இந்து-சாஸ்திரங்கள் சம்பிரதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து-சாஸ்திரங்கள் சம்பிரதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோவிலுக்கு செல்லும் முன் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:11 PM | Best Blogger Tips

May be an image of temple and text that says "கோவிலுக்கு செல்லும் முன் தெரிந்து வைத்திரு ருக்க வேண்டிய ஆன்மீக் னமீகர்கசியங்கள்! தெரிந்துகொள்ளுங்கள் 【版上地 王川"

 

🛕 கோவிலுக்கு செல்லும் முன் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்!

நற்றுணையாவது அண்ணாமலையாரே

நாம் அனைவரும் கோவிலுக்குச் செல்கிறோம். சிலர் தினமும் செல்கிறார்கள்; சிலர் வாரம் ஒருமுறை செல்கிறார்கள்; சிலர் விசேஷ நாட்களில் மட்டும் செல்கிறார்கள். ஆனால், ஒரு கேள்வியை நம்மிடம் நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்...

"கோவிலுக்குச் செல்லும் சரியான முறை நமக்குத் தெரியுமா?"

பலர் கோவிலுக்குச் செல்கிறார்கள். தரிசனமும் செய்கிறார்கள். ஆனால், அந்த தரிசனத்தின் முழுப் பலனும் அனைவருக்கும் கிடைக்கிறதா?

ஆன்மீக அறிஞர்கள் கூறுவது என்னவென்றால், இறைவன் அருள் எப்போதும் கிடைக்கும். ஆனால், நாம் கோவிலுக்குச் செல்லும் முறையிலும், மனநிலையிலும், வழிபாட்டு ஒழுக்கத்திலும் சில விஷயங்களை கடைபிடித்தால் அந்த அருள் பல மடங்கு அதிகரிக்கும்.
✨✨ கோவிலுக்கு செல்லும் முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ✨✨ ,  #shorts , #viral , #kovil , #jothidam , #shortsvideo
ஒரு கோவில் என்பது வெறும் கட்டிடம் அல்ல. அது தெய்வீக ஆற்றல் நிரம்பிய ஆன்மீக மையம். அங்கு நுழையும் முன்பே மனமும் உடலும் தயாராக இருக்க வேண்டும்.

🌺 கோவிலுக்குச் செல்லும் முன் என்ன செய்ய வேண்டும்?

கோவிலுக்குச் செல்லும் முன் இயன்றவரை தலைக்குக் குளித்து, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.

பருத்தி ஆடைகள் அணிவது சிறந்ததாக கருதப்படுகிறது. காரணம், ஆலய கருவறையில் இருக்கும் தெய்வீக அதிர்வலைகளை உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளும் என்று ஆகம மரபுகள் கூறுகின்றன.
கோவிலுக்கு செல்லும் போது இந்த விதிமுறைகளை பின்பற்றுங்கள் பக்தி மேலும் பலன்  தரும் 🛕🙏 #TempleRules #TamilDevotional #SpiritualTamil #Anmeegam  #TempleVisit DivineLife
அதேபோல், கோவிலுக்குச் செல்லும் முன் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

மனதிலும் தூய்மை இருக்க வேண்டும்.

கோபம், பொறாமை, வெறுப்பு, அவசரம் போன்ற எண்ணங்களை விட்டு, இறைநினைவோடு செல்ல வேண்டும்.

🚩 கோபுர தரிசனத்தின் மகிமை

கோவிலின் ராஜகோபுரத்தை தொலைவிலிருந்தே கண்டவுடன் கைகூப்பி வணங்க வேண்டும்.

ஏனெனில் கோபுர தரிசனமே கோடி புண்ணியம் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்.
Spiritual rules for women in Hinduism : வீட்டில் பெண்கள் செய்யக் கூடாத 5  முக்கியமான விஷயங்கள்
அந்த தருணத்தில் உலக சிந்தனைகளை விட்டு, மனதை இறைவனிடம் திருப்பிக் கொள்ள வேண்டும்.

🌸 வெறுங்கையுடன் செல்லாதீர்கள்

கோவிலுக்குச் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லாமல், இயன்றவரை பூக்கள், பழங்கள் அல்லது சிறிய காணிக்கையாவது எடுத்துச் செல்ல வேண்டும்.

அது பொருளின் மதிப்பிற்காக அல்ல.

அன்போடு கொடுக்கும் மனப்பான்மைக்காக.

👣 ஆலயத்திற்குள் நுழையும் முறை

காலணி, மொபைல் போன் போன்றவற்றை உரிய இடத்தில் வைத்துவிட்டு உள்ளே செல்ல வேண்டும்.

