பல்வலிக்கு
முக்கியக் காரணம், பற்சொத்தை. வாயைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவது
பற்சொத்தைக்கு அடிப்படை காரணம். இதன் விளைவாக, பற்களுக்கு இடையில் படியும்
’காரை’ என்று அழைக்கப்படுகிற கடினமான பொருள் பற்சொத்தைக்கு வழி அமைக்கிறது.
பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் உணவுத்துகள்கள், வாயிலுள்ள
நுண்கிருமிகள், உணவிலுள்ள இனிப்புகள் இவையனைத்தும் சேர்ந்து ’காரை’யாக
மாறுகிறது.
பற்களின் மேலுள்ள ’எனாமல்’ என்னும் மேற்பூச்சுதான்
பற்களைப் பாதுகாக்கும் கவசமாகத் திகழ்கிறது. ’காரை’ யிலிருந்து வெளிப்படும்
ஒருவகை அமிலம் எனாமலை மெதுவாக அரிக்கத் தொடங்குகிறது. இதுதான் பல்
சொத்தையின் ஆரம்பநிலை. இந்த நிலையில் பற்களைக் கவனிக்கத் தவறினால், அமிலம்
பல்லின் வேர்ப்பகுதியையும் அரித்து விடும். அப்போது பல்லில் சீழ் பிடித்து,
கழுத்தில் நெறிகட்டி, காய்ச்சல் வரும்.
அறிகுறிகள்:
சொத்தைப் பல்லுக்கு முதல் அறிகுறி, பல்வலி. குறிப்பாக, சூடான அல்லது
குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடும் போது பல்வலி அதிகமாகும். இனிப்புப்
பொருள்களைச் சாப்பிடும்போது பல்லில் கூச்சமும் வலியும் ஏற்படும். பல்லின்
மேற்பரப்பு கறுப்புநிறமாக மாறும்; அங்கு குழி விழும்.
join nagapattinamnews@gmail.com
என்ன முதலுதவி செய்யலாம்?
வெந்நீரில் துணியை நனைத்துப் பிழிந்துகொண்டு, பல் வலியுள்ள முகத்தின்
வெளிப்பக்கத்தில் ஒத்தடம் தரலாம். வலிநிவாரணி மாத்திரை ஒன்றைச்
சாப்பிடலாம். வேப்பமுத்துகளை பொடிசெய்து பல்லினுள் வைக்கலாம்.
மருத்துவரின் ஆலோசனைப் படி, ’டிசென்சடைசிங்’ மருந்து கலந்த களிம்பைச் சொத்தைப் பல்லின் மீது தடவலாம்.
என்ன சிகிச்சை?
பற்சொத்தை ஆரம்பநிலையில் இருந்தால், சில வேதிப்பொருள்களால் சொத்தையை அடைத்துவிட முடியும்.
சொத்தை வேர்ப்பகுதி வரை சென்றிருந்தால், ’வேர்ச்சீரமைப்பு’ சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம்.
பற்சொத்தை மிக மோசமாக இருந்தால், அந்தப் பல்லை அகற்றியே ஆக வேண்டும். மருத்துவரிடம் செல்வது மிகவும் அவசியம்.
பல்வலிக்கு
முக்கியக் காரணம், பற்சொத்தை. வாயைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவது
பற்சொத்தைக்கு அடிப்படை காரணம். இதன் விளைவாக, பற்களுக்கு இடையில் படியும்
’காரை’ என்று அழைக்கப்படுகிற கடினமான பொருள் பற்சொத்தைக்கு வழி அமைக்கிறது.
பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் உணவுத்துகள்கள், வாயிலுள்ள
நுண்கிருமிகள், உணவிலுள்ள இனிப்புகள் இவையனைத்தும் சேர்ந்து ’காரை’யாக
மாறுகிறது.
பற்களின் மேலுள்ள ’எனாமல்’ என்னும் மேற்பூச்சுதான் பற்களைப் பாதுகாக்கும் கவசமாகத் திகழ்கிறது. ’காரை’ யிலிருந்து வெளிப்படும் ஒருவகை அமிலம் எனாமலை மெதுவாக அரிக்கத் தொடங்குகிறது. இதுதான் பல் சொத்தையின் ஆரம்பநிலை. இந்த நிலையில் பற்களைக் கவனிக்கத் தவறினால், அமிலம் பல்லின் வேர்ப்பகுதியையும் அரித்து விடும். அப்போது பல்லில் சீழ் பிடித்து, கழுத்தில் நெறிகட்டி, காய்ச்சல் வரும்.
அறிகுறிகள்:
சொத்தைப் பல்லுக்கு முதல் அறிகுறி, பல்வலி. குறிப்பாக, சூடான அல்லது குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடும் போது பல்வலி அதிகமாகும். இனிப்புப் பொருள்களைச் சாப்பிடும்போது பல்லில் கூச்சமும் வலியும் ஏற்படும். பல்லின் மேற்பரப்பு கறுப்புநிறமாக மாறும்; அங்கு குழி விழும்.
join nagapattinamnews@gmail.com
என்ன முதலுதவி செய்யலாம்?
வெந்நீரில் துணியை நனைத்துப் பிழிந்துகொண்டு, பல் வலியுள்ள முகத்தின் வெளிப்பக்கத்தில் ஒத்தடம் தரலாம். வலிநிவாரணி மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம். வேப்பமுத்துகளை பொடிசெய்து பல்லினுள் வைக்கலாம்.