காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:48 PM | Best Blogger Tips
காதல் அழியாமல் இருக்க வேண்டுமெனில் ஒருசிலவற்றை பின்பற்றி தான் ஆக வேண்டும். மேலும் ஒருசில கட்டுப்பாடுகளும், வரைமுறைகளும் வேண்டும். அத்தகைய வரைமுறை தாண்டி நடந்தால், எந்த ஒரு உறவும் நீண்ட நாட்கள் நிலைக்காது. அப்படி உங்கள் துணை எப்போதும் போன் செய்து கொண்டு இருப்பாரா? நீங்கள் உங்கள் நண்பர்களுடன் வெளியே தனியாக செல்வதற்கு மறுக்கிறாரா? இல்லை ரோட்டில் யாருடனாவது பேசினால், என்ன பேசினீர்கள் என்று கேட்டு நச்சரிக்கிறாரா? இவை அனைத்திற்கும் ஆம் என்று கூறினால், அதற்கு நீங்கள் காதலிக்கும் பெண்/ஆண் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்று அர்த்தம்.

மேலும் இந்த நிலையில், அவர்கள் அதிகப்படியான டென்சனை ஏற்றி, வேலையை சரியாக செய்ய விடமாட்டார்கள். அப்படி இருந்தால், காதல் வாழ்க்கையானது ஆரோக்கியமற்றதாக உள்ளது என்று அர்த்தம். பொதுவாக ஒரு உறவுமுறையில் சொந்தம் கொண்டாடுவது என்பது சாதாரணம் தான். ஆனால் அது அளவுக்கு மீறினால், அதுவே காதல் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்துவிடும். இப்போது உங்கள் காதலி/காதலன் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடினால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!
signs an over possessive girlfriend or boyfriend

* நீங்கள் காதலிக்கும் காதலி/காதலன் எந்நேரமும் உங்களுடன் இருக்க விரும்பினால், அது அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்று அர்த்தம். அதுவும் அலுவலகத்திற்கு சென்று விட்டால், தொடர்ந்து போன் செய்து வேலையை செய்ய விடாமல் தடுப்பார்கள். ஆன்-லைனில் வந்து, உங்களது நண்பர்களின் விவரத்தை விசாரிப்பார்கள்.

* தினமும் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். மேலும் எப்போதும் போனில் உள்ள மெசேஜ் அல்லது இமெயில் போன்றவற்றை பார்க்க வேண்டும் என்று சொல்வது, யாருடனாவது பேசும் போது, ஸ்பீக்கரில் போடச் சொல்லி வற்புறுத்துவது, பாஸ் வேர்ட்டுகளை பகிர்ந்து கொள்ளுமாறு சொல்வது, அதை அவ்வப்போது பரிசோதித்து பார்த்து கேள்விகள் கேட்பது போன்றவையும், அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறியே.


* எங்கு சென்றாலும், உங்களது ஆடைகளை எடுத்துச் செல்வது, அவர்களுக்கு பிடித்த ஆடையை உடுத்த சொல்வது, பிடித்தவாறு நடக்க வைப்பது போன்றவை மனதை குளிர்ச்சியடைய வைக்கும் ஒரு விஷயமாக இருந்தாலும், அது வாழ்நாள் முழுவதும் என்று வந்தால், சற்று கடினம் தான். ஏனெனில் இவ்வாறு நடந்தால், பின் எந்த ஒரு ஆடையானாலும் சரி, எந்த ஒரு முடிவு எடுக்க வேண்டுமானாலும், அவர்களிடம் சொல்லாமல் செய்துவிட்டால், பின் அது சண்டையை உண்டாக்கி, வாழ்க்கையின் அமைதியையே கெடுத்துவிடும்.

* மற்றொன்று வீட்டில் இருந்து அம்மா, அப்பா போன் செய்தால் கூட, விரைவில் பேசி விட்டு வருமாறு கூறுவது, பெண்/ஆண் நண்பர்களிடம் பேச விடாமல் தடுப்பது போன்றவையும் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுவதற்கான அறிகுறி ஆகும்.

* வேலையின் காரணமாக அலுவலகத்தில் பிஸியாக இருக்கும் போது, நீங்கள் பிஸி என்று தெரிந்தும், அவசரம் என்று பொய் சொல்லி பார்க்க வருமாறு செய்வதும் ஒரு அறிகுறியே. இந்த மாதிரியான நிலை சில சமயங்களில் சந்தோஷமாக இருந்தாலும், சில நேரங்களில் அது பெரும் பிரச்சனையாக இருக்கும். இத்தகையவாறெல்லாம் உங்கள் காதலி/காதலன், உங்கள் சுதந்திரத்திற்கு தடையாக எப்போதும் இருந்தால், அது எல்லையின்றி சொந்தம் கொண்டாடுகிறார் என்று அர்த்தம். எனவே காதல் என்றால் என்ன என்பதை புரிந்து, ஒருவரது சுதந்திரத்திற்கு தடை ஏற்படுமாறு நடந்து கொள்ளாமல், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வாழ வேண்டும். இல்லாவிட்டால், இருவரும் பிரிந்து விடுவதே நல்லது.

Thanks to Thatstamil.com