ஆலயத்திற்குள் நுழையும் போது மனதில் இறைநாமம் இருக்க வேண்டும்.

கோவிலுக்குள் தேவையற்ற பேச்சு, சிரிப்பு, சத்தம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கோவில் என்பது பிரார்த்தனை செய்யும் இடம்; உரையாடும் இடம் அல்ல.

🕯️ முதலில் யாரை வணங்க வேண்டும்?

ஆலயத்தில் நுழைந்தவுடன்:

🔸 கொடிமரம்

🔸 பலிபீடம்

🔸 நந்தி (சிவாலயங்களில்)

இவற்றை வணங்க வேண்டும்.

அதன் பின் துவாரபாலகர்களை வணங்கி, விநாயகரை தரிசித்து, பின்னரே மூலவரை தரிசிக்க வேண்டும்.
hindu temple rules and rituals : கோவிலுக்கு செல்லும் முன் தெரிந்து  வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரியுமா?
🔥 தீப ஒளியில் தரிசிக்கும் ரகசியம்

தீபாராதனை நடைபெறும் போது, இறைவனின் திருமேனியை முழுமையாகப் பார்ப்பதை விட முதலில் திருவடிகளை தரிசிக்க வேண்டும் என்று ஆன்மீக மரபுகள் கூறுகின்றன.

ஏனெனில் இறைவனின் பாதங்களே சரணாகதியின் அடையாளமாக கருதப்படுகின்றன.

அதன்பிறகு திருமேனி முழுவதையும் மனதில் பதிய வைத்து தரிசிக்க வேண்டும்.

🛕 கோவில் வலம் வரும் போது

மூலஸ்தானத்தில் திரை போடப்பட்டிருக்கும் நேரங்களிலும், அபிஷேகம் நடைபெறும் நேரங்களிலும் பிரகாரத்தை வலம் வராமல் இருப்பது மரியாதையாக கருதப்படுகிறது.

வலம் வரும்போது அவசரமாக ஓடாமல், இறைநாமம் ஜபித்தபடி அமைதியாக வர வேண்டும்.

🌿 நிழல்களை மிதிக்கக் கூடாதது ஏன்?

ஆகம மரபுகளில்:

🔸 கொடிமரம்

🔸 நந்தி

🔸 பலிபீடம்

இவற்றின் நிழல்களை மிதிக்காமல் இருப்பது மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது.
கோவிலுக்கு சென்று வந்தபிறகு மறந்தும் கூட இதை செய்து விடாதீர்கள்!  #devotionalstories #god #temple #kovil #dosanddonts
இது பக்தியின் ஒழுக்கத்தை வெளிப்படுத்துகிறது.

🙏 பிரசாதத்தை எப்படி பெற வேண்டும்?

அர்ச்சகர் வழங்கும்:

🔹 விபூதி

🔹 குங்குமம்

🔹 துளசி

🔹 வில்வம்

🔹 தீர்த்தம்

எதுவாக இருந்தாலும் பக்தியுடன் இரு கைகளாலும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அவற்றை தரையில் போடவோ, வீணாக்கவோ கூடாது.

சிவாலயங்களில் வழங்கப்படும் வில்வத்தையும், பெருமாள் ஆலயங்களில் வழங்கப்படும் துளசியையும் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
பசூர் ஜோதிடர்.சு. - 🛕 கோவிலுக்கு செல்லும் முன் தெரிந்து வைத்திருக்க  வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்! நற்றுணையாவது அண்ணாமலையாரே நாம் அனைவரும் ...
⏳ அவசரம் வேண்டாம்

இன்றைய காலத்தில் பலர் தரிசனத்தைக் கூட ஒரு கடமையாகவே செய்கிறார்கள்.

வந்து...

கும்பிட்டு...

வெளியேறிவிடுகிறார்கள்.

ஆனால் கோவில் தரிசனத்தின் உண்மையான பலன் மன அமைதிதான்.

அதனால் கோவிலுக்குள் இருக்கும் நேரத்தில் அவசரத்தை மறந்து, இறைவனின் சந்நிதியில் சில நிமிடங்களாவது அமைதியாக அமர்ந்து தியானிக்கலாம்.

🌺 தரிசனத்தின் உண்மையான அர்த்தம்

கோவிலுக்குச் செல்வது வெறும் வேண்டுதலுக்காக மட்டுமல்ல.

நம்முடைய மனதை சுத்தப்படுத்திக் கொள்ளவும்...

