பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:33 PM | Best Blogger Tips


Image may contain: 1 person
1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

2.மேலாடையின்றியோ...ஆடை இன்றியோ... குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணி விடாதீர்கள்!

Image may contain: 1 person, close-up
3.ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

4.யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்!

5.வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

6.வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக் காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

7.தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

8.ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்!

9.குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

10.உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

11.படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

12.ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள்.

13.குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.

14.ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

15.ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!


நன்றி இணையம்

ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு அவசியமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:55 AM | Best Blogger Tips


Image may contain: one or more people and text

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு
அனைத்து மாணவர்களையும் ( All-Pass ) கட்டாயம் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற சட்டம் இல்லை

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை வருடம் வருடம் தேர்ச்சி பெற வேண்டும் என்றால்....

1) மாணவரின் வருகை பதிவேடு
75 %
சதவீதம் கண்டிப்பாக இருக்க வேண்டும்

2) அனைத்து பாடத்திலும் (pass mark) 35'மதிப்பெண்கள் எடுத்து இருக்க வேண்டும்,

3) ஒழுக்கம் உள்ள மாணவராக இருக்க வேண்டும்

இந்த மூன்றும் உள்ள மாணவர்களை தான் தேர்ச்சி பெற வைத்து அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பி வைப்பார்கள் தேர்ச்சி பெறவேண்டும் என்று பயந்து ஒவ்வொரு மாணவர்களும் சரியாக பள்ளிக்கு வருவார்கள்,

தேர்ச்சி பெறவேண்டும் என்று பயந்து படிக்க முயற்சி செய்து குறைந்த பட்சம் 35 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவார்கள் தேர்ச்சி பெறவேண்டும் என்று பயந்து ஒழுக்கம் உள்ள மாணவர்களாக பெரும்பாலும் சதவீதம் இருப்பார்கள்

இந்த மூன்றும் சரி இல்லாத மாணவர்கள் அந்த ஆண்டில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் அதே வகுப்பில் திருந்தி படிப்பார்கள்
அந்த காலகட்டத்தில் நாங்கலெல்லாம் முழாண்டு தேர்வு விடுமுறையில் ரிசல்ட் கார்டு எப்போது வரும் என்று போஸ்ட்மேனை கேட்டு கொண்டே இருப்போம் அந்த ரிசல்ட் வரும் நாளில் கிடைக்கும் சந்தோஷம் அளப்பறியாதது...
இப்ப தலை கீழாக மாறிவிட்டது

இப்ப மாணவர்களை ஏன் படிக்க வில்லை என்று ஆசிரியர் கண்டிக்க கூடாது! !!

மாணவர்களை ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் கண்டிக்க கூடாது!!!

வம்பு வளர்க்கும் ஒழுக்கம் கெட்ட மாணவர்களிடம் கண்டும்காணாமல் போக வேண்டும்!!!

இப்படியே ஆசிரியர் பணியை முடிக்கி ஆசிரியர் என்ற மரியாதை கலந்த கட்டுப்பாடு என்கிற பயமே இல்லாமல் ஆகிவிட்டது
தற்போது மாணவர்களுக்கு முன் ஆசிரியர்கள் ஜோக்கராக நடக்கும் அளவுக்கு ஆக்கிவிட்டார்கள்

அதன் பிறகு நீ பள்ளிக்கு வந்தால் என்ன!! வராவிட்டா என்ன!!, நீ படித்து மதிப்பெண் எடுத்தால் என்ன!! எடுக்காவிட்டால் என்ன!! என்று உருவாக்கி அனைவரும் தேர்ச்சி என்ற சட்டத்தை கொண்டு வந்த பிறகு படிப்பின் தரம் அரசு பள்ளிகளில் படிப்படியாக குறைந்துவிட்டது ,,,

இதன் பின் விளைவுகள் என்ன தெரியுமா? இன்று நிறைய அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நாலு வரி கூட தமிழில் எழுத தெரியவில்லை, தனது பெயர், தனது தாய் தந்தை பெயர் தனது முகவரியை கூட ஆங்கிலத்தில் எழுத தெரியவில்லை இப்படி இருக்கும் மாணவர்களை கண்டித்து படிக்க சொல்லவும் ஆசிரியர்களுக்கு முடியவில்லை...

