தொப்பையே குறைக்க சில முக்கிய குறிப்புகள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:40 PM | Best Blogger Tips

பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும்.

உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவது கிடையாது. ஆனால், உடல் எடைக் குறைப்பு மட்டும் ஒர...
ுசில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று நாம் பேராசைப்படுகிறோம். ஒரே வாரத்தில் உடலை இளைக்கவைக்கும் பயிற்சி ஏதாவது இருக்கிறதா? என விளம்பரங்களைத் தேடி அலைகிறோம். உடல்பருமனில் இருந்து அபரிமிதமான உடற்பருமனுக்கு செல்லும்போது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். இந்தியர்களின் சராசரி பாஸல் மெட்டபாலிக் ரேட் (பி.எம்.ஆர்.) என்பது 1800 கலோரி. ஆனால், சராசரியாக இந்தியர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் 3000 கலோரி உள்ளது. நம் உடல்வாகையும், உணவுப் பழக்கத்தையும் முறையாக ஆராய்ந்து, படிப்படியான மாற்றங்களை நமக்குள் நிகழ்த்தினால், நிச்சயம் உடல் பருமன் பிரச்னையை சரி செய்துவிட முடியும். இதோ, உங்களை நீங்களே அலசுவதற்கான அற்புத வழிகள்...

உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைப் பொறுத்து மட்டுமே நோய் அபாயம் அதிகரிப்பது கிடையாது. எங்கே, எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்து அது மாறும். ஈஸியாகப் புரிந்து கொள்வதற்காக, கொழுப்பு சேரும் இடத்தை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல் என்று இரண்டு விதமாக வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பை ஆப்பிள் மாடல் என்றும், இடுப்பு மற்றும் பின்புறத்தில் சேரும் கொழுப்பை பேரிக்காய் மாடல் என்றும் கூறுவார்கள். இரண்டுமே மோசம்தான். பேரிக்காய் வடிவத்தினரைவிட ஆப்பிள் வடிவத்தினர்தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அவர்களைவிட இவர்களுக்கு அதிகம்!

இடுப்பை அளவிடுங்கள்... அபாயத்தைக் கணக்கிடுங்கள்...

நீங்கள் (ஆப்பிள்) ஆணாக இருந்தால் இடுப்பின் அளவு 94 செ.மீ-க்கு (37 இன்ச்) அதிகமாகவும், பெண்ணாக இருந்தால் 80 செ.மீ-க்கு (32 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். (பேரிக்காய்) ஆண்கள் 102 செ.மீ-க்கு (40 இன்ச்) அதிகமாகவும், பெண்கள் 88 செ.மீ-க்கு (35 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் கூடுதல் எச்சரிக்கை தேவை. இடுப்பு அளவைக் குறைக்கும் முயற்சியில் உடனடியாக ஈடுபட வேண்டியது அவசியம்!

திட்டமிட்ட ஆரோக்கிய உணவு

ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். ஆரோக்கியமான உணவுத் திட்டமிடல் என்பதில், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவின் அளவைக் குறைத்து, அதிகக் காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளுதல், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த அளவு கொழுப்பு உள்ள பால் எடுத்துக்கொள்ளுதல், இறைச்சி, மீன், முட்டை, பாதாம், முந்திரி ஆகியவற்றைக் குறைவாக எடுத்துக்கொள்ளுதல் போன்றவை அடங்கும். உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளவேண்டும். இப்படி சமச்சீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே, உடல் எடை கட்டுப்படத் தொடங்கிவிடும்.

உடல் எடையைக் குறைக்க அதிக கலோரிகள் உள்ள உணவு மற்றும் பானங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் உணவில் இருந்து எந்த அளவு சக்தி கிடைக்கிறதோ, அதை உடம்பில் சேர்த்துவைக்காமல் அவ்வப்போது எரித்துவிட வேண்டும். அதாவது, உடல் உழைப்பின் மூலம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். விளக்கமாகச் சொன்னால்... உண்ணுகிற உணவுக்கு ஏற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என்று எது முடிகிறதோ, அதைச் செய்ய வேண்டும்.