நம்முடைய அகந்தையை குறைக்கவும்...

இறைவனின் அருளை உணரவும்...

வாழ்க்கையில் நம்பிக்கையை புதுப்பிக்கவும்...

கோவில்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.

எனவே கோவிலுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும், "நான் என்ன கேட்டேன்?" என்பதற்குப் பதிலாக, "நான் என்ன உணர்ந்தேன்?" என்பதையே சிந்திக்க வேண்டும்.
கோவிலுக்கு செல்லும்போது தெரிந்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்! |  Spirituality News (ஆன்மீக செய்திகள்) - News18 Tamil
அப்போதுதான் தரிசனம் முழுமை பெறும்.

❓பார்வையாளர்களுக்கான கேள்வி

நீங்கள் கோவிலுக்குச் செல்லும்போது எப்போதும் கடைபிடிக்கும் ஒரு ஆன்மீக வழக்கம் என்ன? உங்கள் குடும்பத்தில் தலைமுறைகளாக பின்பற்றப்படும் கோவில் மரபு ஏதேனும் உள்ளதா?
கோயில்களும் சிறப்புகளும்
எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏
🙏

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹

சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். 

 No photo description available.

நன்றி இணையம்  

விரதம் - நம் முன்னோர்கள் வகுத்து வைத்த....!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:39 PM | Best Blogger Tips

 சம்பாதிக்கிறதே சாப்பிடறத்துக்கு தான். இதிலே விரதம் எதுக்கு. நாம பட்டினியா  இருந்தா, நமக்கு உள்ளே இருக்குற கடவுள பட்டினி போட்டதா ஆகாதா ...

விரதம்

சம்பாதிக்கிறதே சாப்பிடறத்துக்கு தான்.  இதிலே விரதம் எதுக்கு.

நாம பட்டினியா இருந்தா, நமக்கு உள்ளே இருக்குற கடவுள பட்டினி போட்டதா ஆகாதா.
என்று இன்றைய மாடர்ன் தலைமுறை பல நேரங்களில் கிண்டலாகக் கேட்பதுண்டு.
விரதம் இருப்பதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம்ல், கடவுள் பெயரால் நம் முன்னோர்கள் வகுத்து வைத்த இந்த ஏகாதசி விரதத்திற்குப்' பின்னால், சமீபத்தில் மருத்துவ உலகின் உயரிய விருதான நோபல் பரிசையே (Nobel Prize) தட்டிச் சென்ற ஒரு மாபெரும் அறிவியல் ரகசியம் மறைந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம்! 2016-ஆம் ஆண்டு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோஷினோரி ஓசுமி (Yoshinori Ohsumi) என்ற விஞ்ஞானிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் கண்டுபிடித்த மாபெரும் மருத்துவ உண்மையின் பெயர் "ஆட்டோஃபேஜி" (Autophagy). இதன் அர்த்தம் 'தன்னைத் தானே உண்ணுதல்'.
Types Of VIratham Upavasam,விரதங்களின் வகைகளும், விரதம் இருப்பவர்கள்  கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் - types of fasting in hinduism and  its types : benefits of viratham in ...
அதாவது, ஒரு மனிதன் தொடர்ந்து 14 முதல் 16 மணி நேரம் வரை எந்த உணவும் உட்கொள்ளாமல் உடலைப் பட்டினி போடும்போது, மனித உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் போகிறது. அப்போது, உயிர் வாழ்வதற்கான ஒரு போராட்டமாக, உடலுக்குள் இருக்கும் ஆரோக்கியமான செல்கள், அங்குள்ள கெட்டுப்போன, முதிர்ச்சியடைந்த மற்றும் கேன்சரை (Cancer) உருவாக்கக் கூடிய நச்சு செல்களை உணவாகத் தின்ன ஆரம்பிக்கின்றன! இதனால் மனித உடலுக்குள் இருக்கும் ஒட்டுமொத்த கழிவுகளும் எந்த ஒரு மருத்துவச் செலவும் இல்லாமல் தானாகவே சுத்தமாகி, உடல் முழுமையாகப் புத்துணர்ச்சி அடைகிறது. இது தான் அந்த நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பு.

ஆனால், இதைத் தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நம் முன்னோர்கள் 'ஏகாதசி விரதம்' என்ற பெயரில் நமக்குக் கற்றுக் கொடுத்துவிட்டுப் போனார்கள்!

