சென்னை

மணக்கால் அய்யம்பேட்டை | 3:42 PM | Best Blogger Tips

 


இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள்.

Ø 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர் ஆகையால்ஐம்பத்து ஒன்றாம் ஊர்என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் #அம்பத்தூர் என மாறியது.

Ø Armed Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே #ஆவடி (AVADI)

Ø 1912ம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஆங்கிலேயரால் Chrome Leather Factory என்ற ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை தொடங்கியதால் அப்பகுதிக்கு #குரோம்பேட்டை என்ற பெயர் உருவானது

Ø 17,18 ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், கோடா பக் (பொருள் - Garden of horses) என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே #கோடம்பாக்கம் ஆக மாறியது.

Ø தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது #தேனாம்பேட்டை ஆக மாறிப்போனது.

Ø சையத்ஷா என்ற இஸ்லாமிய முக்கிய பிரமுகர் வைத்திருந்த நிலப்பகுதியின் அடிப்படையில், சையத்ஷாபேட்டை என்றிருந்த பெயர், #சைதாப்பேட்டை என்றாகியது.


Ø உருது வார்த்தையான சே பேக் (பொருள்- Six gardens) என்பதிலிருந்து உருவானது தான் #சேப்பாக்கம்.

Ø சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே #பாண்டி_பஜார்

Ø சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ #மாம்பலம் ஆகி விட்டது.

Ø பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் #பல்லாவரம்.

Ø சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் #பனகல்_பார்க் என அழைக்கப்படுகிறது.

Ø நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தி.நகர் (#தியாகராய_நகர்) என அழைக்கபடுகிறது

Ø கடற்கரைப்பகுதியான இங்கு புரசை மரங்கள் அதிகமாக இருந்ததால், இப்பகுதி #புரசைவாக்கம் ஆனது.

Ø அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் #பூவிருந்தவல்லி என்றும்

அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லி யாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

Ø 17 ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவிகுணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய #தண்டயார்பேட்டை.

Ø முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே #மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

Ø மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே #மயிலாப்பூர் என மாறிப்போனது.

Ø பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி #போரூர் எனப்படுகிறது.

Ø சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே #பெரம்பூர் எனப்படுகிறது.

Ø திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா #திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.

Ø பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் (கேணி) நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு #திருவல்லிக்கேணி யாகி, தற்போது Triplicane என மாற்றம் கண்டுள்ளது.


 நன்றி இணையம்