சுவாசம்..

மணக்கால் அய்யம்பேட்டை | 12:37 PM | Best Blogger Tips
Image may contain: 1 person, sky and outdoor

சுவாசத்தை ஒழுங்குபடுத்தி,பச்சை குழந்தை மாதிரி மென்மையாகவும் நெகிழ்வாகவும் உன்னால் ஆக முடியுமா??
- "தாவோ தே ஜிங்"ல்-லாவோட்சு

லாவோட்சு கேட்கிற இந்தக் கேள்வியானது ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது...

மென்மையாகவும் நெகிழ்வாகவும் இருப்பதற்கும் சுவாசத்திற்கும் சம்மந்தமுண்டா??

நிச்சயம் சம்மந்தமுண்டு..

மனதின் போக்கை காட்டக் கூடிய கண்ணாடி தான் சுவாசம்..
நீங்கள் அதிகமான கோபத்திலுள்ள போது உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்..

தாறுமாறாய் இயங்கும் அதோடு வெளிவறும் சுவாசத்தின் அங்குலம் அதிகரிக்கும்..

அதேவேளையில்..

பெருங்கொண்டாட்டத்தில் துள்ளிக் குதிக்கக் கூடிய நிகழ்வொன்றினில் உங்கள் சுவாசத்தை கவனியுங்கள் கிட்டதட்ட இதே போன்று சுவாசத்தின் அங்குலம் அதிகரித்துக் காணப்படும்..

ஆனால்...

சோகமின்றி அதேநேரம் பெருங்கொண்டாட்டுமுமின்றி இரண்டிற்கும் மத்திமமான ஓர் ஆழ்ந்த அமைதி நிலை அனுபவத்தில் உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்..

சீராகவும் வேகமான இயக்கமின்றி மென்மையாக நாசிவழி போவதும் வருவதுமாகவும் இருக்கும்..

இந்நிலையில் மனதிலும் ஆழ்ந்த அமைதி உண்டாகும்..

உடலின் எடைகூட ஒரு சுமையாய் தெரியாது...

எண்ணச் சந்தையில் நெரிசல் குறைந்திருக்கும்..

நம்முடைய செயல்பாடுகளும் மென்மையானதாய் இருக்கும்..

நடை கூட வேகமாய் இராது..

வார்த்தை உச்சரிப்பைக் கூட மனம் விரும்பாது..

பூக்களையும்,மரங்களையும் ரசித்தபடியே விழிகள் உலாவும்...

வானங்களும்,மேகங்களும் கண்களுக்கு விருந்தாகும்..

எதிர்வருவோரிடம் எல்லாம் எம்பெருமான் காட்சியளிப்பான்..

துள்ளிக்குதிக்க விரும்பாத அதேவேளையில் பேரானந்தத்துடன் அலைகள் அடங்கிய கடல் போல் மனம் அமைதியுறும்.

சுவாசத்தை கருவியாய் கொண்டுள்ள எல்லா யோக மார்க்கங்களின் இலட்சியமும் இதுவே.

ஏனெனில்,சுவாசம் மனதின் கடிவாளம்.

கடிவாளம் கைக்குள் அடங்க அடங்க மனமெனம் குதிரையின் ஓட்டம் நெறிப்படும்.

நெறிப்பட்ட மனம் நெகிழ்வினை அடையும் மென்மையில் திளைக்கும் சதா ஆனந்தத்தில் திளைக்கும் பச்சைக் குழந்தை மாதிரி.

 நன்றி 

Kiruba Haran 

இணையம்

தெய்வம்_நின்று_கொல்லும் ....

மணக்கால் அய்யம்பேட்டை | 11:47 AM | Best Blogger Tips


Image may contain: 1 person, standing
#தமிழக_கோவில்களில்_சிலைதிருட்டு என செய்தி வரும்போது, திருடும்போது சாமி என்ன செய்தார் ஏன் திருடனைத் தடுக்கவில்லை என அடுக்கடுக்காய் நாத்திகர்கள் கேள்விகளை எழுப்புவர்.
Image may contain: one or more people and people standing
#சிலை_திருடியவர்கள்_இறுதிக்காலம் 
எப்படி இருந்தது எனச் சிலைத் திருட்டைப் பற்றி தமிழ் இந்துவில் வந்த தொடர் கட்டுரை சொல்கிறது....

சட்டத்தின் ஓட்டைகளையும் பண பலத்தையும் வைத்து இந்தத் திமிங்கலங்கள் தப்பினாலும், "தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழி நமக்கெல்லாம் நினைவுக்கு வருகிறது.
Image may contain: 1 person, text

#பால்ராஜ்_நாடார் 
ஹைதராபாத் லாட்ஜில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். விடுதியில் போலி முகவரி கொடுத்து தங்கி இருந்ததால், அடை யாளம் கண்டுபிடிக்க முடி யாமல் மூன்று நாட்கள் வைத்திருந்து, அழுகிய நிலையில்தான் அவரது உடல் சென்னை வந்து சேர்ந்தது.

