எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்*!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:28 AM | Best Blogger Tips

 விஞ்ஞானயோகம் திவ்ய பிரபஞ்சதிரட்டு : எந்தெந்த திதியில் வெற்றி கிட்டும்Goddess | திதிகளின் தெய்வங்கள்

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்*!
 
*1.பிரதமை் திதி:*
பிரதமை நல்ல நாளா...? - YouTube
 
அதிபதி:
அக்னி பகவான்
பிரதமை திதியில் செய்யத்தக்க காரியம்:
உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்*
 
*2. துதியை திதி:*
திதி நித்யா தேவதைகள் –... - ஆதி பராசக்தி சங்கம கடல் | Facebook
அதிபதி:
துவஷ்டா தேவதை
துதியை திதியில் செய்யத் தக்க காரியம்:
விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது!
 
*3. திருதியை திதி:*
Bless you with joy tirutiyai thithi | ஆனந்தம் அருளும் திருதியை திதி
அதிபதி:
பார்வதி
திருதியை திதியில் செய்யத்தக்க காரியம்:
வீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹ பிரவேஷம் ,பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்ததிதி ஆகும்!
 
*4. சதுர்த்தி திதி:*
சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்தது ஏன் தெரியுமா...?
அதிபதி:
கஜநாதன் [விநாயகர்]
சதுர்த்தி திதியில் செய்யத்தக்க காரியம்:
வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், [சங்கடகர சதுர்த்தி இதற்கு விதிவிலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்கு விதி விலக்கு ]
 
*5. பஞ்சமி திதி:*
பஞ்சமி திதி - வராஹி வழிபாடு! வராகி தேவியை வழிபட வேண்டிய நாள்!
 
அதிபதி:
சர்ப்பம்
பஞ்சமி திதியில் செய்யத் தக்க காரியம்:
இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம் !
 
*6.சஷ்டி திதி:*
ஆறுமுகனுக்கு உகந்த தேய்பிறை சஷ்டி திதி வழிபாடு !!
அதிபதி:
முருகன்
சஷ்டி திதியில் செய்யத் தக்க காரியம்:
வேலைக்கு சேர, பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க நன்று, நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொது கணக்கு!
 
*7. சப்தமி திதி:*
Saptami Tithi: பலன்களை அள்ளித் தரும் கமலா சப்தமி விரதம்!-here we will see  about the benefits of kamala saptami fast - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
அதிபதி:
சூரியன்
சப்தமிதிதியில் செய்யத் தக்க காரியம்:
வீடுகட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்ற ம், விவசாயம், துவிதியை, திருதியை பஞ்சமி திதியில் சொல்லப் பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர் கர்மாக்களை செய்ய உகந்தது இத்திதி!
 
*8.அஷ்டமி திதி:*
அஷ்டமி திதியை போற்றும் விரத வழிபாடுகள் | ashtami tithi viratham
அதிபதி:
சிவபெருமான்
அஷ்டமிதிதியில் செய்யத்தக்க காரியம்:
யுத்தம், தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது!
 
*9.நவமி திதி:*
today navami Tithi, Dos and don's | நவமி நாளில் தவிர்க்க முடியாத பணியை  தாராளமாக செய்யலாம்
அதிபதி:
பாராசக்தி
நவமிதிதியில் செய்யத்தக்க காரியம்:
பகைவரை சிறைபிடிக்க பகைவரை அழிக்க, நண்பர்களுக்குள் போதம் உண்டாக்க அதிக தோசம் உள்ள திதி அல்ல இது!
 
*10. தசமி திதி:*
தேய்பிறை தசமி திதி அம்பாள் வழிபாடு | Ambal vazhipadu
அதிபதி
ஆதிசேஷன்
தசமி திதியில் செய்யத் தக்க காரியம்:
தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகுகேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி, மங்களகரமான காரியம், ஜலம், முக்கியஸ் தரை சந்திக்க உகந்தது இந்த திதி !
 
*11.ஏகாதசி திதி:*
Varuthini ekadashi significance : வருத்தினி ஏகாதசி 2024 : ஆயிரம் ஆண்டுகள்  தவம் செய்த பலனை தரும் அற்புத ஏகாதசி
அதிபதி:
தர்ம தேவதை
ஏகாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்!
 
*12. துவாதசி திதி:*
துவாதசியில் பெருமாளுக்கும் முன்னோர்களுக்கும் துளசி மாலை | dhuvadasi -  hindutamil.in
அதிபதி:
விஷ்ணு
துவாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
விருந்துண்ண தனம், தான்யம் சம்பாதிப்பது, சுபசெலவுகள், தர்ம காரியம், நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம். [திருவோணம் இணையும் துவாதசி மட்டும் ஆகாது]
 
*13.திரயோதசி திதி:*
திரயோதசி திதி பலன்கள், திரயோதசி திதியில் செய்ய வேண்டியவை
அதிபதி:
மன்மதன்
திரயோதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
அனைத்தும் செளபாக்கியமான மங்களகரமான காரியம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி & நீண்ட கால திரு மண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும்!
 சதுர்த்தசி திதி பலன்கள், சதுர்த்தசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை
*14.சதுர்தசி திதி:*
அதிபதி:
கலிபுருஷன்
சதுர்தசி திதியில் செய்யத்தக்க காரியம்:
பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை
வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்!
 
தேய்பிறையில் சிவபெருமானை வணங்கி வரவேண்டும்!
வளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண் டும்.
 
அமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்யவும்!
 
பௌர்ணமியில் செய்ய தக்கவை: கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும், யாகம் , 
 
மங்களகரமான கார்யம், புஷ்டி தரும். 
 
மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்.
🌸 சர்வம் சிவார்பணம் 🙏 🙏 🌸

 

🌷 🌷🌷 🌷 May be an image of 4 people and temple  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