
சுவைகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. புளிப்பு (sour), உப்பு (salt), கசப்பு (bitter), இனிப்பு (sweet) இந்த நால்வகைப் பிரிவுடன் சில வேளைகளில் இன்னும் இரண்டு பிரிவுகளான உலோகப் பண்பு வாய்ந்தவை (metallic), காரத்தன்மையுடையவை (alkaline) ஆகியவையும் சேர்க்கப்படுவதுண்டு. பெரும்பாலானவற்றில் மணமும் நறுமணச்சுவையும், மணங்களைப் பொறுத்துச் சுவைகள் அமைவது போலவே அமைகின்றன.
சுவை அரும்புகள் வேறுபட்ட சுவைகளை உணருமாறு தனிப்பட்ட குழுக்களாக உருவாக்கப்பட்டுள்ளன. ஏனெனில் வாயின் எல்லாப் பாகங்களிலும் சுவையைச் சமமான அளவில் எளிமையாகத் தூண்ட இயலுவதில்லை என்பதால் விளங்கும். இனிப்புப் பொருள்கள் நா நுனியில் நன்றாகச் சுவையை உணர்த்தும்; கசப்புப் பொருள்கள் நாவின் பின் பகுதியில் நன்றாக அச்சுவையையுணர்த்தும்.
நன்றி -நலம், நலம் அறிய ஆவல்.