மரம் வளர்த்து சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாக்க வேண்டுமாய் நமது வேளாண்
விஞ்ஞானிகள் கேட்டுள்ளனர்.
நன்றி தமிழ் மருத்துவம் - Tamil Medicine