உடல்பருமனால் அவதிப்படும் அதே நேரம், நீரிழிவு போன்ற பிரச்னை இல்லை என்றால் அவர்களுக்கு புதிய ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி (Sleeve gastrectomy) அறுவைச் சிகிச்சை உள்ளது. இந்த அறுவைச் சிகிச்சையில், பசியைத் தூண்டும் க்ரெலின் (Ghrelin)) என்ற ஹார்மோன் அகற்றப்படும். மேலும், இரைப்பையின் அளவும் குறைக்கப்படும். இதனால் சாப்பிடும் அளவு மட்டுமே குறையும், ஊட்டச்சத்து கிரகிப்பது குறைக்கப்படாது. இந்த அறுவைச் சிகிச்சை முடித்த ஒரே ஆண்டில், உடல் எடை 70 சதவிகிதம் வரை குறைந்துவிடும். அபரிமிதமான உடல்பருமன் உள்ளவர்களுக்கு பை பாஸ் அறுவைச் சிகிச்சை தான் சிறந்தது. இதில் இரைப்பையின் அளவு குறைக்கப்படுவதுடன், ஊட்டச்சத்து கிரகிக்கப்படும் அளவும் குறைக்கப்படுகிறது. இதுதவிர, ரோபோட்டிக் அல்லது எண்டோஸ்கோப்பி மூலமாகவும் உடல்பருமன் அறுவைச் சிகிச்சை செய்யும் முறை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் அறிமுகமாகியுள்ளது' என்றார்.

உடல் எடை குறைய டாக்டர்கள், டயட்டீஷியன் அளிக்கும் உற்சாக வழிகள்...

காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது.

உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேகவைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகள் பெட்டர்.

முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

பழ வகைகளில் மா, பலா, வாழை, சப்போட்டா ஆகிவற்றைத் தவிர்த்து, மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப் பழங்களைச் சாப்பிடலாம்.

அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணெயில் பொரிக்காமல், குழம்புவைத்து சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

குழந்தைகள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

பெரியவர்கள் குறைந்தது 30 நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய வேண்டும்.

குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்ற கூட்டு வேலைகளில் ஈடுபடலாம்.

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள் பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரையின் அளவைக் குறைத்து அருந்தலாம்.

கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், அவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

லிபோசக்ஷன் என்ற கொழுப்பு உறிதல் சிகிச்சையும் உள்ளது. இது, உடலின் எந்தப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த இடத்தில் செய்யப்படும்.

பொதுவாக, நாவை அடக்குவது என்பது மிகவும் கடினமான செயல். இனிப்பு, கொழுப்பு உணவுகளும் நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான். இவை அனைத்தையும் ஒரேயடியாகத் தவிர்த்தாலும், மனதளவில் தடுமாற்றமும், உற்சாகக் குறைவும் ஏற்படும். 'எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று உடல் எடையைக் குறைப்பதற்காக, உணவு மற்றும் உடற்பயிற்சியை மிக வேகமாக மாற்றிவிடக் கூடாது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்தானே... அதே பாணியில் பருமனையும் கரைப்போம்

குழந்தைக்கு பல்வலியா என்ன முதலுதவி செய்யலாம்?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:39 PM | Best Blogger Tips
பல்வலிக்கு முக்கியக் காரணம், பற்சொத்தை. வாயைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவது பற்சொத்தைக்கு அடிப்படை காரணம். இதன் விளைவாக, பற்களுக்கு இடையில் படியும் ’காரை’ என்று அழைக்கப்படுகிற கடினமான பொருள் பற்சொத்தைக்கு வழி அமைக்கிறது. பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் உணவுத்துகள்கள், வாயிலுள்ள நுண்கிருமிகள், உணவிலுள்ள இனிப்புகள் இவையனைத்தும் சேர்ந்து ’காரை’யாக மாறுகிறது.

