யாரும் கேட்டா சொல்லாதீங்க அடிச்சி கேட்டா கூட சொல்லாதீங்க என்பதுபோல்... இந்தியா எவ்வளவு விவரங்கள் கொடுத்தாலும் சரி எந்த நபரைப் பற்றி கேட்டாலும் சரி அப்படி ஒரு நபர் எங்கள் நாட்டில் இல்லை அவரை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது தெரியாது...
இதுதான் ஒவ்வொரு முறையும் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தும் பொழுது இந்திய அரசின் கேள்விக்கு பாகிஸ்தான் இந்தியாவுக்கு கொடுக்கும் பதில்...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் போட்டோவை காட்டி இவரை தெரியுமா என்று கேட்டால் கூட தெரியாது என்றுதான் சொல்வார்கள் ஏனெனில் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அவர்களின் டிசைன் அப்படி
மும்பை மீது தாக்குதல் தொடுத்தனர். டெல்லி மீது தாக்குதல் தொடுத்தனர். பதன்கோட் விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் ஊரி ராணுவ மையம் மீதான தாக்குதல் என ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலின் போதும் இந்தியா அனைத்து விதமான தகவல்களையும் சேகரித்து இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்கமாக எவ்வளவு எடுத்துக் கூறியும் எதையுமே பாகிஸ்தான் அதற்கு செவிமடுக்கவில்லை.
நீங்கள் சொல்ல கூடிய நபர் எங்கள் நாட்டில் இல்லை அப்படி ஒரு நபர் எங்கள் நாட்டில் பிறக்கவே இல்லை என்று ஒவ்வொருமுறையும் இந்தியாவிற்கு பொய்யான தகவலை பாகிஸ்தான் சொல்லி வந்திருக்கிறது.
ஆனால் உண்மை நிலை என்னவென்றால் இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்த ஒவ்வொரு தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் ராஜமரியாதையுடன் ராணுவ பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆன போதும் இந்தியா பொறுமை காத்து வந்தது.எந்த நாட்டின் மீதும் இந்தியா வேண்டுமென்றே இதுவரை போர் தொடுக்கவில்லை. அனைத்து நாடுகளையும் சகோதர நாடுகளாக அண்டை நாடுகளாக பார்த்து பழகி உதவி வந்திருக்கிறது.
இந்தியாவின் ஆயிரக்கணக்கான குடிமக்களையும் சொத்துக்களையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்து பல உயிர் பலிகளையும் உண்டாக்கிய பாகிஸ்தான் மீது இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க தயங்கியே வந்தது. ஏனெனில் இந்தியாவில் உறுதியான திடமான அரசு இல்லை.
இந்நிலையில் இந்தியாவின் பிரதமராக #மோடி பதவி ஏற்கிறார். இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கிறார். இந்திய ராணுவத்திற்கு வலிமையான நுட்பமான திறமையான ஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்யப்படுகிறது. இந்திய ராணுவம் நவீனத்துவம் பெறுகிறது.
பாரதப்போரில் சண்டைக்கு முன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பரந்தாமன் செல்கிறார். ஆனால் மதிகெட்ட துரியோதனன் உண்மை நிலையை அறியாமல் பரந்தாமனை அவமானப்படுத்துகிறார்.
அந்த நிலையில் கூட பரந்தாமன் துரியோதனா ஒரு நொடி யோசித்து பதில் சொல் நான் உனக்கு அவகாசம் தருகிறேன் என்பார்.
அதேபோன்றுதான் இந்தியா பாகிஸ்தானுக்கு பல ஆண்டுகள் அவகாசம் கொடுத்திருக்கிறது. உங்கள் இடத்தில் உள்ள தீவிரவாதிகளை தீவிரவாத முகாம்களை அழியுங்கள் என்று ஆனால் எதற்கும் பாகிஸ்தான் அசரவில்லை மீண்டும் மீண்டும் தொடர்ந்து இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் தொடுத்துக் கொண்டே இருந்தது.
இறுதியாக உலகம் முழுவதும் வாழும் இந்திய மக்களின் ஆன்மாவை தட்டி எழுப்பும் வகையில் பாக் தீவிரவாதிகளின் #புல்வாமா தாக்குதல் இந்தியாவின் கோபத்தை அதன் உச்சிக்கே கொண்டு சென்றது.