பாகனேரியில் கோயில் சிலைகளைத் திருடியதமிழர் விடுதலைப் படை’ #நாகராஜன், பின்னர் திண்டுக்கல்லில் சைலேந்திர பாபு எஸ்.பி-யால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிவபுரம் நடராஜர் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட #மும்பை_தாஸ், 1987-ல் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும்படி போலீ ஸார் சம்மன் கொடுக்கப் போனபோது மாரடைப்பில் இறந்து கிடந்தார்.

#நெல்லை_சேதுராமலிங்கம் 
சிறைக்குள்ளேயே தூக்குமாட்டிக்கொண்டு உயிர்விட்டார்.

#தூத்துக்குடி_உதயகுமார் 
தற்கொலை செய்துகொண்டார்.

#பகதூர்சிங்_லாமா 
கார் விபத்தில் பலியானார்.

#திருப்பனந்தாள்_ராமசாமி 
தொழு நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

நன்னிலம் அருகே துளார் நடராஜர் சிலையைத் திருடிய #ராமகிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டார்.

நாச்சியார்கோவில் #கிருஷ்ணமூர்த்தியும் அவரது மகளும் கண் பார்வை இழந்தனர்.

மதுரை #மணி கும்பகோணம் கோர்ட்டில் விடுதலை பெற்று வெளியில் வந்த போது பக்கவாதத்தால் சுருண்டு விழுந்தார்.

நெல்லையைச் சேர்ந்த  # ஆசீர்வாதம்_தங்கய்யாவை மூன்று வழக்குகளில் இருந்து விடுதலை செய்தது நீதிமன்றம். முதல் வழக்கில் இருந்து அவர் விடுதலையான நாளில் குற்றாலத்தில் அவரது  மகன் விபத்தில் பலியானார். இரண்டாவது வழக்கில் விடுதலையான அதே நாளில்  அவரது # மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

மூன்றாவது வழக்கில் விடுதலையாகி நீதிமன்றத்தைவிட்டு வெளி யில் வந்த #தங்கய்யா, அந்த இடத்தி லேயே பக்கவாதம் பாதிக்கப்பட்டு முடங்கிப் போனார்! என்று சொன்ன அந்த அதிகாரி, "சிலைக் கடத்தல் வழக்குகளைக் கையாளும் போலீஸாரில் கடவுளுக்குப் பயப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம் மனசாட்சிக்கே பயப்படாத பலரும் இருக்கிறார்கள்.

கடத்தல் புள்ளிகளோடு கைகோத்து கோடீஸ்வரர் ஆன போலீஸ்காரர்களும் இருக்கிறார்கள். அப்படி பணம் சம்பாதித்தவர்களில் விபரீதமான முடிவுகளைச் சந்தித்தவர்களும் உண்டு.

#காசிநாதன் 
என்ற ஆய்வாளர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
சி.வி.ராமன் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்த # ஆய்வாளர்_ஜோசப் 1980-ல் பக்கவாதத்தில் முடங்கினார்.

#ஆய்வாளர்காதர்_மொய்தீன் 
சிலைத் திருட்டு வழக்கு ஒன்றில் போலி சிலை களைத் தயார்செய்தார். அதை வைத்தே குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தவர். தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார். பிறகு, ரயில்வே போலீஸுக்கு மாற்றப்பட்ட அவர், 1996-ல் ரயில் தண்டவாளத்தில் மர்மமாக இறந்து கிடந்தார்’’ என்று சொன்னார்.

35
ஆண்டுகளாக கோயில் சிலை களைக் கடத்திவிட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள வடநாட்டு கோடீஸ்வரர் #சுபாஷ்_சந்திர_கபூரும் தீவிர நோயின் தாக்கத்தில் இருக்கிறார்

"#அரசன்_அன்று_கொல்வான்;
#
தெய்வம்_நின்று_கொல்லும்" _என்ற பழமொழி நிஜமாகிறது இன்று.

அன்று.... இன்று.... என்பதெல்லாம் வெறுமனே காலம் காட்டும் சொற்களே....

ஆனால் இறைவனின் சிலைகளைத் திருடுவோரும், அதைக் கடத்துவோரும், வாங்கி விற்போரும், அதைப் பதுக்கி வைப்போரும், கோயில் சொத்துக்களைக் கொள்ளையடிப்போரும், இறைவனைப் பழிப்போரும் இறைவனின் கொடுந்தண்டனைக்கு ஆளாவதுடன், அவர்களது #வம்சமே_காலங்காலமாகப்_பாதிக்கப்படும்! என்பது மட்டும் #உறுதி.

சிவன்_சொத்து_குலநாசம் 

 Image may contain: Selva Trichy, smiling, standing, car, sky and outdoor
Thanks to FB Selva Trichy