பற்களின் மேலுள்ள ’எனாமல்’ என்னும் மேற்பூச்சுதான் பற்களைப் பாதுகாக்கும் கவசமாகத் திகழ்கிறது. ’காரை’ யிலிருந்து வெளிப்படும் ஒருவகை அமிலம் எனாமலை மெதுவாக அரிக்கத் தொடங்குகிறது. இதுதான் பல் சொத்தையின் ஆரம்பநிலை. இந்த நிலையில் பற்களைக் கவனிக்கத் தவறினால், அமிலம் பல்லின் வேர்ப்பகுதியையும் அரித்து விடும். அப்போது பல்லில் சீழ் பிடித்து, கழுத்தில் நெறிகட்டி, காய்ச்சல் வரும்.

அறிகுறிகள்:

சொத்தைப் பல்லுக்கு முதல் அறிகுறி, பல்வலி. குறிப்பாக, சூடான அல்லது குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடும் போது பல்வலி அதிகமாகும். இனிப்புப் பொருள்களைச் சாப்பிடும்போது பல்லில் கூச்சமும் வலியும் ஏற்படும். பல்லின் மேற்பரப்பு கறுப்புநிறமாக மாறும்; அங்கு குழி விழும்.

join nagapattinamnews@gmail.com

என்ன முதலுதவி செய்யலாம்?

வெந்நீரில் துணியை நனைத்துப் பிழிந்துகொண்டு, பல் வலியுள்ள முகத்தின் வெளிப்பக்கத்தில் ஒத்தடம் தரலாம். வலிநிவாரணி மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம். வேப்பமுத்துகளை பொடிசெய்து பல்லினுள் வைக்கலாம்.

மருத்துவரின் ஆலோசனைப் படி, ’டிசென்சடைசிங்’ மருந்து கலந்த களிம்பைச் சொத்தைப் பல்லின் மீது தடவலாம்.

என்ன சிகிச்சை?

பற்சொத்தை ஆரம்பநிலையில் இருந்தால், சில வேதிப்பொருள்களால் சொத்தையை அடைத்துவிட முடியும்.

சொத்தை வேர்ப்பகுதி வரை சென்றிருந்தால், ’வேர்ச்சீரமைப்பு’ சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம்.

பற்சொத்தை மிக மோசமாக இருந்தால், அந்தப் பல்லை அகற்றியே ஆக வேண்டும். மருத்துவரிடம் செல்வது மிகவும் அவசியம்.

பல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | 2:36 PM | Best Blogger Tips

பல்லில் ஏற்படும் பொதுவான பிரச்சனை சொத்தை. இதை ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது பல் முழுதையும் பாதிக்கும். சிலசமயம் பல் இரண்டாக உடைந்து போகும். அப்போது, உடைந்த கூறான பல், நாக்கு மற்றும் கன்னப் பகுதியில் குத்தி காயம் ஏற்படும்.


இது புற்றுநோயாக மாறும் வாய்ப்பு உண்டு. பல் சொத்தையை வேர் வைத்தியம் செய்து, செராமிக் செயற்கை பல்லை பொருத்தலாம். பல்லின் அடுத்த பிரச்சனை பல்செட். இதை அணிபவர்கள் இருபத்து நாலு மணிநேரமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் மட்டுமே அணியணும். இரவு படுக்கும் போதும் கண்டிப்பாக கழட்டணும்.

தொடர்ந்து அணிவதால், தடை எலும்பில் பாதிப்பு ஏற்படும். நம் வாயில் பலகோடி பாக்டீரியாக்கள் உள்ளன. பல் இடுக்கில் சிக்கிக் கொள்ளும் உணவுகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், வாய் துற்நாற்றம், ஈறு பிரச்னை ஏற்படும். பாக்டீரியாக்கள் எச்சில் மூலமாக வயிற்றுக்கும் மற்ற உறுப்புக்கும் பரவும்.

