மோதிஜி ஆட்சியில்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:00 | Best Blogger Tips

 


மோதிஜி ஆட்சியில் இந்தியாவுக்கு திரும்பிவந்த அபூர்வ பொருட்கள்..

# 100. வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட இந்துமத தேவதையாகிய ஸ்ரீ அன்னபூர்ணாவின் சிலையை கனடா நாடு இந்தியாவுக்கு திருப்பி தந்தது...!!

# 13,ம் நூற்றாண்டில் திருடப்பட்ட ராம் லட்சுமணன் , சீதாதேவியின் சிலைகளை UK.இந்தியாவுக்கு திருப்பி தந்தது....!!

# 9,ம் நூற்றாண்டின் கடைசியில் திருடப்பட்ட நடராஜர் சிலையை UK. இந்தியாவுக்கு திருப்பி தந்தது..

# 400வருடம் பழமையான ஸ்ரீ கிருஷ்ணன் சிலை UK வில் இருந்து திரும்பி வந்தது...!!!!



நன்றி இணையம்

அன்பு கருணை மகிழ்ச்சி

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:58 | Best Blogger Tips

 


ஜெயலலிதா அம்மா இறந்தார்..

திரு. விவேக் இறந்தார், திரு. SPB இறந்தார், அவர்களிடம் இல்லாத பணமா?? ஆள் பழக்கமா?? அவர்களிடம் எல்லாம் இருந்தும், உயிரை காப்பாற்ற எந்த மருத்துவ பலமும், பண பலமும், ஆள் பலமும் முடியவில்லை..

மரணத்தை தினமும் பார்க்கிறோம், மரண செய்திகளை தினமும் கேட்கிறோம், அதிலிருந்து நாம் எதாவது கற்றுக் கொள்கிறோமா? என்றால் இல்லை.. மரணத்தை தழுவாத எந்த உயிரினமும் இல்லை..

எதை கொண்டு வந்தோம்? எதை கொண்டு செல்கிறோம்? வாழும் இந்த நிலையில்லாத, குறுகிய காலத்தில், எதை நோக்கி பயணிக்கிறோம்?? ,..

நான் தான் பெரியவன், உயர்ந்தவன் என்ற திமிர் ஆணவம் ஏன் ? வீம்பு வீராப்பு? வெட்டி கவுரவம்? சூழ்ச்சி? ஏன் வெறுப்பு? ஏன் பகை? ஏன் பொறாமை? ஏன் ஏமாற்றி பிழைப்பு? ஏன் கெடுதல் நினைத்து, கெடுதல் செய்வது ஏன்? ஏன் நம்பிக்கை துரோகம்? ஏன்? ஏன்? ஏன்?

இந்த அற்பமான வாழ்வில், நேற்றைய நாளைய, நடந்த நடக்கபோவதை நினைத்து கலங்காமல், வாழ்வில் நமக்கு ஏற்படும் நிகழ்வுகளை அப்படியே சமநிலையில் ஏற்றுக்கொண்டு, யாரையும் குறை கூறாமல், தன்னை ஒழுங்குபடுத்தி, எதையுமே எதிர்பார்க்காமல், அனைத்திலும் நேர்மறையான எண்ணம் கொண்டு,

அன்பு கருணை மகிழ்ச்சி கொண்டு கள்ளம்கபடமின்றி, யாரையும் திருப்திபடுத்த நினைக்காமல், யாருக்காகவும் போலியாக முகமுடி போடாமல், படைத்தவனுக்கு மட்டுமே பயந்து, அடுத்தவர்களை அறிய முயலாமல், தன்னை உணர்ந்து, படைத்த இறைவனை உணர்ந்து, வாழ்வை உணர்ந்து வாழ்வோம்..

என்றும் அன்புடன்

 


நன்றி இணையம்

நேர்மைக்கு கிடைக்கும் பாிசு - அரசியல்வாதிகளின் சூழு்ச்சிவலை

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:57 | Best Blogger Tips

 


பழையதை சிறிது நினைவு கூறுவோம் மீள்பதிவு....நன்றி #தினமலர்.

தமிழக கவர்னராக, பன்வாரிலால் புரோஹித், 2017 அக்டோபரில், நியமிக்கப்பட்டார்.

அவர் பதவியேற்றதும், முதற்கட்டமாக, கவர்னர் அலுவலகத்தில், பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவந்த அதிகாரிகளை, கூண்டோடு மாற்றினார்.

ராஜ்பவனில், ஆங்கிலேயர் காலம் முதல் இருந்த, தடைகளை நீக்கி, எந்த நேரத்திலும், மக்களும், சமூக ஆர்வலர்களும், தன்னை வந்து சந்திக்கலாம் என, வழிமுறைகளை எளிமையாக்கினார்.

'இனி, இது என் ஊர்' என கூறி, தமிழ் ஆசிரியர் ஒருவரை வைத்து, தமிழ் கற்கிறார்; தமிழில் பேச முயற்சிக்கிறார்.

அதுபோல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள், எப்படி அமல்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்கிறார்.

முறைகேடு செய்து, பணம் சுருட்டினால், கவர்னரின் ஆய்வில் மாட்டிக் கொள்வோமே என்று, அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.இதனால், அரசு திட்டங் களால் லாபமடையும் கட்சிக்காரர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.