இப்படியே அந்த மாணவர்களை வருடம் வருடம் தேர்ச்சி பெற வைத்து ஆசிரியர்கள் மன உளைச்சலில் தவிக்கிறார்கள்
நாமெல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பு படிக்கும் போது வருடம் வருடம் தேர்ச்சி பெற்ற பிறகு தானே அடுத்த வகுப்பு போனோம்? இப்ப நமது பிள்ளைகள் குறைந்த பட்சம் 5, 8 ம் வகுப்பிலாவது அவர்கள் தேர்ச்சி பெற்று அடுத்து வகுப்பிற்கு வரட்டுமே

இதை சரிகட்ட தான் 5ம் வகுப்பிலும் 8ம் வகையிலும் பொது தேர்வு நடத்தி மாணவர்களின் கல்வி கற்றலை அளந்து பார்த்து மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த இந்த பொது தேர்வு நடத்த திட்டமிட்டு வருகிறார்கள். ..

அதே சமயம் பொதுத்தேர்வு என்று இருந்தாலும், தேர்ச்சி கட்டாயம் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் பெற்றோர் கவலைப்பட ஒன்றுமில்லை.

ஆழமாக யோசித்துப் பார்த்தால் இந்த 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் என்பது உண்மையில் மேலோட்டமாக மாணவர்களுக்கானதாகத் தெரியலாம். ஆனால் அடிப்படையில் அது 1 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கானதே என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.
தகுதியில்லாமல் அடுத்தடுத்த படி நிலைகளுக்கு உயா்த்துவது கேலிக்கூத்தனது,

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தமிழை தெளிவாகப்படிக்கவோ, பிழையின்றி எழுதவோ முடியாமல் தேர்ச்சி பெற வைப்பதுதான் தற்போதைய கல்வித்தரமா?

கற்றல் குறைப்பாடு உள்ள மாணவர்கள் முட்டாள்களாக பள்ளி படிப்பை முடித்து வெளிவராமல் சற்று வடிகட்டப்பட்டு தோ்ச்சிக்கு தகுதியானவா்களாக மாற்றப்படவேண்டும்

இதன் வாயிலாக மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அந்தந்த வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர் தங்கள் வகுப்பில் எத்தனை சதவீதம் தேர்ச்சி காட்டி உள்ளார்கள் என்ற நிலை உருவான பிறகு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் எவ்வாறு எடுத்துள்ளனர் என்பது அறியப்படும்.

பொறுப்பற்ற ஆசிரியர்களுக்கு கடிவாளமாக இந்த தோ்வு முறை அமையும் ,

ஆசிரியர்களுக்கும் இப்படி ஒரு accountability வேண்டும். அது இல்லாவிடில் பாடத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறாது.
மாணவர்களை வெறுமனே பயமுறுவத்தது அல்ல இதன் நோக்கம்.

மேல் வகுப்பிற்கு உருப்பிடியானதை கற்காமல் வருவது நல்லது அல்ல.

ஆசிரியர்கள் சிரத்தையோடு சொல்லிதரவேண்டும்
மாணவர்களும் அக்கரையோடு படிக்கவேண்டுமெனில் ஒரு check point வேண்டும். என்பதே நோக்கம்...

நாம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் படிக்கும்போது எட்டாம் வகுப்பு கேள்வித் தாள் வேறு பள்ளியிலிருக்கும் ஆசிரியர்கள் தயாரிப்பார்கள். (அப்படி எங்கள் பள்ளியிலேயே தயாரித்தால், விடைத் தாள்கள் திருத்துவதற்கு வேறு பள்ளிக்குப் போகும்.)
அதைத் தான் அரசு தற்போது பொது தேர்வு என்று கூறுகிறது
மாணவர்கள் எதையும் தாண்டி சாதனை செய்யக் கூடியவர்கள் தான். இந்த அரசியல்வாதிகள் தான் ஒப்பாரி வைக்கிறார்கள்.
ஆல்பாஸ் என்பதை பின்பற்றாமல் மிகுந்த கண்டிப்புடன் பொது தேர்வை நடத்தி கறாரான தேர்வுதாள் திருத்தங்கள் மதிப்பெண்கள் கணக்கிடுவது மூலம் மாணவர்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும..

இதன் பயனாக இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை பயம் பதட்டம் இல்லாமல் எழுதி நல்ல மதிப்பெண்கள் எடுக்க தற்போதே தயாராகி விடுவார்கள்

நான் ஒரு பெற்றோராக, ஒரு ஆசிரியராக இரு பக்கமும் யோசித்து பார்க்கும் போது இந்த பொது தேர்வை மனப்பூா்வமாக வரவேற்கிறேன்...
Image may contain: 1 person, close-up
சிவ பரமசிவம்
திருவாரூர்