இதனால் கண்கள் சிவப்பாகும், சருமத்தில் தேமல், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகு வாயை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பல் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.


பல் ஆரோக்கியத்துக்கு டிப்ஸ்...


செய்ய கூடியவை...

தினமும் காலை. இரவு இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.

இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவு பொருட்களை ‘பிளாஸ்‘, தண்ணீரால் சுத்தம் செய்யணும்.

பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
பல்லில் பிரச்னை இருந்தால் உடனடியாக பல் நிபுணரை அணுக வேண்டும்.

செய்ய கூடாதவை...

இணைந்திடுங்கள் nagapattinamnews@gmail.com

பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவு பொருட்களை தவிர்க்கவும்.பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ்டிக் மற்றும் நூல் போன்ற பொருட்களை பல்லால் கடித்து கிழிக்க கூடாது.
புகை, பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்
பல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு:-

பல்லில் ஏற்படும் பொதுவான பிரச்சனை சொத்தை. இதை ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது பல் முழுதையும் பாதிக்கும். சிலசமயம் பல் இரண்டாக உடைந்து போகும். அப்போது, உடைந்த கூறான பல், நாக்கு மற்றும் கன்னப் பகுதியில் குத்தி காயம் ஏற்படும். 


இது புற்றுநோயாக மாறும் வாய்ப்பு உண்டு. பல் சொத்தையை வேர் வைத்தியம் செய்து, செராமிக் செயற்கை பல்லை பொருத்தலாம். பல்லின் அடுத்த பிரச்சனை பல்செட். இதை அணிபவர்கள் இருபத்து நாலு மணிநேரமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் மட்டுமே அணியணும். இரவு படுக்கும் போதும் கண்டிப்பாக கழட்டணும். 

தொடர்ந்து அணிவதால், தடை எலும்பில் பாதிப்பு ஏற்படும். நம் வாயில் பலகோடி பாக்டீரியாக்கள் உள்ளன. பல் இடுக்கில் சிக்கிக் கொள்ளும் உணவுகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், வாய் துற்நாற்றம், ஈறு பிரச்னை ஏற்படும். பாக்டீரியாக்கள் எச்சில் மூலமாக வயிற்றுக்கும் மற்ற உறுப்புக்கும் பரவும். 

இதனால் கண்கள் சிவப்பாகும், சருமத்தில் தேமல், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகு வாயை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பல் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.


பல் ஆரோக்கியத்துக்கு டிப்ஸ்... 


செய்ய கூடியவை...

தினமும் காலை. இரவு இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.

இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவு பொருட்களை ‘பிளாஸ்‘, தண்ணீரால் சுத்தம் செய்யணும்.

பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
பல்லில் பிரச்னை இருந்தால் உடனடியாக பல் நிபுணரை அணுக வேண்டும். 

செய்ய கூடாதவை...

இணைந்திடுங்கள் nagapattinamnews@gmail.com

பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவு பொருட்களை தவிர்க்கவும்.பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ்டிக் மற்றும் நூல் போன்ற பொருட்களை பல்லால் கடித்து கிழிக்க கூடாது.
புகை, பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்

சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:20 PM | Best Blogger Tips
அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதற்காக பல க்ரீம், ஃபேஷியல், ஃபேஸ் வாஷ் போன்ற பல செயல்களைச் செய்வோம். அதிலும் அவற்றை அழகு நிலையங்களுக்குச் சென்று, நிறைய பணம் செலவழித்து செய்வோம். எவ்வளவு தான் பணத்தை செலவழித்து முகத்தை அழகாக மாற்றினாலும், அவை நீண்ட நாட்கள் இருப்பதில்லை. சிலர் அதன் காரணத்தினால், விரைவிலேயே முதுமைத் தோற்றத்தை அடைய நேரிடுகிறது. என
வே அத்தகைய தோற்றத்தை விரைவில் பெறாமல் இருப்பதற்கு, இயற்கை வழிகளை மேற்கொள்வதே சிறந்தது.

