வாழை இலை நாகரிகம் தெரியுமா....?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:38 PM | Best Blogger Tips

 வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்

ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம்... வாழை இலை நாகரிகம் தெரியுமா..?

இயற்கையோட சேர்ந்த வாழ்வுதான் நம்ம
தமிழர் பண்பாடுன்னு பலர் சொல்லுவாங்க.

ஒருவகையில உண்மைதான். நம்மளைச் சுத்தியிருக்கிற
பசுமைகள் இன்னும் பசுமையா நிலைச்சிருக்கிற மாதிரிதான் நாம வாழ்ந்தோம்.

அது நமக்கு நிறைய கத்துக் கொடுத்தது.

அதுக்கு நாமும்
நன்றியோட இருந்தோம்.

அந்த நன்றிக்குப் பரிசா கெடச்சதுதான் நம்ம
தாத்தன் பாட்டிக்கு இருந்த ஆரோக்கியம்.

எதையும் அதுகிட்ட இருந்து நேரடியா எடுத்துக்கிட்டு, அதுக்குத்
தேவையானதை நேரடியாக் கொடுத்திடணும். இதுதான் நம்ம பழைய வாழ்க்கை.
வாழை இலை விருந்தின் நாகரிகம் தெரியுமா?
வாழை இலை... நாம நினைச்சாலும் நம்மகிட்ட இருந்து விலக்க முடியாத சொல்தானேங்க இது!

என்னதான் எவர்சில்வர், பீங்கான் தட்டுகள், பேப்பர் பிளேட்டுகள் வந்து கடந்துபோய் பிளாஸ்டிக் இலைகள்ன்னுலாம் விநோதமா முயற்சி செஞ்சாலும்
அம்புட்டையும் வாழை இலைகள் `அடிச்சுத் தூக்கிருதுல'?
Full Details on Banana Leaf Remedy to Eradicate Poverty | வறுமை எப்போதும்  துரத்திக் கொண்டிருக்கிறதா? வாழை இலை பரிகாரம் கைகொடுக்கும்News in Tamil
பொது நிகழ்ச்சி, வீட்டு விழாக்கள், உணவகம்ன்னு எங்கும் `இலைகள்'மயம்!
தோப்பில் இருந்து வருவதால் இலையில் அழுக்கு பூச்சி இருக்கும் என்று தண்ணீர் தெளித்து துடைத்து விடுகிறோம்..


சரி, வாழை இலையிலயும் அந்தச் சாப்பாட்டு முறையிலயும் அப்பிடி என்ன இருக்கு? இலைச் சாப்பாட்டுல நாம என்னவெல்லாம் கூத்துகள் பண்றோம்?

சைவமோ அசைவமோ, எதுவா இருந்தாலும் இலைபோட்டுச் சாப்பிட்டா அது
எப்பேர்ப்பட்ட செரிமானக் கோளாற்றையும் சரிபண்ணிடும்.

அகண்ட பக்கம்
வலது கைக்கு வசதி. சோறு வகையெல்லாம் இங்கதான் வைக்கணும்.

இலையோட மேல் பக்கம், `
தொடு கறி'ங்க. இடப்பக்கம், அப்பளம். மொதல்ல, இலையை எப்பிடிப் போடுறது?

குறுகின பக்கம் இடது கைக்கு வரணும். சோத்தைத் தானே நிறைய வைக்கச் சொல்லுவோம்? அதுக்குத்தாங்க
இந்த அமைப்பு!

இலையை உள்பக்கமா
மடிச்சா உறவு நீடிக்கும்... வெளிப்பக்கமா மடிச்சா, முறியும்ன்னு சொல்றது, பழையகால நம்பிக்கை.

பந்திகள்ல எதிரெதிர்ப்பக்கமா உக்காந்திருப்போம்.

வெளிப்பக்கமா மடிக்கும்போது நாம சாப்பிட்ட எச்சில் அடுத்தவங்க இலையில பட்டிரும்ங்கிற சுகாதாரத்தைச் சொல்லுற `
பொதுவெளி நாகரிகம்' தான்ங்க அது!

நம்மைச் சப்பணம் போட்டு உட்கார வச்சிக் கத்துக்குடுக்கிற இந்த இலைகூட நமக்கு வாத்தியாருதான்!!

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, tree and grass 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

சப்தவிடங்கத்தலங்கள் - சிவபெருமானின் நடனத்தை....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:05 AM | Best Blogger Tips

 சப்த விடங்கத் தலங்கள் - 7 | சிவபெருமானின் 7 வகை நடனம் | Sapthavidanga  Stalangal @GnanadhaTV


சப்தவிடங்கத்தலங்கள் என்பது தமிழ்நாட்டில் சிவபெருமானின் நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.
 
இவற்றின் தலைமையிடம் திருவாரூர் ஆகும். பிற விடங்கத்தலங்கள் திருநள்ளாறு, நாகபட்டினம் எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் ஆகியனவாகும். 
 

 May be an image of temple

இந்த ஏழு ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் லிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. 
 
விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும். இந்திரனிடம் முசுகுந்த சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு. இவை உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். 
 
வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பர், இறைவனின் திருநடனமே இந்தப் பிரபஞ்சத்தின் அசைவாகக் கருதப்படுகிறது. சைவ சமயத்தில், ஆனந்த தாண்டவம் என்பது பிரபஞ்சத்தின் ஆக்கத்தின்போதும், ஊர்த்துவ தாண்டவம் என்பது பிரபஞ்சத்தின் அழிவின்போதும் இறைவன் ஆடும் திருநடனம் எனக் கூறப்படுகிறது.
 
இவ்வாறு, சிவபெருமான் ஏழு திருத்தலங்களில் ஆடிய ஏழு வித நடனங்கள் சப்த தாண்டவம் என்றும், தாண்டவம் நடைபெற்ற இடங்கள் சப்த விடங்கத் திருத்தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன
 
ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஆடும் ஆட்டத்திற்கு ஒவ்வொரு பெயர் உள்ளது.
திருவாரூர் - தியாகராசப்பெருமான் -- உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் 
 
அஜபா நடனம்
 
திருநள்ளாறு - நாகவிடங்கர் -- பித்தன் ஆடுவது போன்ற உன்மத்த நடனம்
 
நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர் - கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம்
திருக்காராயில் - ஆதிவிடங்கர்- கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம்
 
திருக்குவளை - அவனிவிடங்கர்- வண்டு மலருக்கும் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம்
 
திருவாய்மூர் - நீலவிடங்கர் - தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம்
 
வேதாரண்யம் - புவனிவிடங்கர் - அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம்
 
இத்தலங்களில் சிவபெருமான் ஆடும் தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

 

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person, Adenium and tree  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