கோமாதா எங்கள் குலமாதா என்போம்.பசு தானே என்று நாம் விருப்பத்திற்கேற்ப அதனை துன்புறுத்தினால் அதுவும் தன்னால் தாங்க முடிந்த அளவு தாங்கி கொள்ளும். ஆனால் அதன் பொறுமைக்கு மீறிய வலி ஏற்பட்டால் அது திரும்ப தாக்கும்.அந்தத் தாக்குதல் மிகப் பயங்கரமானதாக இருக்கும். ஆம் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே அப்படித்தான் இருக்கும்.
ஒரு நோஞ்சான் கூட கூண்டில் அடைபட்டிருக்கும் சிங்கத்தை கண்டு கிண்டல் செய்வான். ஆனா அதே சிங்கம் தன்னந்தனியாக நேருக்கு நேராக நின்று கர்ஜிக்கும் போது அவன் இதயமே சுக்கு நூறாக உடைத்து விடும்.
அப்படித்தான் இந்தியாவின் பொறுமை எல்லை மீறியது அதன் கோபம் அதன் உச்சிக்கு சென்றது கடலுக்கும் ஒரு எல்லை உண்டு கடல் கரையை தாண்டியது பூகம்பமாக புயலாய் சுனாமியாய் சீறி எழுந்தது.
பாகிஸ்தான் ராணுவம் உளவுத்துறை ரேடார் செயற்கைகோள் என அனைத்திலும் மண்ணை தூவியது.
இந்திய ராணுவம் புயலென புறப்பட்டது. தீவிரவாத முகாம்களை மின்னலென தாக்கியது. இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகளும் தீவிரவாத முகாம்களும் ஒரு நொடியில் துடைத்தெறிய பட்டது.
இந்தியாவின் மீது பதில் தாக்குதல் தொடுக்க அமெரிக்காவின் F16 விமானம் புறப்பட்டது. F16 னை தாக்க மிக் 21 சென்றது.இதை தயாரித்த நாடே இதன் காலம் முடிந்து விட்டது என காயலான் கடையில் போட்டு விட்டது. அப்படிப்பட்ட விமானத்தை எடுத்துக்கொண்டு அபிநந்தன் சென்றான்.... அமெரிக்காவின் அதாவது பாகிஸ்தானின் F16 னை உடைத்தான்.ஆம் அன்று பாரத போரில் #அபிமன்யு #சக்கரவியூகத்தை உடைத்தான்... இன்று பாக்கிஸ்தான் போரில் #அபிநந்தன்F16 உடைத்தான்.
உலகமே இந்தியாவை உற்று நோக்கியது. இந்தியாவின் வீரத்தை கண்டு இந்தியாவின் திறமையை கண்டு இந்தியாவின் கோபத்தைக் கண்டு இந்தியாவின் எழுச்சியை கண்டு...
யாரும் தன் விமானத்தை தொடமுடியாது யாரும் தன் விமானத்தின் வேகத்தை நெருங்க முடியாது என்று இறுமாப்புக் கொண்டிருந்த அமெரிக்காவின் போர் விமானம் F 16 யை இந்தியாவின் சாதாரணமான மிக் 21 விடம் அடிவாங்கி ஐயோ என்ன பெத்த #ஆத்தா என்று தூள் தூளாகி செத்துப்போனது.
ஆம் சாதுமிரண்டால் அதன் தாக்குதல் எப்படியிருக்கும் அதன் அடி இடி மாதிரி இருக்கும் என்று உலகம் உணர்ந்து கொண்டது. புதிய இந்தியாவை உலகம் கண்டது.
என் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்பட்டால் என் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து என்றால் #வீடு_புகுந்து_அடிப்பேன்_டா என்று உலகநாடுகளுக்கு உணர்த்தியது...தன் நாட்டை காப்பாற்ற தன் எல்லையை காப்பாற்ற தன் மக்களை காப்பாற்ற இந்தியா எந்த எல்லை வரைக்கும் செல்லும் என்று உலக நாடுகள் இந்தியாவை கண்டு உணர்ந்தது.
இந்தியாவில் வாழும் சில வெளி நாட்டுக் காரனுக்கு பிறந்த அடிமைகள் அடிக்கடி சொல்வார்கள் இந்தியா பாகிஸ்தான் மீது கை வைத்தால் சீனா அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று... இன்று அதை நினைக்கும் போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது.
ஆம் ஆனானப்பட்ட சீனாவே இந்தியாவிடம் அடி வாங்கி விழிபிதுங்கி கிடக்கின்றது.
இந்த வீரதீர செயல்களைப் புரிந்த #இந்திய_ராணுவத்தினர் அனைவருக்கும் அதற்கு உத்தரவிட்ட பிரதமர் #மோடிக்கும்
வாழ்த்துக்கள்
...ஜெய்ஹிந்த்