சரி, எதற்காகச் சரியாக ஏகாதசி அன்று மட்டும் பட்டினி கிடக்க வேண்டும்? வேறு நாளில் இருக்கக் கூடாதா? அங்குதான் இந்து மதத்தின் பிரம்மாண்டமான வானியல் ( Astronomy) அறிவு வேலை செய்கிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்து வரும் 11-வது நாளான ஏகாதசி அன்று, பூமியின் வளிமண்டல அழுத்தம் (Atmospheric Pressure) மிக மிகக் குறைவாக இருக்கும். அந்த நாளில் அதிக உணவு உட்கொண்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும் என்பதையும், மூளையின் செயல்பாட்டைக் கூர்மையாக்க அதுவே சரியான நாள் என்பதையும் துல்லியமாகக் கணித்தார்கள்.
விரதம் அனுஷ்டிப்பவர்கள் மறக்கக்கூடாதவை... - சர்வமங்களம் | Sarvamangalam
சாதாரண மக்களிடம் போய் 'ஆட்டோஃபேஜி', 'செல் சுழற்சி' என்று விஞ்ஞானம் பேசினால் யாருக்கும் புரியாது என்பதால், அந்த மாபெரும் மருத்துவ அறிவியலை இறைவனோடு இணைத்து 'விரதம்' என்று வாழ்வியலாக மாற்றிக் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள்.

இன்றைக்குக் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கும் விஷயங்களை, நாம் என்றைக்கோ பின்பற்றி விட்டுப் பழசு என்று தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறோம். 

இனியாவது ஏகாதசி விரதம் இருந்தால் முட்டாள்தனம் என்று சொல்லாதீர்கள்; அது நோபல் பரிசு பெற்ற ஒரு தலைசிறந்த மெடிக்கல் ட்ரீட்மென்ட்!

ஒவ்வொரு மாசமும் இரண்டு ஏகாதசி வரும். நாளை ஏகாதசி. பெருமாளை வணங்கி விட்டு விரதம் இருக்க தொடஙகுவோம். மதியம் பசித்தால் பழம் ஏதாவது சாப்பிடலாம். பால் டீ காபி குடிக்கலாம். இரவு சாப்பிடலாம் 

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

*ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் ஆலங்குடி, திருவாரூர்*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:46 AM | Best Blogger Tips

 May be an image of temple

*ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் ஆலங்குடி, திருவாரூர்*
No photo description available. 
குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோவிலாக ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.
மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்
தாயார் : ஏலவார் குழலி
உற்சவ மூர்த்தி : தட்சிணாமூர்த்தி
தல விருச்சம் : பூளை எனும் செடி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், அமிர்த புஷ்கரணி
 
குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98வது தலம். இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்த தலத்தின் அம்மையின் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை என்பதாகும். சுக்ரவாரம் என்பது வெள்ளிக்கிழமை.
 May be an image of text that says "அருள்மிகு ஏலவார்குழலி எலவார்கு SRI YELAVARKUZHALI குழலி அம்மன் அம்மன்சன்னசி ச சன்னதி AMMAN SANNATH!"
அது பெண்களுக்கு உகந்த நாள் என்பதால், வெள்ளியின் பெயரையே தாங்கி தனி சன்னதியில் அம்சமாக, நேர்த்தியாக அருள்பாலிக்கிறார். பெயரும் "சுக்ரவார அம்பிகை" என்பதாகும்.
 
இந்த ஆலயத்தின் தெற்கு கோஷ்டத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. இவரே இங்கு குரு. எனவேதான், இது குரு ஸ்தலமாகத் திகழ்கிறது. வியாழன் தேவ குரு. 
 May be an image of ‎temple and ‎text that says "‎அருள்மிகு குருபகவான் சன்னதி SRI GURUBHAGAWAN SANNATHI لفه குருமுர்து குரு முர்தரு SRICURUMOCRTY‎"‎‎
வியாழனால் தோன்றும் துன்பங்களுக்கு தட்சிணாமூர்த்தியே தீர்வு தருவார். அபய ஹஸ்தத்துடன், வீராசனத்தில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன்; 
 
இருமருங்கிலும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்கக் காட்சி கொடுக்கிறார். இவரை வழிபடுவதால், ஆயுள், ஆரோக்கியம், சந்தானப் பேறு, புகழ், ஐஸ்வரியம் ஆகிய யாவும் குறைவிலாது கிட்டும் என்பது நம்பிக்கை.
 May be an image of temple
ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி. மேற்குப் பகுதியில் காட்சி தருகிறார், கஜமுகாசுரனை வதம் செய்த 'ஸ்ரீகலங்காமல் காத்த விநாயகர்.' வெளிப் பிராகாரத்திலேயே, தெற்குப் பார்த்த அம்பாள் சந்நிதி.
 