இயற்கை வழிகளில் ஒன்று தான் பழங்கள். பழங்களை நிறைய சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எதற்கு சொல்கின்றனர் என்று தெரியுமா? ஏனெனில் பழங்களை அதிகமாக சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமமும் பொலிவாகும். அவ்வாறு பழங்களை சாப்பிட்டாலோ அல்லது சருமத்திற்கு பயன்படுத்தினாலோ, சருமம் நன்கு பொலிவோடு, இளமையாக காணப்படும். இப்போது சருமத்திற்கு பொலிவைத் தரும் பழங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவு சருமத்திற்கும் சிறந்தது. அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனலி இதில் வைட்டமின் ஏ என்னும் சத்து அதிகமாக உள்ளது. எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். மேலும் இதில் இயற்கையான எண்ணெய் உள்ளது. அதாவது இதனை சாப்பிட்டால், சருமத்தை பாதுக்காக்கும் வகையில் ஒரு படலத்தை உருவாக்கும். ஆகவே 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்துக் கொண்டு, அதில் சிறிது தயிர் ஊற்றி, கலந்து, பின் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் இதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்தும் தடவலாம்.

முகத்தில் முகப்பருக்கள் இருந்தால், பப்பாளி பழம் அதற்கு ஒரு நல்ல பலனைடத தரும். ஏனெனில் பப்பாளியில் உள்ள நொதியானது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை எளிதில் நீக்கிவிடும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தை பொலிவாக்குவதில் பப்பாளி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே பப்பாளியின் சதைப் பகுதியை எடுத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, கழுவி வந்தால், முகம் நன்கு பொலிவோடு இருக்கும்.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. ஏனெனில் அதில் உள்ள டானின் மற்றும் பெக்டின் என்னும் பொருட்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து குடலை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றுவதால், உடலானது அழுக்கின்றி இருக்கும். அதேப் போல் சாப்பிடுவதால் என்ன நன்மை கிடைக்கிறதோ, அதே போல் அந்த ஆப்பிளை மசித்து, அதில் சிறிது தேன் சேர்த்து, அதனை முகத்திற்கு தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் இந்த கலவையில் இருக்கும் வைட்டமின் சி, சருமத்தில் இருக்கும் மெலனின் அளவை குறைக்கிறது.

நிறைய பேருக்கு மாதுளை பிடிக்காது. இதற்கு காரணம் அதனை உரித்து சாப்பிடும் வகையில் பொறுமை இல்லாததே ஆகும். ஆனால் சருமம் நன்கு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனில் மாதுளை மிகவும் நல்லது. அதற்கு அத்தகைய மாதுளையின் விதையை அரைத்து, அத்துடன் வேண்டிய டோனரை சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கு, பின் அந்த கட்டிகளை ஒரு காட்டன் துணியில் வைத்து, பின் முகத்தில் தடவினால், முகமானது நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதிலும் இதனை கோடை காலத்தில் செய்தால், நன்றாக இருக்கும்.

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பல வகையில் பயன்படுகிறது. அதிலும் அதன் ஜூஸை காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், பின்னர் அதன் முழு பலனும் தெரியும். மேலும் அவ்வாறு ஜூஸ் போட்டு குடித்தப் பின்னர், அதன் தோலை தூக்கி எறிய வேண்டாம். ஏனெனில் அதன் தோலிலும் பல சருமத்திற்கான நன்மைகள் பல உள்ளன. அதிலும் ஆரஞ்சு பழத்தை உரித்ததும், அதன் தோலை உடனே முகத்தில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகமானது குழந்தையின் முகத்தைப் போன்று பொலிவோடு அழகாகும். இதனை தினமும் செய்தால், சருமம் சூப்பராக இருக்கும்.