அதனால், கவர்னரின் ஆய்வை எதிர்த்து, போராட்டங்கள் நடத்துகின்றனர்.

பல்கலை களின் வேந்தர் அந்தஸ்தில் உள்ள கவர்னர், முந்தைய கவர்னர்களை போல், வெறும் பட்டமளிப்பு விழாக்களில் மட்டும் பங்கேற்க வில்லை.

மாறாக, பல்கலைகளில் நடக்கும் ஊழல்களை களைய, லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு, முழு அதிகாரம் கொடுத்துள்ளார்.


இதுவரைஇல்லாத வகையில், அனைத்து பல்கலைகளின் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் உயர் கல்வித்துறை சார்ந்த, ..எஸ்., அதிகாரிகளை அழைத்து, கூட்டம் நடத்தினார்.

அதில், 'கல்வியின் பெயரால் கொள்ளை யடிக்க நினைக்க கூடாது. துணை வேந்தர் நியமனம், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனங்களில்ஊழலுக்கு இடம் தரக்கூடாது' என, திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

இந்த கண்டிப்பான அறிவுரை, துணை வேந்தர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்துள்ள அரசியல் பிரமுகர்களுக்கும் நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல்கலைகளில், ஆசிரியர், பணியாளர் நியமனங்கள் வழியாக, பல கோடி ரூபாய் சம்பாதிக்க நினைத்தோருக்கு, கவர்னரின்வெளிப்படையான நிர்வாகம், பேரிடியாக அமைந்து உள்ளது.

துணை வேந்தர் நியமனத்திலும், ஆளுங்கட்சி யினரின் தலையீடுக்கு இடம் தராமல், நேரடியாக திறமையானவர்களை, கவர்னர், தேர்வு செய்து உள்ளார்.

இதுவும், கட்சியினருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இத்தனைக்கும் மேலாக, அருப்புக்கோட்டையில், ஒரு உதவி பேராசிரியை, தனக்கு அவரை தெரியும், இவரை தெரியும் என, மாணவியரிடம் சவடால் விட்டு, தன் பிழைப்புக்கு ஆள் தேடியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தன் மீதான களங்கத்தை போக்க,நேரடியாகவே பத்திரிகையாளர்களைசந்தித்தார், கவர்னர்.

அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவியேற்பு விழா நடத்தப்படும், கவர்னர் மாளிகையின், தர்பார் அரங்கில், பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, அமைதியாக, சிரித்த முகத்துடன் பதில் அளித்துள்ளார்.

பேட்டியின் முடிவில், பத்திரிகையாளர்களுக்கு, தேனீர் பரிமாறி, தமிழர்களின் பாரம்பரியமான விருந்தோம்பலையும் நிலைநாட்டியுள்ளார்.

இப்படிப்பட்ட கவர்னர், தமிழகத்தில் நீடித்தால், ஊழல் அற்ற நிர்வாகம் ஏற்படும்; தகுதியான வர்களுக்கு வேலை கிடைக்கும்; கட்சியினரால் செய்யப்படும் முறைகேடுகள் குறையும் சூழல் ஏற்படும்.

எனவே, அச்சம் அடைந்துள்ள அரசியல் கட்சியினரும், அதிகார வர்க்கத்தில் உள்ள சிலரும் இணைந்து, கவர்னர் புரோஹித் மீது, களங்கம் சுமத்த முயற்சிப்பதாக, சமூக ஆர்வலர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

அரசியல் பாரம்பரியமும், Advertisement 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பத்திரிகை நடத்தி வருபவருமான, மூத்த குடிமகனான கவர்னருக்கு எதிராக, தனிமனித தாக்குதல் நடத்தி, அவரது உறுதியை குலைக்கவும், மத்திய அரசிடம் கெட்ட பெயர் ஏற்படுத்தி, அவரை மாற்றவும் சதி நடப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இட்டுக்கட்டுகிறார் ஸ்டாலின்?

சென்னை கவர்னர் மாளிகையில், நேற்று முன்தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அடுக்கடுக்காக பல கேள்விகள் கேட்ட, ஆங்கில பெண் பத்திரிகையாளர் ஒருவரின், கன்னத்தை செல்லமாக தட்டி, கவர்னர் பாராட்டு தெரிவித்தார்.

அதை அந்த பெண் நிருபர் ஏற்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் குரல் கொடுத்தார்.

அதை ஏற்று, கவர்னரும் இன்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து, தி.மு.., செயல் தலைவர் #ஸ்டாலின், நேற்று அளித்த பேட்டியில், 'பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தடவிய கவர்னர்' என, கூறியுள்ளார். இதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் கண்டனம் எழுந்து உள்ளது.

பெண் பத்திரிகையாளர் எந்த இடத் திலும், தன் கன்னத்தை கவர்னர் தடவியதாக கூறவில்லை.

மாறாக, கன்னத்தை கவர்னர் தட்டினார் என்று தான் கூறியுள்ளார்.

இதை ஏன், ஸ்டாலின் திரித்துக் கூறுகிறார் என்று தெரியவில்லை.

'அந்த... விஷயத்தை விகாரமாக்குகிறாரோ என்று கருத வேண்டி யுள்ளது'என, அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நமது நிருபர் -#தினமலர்.

 


நன்றி இணையம்