மாயவரம், சீர்காழி மார்க்கத்தில் வைத்தீஸ்வரன் கோவில் மருந்தீஸ்வரர்,
முத்துக்குமாரசுவாமி ஆலயம் இருக்கிறது. இங்கே தல விருட்சமாகிய வேப்ப
மரத்தினடியில் தன்வந்தரியின் ஜீவ சமாதியும், ஆலயத்தினுள் வசிஷ்டரின் ஜீவ சமாதியும் அமைந்து அருள் ஒளி பாய்ச்சுகின்றது.
சீர்காழி, சிதம்பரம் மார்க்கத்தில் கொள்ளிடத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் ஆச்சாள்புரம் உள்ளது. இங்கே சத்குரு ஸ்ரீகாகபுஜண்டர் அருள்கின்றார். திருஞானசம்பந்தர் ஜோதியில் கலந்த ஆலயம் இங்குள்ளது. வடலூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் மேட்டுக்குப்பம் உள்ளது. இங்கே அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்த சித்தி வளாகம் தவறாது கண்டுகளித்து அருள்பெற வேண்டிய இடம்.
நெய்வேலிக்கு அருகில் விருத்தாசலம் இருக்கிறது. இங்கே பாம்பாட்டிச் சித்தர் ஜீவ சமாதி இருக்கிறது. திருவாரூர், நாகை சாலைக்கு அருகில் எட்டுக்குடி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தல விருட்சத்தின் அருகில் வால்மீகி ஜீவசமாதியும், இதனருகில் சிக்கல் சிங்கார வேலன் சன்னதியில் ஸ்ரீ போகநாதரும், வசிஷ்டரும் மற்றும் பல சித்தர்களும் அருளாட்சி செய்கிறார்கள்.
அகப்பேய் சித்தர் எட்டுக்குடி, தஞ்சைக்கு அருகில் திருவையாற்றில் அருள்புரிகின்றார். திருச்சியை அடுத்த கரூரில் கருவூரார் எனப்படும் கருவூர்த்தேவரும், திருச்சி திருவானைக்காவலில் ஸ்ரீகாகபுஜண்டரும், நாகப்பட்டினத்தில் நாகைநாதர் ஆலயத்தில் அழுகண்ணரும், காசிபரும், வரதரும் அருள்புரிகின்றனர்.
நாகைக்கு அருகில் பொய்கை நல்லூரில் ஸ்ரீகோரக்க நாதரும், அருகில் புஜண்டவனத்தில் ஸ்ரீ காகபுஜண்டரும், நவநாதாக்களும் அருள்புரிகின்றனர். நாகப்பட்டினம் அருகில் நாகூர் மீரான் சாகிப், முகைதீன் ஆண்டவர் தர்க்கா இருக்கிறது.
மதுரையில் ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் சுந்தரானந்தர் அகத்தியரும், அருகிலே அழகர்மலையில் பதஞ்சலியும், இராமதேவர், யாக்கோப்பு என்ற தேரையரும், பழமுதிர்ச்சோலையில் ஸ்ரீபோகநாதர், கமலமுனியும், மதுரைக்கு அருகில் திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீபோகநாதரும், மலை உச்சியில் மச்சமுனியும், சிக்கந்தர் பாத்ஷா ஒலியுல்லாவும் அருள் புரிகின்றனர்.
திருச்செந்தூரில் புண்ணாக்கீசர், காசிபர் ஆகியோர் திருவருள் புரிகின்றார்கள். இங்கே எம்பெருமான் சுப்ரமண்யர் சன்னதிக்கு அருகில் இடதுபுறத்தில் சிறிய கதவுண்டு. இதன் வழியே உள்ளே சென்றால் குகையினுள் பஞ்சலிங்க வடிவாக ஐந்து சித்தர்கள் இருப்பதையும், அக்குகைக்குள் சூரிய ஒளி உள்ளே புகுவதையும் கண்ணாரக் கண்டு அருள் பெறலாம்.
திருச்செந்தூருக்கு அருகில் காயல்பட்டினம் உள்ளது. இங்கு பல சித்தர்களும் அருள் வழங்குகின்றனர். கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரத்தில் விஸ்வாமித்திரர், வசிஷ்டர், பிருகு முனிவர் ஆகியோரும் அருள் புரிகின்றனர். பழனியில் உள்ளது போல் இங்கு நவபாஷாணத்தால் உள்ள சிவலிங்கம் உள்ளது. சுசீந்திரத்திற்கு அருகில் மருந்து மலை உள்ளது. இங்கு காகபுஜண்டரும், நவநாதாக்களும் அருள்புரிகின்றனர்.
நாகர்கோயிலுக்கு அருகில் 11 கி.மீ. தூரத்தில் திருவனந்தபுரம் செல்லும் சாலையில் தக்கலை உள்ளது. இங்கு கேட்டதை வழங்கும் இறைவள்ளல் பீர் அப்பா எனப்படும் பீர் முகமது தர்க்கா உள்ளது. இரவு – பகல் தங்கித் தொழுது கண்கூடாய் அருள் பெறலாம்.
நன்றி ;நா.சோமசுந்தரம் மற்றும் Sathishkumar Jothidar