 May be an image of temple
உள் வாயில் வழியாக நுழைந்தால் சூரிய பகவான் சந்நிதி. அருகிலேயே உற்ஸவ சுந்தரர். உள் பிராகாரத்தில் நால்வர் பெருமக்கள், சூரியநாதர், சோமேசநாதர், குரு மோட்சேஸ்வரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணுநாதர், பிரமீசர் ஆகிய சப்த லிங்கத் திருமேனிகள். ஸ்ரீகாசிவிஸ்வநாதர் - விசாலாட்சி, அகத்தியர் ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர். வடக்குச் சுற்றில் ஸ்ரீநடராஜர் சபை. ஆக்ஞா கணபதி, கல்யாண சாஸ்தா, சோமாஸ்கந்தர், சப்த மாதர்கள், சனகாதி முனிவர்களோடு கூடிய தட்சிணாமூர்த்தி என ஏராளமான உற்ஸவ மூர்த்தங்கள் அருள்பாலிக்கிறார்கள்.
 May be an image of ‎text that says "‎ஓவ்ஷ்ணவி வாராஹி இந்திராணி சாமுண்டி பாலமுருகன் צק‎"‎
கருவறையில் காட்சிகொடுக்கும் ஈசனுக்கு ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர். ஸ்ரீஇரும்பூளை நாதர், ஸ்ரீகாசி ஆரண்யேஸ்வரர், ஸ்ரீஆரண் யேஸ்வரர், ஸ்ரீஆலங்குடிநாதர், ஸ்ரீஆலங்குடியான் எனப் பல்வேறு திருநாமங்கள் வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் அகத்தியரை வழிபட்டபின், முருகனை வணங்கினால், மன நோய், மனக்குழப்பம் ஆகியன அகலும் என்பது நம்பிக்கை.
 
ஆலங்குடியின் தலவிருட்சம் பூளைச்செடி. தீர்த்தம்- அமிர்தப் பொய்கை. விஷத்தை ஆண்டவன் எடுத்துக்கொண்டு, அமுதத்தை நமக்கு வழங்குவதால், இந்தப் பொய்கைக்கு அமிர்தப் பொய்கை என்ற பெயர் ஏற்பட்டதாம். கிழக்கே சற்று தொலைவில் ஓடும் ஆறு, பூளைவள ஆறு. இதுவும் இத்தலத் தீர்த்தமே. கோவிலுக்குள்ளே உள்ள ஞான கூபம் என்ற கிணறும் விசேஷமானது. சுவாமிக்கு ஐப்பசி அபிஷேகம் பூளைவள ஆற்று நீரால் நடைபெறும்.
 
இந்தத் தலத்தில் பிரம்ம தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சப்த ரிஷி தீர்த்தம் ஆகிய பதின்மூன்றும், பூளைவள ஆறு, அமிர்த புஷ்கரிணி, ஞான கூபம் ஆகிய மூன்றும் சேர்த்து மொத்தம் 16 தீர்த்தங்கள் இருப்பதாக ஐதிகம். 
 May be an image of temple and text
சிவனுக்கான பஞ்ச ஆரண்யத் தலங்களிலும் இதுவும் ஒன்று. இந்த ஊரில், விஷக்கடி அபாயமோ, நச்சுத் தாக்குதல் ஆபத்தோ கிடையாது. ஆலகால விஷத்திலிருந்து காத்த ஈசன் இருக்கும் தலத்தில் வேறு விஷங்கள் என்ன செய்யும் என்கிறார்கள் பக்தர்கள்.
 May be an image of temple
ஆலங்குடி குரு தட்சிணாமூர்த்தியை எல்லா நாள்களிலும் வழிபடலாம் என்றாலும் வியாழக்கிழமைகள் மிகவும் விசேஷம். இங்கு நடைபெறும் தீப வழிபாடு மிகவும் சிறப்புவாய்ந்தது. விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றிவிட்டும் தட்சிணாமூர்த்திக்கு 24 விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள் பக்தர்கள். பின்பு பிராகாரத்தை 24 முறை வலம் வரவேண்டும். 
 
இவ்வாறு வழிபாடு செய்து ஆபத்சகாயேஸ்வரரையும் ஏலவார்குழலி அம்மனையும் வேண்டி வழிபட சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. குருபலம் கைகூடும்.

 May be an image of temple and text

 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